Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 02 ( PART 02 )

Advertisement

Yazhvenba

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்,

தாமதத்திற்கு மன்னிக்கவும் friends...

அலுவலகத்தில் முக்கியமான release இருக்கிறது. அது ஒருபுறமென்றால், முக்கிய உறவில் திருமணம் முடிவாகி இருக்கிறது. எழுத நேரமே அமையவில்லை.

இனி வரும் பதிவுகளும் தாமதம் ஆகலாம். மன்னித்து விடுங்கள். உங்களை காக்க வைப்பதற்கு மிகவும் வருந்துகிறேன்.

கதையின் அடுத்த அத்தியாயம்... முடிச்சுகளும் தொடங்குகிறது. உங்களது மேலான கருத்துக்கள், விமர்சனங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நிறை, குறைகளை மறக்காமல் சுட்டிக் காட்டுங்கள்.

பேரன்புடன்,
சுகமதி


*****

கடும் குளிர் உடலைத் துளைக்க, இனி சிறிது நேரம் கூட வேலையைத் தொடரும் வலு உடம்பில் இல்லை எண்ணுமளவு சோர்வாக இருந்தான் மதன். அவனது முதுகில் ஒரு பெரிய மூட்டை, அதில் தேயிலைகள் முழுவதுமாக நிறைந்திருந்தது.



அதை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் தள்ளாடியபடி அவன் நடக்க, அவனை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த கௌதம், “மதன், பார்த்து போ. எங்கேயும் விழுந்திடாத. தேயிலையை கொட்டிட்ட, முதுகு தோள் உறிஞ்சு வர அளவு அடி பின்னி எடுத்துடுவாங்க” என மெல்லிய குரலில் எச்சரித்தான்.



அது மதனிற்கும் தெரியும். பலமுறை வாங்கியும் கட்டிவிட்டான்.



“என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியலை” என்றான் பரிதாபமாக.



“விழப்போற அடியை நினைச்சுப் பாரு. அடி வாங்கிட்டு வேலை செய்யணும். அதுக்கு பேசாம இப்பவே பல்லை கடிச்சுட்டு செஞ்சிடு. இன்னும் ஒரு மணி நேரம் தான். தாக்குப்பிடிச்சுக்கோ” என்றான் கௌதம்.



அவன் சொல்வதும் சரிதான் எனப் புரிந்தாலும், இவர்கள் தரும் கால் வயிறு சாப்பாட்டிற்கு எத்தனை நேரம் உடலில் வலு இருக்கும் எனச் சோர்வாக நினைத்தான்.



“குளிர் பயங்கரமா இருக்கு கௌதம்”



“குளிர்க்காலமாவோ, மழைக் காலமாகவோ இருக்கும் டா” என வெகு சாதாரணமாக அவன் பதிலுரைத்தான்.



“இந்த மலைப்பிரதேசத்தில் குளிர்காலம், மழைக்காலம் எல்லாம் படுபயங்கரமா இருக்குமல்லடா. அப்பறம் இது என்ன? தேதி, கிழமை, மாசம் எதுவுமே நமக்கு தெரியாது இல்லை” என்று கசப்பாகக் கூறினான் மதன்.



“முதல்ல விரக்தியா தான் இருந்தது. இப்ப வேற வழியே இல்லையே?” என்று பதில் கூறினான் கௌதம்.



“நம்மள எதுக்கு இவனுங்க அடைச்சு வெச்சு இருக்கானுங்க? இது என்ன இடம்? இங்கிருந்து எப்படி நாம தப்பிக்க?” எனப் புலம்பியவனைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. அவன் புலம்பல் யார் செவியிலாவது விழுந்து விடப்போகிறது என்னும் பதற்றமும் எழ,



“ஸ்ஸ்ஸ்… தப்பிக்கணும் அது இதுன்னு உளறிட்டு இருக்காத. அவங்களுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்” என மீண்டுமாக எச்சரித்தான் கௌதம்.



ஆனால், மதனின் மனம் இங்கிருந்து தப்பிப்பதில் தீவிரமானது. அவனால் இந்த கொடுமைகளைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.



அவனது யோசனையைக் கண்ட கௌதம், “நாம எங்க இருக்கோம்ன்னு கூட நமக்குத் தெரியாது டா. இங்கிருந்து அவ்வளவு சுலபமாகவும் தப்பிக்க முடியாது. இங்க இருக்கிற எல்லாரும் ரொம்ப பயங்கரமானவங்க” என மீண்டும் விளக்க,



“என்னையும் உங்களை மாதிரி நினைச்சுட்டீங்களா டா. எங்கப்பா எவ்வளவு பெரிய பணக்காரர் தெரியுமா? நான் நினைச்சா இந்த இடத்தையே கூண்டோட அழிக்க முடியும்” என மெல்லிய ஆவேசம் கலந்த குரலில் மதன் கூறினான்.



அதில் எரிச்சல் அடைந்த கௌதம், “பின்ன நாங்க எல்லாரும் பிச்சை எடுக்கிறோம்ன்னு நினைச்சுட்டியா? உன்னைவிட பணக்காரனுங்க, அரசியல் செல்வாக்கு படைச்சவங்க, ஆள்பலம் இருக்கவனுங்க, ஏன் பெரிய பெரிய தாதாவோட பசங்க எல்லாம் இங்க நிறைய இருக்கானுங்க டா. நாங்க எல்லாம் முயற்சி செஞ்சு ஓஞ்சு போய் தான் இப்படி இருக்கோம். அவனுங்களா நம்மள விட்டா தான் உண்டு. உங்க அப்பா பெரிய பணக்காரராவே இருக்கட்டும். நீ இங்க வந்து எத்தனை நாள் ஆச்சு? அவரால கண்டுபிடிக்க முடிஞ்சதா? இதுதான் நம்ம நிலைமை” எனக் கூறினான்.



அவன் சொல்வதில் இருக்கும் உண்மை புரிய, “என்னடா ஏதோ அடிமைத்தனம் மாதிரி இருக்கு” எனச் சோர்வாகக் கூறினான் மதன்.



“கிட்டத்தட்ட அதே மாதிரி தான்டா” என கௌதம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, முன்னால் சென்று கொண்டிருந்த ஒருவனின் முதுகு பதம் பார்க்கும் சத்தம் கேட்டது.



வலியில் துடிதுடித்து முன் நாற்பதுகளில் இருக்கும் அந்த ஆண்மகன் அலறியதைக் கேட்கையில் அனைவரின் உடலிலும் நடுக்கம் பரவிற்று.



“என்ன அன்ன நடை போட்டுட்டு இருக்க” என்று கர்ஜனையாய் கேட்டது அடித்தவனின் குரல்.



“இல்லை சார் நடக்க முடியலை. ரொம்ப டையர்ட்டா இருக்கு” என நடுங்கியபடி பதில் கூறினான் அடி வாங்கியவன். மேலும் அடி விழுந்து விடுமோ என்று ஒடுங்கிப்போய் நின்றிருந்தான்.



அவனது பயத்தையும், நடுக்கத்தையும் ரசித்தவாறே, “அப்ப இன்னும் ஒரு மணி நேரம் உன்கிட்ட வேலை வாங்கணுமே” என ஈவு இரக்கமின்றி பதில் கூறினான் அந்த ஆஜானுபாகுவான தோற்றத்தினன்.



“சார்… இல்லை சார்… வேகமா செஞ்சுடறேன். இன்னும் ஒரு மணி நேரம் எல்லாம் தெம்பு இல்லை சார். இனி இப்படி நடக்காது சார். விட்டுடுங்க சார். இனி கவனமா இருந்துப்பேன்” எனப் பதறியபடி கெஞ்சியவனைப் பார்க்கவே பாவமாய் இருந்தது.



அதற்கும், “இனி இப்படி நடந்துக்காட்டி, இனிமே தண்டனை இல்லை. ஆனா இன்னைக்கு நீ செஞ்சத்துக்கான தண்டனையில எந்த மாற்றமும் இல்லை” எனக் கூறியவன், மற்றவனின் கெஞ்சலை துளிகூட மதியாமல் கடந்து சென்றான்.



கௌதம் மதனிடம், “இதுதான் இங்க நிலைமை. அவன் எவ்வளவு பெரிய பணக்காரன் தெரியுமா? அவன் ஊருல அவனுக்கு வேலை செய்ய குறைஞ்சது பத்து பேராச்சும் இருப்பாங்க. இங்க அவன் நிலைமையை பார்த்தியா? அவனால் பசி தாங்க முடியாது. இவனுங்க தர சாப்பாடு போதாம, பசியில வாய்விட்டே அழுதிருக்கான் தெரியுமா? நீ பார்க்கறியே… எலும்பும், தோலுமா… இவன் உருவம் இதுவே இல்லை. அத்தனை குண்டா இருந்தான். இப்போ இப்படி இருக்கான்” என்று ஆற்றாமையாகக் கூறினான்.



கௌதமின் குரலில் விரக்தி, சலிப்பு எதுவும் இல்லை. இங்கு இப்படித்தான் எனப் பழகி உள்வாங்கி ஏற்றுக்கொண்டவன் போலப் பேசினான்.



கௌதம் அத்தனை கூறிய பிறகும், “இங்கிருந்து யாருமே தப்பிச்சு போனது இல்லையா?” என்று மீண்டும் மதன் கேட்க,



“நீ என்ன இவ்வளவு பார்த்தும் தப்பிக்கணும்ன்னே யோசிக்கிற. இங்கிருந்து தப்பிக்கிறதும், எமலோகம் போறதும் ஒன்னு தான்” என கௌதம் சற்று கோபமாகவே எச்சரித்தான். அவனும் எவ்வளவு தூரம் தான் சொல்ல முடியும். அடி முட்டாள் மாதிரி ஒரே விஷயத்திலேயே பிடியாய் நின்றால் அவனும் என்ன செய்வான்?



அதன்பிறகு அவர்களுக்குள் பேச்சு நீளவில்லை. மதன் , கௌதம் கூறியதை புரிந்து கொண்டாலும், தன்னாலான முயற்சியைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.



கௌதம் நல்ல வசதி படைத்த இளைஞன். இங்கு வந்து சில மாதங்கள் ஆகிறது. எப்படி இங்கு வந்தான் என்று அவனுக்குத் துளியும் நினைவிலில்லை. எந்த இடத்தில் இருக்கிறான் என்றும் அவனுக்குத் தெரியாது. ஏன் இங்கு இருக்கிறான் என்றும் தெரியாது. இங்கிருந்து திரும்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்றும் அவனுக்குத் தெரியாது.



இந்த தெரியாதுகள் அவனுக்கானது மட்டுமில்லை. அங்கு அடிமையாய் இருக்கும் அனைத்து ஆண்களின் நிலையும் அதுவே தான்.



அங்கிருக்கும் ஆண்கள் இளைஞர்கள் என்கிற வகையினர்களாக மட்டும் இல்லாமல் அனைத்து வயதினர்களும் இருந்தனர்.



இந்த கூட்டத்திற்குப் புதிதாய் வந்தவன் தான் மதன். வந்தது முதல், அவனையும் வேலை செய்யப் பணிக்கிறார்கள். நல்ல வசதியான வீட்டுப்பிள்ளை தான் போல, ஆரம்பத்தில் உடம்பு அவ்வளவாக வளையவில்லை. ஆஜானுபாகுவான வீரர்களின் கவனிப்பிற்குப் பிறகு, தன்போல் வேலை நடந்தது.



எதுவுமே புரியாமல் சில நாட்கள் கடந்த நிலையில், உடனிருந்தவர்களுடன் இப்பொழுது தான் சற்று பேச ஆரம்பித்திருக்கிறான். கௌதமிடம் சற்று மனம் விட்டுப் பேசுகிறான்.



வந்ததிலிருந்து அத்தனை அடிகள் வாங்கிய பிறகும், தப்பிக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாய் இருக்கிறான். ஆனால், எப்படித் தப்பிக்க என்றுதான் அவனுக்குப் புரியவில்லை.



அது சாத்தியமே இல்லை என அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.



ஒருவழியாக மிகவும் சிரமப்பட்டு அனைவரும் அன்றைக்கான வேலையை முடித்திருந்தனர். முன்னர் அடிவாங்கிய முன் நாற்பதுகளிலிருந்த ஒருவன் மட்டும் அந்த இடத்தை சுத்தம் செய்யும் வேலையை தன்னந்தனியாக செய்து கொண்டிருந்தான். முன்பு வேலை செய்யும்பொழுது, மெதுவாக நடந்ததால் கிடைத்த தண்டனை.



இதுவரை பசியே அறிந்திராத ஆண்மகன்கள், இப்பொழுது வயிற்றின் ஒவ்வொரு அசைவையும் உணர்கிறார்கள். ஓய்வின்றி உழைத்ததால் களைத்து, வாடிப் போய், பசித்து அனைவரும் வேகவேகமாக உணவு விடுதிக்கு விரைந்தனர்.



கைக்கு அகப்பட்ட தட்டை எடுத்துக் கொண்டு முந்தியடித்து நின்றாலும், வரிசை நீளமாக இருந்தது. வயிற்றின் உள்ளே கேட்கும் இரைச்சலை உணர்ந்தபடியே, வரிசையைக் கடக்க, ஒரு கரண்டி சாதமும், தண்ணீராய் இருக்கும் சாம்பார் கொஞ்சமும் அவர்களுக்கு கிடைத்தது.



யானைப் பசிக்கு சோலைப்பொறி என்பது போல.



இரவில் வகைவகையாய் உண்டு வளர்ந்தவர்கள், இந்த ருசியே இல்லாத சாதத்தை உண்டனர். வாழ்க்கையை ஒவ்வொரு நொடியும் வெறுக்கும் படியான வாழ்க்கை. இதற்கான கோபத்தைக் கூட வெளிக்காட்ட முடியாத சூழல். அனைவரும் மிகவும் கொடுமையை அனுபவித்தார்கள் என்று கூறலாம்.



பலருக்கும் இந்த சூழலைப் பற்றி பலவகையான ஊகங்கள் எழுவதுண்டு. மெல்லிய குரலில் அருகில் இருப்பவர்களிடம் கிசுகிசுத்தும் கொள்வார்கள்.



“நம்மளை இத்தனை கொடுமை செய்யறதுக்கு, இவனுங்க நம்மளை கொலையே பண்ணிடலாம்”



“கொலை செஞ்சுட்டா, இந்த கொத்தடிமை வேலையை எல்லாம் சம்பளம் இல்லாம யார் செய்வாங்க?”



“ஏன் நம்மளை கடத்தணும்? நமக்கு இங்கிருந்து விடுதலையே இல்லையா?”



“யாரோ ஒரு சைக்கோ தான், இந்த வேலையை செய்யணும். ஆண்களைக் கடத்தி துன்புறுத்தறதுல சந்தோஷப் படற, ஒரு ஜீவனால தான் இப்படி நடந்துக்க முடியும்?”



“ஆண்கள்ன்னு டார்கெட் செய்யறதை பார்த்தா… இந்த வேலையை செய்யறது ஒரு பெண்ணா இருக்கலாம். வாய்ப்புகள் அதிகம்”



“அப்படியா சொல்லறீங்க?”



“நமக்கு நடக்கிறதை வெச்சு புரிஞ்சுக்க முடியலையா?”



“ம்ம்… இருக்கலாம்”



“இதுனால அவங்களுக்கு என்ன லாபம்?”



“சைக்கோ'ங்களுக்கு எல்லாம் லாபமா அவசியம்?”



“அதோட லாபமும் இல்லாம என்ன? நம்ம கிட்ட வாங்கற வேலைக்கு எவ்வளவு சம்பாரிக்கலாம். வெறும் சாப்பாடு தான் போடறாங்க. நமக்கென்ன சம்பளமா கொடுக்கறாங்க?”



“ரொம்ப சரியா சொன்ன. தேயிலை வந்தா, டீத்தூள் செய்யிற வரை தேவையான மொத்த வேலையையும் நாம தான் செய்யறோம். முது கொடிய வேலை பார்க்கிறோம். இத்தனை வேலை செஞ்சும் நல்ல சாப்பாடு கூட தரதில்லையே!”



“நல்ல சாப்பாட்டுக்கு ஏன் போறீங்க? வயிறு நிறைய ஒருநாள் கூட சாப்பிட்டது இல்லையே?”



“ரொம்ப சரி. பசியில ராத்திரி தூக்கம் வராம, அரைகுறையா தூங்கி, அரைகுறையா சாப்பிட்டு… நாம எல்லாம் பலவீனமாயிட்டே வரோம். என்ன பாவம் செஞ்சோமோ? இப்படி ஒவ்வொரு நொடியும் கஷ்டப்படறோம்”



மதன், கௌதம் அமர்ந்து உண்டு கொண்டிருந்த இடத்தினில் தான் இத்தனை பேச்சுக்களும் நடந்தது. கௌதமும் அவர்களோடு சேர்ந்து பேசிக்கொண்டிருக்க, மதன் மட்டும் அனைத்தையும் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.





அந்த கூட்டத்தில் கெளதம் கூறியது போலப் பல வசதி படைத்தவர்கள் இருந்தனர். அதே சமயம் வசதியில்லாதவர்களும் இருந்தனர். நல்ல பலசாலிகளும் இருந்தனர். நல்ல அறிவாளிகளும் இருந்தனர். அதேபோல அதற்கு எதிர்ப்பதமாக முட்டாள்களும் இருந்தனர். பலமற்றவர்களும் இருந்தனர். அனைவருக்கும் பொதுவாகப் பொருந்திய விஷயம் என்றால் அவர்கள் ஆண்கள் என்பதே! அனைவரையும் நோட்டம் விட்டபடி மதன் அமர்ந்திருந்தான்.





இங்கு வந்த நாள் முதலாய் இங்கிருந்து தப்பிக்க யோசித்துக் கொண்டிருப்பவன் தான் என்றாலும், இந்த இரண்டு நாட்களாக அவன் சிந்தை முழுவதும் அது மட்டுமே! கூட யாரேனும் இணைந்தால் நன்றாக இருக்கும். ஆனால், யாரும் ஒத்துவரவோ, பிடிகொடுக்கவோ இல்லாததால், தனியாகவே முயற்சிக்கலாம் என்று தீவிரமாக யோசித்து கொண்டிருக்கிறான்.



சாத்தியமே இல்லாத ஒன்றை மதனால் சாத்தியப்படுத்திக் காட்ட முடியுமா? அப்படிச் சாதித்தான் என்றால், இந்த விடுதலை அவனுக்கானதாக மட்டும் இருக்காது. இந்த மொத்த அடிமைகளுக்குமானதாக இருக்கும். ஆனால், அதுவே மாட்டிக் கொண்டால்?


-- தொடரும்...
 
Last edited:
இது என்ன pa இப்படி ஒரு twist ? vechitinga.... யாரு மதன்.... Gowtham... Ethuku இந்த maari பணகார படங்களா பாத்து கடத்தி இந்த maari koththadimai ah vechi இருக்காங்க ....எந்த இடம் அது ethuku ஒழுங்கா சாப்பாடு pogaamal. அளவுக்கு அதிகமான velai vaanguraanga.... Konjam konjamaa avanga எல்லாரயும் palavinam paduthuraanga.... Thappichi pooganum ra எண்ணம் வந்தாலும் avangalodaya உடம்பு athuku ஒத்து ozhakkaathu.... இப்படி இரு twist ah ethir பாக்கல... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 
Top