Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சட்டென மாறுது வானிலை-21

Advertisement

praveenraj

Well-known member
Member
அன்று ஆபிஸ் சென்று வந்துவிட்டு மாதுளை வீட்டில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளின் எண்ணவோட்டங்கள் எங்கெங்கோ சென்று வந்தது. யோசனையில் ஆழ்ந்திருக்க அவளை பின்னாலிருந்து தொட்ட சகுந்தலாவின் செய்கையில் அதிர்ந்தபடியே திரும்பியவளின் முக வாட்டத்தைக் கண்டு,"என்ன ஆச்சு? ஏன் இப்படி ஃபீல் பண்ற?" என்று கேட்க ஏனோ அவரைக் கட்டிப்பிடித்து அழுதாள் மாதுளை.

அவளின் அழுகையை வைத்தே அவளுக்கு வீட்டு ஞாபகம் வந்துவிட்டது என்று உணர்ந்தவர் அவளை மெல்ல சமாதானம் செய்து வெளியே லானிற்கு அழைத்து வந்தார். கொஞ்சம் பேச அப்போது தான் உள்ளே வந்தான் இந்திரன். வந்தவன் யாரையும் சட்டை செய்யாமல் நேராக மேலே ஏறினான். அவன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் இருந்தது. நம் கண்ணுக்கு முன்னே சில தவறுகள் நடந்தும் நம்மால் அதைத் தட்டிக்கேட்ட முடியாத அவனின் கையாலாகாத தனத்தை நினைத்து வருந்தினான். காரணம் இன்று ஆபிசில் இருக்கும் போது தலைவலி என்று சொல்ல உடனே கதிரவன் அவனுக்காகத் துடித்து காஃபீ ஆர்டர் செய்து தைலம் தேய்த்து மாத்திரை என்று எல்லாம் செய்தான். இந்த கதிரவன் தான் உண்மை என்றால் அப்போ தாமோதரன் அங்கிள் சொல்வது அனைத்தும் பொய்யா? இல்லையே பல வருடங்களாக, இன்னும் சொல்லப் போனால் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என் தந்தைக்குப் பழக்கப்பட்டவர் தான் தாமோதரன் அங்கிள். இந்த குடும்பத்திற்காக அவ்வளவு விசுவாசமான இருக்கும் அவர் ஏன் பொய்ச் சொல்லவேண்டும். அவருக்குப் பொய்ச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே? என் தந்தைக்கு எப்படி தாமோதரனோ அப்படித்தானே கதிரவன் எனக்கிருக்க வேண்டும் என்று நினைத்தேன்? இதில் தவறு ஒன்றும் இல்லையே? எதையும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகவே பேசி பழக்கப்பட்டவனுக்கு இப்போது இப்படி உள்ளே சந்தேகங்களை வைத்து கொண்டு வெளியே நார்மலாய் இருப்பதைப் போல் நடிக்க முடியவில்லை. நடிக்க முடியவில்லை என்பதைக் காட்டிலும் அவனுக்கு நடிக்கத் தெரியவில்லை. நம் நம்பிக்கைக்குரியவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால் அதுபோலொரு மோசமில்லை எதுவும் இருக்காது. இன்று இந்திரன் அப்படியொரு நிலையில் தான் இருக்கிறான்.

ஸ்ரீயும் சிந்துவும் தன்னுடன் இல்லை என்பதையே அவனால் இன்னும் நம்பி ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் அடுத்த துரோகம் வேறு? எப்போது முதுகில் குத்துவார்கள் என்று தெரியாமல் அந்தக் கணம் வரும் வரை காத்திருக்க வேண்டுமே?ஏனெனில் இவன் முதுகில் குத்தும் வரை அவர்கள் மீதிருக்கும் நம்பிக்கை மறையாதே?அவசரப்பட்டு தவறாகப் பேச கூடாதல்லவா? அப்போது அவர்கள் குத்தினால் தான் துரோகி. அதுவரை அவர்கள் நண்பன் தானே? தலையைப் பிடித்து அமர்ந்தவன் இன்னும் யோசனையில் தான் இருந்தான்.

இன்றே நடந்த மற்றொரு விஷயம் தான் இந்திரனின் இந்தக் குழப்பத்திற்கும் காரணம். எதேர்சையாக இந்திரனின் அறையில் கதிரவன் தன் போனை விட்டுவிட்டு சென்றுவிட அவனின் போன் அடிக்க அதை எடுக்க பிரைவேட் நம்பர் என்று அழைப்பில் வந்தது. அதற்குள் உள்ளே வந்தவன் தன் போன் இந்திரனின் கையில் இருப்பதையும் அதற்கு அழைப்பு வருவதையும் பார்த்து அதிர்ச்சியாக அவன் நிற்க அருகில் இந்திரன் எதையும் பேசாமல் அவனிடம் போனை கொடுக்கவும் பேசச் சென்றவன் நீண்ட நேரம் உள்ளே வரவில்லை. அப்போது தாமோ அங்கு இந்திரனிடம் ஒரு கையொப்பம் வாங்க வந்தவர் தன்னுடைய போனை அந்த மேஜையில் வைக்க அவருடைய போனிற்கும் ஒரு எண்ணில்லாத பிரைவேட் நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. சின்ன வயதிலிருந்து பார்க்கிறானே? எதையாவது மறைக்கவோ இல்லை ஏதேனும் திருட்டுத்தனம் செய்யும் போதோ தான் அவன் இவ்வாறு நடந்து கொள்வான் என்று அறியாதவனா இந்திரன்? உண்மையில் இன்று இந்திரன் கதிரவனிடம் வேறு ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேச நினைத்தான். அவன் எவ்வளவோ யோசித்தும் அந்த ஆக்சிடென்ட் நடப்பதற்கு சற்று முன் வரை தான் அவனுக்கு நினைவு இருக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்று அவன் இதுவரை தெரிந்துக்கொள்ள விரும்பவில்லை. இதைப் பற்றி தன் பெற்றோரிடமே நேரில் பேச வேண்டும் என்று தான் பலமுறை நினைத்தான். ஏற்கனவே நிறைய துக்கத்திலும் வருத்தத்தில் இருக்கும் அவர்களை மேலும் துக்கப்படுத்தவோ இல்லை கஷ்டப்படுத்தவோ அவனுக்கு மனம் வரவில்லை. தாமோ அங்கிளிடம் கேட்டுவிட வேண்டும் என்று அவன் இரண்டு முறை நினைத்தான் தான் அவனால் தொண்டை வரை வந்த வார்த்தைகளை வாயில் கேட்க முடியவில்லை. ஆனாலும் என்ன நடந்தது என்று தெளிவாக தெரிந்து கொள்ள அவனுக்கும் ஒரு ஆவல் இருந்துகொண்டு தான் இருக்கிறது. சரி அதைப்பற்றி கேட்கலாம் என்று நினைக்க இன்றே சம்மந்தப்பட்டவரின் இருவேறு முகங்களைக் கண்கூடப் பார்த்ததால் அவனுக்கு எது உண்மை எது மாயை என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த யோசனை தான் அவனை மேலும் வேலையில் கவனம் செலுத்த விடாமல் அலைக்கழிக்க அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டான். கோவத்தில் அருகிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து தூக்கிப் போட்டு உடைக்க அவன் அறை தட்டப்பட்டது. நிச்சயம் அவன் அன்னையாக இருக்காது என்று அவன் அறிந்தான். அவராக இருந்தால் இப்படி அழைக்க மாட்டார். பின்னே யார் என்று திறக்க அங்கு மாதுளை தான் கையில் டீ கப்போடு நின்றுகொண்டு இருந்தாள். அவளைப் பார்த்தவன் முதலில் அதை வாங்க கையை நீட்டி பிறகு என்ன நினைத்தானோ அவளை உள்ளே வந்து அந்த டேபிளில் வைக்கச் சொன்னான்.

கீழே பொருட்கள் எல்லாம் உடைந்து இருப்பதைக் கண்டவள் சுற்றி முற்றி அந்த அறையையும் கீழேயும் பார்த்தபடியே வந்தாள் மாதுளை. அறை அவள் எதிர்பார்த்தத்தைக் காட்டிலும் மிகவும் பிரமாண்டமாகவே காட்சியளித்தது. ஒரு தளம் முழுவதும் ஒரே அறையாக இந்த ஒரு அறை குறைந்தது ஐந்து 3 bhk பிளாட் சேர்ந்த அளவுக்கு இருக்கும். உள்ளே நுழைந்ததும் பெரிய ஹால் அருகில் பெரிய கௌச் (couch) அதையடுத்து ஒரு பெரிய பில்லியர்ட்ஸ் போர்டு, அதற்கு மேல் படுக்கை அறை என்று அது தனியாக உள்ளே இருந்தது. அதற்கு மேல் பார்க்காமல் அந்த மேஜையில் டீ கப்பை வைத்துவிட்டுத் திரும்பினாள். அவளை மிக அருகில் பின்தொடர்ந்து வந்தான் இந்திரன். திடுக்கிட்டவள் ஸ்லிப் ஆகி அருகே இருந்த பீன் பேகில் (bean bag - ஒரு வகை உட்காரும் சோபா போன்றது. கூகிள் செய்யவும்!) அப்படியே அமர்ந்தாள். ஒரு வார்த்தையையும் பேசாமல் வந்தவன் அந்த மேஜையில் இருந்த டீ கப்பை எடுத்து அங்கிருந்த சிட்டவுட்டில் (sit out - பால்கனி போன்றது) நின்று வெளியே வேடிக்கை பார்த்தவாறே அந்த டீயை உறிஞ்சினான்.

ஏற்கனவே நிறைய குழப்பத்தில் இருந்தவள் பயந்து எழுந்து வெளியே சென்று விட்டாள். அவள் பதறி வெளியே செல்லும் வரை வேடிக்கை பார்த்தவன் அவள் சென்றதும் திரும்பி அவள் சென்ற திசையைப் பார்த்தவாறே டீயை உறிஞ்சினான்.

அவனுள் ஒரு வித வெறுமை தோன்றியது. 'யாரையும் நம்பவே கூடாதா?' என்று அவன் மனம் அவனையே கேள்வி கேட்க என்ன பதில் சொல்வதென்று புரியாமல் இருந்தவன் எவ்வளவு நேரமென்று தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அங்கே திரும்ப, சுவற்றில் ஒரு பெரிய புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அது ஸ்ரீயும் சிந்துவும் முதல் முறை அரங்கேற்றம் செய்யும் போது எடுத்தது. ஒரு 12 ,13 வயதை நிரம்பியவர்கள் சாரீயில் சிரித்த முகமாய் இருக்க அதைக் கண்டவனுக்கு மனதில் ஒரு சின்ன நிம்மதி படர்ந்தது. அப்போது தான் திடீரென அவனுக்கு ஒரு ஸ்பார்க் தோன்ற உடனே தன் செல் போனை எடுக்க அதில் அவன் தேடுவது கிடைக்காமல் போகவும் இன்னொரு எண்ணிற்கு அழைத்தவன்,"எனக்கு சில டீடெய்ல்ஸ் எல்லாம் வேணும். அதுக்கு ஒரு வெல் டேலெண்டெட் பிரைவேட் டிடெக்டிவ் வேணும். ஆனா ஒன்னு நான் தான் கேட்டேன்னு யாருக்கும் தெரியக்கூடாது..." என்று சில ரகசியங்களைப் பேசியவன் அந்த ஆக்சிடென்ட் நாளின் நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக யோசித்தான். 'அந்த ஆக்சிடென்ட் ஆவதற்கு சற்று முன் தான் ஒரு ஷாப்பிங் மாலில் நிறுத்திவிட்டு கிளம்பினோம். அதுவரை வண்டி நல்லா தான் இருந்தது. அங்கிருந்து வண்டியை எடுத்து ஒரு டூ கிலோமீட்டர்ஸ் கூட ட்ராவல் ஆகியிருக்காது...' என்றவனுக்கு அதற்கு மேல் எதுவும் ஞாபகம் வரவில்லை. 'உங்க ஆளு படம் ரிலீஸ் ஆகியிருக்கு. எப்படியும் ஊத்திக்கும்...' இந்த மாதிரி சில வார்த்தைகள் மட்டும் அவன் காதில் ஒலித்தது. அதற்குமேல் அவனால் எதையும் யோசிக்க முடியவில்லை.

மாலையில் இமையவர்மன் மற்றும் தாமோதரன் இருவரும் வந்துவிட மேலேயிருந்தவன் தாமோவைப் பார்த்துவிட்டு அவசரமாக கீழே இறங்கி, ரொம்ப கேசுவலாய்,"குட் ஈவினிங் அங்கிள்..." என்றான்.

அதில் சற்று ஆச்சரியப்பட்டவர்,"குட் ஈவினிங் இந்திரா..."

"சாரி அங்கிள் கொஞ்சம் தலை வலி அதுதான் மீட்டிங் அட்டென்ட் பண்ண முடியில..." என்றதும் அவனின் தலைவலி என்னும் கூற்றில் இமையவர்மனும் சகுந்தலாவும் சற்று அதிர, அதை உணர்ந்தவன்,"ஒன்னுமில்ல கொஞ்சம் ஒர்க் டென்ஷன்..." என்று சொல்லிவிட்டு அவரிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றவன் இருவரும் தனியே சென்று பேசினார்கள். அவன் பேச்சு பெரும்பாலும் கதிரவனைச் சுற்றியே இருப்பதை அறிந்த தாமோ,"இந்திரா என்கிட்ட நீ எதையும் சுற்றி வளைக்க வேண்டாம். கேட்க வந்ததை நேரா கேளு..." என்றார் தாமோ.

சுற்றிமுற்றி பார்த்தவன்,"அங்கிள் நான் உங்ககிட்ட நிறைய பேசணும். ஆனா இங்க வேணாம். நாளைக்கு ஈவினிங் ஆறு மணிக்கு நம்ம பீச் ஹவுஸ்ல உங்ககிட்ட நிறைய பேசணும். பேசலாமா?" என்றான்.

அவரும் சரியென்று தலையாட்டி செல்ல, இந்திரனின் கணிப்பு படி இந்நேரம் அந்த ஆக்சிடெண்ட்டை பற்றியும் அதற்கு பின் நடந்தது முன் நடந்தது என்று எல்லாமும் இவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அந்த நம்பிக்கையில் தான் இப்போது அவரிடம் இவன் தனியே பேச வேண்டும் என்று நினைத்தான்.

******************

அன்று பேசியது போலவே தருண் தன் நண்பன் ஒருவனின் மூலமாக இந்திரனை தனியே மீட் பண்ண ஏதேனும் அப்பாய்ண்ட்மென்ட் கிடைக்குமா என்பதைப் பற்றி அதிதீவிரமாகப் பேசிக் கொண்டு இருந்தான். அருகில் குகனும் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு ஏதோ யோசனையில் இருந்தான். இடையில் அவனைக் கண்டும் காணாமல் தன் நண்பனிடம் பேசியவன் எதிர்புறமிருந்து,"ஆஃபீசியலா தான் இந்திரனைப் பார்க்க அப்பாயிண்ட் மென்ட் கிடைக்கும். பெர்சனலா இப்போதைக்கு யாருக்குமே அப்பாய்ண்ட் மென்ட் கொடுக்கறது இல்ல..." சொல்லப்பட தருணும் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

"இல்ல சார்லஸ் எனக்கு இந்திரனை பெர்சனலா மீட் பண்ணனும். நிலைமை கொஞ்சம் சீரியஸா தான் இருக்கு..." என்று முடிந்த அளவுக்கு மன்றாடிக் கொண்டு இருந்தான். ஒருவழியாக தன் நண்பனிடம் பேசிவிட்டு நிமிர்ந்தவன் கண்ணில் இன்னமும் குகன் எதையோ தீவிரமாக யோசிப்பது தெரிய,"என்ன குகன் பலமான யோசனையில இருக்கப் போல? சொன்னா நானும் உனக்கு உதவி பண்ணுவேன்..." என்று சொன்னதும், திருதிருவென முழித்தவன்,"இல்ல பாஸ் ஒன்னும் யோசனை எல்லாம் இல்ல..." என்று மழுப்பினான்.

"டேய், ஒழுங்கா சொல்லப் போறியா இல்லையா?" என்று தருண் சற்று குரலை உயர்த்த,

"இல்ல பாஸ் இந்த பேப்பர்ல குறுக்கெழுத்து போட்டி வந்திருக்கு. அதுல கோவலனின் தந்தை பெயர்னு இருக்கு. அது தான் என்னனு யோசிச்சிட்டு இருக்கேன்..." என்று அவன் சொல்ல,"மாசாத்துவன்..." என்று தருண் சொன்னதும் கொடுக்கப்பட்ட பாக்சில் நிரப்பியவன் விடை சரியாக வரவும்,"சூப்பர் பாஸ் நீங்க. உங்களுக்கு அறிவோ அறிவு..." என்று சொல்லி அதை நிரப்பினான்.

"நீ வேற ஏன்டா? நானே இந்த கேஸுக்கு ஒரு நூலும் கிடைக்க மாட்டேங்குதுனு இருக்கேன். இந்திரனை யாரு எதுக்கு கொல்ல முயற்சிக்கணும்? அதும் அவன் ஏற்கனவே ஒரு ஆக்சிடெண்ட்ல தப்பி பிழைச்சு வந்திருக்கும் போது? அந்த கேங்கை யாரு அனுப்பியிருப்பா? அதும் இவ்வளவு விவரமா பிளான் பண்ணி மாட்டிக்காத அளவுக்கு ஏன் பண்ணனும்? இதுல இந்த கதிரவன் வேற எதுக்கு அந்த அசோக் சௌனிகூடச் சேர்ந்து ஆள் அனுப்பனும். ஆக்சிடெண்ட்ல இருந்து மீண்டவனை ஒரேயடியா தீர்த்துக்கட்ட ஏன் முடிவு பண்ணனும். ஒன்னுமே புரியல..."

"பாஸ் எனக்கு ஒரு சந்தேகம்..." என்றான் குகன்.

"விளையாடாத குகா. நானே குழம்பி இருக்கேன். நீ ஏதாவது கேட்டு என்னை டென்ஷன் பண்ணாத... என்னைக் கொஞ்சம் தனியா விடு..." என்றான் தருண்.

"இல்ல பாஸ், ஒருவேளை முன்னாடி நடந்ததே ஏன் ஒரு கொலை முயற்சியா இருக்கக் கூடாது? அதாவது அந்த ஆக்சிடென்டே ஏன் முதல் மர்டர் அட்டெம்ப்ட்டா இருக்கக் கூடாது?" என்று கேட்டவன் தருணைப் பார்க்க, ஒரு கணம் யோசித்தவன்,"டேய் குகா மார்வெலஸ் டா! இது ஏன் எனக்குத் தோணல? அப்படியும் இருக்கலாம் இல்ல? இருக்கலாம் என்ன இருக்கும். ஏன்னா அந்த இந்திரன் ஒரு கார் ரேசர். அவனுக்கு இந்த கார் ஆக்சிடென்ட் எல்லாம் ஒரு பொருட்டே இல்ல. நிறையவே பார்த்திருப்பான். சோ இப்போ அந்த ஆக்சிடென்ட் எப்படி நடந்ததுனு கண்டுபிடிச்சா அடுத்து ஏன் நடந்தது கண்டுபிடிச்சு இறுதியா யாரு நடத்துனதுனு அப்படியே ப்ரொசீட் பண்ணலாம். ஐயோ தேங்க்ஸ் டா... தேறிட்ட டா குகன்..." என்று வாழ்த்தினான் தருண்.

"பாஸ் அன்னைக்கு கேட்ட அதே கேள்வி தான் இப்பயும் கேக்கறேன். தப்பா எடுத்துக்காதீங்க. நமக்கு தர பட்ட அசைன்மென்ட் இந்திரனை யாரு அட்டகட்டில அட்டாக் பண்ண வந்தாங்கறதும் தாமோதரனை பாலோ பண்ணி அவருக்கு கதிரவன் மேல எந்தளவுக்கு டவுட் இருக்குனு கண்டுபிடிக்க மட்டும் தானே? இதுல நாம தேவை இல்லாம கண்டத்துல மூக்கை நுழைக்கிறோம்னு உங்களுக்கு ஃபீல் ஆகலையா? அது ஆக்சிடெண்ட்டா இருந்தா நமக்கென்ன இல்ல மர்டர் அட்டெம்ப்ட்டா இருந்தா நமக்கென்ன பாஸ்?"

"டேய் இப்போ தான் உன்ன பாராட்டுனேன் அதுக்குள்ள திட்டு வாங்காத... நீ தானே சொன்ன இது ஏன் ரெண்டாவது மர்டர் அட்டெம்ப்ட்டா இருக்கலாம்னு. அப்போ முதல் அட்டெம்ப்ட் தான் அந்த கார் ஆக்சிடென்ட். அப்போ அதை யாரு செஞ்சாங்களோ அவங்களே ஏன் இதையும் திரும்ப செஞ்சு இருக்கக் கூடாது? போன தடவை மிஸ் ஆகிட்டான் இந்த முறை மிஸ் ஆகக்கூடாதுனு ஏன் நினைத்திருக்கக் கூடாது?"

"ஆமாயில்ல? எனக்கு ஏன் பாஸ் இதெல்லாம் தோணல?"

"நல்ல கேள்வி. ஏன்னா நம்ம மூளையும் ஒரு வகையில கம்ப்யூட்டர் மாதிரி தான். அதுல எப்படி caches, temporary files போன்ற தேவையில்லாத பைல்ஸ் எல்லாம் இருந்தா சிஸ்டம் ஸ்லோ ஆகுதோ அதுபோல நம்ம மூளையில் தேவையில்லாத கருமத்தை எல்லாம் வெச்சிருந்தா இப்படித் தான் ஸ்ரக் ஆகும். நீ தான் ஸ்வீட் ஸ்டால் நடிகை கௌதம புத்த ஹீரோனு இப்படி எல்லாத்தையும் ஞாபகம் வெச்சி இருக்கியே? அப்றோம் எப்படி உனக்கு இதெல்லாம் தோணும்?" என்றவன் அவனை முறைத்தான்.

"பாஸ், சினிமா கிசுகிசு படிக்கிறது இதோ குறுக்கெழுத்து போட்டில எழுதுறது எல்லாம் என் ஹாபி..."

"ரெண்டாவது சொன்னியே அதைக் கூட ஹாபில சேர்த்துப்பேன். ஆனா முதல சொன்னதை நெவெர். எனக்கு உன் கிட்டப் பேச டைம் இல்ல. அவசரமா நிறைய வேலை இருக்கு. இப்போ நீ என் கூட வரியா இல்லயா?"

"ஐயோ பாஸ், அது என் ஹாபி. ஆனா இன்வெஸ்டிஜிகேசன் தான் என் ப்ரொபெஸன். உங்களை மாதிரி நானும் ஏன் உங்களை விட திறமைசாலியா நானும் வரணும் அதுக்கு நான் இப்போ உங்க கூட கண்டிப்பா வரேன் பாஸ்..."

அவன் சொன்னதில் கொஞ்சம் ஷாக் ஆனவன் முறைக்க,

"பொறாமை படாதீங்க பாஸ். நான் உங்களை விட பேமஸ் ஆனா அவன் என்கிட்ட தான் தொழில் கத்துக்கிட்டானு நீங்க பெருமையா சொல்லிக்கலாம். அதுக்கு நான் அப்ஜெக்சன் எல்லாம் சொல்ல மாட்டேன். அப்போ உங்களுக்கு தான் பெருமை வரும்..." என்று சொல்லி அவன் கேசுவலாக போக,

அவன் சொன்ன பதிலில் உண்மையில் ஷாக் ஆன தருண்,"எல்லாம் என் நேரம் டா..." என்று முணுமுணுக்க,"பாஸ் வரலையா? வாங்க டைம் ஆகுது. பங்சுவாலிட்டியே இல்ல பாஸ் உங்க கிட்ட..." என்று சொல்ல,

"அப்படிங்களா குகன் சார்? இனிமேல் பங்சுவளா இருக்கேன், இப்போ போலாம் வாங்க..." என்று விரைந்தனர்.

*****************

கதிரவன் இந்த ஒரு வாரமாக அதிக அதிக மனவுளைச்சலில் இருக்கிறான். ஒருபக்கம் இந்திரன் சமீபத்தில் நடந்து கொள்ளும் முறை என்னவோ அவனுக்கு நிறைய சந்தேகத்தைத் தந்து சென்றது. ஒருவேளை இந்திரனுக்கு எல்லாமும் தெரியுமோ? ஏனெனில் அன்று இரு முறை பில்லியர்ட்ஸ் ஆடும் போதும் சரி ஆபிஸிலும் சரி அவனின் நடவடிக்கையை கதிரவனால் யூகிக்கவே முடியவில்லை. மேலும் அன்று அவன் சொன்னது வேறு அவனுக்கு அதிக நெருடலைத் தந்தது. அதேநேரம் ஒருவேளை தான் செய்வதைப் பற்றித் தெரிந்திருந்தால் இவ்வளவு நேரம் இந்திரன் சும்மா இருந்திருக்க மாட்டானே? அவன் சுபாவம் அப்படி என்று கதிரும் அறிவான். எதிரிகளையே இருக்க விடாமல் செய்வது தான் அவன் பாணி. இதில் துரோகிகளின் நிலை? ஒருபக்கம் அவனை பயம் வேறு ஆட்கொண்டது. மறுபக்கம் இந்த அசோக் சௌனி வேறு அடுத்த கட்ட நடவடிக்கையைச் சொல்லி அவனைத் துரிதப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் இந்த தருணும் தன்னைச் சந்தேகப் பார்வையைப் பார்ப்பது போல் அவனுக்கு ஒரு மாயை. இதில் தாமோதரன் மட்டும் தான் வெளிப்படையாகவே தன்னைச் சந்தேகப்பட்டு நோட்டமிடுகிறார். ஒரு விதத்தில் தாமோவைக் கூட எப்படியேனும் சமாளித்து விடலாம் தான். பின்னே அவரைப் பொறுத்த வரை நான் திருட்டுத்தனம் செய்வது அவருக்குத் தெரியும். இதில் நேற்று முளைத்த காளான் போல இந்த மாதுளை வேறு அன்று அவன் பேசியதைக் கேட்டு விட்டாள்?! அதுவும் அவனுக்கு இன்னும் ஊர்ஜிதம் ஆகவில்லை. ஆனால் அவள் கேட்டிருக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் தான். ஆங்கிலத்தில் தான் பேசினேன். இதனாலே மாதுளையை ஆபிசுக்கு அழைத்து வந்ததில் அவனுக்கு விருப்பமில்லை. இவை எல்லாவற்றுக்கும் நடுவில் தன்னை நல்லவன் என்று நம்பும் சகுந்தலா இமையவர்மனின் நம்பிக்கை வேறு. நல்லவனாகவும் இருந்திடலாம் கெட்டவனாகவும் இருந்திடலாம் ஆனால் வேடம் போடுவது அதும் நல்லவன் வேடம் போடுவது கொடுமை என்று அஞ்சினான்.

இதை எல்லாம் விட அந்த டிடெக்டிவ் தருண் கதிருக்கு பேரதிர்ச்சியைத் தந்துவிட்டான். இவன் அவனை குறைத்து மதிப்பிட்டு விட்டான். 'நான் அப்பொய்ண்ட் பண்ணவன் என்கிட்டே சம்பளம் வாங்குறவேன் ஆனால் அவனை நினைத்தால் எனக்கு தான் பக் பக்னு இருக்கு' என்று குழம்பினான். அவன் சேவையை நிராகரித்து விடலாம் தான் ஆனால் அவன் கட்சி மாறிவிட்டால்? ஐயோ என்று இருந்தது கதிரவனுக்கு. இவ்வளவு கடுமையிலும் அவனுக்கு அவன் எதிரே இருந்த சிந்துவின் புகைப்படம் மனதில் ஒரு இனம் புரியாதா துள்ளலைத் தர கூடவே அவள் இல்லாததன் நிலையும் புரிந்து வருந்தினான்.

*****************

இந்தியா என்ன தான் உலகத்திற்கே அதிகமான மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்தாலும் (ஜெனிரிக் மருந்துகள் ஏற்றுமதியில் இந்தியா 20 % ஏற்றுமதி செய்கிறது 2018 -19 ல் 20 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 120000 கோடி). ஜெனிரிக் மெடிசின்ஸ் என்றால் என்ன? அதாவது ஒரு நிறுவனம் ஒரு வியாதிக்கு புதியதாக ஒரு மருந்தைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றால் உடனே அந்த மருந்துக்கு பேட்டண்ட் ( patent - காப்புரிமை) பெற்றுவிடும் . அப்படியென்றால் வேறு யாரும் அந்த மருந்தை அவர்களின் அனுமதியின்றி தயாரிக்கக் கூடாது. இல்லையேல் அதற்கு அதிக அளவில் பணம் கொடுத்து தான் உரிமத்தைப் பெற வேண்டும். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒரு மருந்துக்கு இவ்வளவு செலவு செய்ய முடியாது என்ற காரணத்தால் உலக வர்த்தக மையத்தின் (world trade organisation) ட்ரிப்ஸ் (trips - ஒரு ஒப்பந்தம். ஒருவர் காப்புரிமை பெற்றதை மற்றவர்கள் உபயோகப்படுத்தக் கூடாது என்ற ஒப்பந்தம் இது. இது மற்ற பொருட்களுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் பொருந்தினாலும் மருத்துவ துறை சார்ந்த கண்டுபிடிப்புகளுக்குப் பொருந்தாது என்று இந்தியா வாதாடி அந்த ஒப்பந்தத்தில் ஒரு சலுகையைப் பெற்றது. அதற்கு பெயர் cl (compulsory licenses - அதாவது கட்டாய ஒப்புதல் என்று அர்த்தம். புதியதாக கண்டுபிடிக்கப் பட்ட ஒரு மருந்தை அந்த நிறுவனம் மக்கள் நலம் சாராமல் வியாபார நோக்குடன் செயல்படுகிறது என்று அறிந்தால் அந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்பைக் கொண்டு ஜெனிரிக் மருந்துகளை (அதாவது அதே api களை கொண்டு நாமே தயாரிப்பது என்று பொருள்) உபயோக படுத்தலாம் என்று அர்த்தம்)). அந்த clஐ அந்த நிறுவனத்தால் கூட தடுத்து நிறுத்த முடியாது.

ஒரு மருந்தில் இரண்டு பொருட்கள் இருக்கும். முதலில் api. அது தான் நோயை குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது. இரண்டாவது எக்சிசிபிஎன்ட்ஸ் (excipients) . இது மருந்தில்லாமல் இருக்கும் இதர பொருட்கள். இவை இரண்டும் சேர்ந்தால் தான் ஒரு மருந்து முழு வீரியம் அடைகிறது. ஆனால் ஒரு மருந்தைத் தயாரிக்க அத்யாவிஷயமான அந்த api இந்தியாவிடம் இல்லை. சீனாவிடமிருந்து தான் இந்தியா இறக்குமதி செய்கிறது.1990 வரை இந்தியாவே நிறைய மருந்துகளுக்கு api தயாரித்துக்கொண்டு இருந்தது. ஆனால் இந்தியா தயாரிக்கும் செலவைக் காட்டிலும் குறைந்த பணத்தில் கிடைக்கும் சீனாவிடமிருந்து அதை இறக்குமதி செய்ய ஆரமித்தது. இந்தியா சீனா இடையிலே தற்போதிருக்கும் அசாதாரணச் சூழலால் இப்போது மீண்டும் இந்தியாவே api களைத் தயாரிக்க ஊக்குவிக்கிறது. இந்த api என்பது மூல பொருட்கள் என்று அர்த்தம் இல்லை. மூல பொருட்களைக் கொண்டு தான் api தயாரிக்கப் படுகிறது. அதாவது மூலப்பொருட்களின் இருந்து apiயும், apiயில் இருந்து மருந்தும் தயாரிக்கிறோம்.(வானிலை மாறும்...)
 
நண்பனுக்கு துரோகம் செய்ய நினைத்தால் இப்படி தான் மண்ட காஞ்சு சுத்தணும் கதிரவா
yes yes... thank you??
 
ஹா....ஹா...கதிருக்கு நாலு பக்கத்திலிருந்தும் அனல் அடிக்குது...
இதில சிந்துவோட காதல்...வேறு
கதை முடிவுல அவன் நல்லவனா இருப்பானோ...?

மருந்துகள் உற்பத்தி, பாலிஸி பற்றி சுருக்கமா, தெளிவா சொல்லியிருக்கீங்க... ?
 
ஹா....ஹா...கதிருக்கு நாலு பக்கத்திலிருந்தும் அனல் அடிக்குது...
இதில சிந்துவோட காதல்...வேறு
கதை முடிவுல அவன் நல்லவனா இருப்பானோ...?

மருந்துகள் உற்பத்தி, பாலிஸி பற்றி சுருக்கமா, தெளிவா சொல்லியிருக்கீங்க... ?
அதை இப்போதைக்கு சொல்ல முடியாதே... கதிர் ஒரு புதிர்...(ஆஹா ரைமிங் நல்லா இருக்குல்ல? ?�) நன்றி... ?
 
Top