Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 7 2

Advertisement

Admin

Admin
Member


இங்கு அசோக்கின் நிலமையோ முற்றிலும் வேறு மாதிரியிருந்தது. அவன் எங்கே? பத்மினியை பார்த்தான்.பத்மினியின் பக்கத்தில் ஷாலினி கண்மூடி அமர்ந்து வந்ததையும், பின் கண்ணை திறந்து பத்மினியை முறைத்ததையும் பார்த்தே…. அந்த முறைத்த கண்ணுக்குள்ளேயே முற்றிலும் வீழ்ந்து விட்டான்.

இவர்களின் அனைவரின் மனநிலையையும் எதுவும் அறியாமல் ஷாலினியுடன் சிரித்து பேசிக்கொண்டே கார்டனில் தன் பார்வை சென்ற போது அப்படியே பிரம்மை பிடித்தது போல் நின்று விட்டாள். பின் என்ன?இன்று காலை எழுந்தவுடன் இனிமேல் யாரை நினைக்கவே கூடாது என்று முடிவு செய்து தன் மனநிலையை மாற்றுவதற்கு மாலை காலேஜ் முடிந்தவுடன் வீட்டுக்கு வராமல் ஷாலினியுடன் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்தால் அங்கும் பிரதாப்பை பார்த்தால் பாவம் அவள் தான் என்ன செய்வாள்.?

பத்மினி வராமல் அங்கேயே இருப்பதை பார்த்த கேசவமூர்த்தி “வாம்மா பத்தூ” என்று அழைத்ததும் தான் தன் நிலை அடைந்த பத்மினி ஷாலினியையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றாள்.

ஷாலினியோ பிரதாப்பை பார்த்ததும் பத்மினியின் கையை விட்டு விட்டு அவளுக்கு முன் அங்கு சென்றாள்.எப்போதும் பத்மினி ஷாலினியை பார்த்து எதற்கும் கோபம் கொண்டது இல்லை. ஆனால் ஷாலினியின் இந்த நடவடிக்கையை பார்த்து அவளுக்கு அவ்வளவு எரிச்சலாக இருந்தது.

பின் தன் எரிச்சலை மறைத்துக் கொண்டே தன் தந்தையின் அருகில் போய் நின்றாள். சந்தானத்திடம், எப்போது அங்கிள் வந்தீர்கள் என்று நலம் விசாரித்தாவாரே பிரதாப்புக்கும்,அசோக்குக்கும் சேர்த்து தலை அசைத்து தன் விசாரிப்பை குறைத்து, பிரதாப்பின் வயித்தெரிச்சலை கூட்டினாள்.

பிரதாப்பின் மனதுக்குள் எல்லாவற்றுக்கும் சேர்த்து வைக்கிறேன் ஆப்பூ உனக்கும், உன் தந்தைக்கும் என்று மனதில் நினைத்தக் கொண்டான்.அதற்குள் சகுந்தலா அம்மா பத்மினியை பார்த்து அவர்கள் வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டது.சாப்பிட ஏதாவது கொண்டு வா என்று பத்மினியை அவ்விடத்தை விட்டு அனுப்ப நினைத்தார்.

ஆனால் அதற்குள் சந்தானம் கேசவமூர்த்தியிடம்,”உன் மகளிடம் கேட்டு நல்ல முடிவா சொன்னால் ஸ்வீட்டோடு சாப்பிடலாம்” என்று கூறினார். ஏன் என்றால் பிரதாப்பின் முகத்தை பார்த்தே அவனின் மனநிலையை அறிந்துக் கொண்டார். மேலும் பிரதாப் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் பத்மினி இன்னும் சிறிது நேரம் இருந்தால் கண்டிப்பாக பிரதாப்பை பிடித்து விடும் என்று கருதியே அவ்வாறு கூறினார்.

சந்தானத்தின் இந்த பேச்சால் சகுந்தலா அம்மா எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது என்றால் பத்மினிக்கு ஒன்னும் விளங்கவில்லை என்ன நல்ல விஷயம் என்று யோசித்தாள். அவளின் குழப்பமான முகத்தை பார்த்த கேசவமூர்த்தியும் என்ன நினைத்தாரோ சட்டென்று மகளை தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.

பத்மினியும் தன் அப்பா அருகில் அவர் முகம் பார்க்குமாறு அமர்ந்துக் கொண்டாள். பின் சிறுது தொண்டை கணைப்புக்கு பிறகு மிக வெளிப்படையாகவே தன் மகளிடம் “பத்தூ பிரதாப் உன்னை பெண் கேட்டு வந்து இருக்கிறார் நீ என்னம்மா சொல்றே?என்ற தந்தையின் கேள்வியால் கண்ணை கூட சிமிட்ட முடியாமல் சிலையாக அமர்ந்து விட்டாள்.

அவளுக்கு தன் செவி திறனிலேயே சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அவள் சிறிதும் யோசித்து கூட பார்க்க வில்லை தன்னை பெண் கேட்டு வந்து இருப்பார்கள் என்று.காலையில் இருந்து ஏன் நேற்று பிரதாப்பை பார்த்தில் இருந்தே அவளுக்குள் ஏனோ இனம் புரியாத ஒரு எண்ணம்.அவற்றிற்கு என்ன பெயர் இடுவது என்று கூட தெரிய வில்லை.ஆனாலும் தன் மனதுக்குள்ளாகவே இது நமக்கு சரிப்பட்டு வராது என்று ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாலும் ஆயிரத்து ஒன்றாம் முறையாக அவன் நினைவே.

அப்படி இருக்கும் போது அவர்களே வந்து அதுவும் நேற்று தான் பார்த்தார்.இன்று தன்னை பெண் கேட்டது அவளுக்கு அவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது.பாதிப்பு அவருக்கும் இருக்கிறது அல்லவா?ஆனால் நேற்று என்னை அவர் சரியாக கூட பார்க்க வில்லையே…..என்று யோசனையில் நாமும் அவனை நேரில் பார்க்காதது போல் இருந்து மறைந்து திருட்டு தனமகா தான் பார்த்தோம் என்றதை மறந்து விட்டாள்.

இவள் இவ்வாறு யோசனையில் இருக்கும் போது தந்தை பொருமையாக இருப்பார். ஆனால் ஏற்கனவே கடுப்பில் இருக்கும் பிரதாப்பின் மன நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள் ?என்னை ஓகே பண்ண இவளுக்கு இவ்வலவு யோசனையா கொஞ்சம் அழகா இருக்கா அவ்வளவு தான் ஆனால் இவ்வளவு சீன் போடுற அளவுக்கு வொர்த்து இல்லை என்று அவன் மனதில் கண்டபடி திட்டிக் கொண்டிருந்தாலும்….

அவ்வளவு வொர்த்து இல்லை என்று நினைப்பவளை தான் அவள் தன்னை ஓகே சொல்ல வேண்டும் என்று எப்போது வேண்டாத கடவுளிடம் அர்ஜெண்டாக ஒரு அப்ளிகேஷனை வைத்தான்.

இவ்வளவு நேரம் இருந்த மௌனத்தை கலைப்பது போல் சந்தானம் “என்னம்மா உன் முடிவு என்ன தைரியமாக சொல் என்றதுடன், உன் தந்தை சொன்ன எல்லா கண்டீஷனுக்கும் பிரதாப் ஓகே சொல்லி விட்டார்”. என்பதை சேர்த்தே சொன்னார்.

பத்மினி முதலில் சந்தோஷம் பட்டாலும் தன் தந்தை தனக்கு வீட்டோடு தானே மாப்பிள்ளை பார்ப்பதாக கூறினார்.ஆனால் இவரை பார்த்தால் வசதியாக இருப்பது போல் இருக்கிறார். வசதி போல் என்ன வசதி உடையவராக தான் இருக்க வேண்டும்.இல்லை என்றால் ஒரு ஓட்டலை விலை பேச முடியுமா? இந்த யோசனையுடன் தான் அவர்கள் கேட்டதுக்கு பதில் சொல்ல இயலாமல் தன் தந்தை முகத்தையையே பார்த்திருந்தாள்.

ஆனால் சந்தானம் அங்கிள் தன் தந்தை சொன்ன கண்டீஷனுக்கு ஒத்துக் கொண்டார் என்று கூறுயவுடன்...அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் அது வெளிப்படையாக தெரிந்தது.ஆனால் இதில் என்ன சோதனை என்றால்? அவள் தன் தந்தையை பார்த்தவாறு இருந்ததால்…...கேசவமூர்த்தி மட்டுமே தன் மகளின் முகம் தெரிந்தது.அதில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்தே தன் பெண்ணுக்கு பிரதாப்பை பிடித்து விட்டது. இனி என்ன காரணத்தை முன்னிட்டும் இத்திருமணத்தை தடுக்க கூடாது என்று கருதினார்.

ஆம் கேசவமூர்த்தி தான் கேள்வி கேட்டதில் இருந்து…. தன் மகள் முகத்தையே தான் பார்த்திருந்தார்.அதனால் தான் தன் மகளை அருகில் அமர்த்திக் கொண்டு அவளையும் தன் முகத்தை பார்த்தவாறே அமர்த்திக் கொண்டார்.பத்மினியிடம் தான் பிரதாப் உன்னை பெண் கேட்டு வந்திருக்கிறார் என்று சொன்னவுடன்…

அவள் முகம் மலர்ந்ததும் பின் யோசனையில் மூழ்கியதும்… சந்தானத்தின் பேச்சால் திரும்பவும் அவள் முகம் மலர்ந்தது மட்டும் அல்லாமல் வெக்கப்பட்டு அவள் தலை குனிந்ததையும் பார்த்து தன் பெண்ணுக்கு பிரதாப்பை மிகவும் பிடித்து விட்டது.அதனால் தன் மகள் விரும்பும் வாழ்க்கையே அமைத்து தரவேண்டும் என்று முடிவு செய்தார்.

அதனால் கேசவமூர்த்தி தன் மகளிடம் சம்மதத்தை கூட கேட்கவில்லை. ஆனால் மற்றவர்கள் அவ்வாறு இருப்பார்களா? பத்மினியின் இந்த மவுனம் பிரதாப்புக்கு நம்பிக்கையே போய் விட்டது. அவளுக்கு தன்னை பிடிக்க வில்லை என்று முடிவே கட்டி விட்டான்.

அசோக்கும் ஒரு மாதிரியாகி விட்டான் என்றே கூற வேண்டும்.ஷாலினியை நோட்டம் விடும் வேலையை கூட விட்டு விட்டான். தன் நண்பனை பற்றி நன்கு அறிந்தவன் அவன் செல்வாக்கு பற்றியும் தெரிந்தவன்.திருமணம் பற்றி பத்மினி பதில் சொல்லாதது பிரதாப்பின் மன நிலையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதனையும் அவன் நன்கு அறிவான்.பிரதாப்பின் கையை தன் கையோடு பிடித்து அமைதி படுத்திக் கொண்டிருந்தான்.

ஷாலினியை பற்றி சொல்லவே வேண்டாம். பத்மினியை கொலை வெறியோடு முறைத்து பார்த்தாள்.பின் என்ன?பார்ப்பதற்க்கு கதாநாயகன் மாதிரி இருப்பவனை கான்பித்து திருமணம் செய்ய சம்மதமா என்று கேட்டாள். உடனே ஒத்துக் கொள்ள வேண்டாமா……?அதை விட்டு என்னவோ தீர்க்கவே முடியாத இந்தியா பாகிஸ்தான் ஒப்பந்தம் மாதிரி யோசித்தாள் அவளுக்கு கொலை வெறியே வந்து விட்டது.

இவர்களின் அனைவரின் வயித்தெரிச்சலையும் கொட்டிக் கொண்ட பத்மினி மிக நிதானமாக தலை குனிந்தவாறு கூறினாள் பாருங்க… ஒரு பதில் பிரதாப்பின் உச்ச கட்ட பிபியை ஏற்றுவதற்க்கு அந்த பதிலே போது மானதாக இருந்தது.

ஆம் கேசவமூர்த்தியின் கேள்விக்கு என் தந்தை விருப்பம் தான் எனதும் என்று கூறினாள்.பத்மினியின் முகம் கூட பிரதாப்புக்கு தெரியவில்லை. அவள் தந்தையை பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் பிரதாப்பை பார்த்தவாறு இருந்திருந்தால் குறைந்த பட்சம் அவள் முகம் சிவப்பதில் இருந்தாவது அறிந்திருப்பான்.அறிந்திருப்பானா…? இல்லை தான் பழகிய பெண்களிடம் கண்டது போல்….இவள் ரூஜ் ஏன் இவ்வளவு டார்க்காக போட்டிருக்கிறாள் என்று யோசித்திருப்பானோ…. ? ஏன் என்றால் அவன் பெண்கள் வெக்கப்பட்டு பார்த்ததே இல்லை.

பத்மினியின் இந்த பதில் அசோக்குக்கே திருப்தியை தரவில்லை என்றால், பிரதாப்பின் மனநிலை எந்த நிலையில் இருக்கும்.பேசாமல் பத்மினியிடம் எனக்கு நீ வேண்டாம் என்று கூறி விடலாமா என்று கூட யோசித்தான்.

அவன் யோசனையை கேசவமூர்த்தியின் பதில் தடை செய்தது.பிரதாப்பிடம் மிக பெருமையாக “என் பெண்ணுக்கு என்னுடைய விருப்பமே அவள் விருப்பம். எனக்கு சம்மதம் நீங்கள் உங்கள் வீட்டு பெரியவர்களிடம் இருந்து முறையாக வந்து பேசினால் மற்றவற்றை முறையாக பேசலாம்.”என்று ஒரு பெண்ணின் தகப்பனுக்கே உரிய பெருமையுடன் பேசினார்.

பிரதாப்புக்கு என்ன சொல்வது என்றே ஒரு நிமிடம் புரிய வில்லை.இந்த பதில் என்ன மாதிரியானது திருமணத்திற்கு அப்பா, பெண் இரு வரும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். ஆனால் அந்த சம்மதத்தில் தன் தன் மானம் முழுவதும் அடிவாங்கியதாக கருதினான்.

ஒரு நிமிடம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு “இப்போது அவர்கள் வேல்டு டூரில் இருக்கிறார்கள்.நான் அவர்களை உங்களிடம் போனில் பேச வைக்கிறேன்.நாம் மேற் கொண்டு ஆக வேண்டிய திருமண வேலை பார்க்கலாம்.அவர்கள் திருமணத்திற்கு வந்து விடுவார்கள்” என்று ரத்தின சுருக்கமாக கூறி தன் திருமணத்தை உறுதி படுத்திக் கொண்டான்.
 
Mrg ku ready ayitaanga pradhap and padmini....ivan mini nu peru vachan..padmini enna peru vachu irukaanu kandupidikanume....appa ammava meet panna vidama thittam pottachu....mrg appo meet pannum pothu thadukka mudiyaathungiratha vida kesav naala onnum panna mudiyatha idathula avala nirutha poran....
 
Top