Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 23

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---23

வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த பிரதாப் போனில் அசோக்கை அழைத்தான்.அந்த பக்கத்தில் போனை எடுத்த அசோக் “என்ன பிரதாப் பிஸ்னஸ்செல்லாம் நல்லபடியாக முடிஞ்சுதுலே...அப்புறம் பார்ட்டியில் நீ டிரிங்ஸ் எடுத்துக் கொள்ள வில்லை தானே…ஏன் என்றால் ஏற்கனவே பத்மினி கோவத்தில் இருப்பாள் நீ தண்ணி போட்டுட்டு போனா….அவ்வளவு தான்.”என்ற பேச்சின் இடையில்… ஷாலினியின் குரல் கேட்டது.

பத்மினிக்கு என்ன கோவம் என்ற ஷாலினியின் குரலை கேட்ட பிரதாப் “ஏய் ஷாலினியை உன் வீட்டுக்கா கூட்டிட்டு போய் இருக்கே…”என்று அதிர்ந்து கேட்டான்.

“பின் எங்கே கூட்டிட்டு போறது.அவளுக்கு டெல்லியில் யாரை தெரியும்.”என்று பாவமாக வினாவினான்.

“ஒ...ஆமாம் பாவம் தான் டெல்லியில் அவளுக்கு யாரை தெரியும்.ஆமாம் ஷாலினிக்கு பத்மினி யாருடா…? என் ராசா…”என்று வினாவினான்.

“இல்லைடா உனக்கே அங்கே பிரச்சினை அது தான் என்று…”இழுத்தவாறு நிறுத்தினான்.

“போதும் போதும் உன் அக்கரை இப்போ நேரா அங்க தான் வருகிறேன்.ஷாலினியை ரெடியா இருக்க சொல் .நான் ஷாலினியை என் அம்மாவிடம் ஒப்படைத்து விடுகிறேன்.நீ என்ன செய்ற நாளைக்கு காலை காபியே என் வீட்டில் தான்.நான் அப்பா அம்மாவிடம் உங்கள் விஷயத்தை பேசிவிடுகிறேன்.திருமணம் செய்யாமல் ஒரு வயது பெண்ணை சும்மா வெல்லாம் வைத்துக் கொள்ளமுடியாது.சீக்கிரம் உங்கள் திருமணத்தை முடித்து விடலாம்.”என்று கூறி….

“அப்புறம் சொல்ல மறந்துட்டேன்.நான் வர எப்படியோ…அரை மணி நேரம் ஆகும் அது வரை அவளிடம் டிஸ்டன்ஸை மெயிட்டன் பண்ணி அப்படியே எங்கள் கதையும் சொல்லி முடி அதற்குள் நான் வந்து விடுகிறேன்.”என்று கூறி போனை அணைத்தான்.

பிரதாப் சொல் படியே தான் அசோக்கும் நடந்தான்.ஆனால் ஷாலினி அசோக் இல்லையே அவனிடன் வம்பு வளர்த்துக் கொண்டே பத்மினி பிரதாப்பின் கதையும் கேட்டு முடித்தாள்.

“என்னது பிரதாப் பத்மினிக்கு மாமாவா….”என்று கூறி தன் மோவாயில் கையை வைத்தாள்.அதற்குள் கீழே வருமாறு பிரதாப்பிடம் இருந்து போன் வந்தது.இருவரும் கீழே இறங்கி சென்றதும்.

அசோக் பிரதாப்பின் பக்கம் ஷாலினியை தள்ளியவாறு …”முதல்லே...இவளை இங்க இருந்து அழைச்சிட்டு போ… என்னமோ உன் தங்கச்சி ரொம்ப ஒழுங்கு மாதிரியும்.நான் தான் அவளை ஏதோ பண்ணிடுவேன் என்று பில்டப் எல்லாம் கொடுத்தியே….அவள் என் கிட்ட என்ன சொன்னா தெரியுமா…? நீங்க ஏன் எங்க அப்பாகிட்டே கெஞ்சிட்டு இருக்கனும். எங்க அப்பாவே வலிய வந்து என் பெண்ணை கட்டிக் கோங்கன்னு உங்களிடம் கெஞ்சும் அளவுக்கு நான் ஒரு யோசனை சொல்றேன்னு …”அசோக் காதில் ரகசியம் பேசினான்.

அசோக் சொன்னதை கேட்ட பிரதாப் “அம்மா பரதேவதையே...வாம்மா வந்து முதல்லே...வண்டியில் ஏறு.நாளை இல்லை…யில்லை நடுயிரவு என்றாலும் பரவாயில்லை.இன்றே நான் என் அம்மா அப்பாவிடம் உங்கள் விஷயத்தை பேசிவிடுகிறேன்.”என்று ஷாலினியை தன் வீட்டுக்கு அழைத்து சென்றான்.

காலையில் போனவன் இன்னும் வீடு திரும்பவில்லையே...என்று தீனதயாளன் பிரதாப்புக்கு போனில் அழைத்தார்.போனை எடுத்து பிரதாப் “பார்ட்டி முடித்து விட்டு அசோக்கின் வீட்டுக்கு சென்று வருகிறேன்.நீங்கள் தூங்க செல்லவேண்டாம்.அம்மா முழித்து இருக்கிறார்களா…? முழித்து இருந்தாள் அவர்களிடமும் நான் பேசவேண்டும். மினி தூங்கிவிட்டாளா…? என்று தன்னிடம் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு தன்னை பேசவிடாமல் போனை வைத்து விட்டவனை மனதில் அர்ச்சனை செய்துக் கொண்டே பிரதாப்புக்காக காத்திருந்தார்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பிரதாப்பின் கார் வருவதை பார்த்து தன் மனைவியையும் அழைத்தார்.பிரதாப் கூட ஒரு பெண் வருவதை பார்த்து யோசனையுடன் பிரதாப்பை பார்த்து “அசோக் லவ் பண்ணும் பெண்ணாப்பா….?”என்று கேட்டார்.

பிரதாப் பதில் அளிக்கும் முன் ஷாலினி “அங்கிள் சான்ஸே இல்லை.அப்படியே நீங்க என்னை மாதிரி கற்புர புத்தி …”என்று கூறி தீனதயாளன் பத்மினியின் அருகில் போய் நின்று கொண்டாள்.

முதல் பார்வையிலேயே தீனதயானுக்கும்,பத்மினிக்கும்,ஷாலினியை பிடித்து விட்டது.பத்மினி பிரதாப்பிடம் “யாருப்பா…?இந்த பொண்ணு அப்பா சொல்றா மாதிரி அசோக் இந்த பெண்ணை விரும்புகிறானா…?” என்ற கேள்விக்கு பிரதாப் வாயில் வந்த கொட்டாவியை அடக்கியவாறு ஆமாம் என்று தலையாட்டினான்.

பத்மினிக்கு நம்பவே முடியவில்லை. “நிஜமாவா! நம்ம அசோக்கா காதலிக்கிறான்.என்னால நம்பவே முடியலே கண்ணா…” என்று ஷாலினியிம் முகவாயை பிடித்து பார்க்க அப்படியே மகாலஷ்மி மாதிரியே இருக்கடா…”என்று சர்டிபிகேட்டும் வழங்கினார்.

ஷாலினி சற்று தள்ளியிருந்த தீனதயாளனிடம் “அவங்க முன்ன பின்ன மாகலஷ்மியை பார்த்து இருக்காங்களா….என்னை போய் மகாலஷ்மின்னு சொல்றாங்க…?”என்ற ஷாலினியின் பேச்சில் சிரிப்பை அடக்க முடியாமல் சத்தமாக சிரித்து விட்டார்.

பத்மினி அவர் சிரிப்பதற்க்கு காரணம் புரியாதவராய் “இப்போ என்னத்துக்கு காரணமே இல்லாமல் சிரிக்கிறிங்க…?என்ற பத்மினியின் கேள்வியில் “அது என்னன்னா… பத்தூ”என்ற தீனதயாளன் பேச்சை இடைநிறுத்திய ஷாலினி .

“அது ஒன்றும் இல்லைம்மா…நீங்க என்னை மகாலஷ்மி மாதிரி இருக்கேன்னு சொன்னதுக்கு நான் அங்கிள் கிட்டே அவங்களே…மகாலஷ்மி மாதிரி தான் இருக்காங்க என்னை சொல்றாங்களேன்னு சொன்னதுக்கு எனக்கு தெரிஞ்ச நல்ல கண் டாக்டரை நாளைக்கு போய் பார்க்கலாம்.கண் குறைபாடு உள்ள பெண்ணேல்லாம் எங்கள் அகோக்குக்கு வேண்டாம்.என்று சொல்றாறுமா….”என்று அவள் பேசும் போது தன் முகபாவத்தை ஏற்றி இறக்கி கூறும் அழகில் அது உண்மை என்றே நம்பிவிடலாம்.

ஆனால் தன் கணவரை பற்றி நன்கு தெரிந்து இருந்த பத்மினி அவள் கிண்டல் தான் செய்கிறாள் என்று புரிந்துக் கொண்டு பிரதாப்பிடம். “பிரதாப் நம்ம அசோக் வாழ்க்கையில் இவள் வந்தாள் அவன் வாழ்க்கையில் உள்ள வெறுமையை இவள் கண்டிப்பாக போக்கிடுவாள்.”என்று கூறியதை கேட்ட ஷாலினி .

பிரதாப்பும் முன்பு ஒரு நாள் அசோக் பற்றி பேசும் போது இதே வார்த்தையை தான் தன்னிடம் உபயோகித்தார் என்பது நினைவு வந்தது. தாய்,மகனுக்கான ஒற்றுமை மற்றும் அசோக்கிடம் இவர்கள் காட்டும் கவனம். இவர்கள் எவ்வளவு உன்னிப்பாக அசோக்கை கவனித்து இருக்கிறார்கள்.என்று வியந்துப்போனாள்.

பின் நடுயிரவு கடந்து விட்டதை உணர்ந்த தீனதயாளன். சரி நீங்கள் இருவரும் சாப்பிட்டு விட்டீர்களா...என்று கேட்டதற்க்கு இருவரும் தலையாட்டினர்.பின் பிரதாப்பும் நேரம் செல்வதை உணர்ந்து அசோக் ஷாலினியை பற்றி அனைத்து விவரங்களையும் கூறினான்.

பிரதாப் கூற கூற ஷாலினி தன் பேத்தியின் உயிர் தோழி என்று தெரிந்ததும்.முன்பே பத்மினிக்கு ஷாலினின் குறும்பு தனத்திலேயே கவர்ந்து விட்டாள்.ஆனால் இப்போது கூடுதலாக தன் பேத்தியின் தோழி என்று தெரிந்ததும்.ஷாலினியின் மேல் இன்னும் பற்று அதிகரித்தது.

எல்லாவற்றையும் பொருமையுடன் கேட்ட தீனதயாளன் ஷாலினியிடம் “எல்லாம் சரிம்மா ஆனால் நீ இப்படி சட்டென்று டெல்லிக்கு கிளம்பி வந்தது.சரியில்லை எது என்றாலும் உன் தந்தையிடம் அவர் புரியும் விதத்தில் பேசியிருக்க வேண்டும்.அது விட்டு இப்படி வந்தது நீ என்ன காரணம் சொன்னாலும் என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது.என்ன ஒன்று பிரதாப் நீ அசோக்கோடு தங்கவிடாமல் இங்கு கூட்டிக் கொண்டு வந்தது தான் அவன் செய்த நல்ல காரியம்.” என்று கூறி பிரதாப்பை முறைத்தார்.

“அம்மா இன்னும் எவ்வளவு நேரம் தான் நிக்க வைச்சி பேசிவீங்க எனக்கு தூக்கமா வருது நான் தூங்க போட்டா வேண்டாமா…?என்று தந்தையின் முறைப்பை சமாளித்தான்.

“ஆமாங்க குழந்தை அப்பவே கொட்டாவி விட்டான்.நான் வேறு அவனை தூங்க விடாமல் நீ போ கண்ணா… மத்ததை நாளைக்கு பேசலாம்” என்று கூறி மகனை அவன் அறைக்கு அனுப்ப முற்பட்டார்.

பின் பிரதாப் அப்பா அம்மாவிடம் குட் நைட் சொல்லி விட்டு ஷாலினியிடன்…” ஏய் வாலு நீயும் தூங்கி அம்மாவையும் தூங்க விடு.” என்று கூறி ஒரு சகோதர பாசத்துடன் அவள் தலையை கலைத்து விட்டு அவன் அறை நோக்கி சென்றான்.

பின் ஏதோ நினைவு வந்தவனாக அம்மாவிடம் “அம்மா மினி சாப்பிட்டாளா”என்று கேட்டதற்க்கு “அப்பா… என் பையனுக்கு இப்போவாவது என் பேத்தியை பற்றி நியாபகம் வந்ததே சந்தோஷம்” என்று கூறி நொடித்துக் கொண்டாள்.

அம்மாவின் சலிப்பை பார்த்த பிரதாப் “அம்மா அவள் கோபமா இருக்கா என்று தான் நான் வீடு வராமல் அசோக் அட்டென் பண்ணவேண்டிய அனைத்தும் நான் பண்ணிட்டு வரேன்.”என்று கூறி தன் அறை நோக்கி சென்றான்.

தன் அறைக்கு சென்றவன் சத்தியமாக தன் அறையில் அதுவும் தன் கட்டிலில் மினியை எதிர் பார்க்கவில்லை.என்ன தான் தாத்தா பாட்டி மீது உள்ள பாசத்தில் இங்கு தங்க ஒத்துக் கொண்டாலும்.அவள் வேறு அறையில் தங்குவாள் என்று தான் நினைத்திருந்தான்.அதனால் தான் வீட்டிற்க்கு வந்தும் தன் ரூமுக்கு வர அவசரம் காட்டவில்லை.இப்போது தன் ரூமில் அவள் இருப்பதை பார்த்தவன்.

சே….இவள் நம் ரூமில் தான் இருக்கிறாள் என்று தெரிந்திருந்தாள்.ஷாலினியை அம்மாவிடம் ஒப்படைத்தவுடனே வந்திருக்கலாமே...என்று தன்னையே திட்டிக் கொண்டான்.பின் அவள் எழுந்து விடுவாளோ என்று பயந்து நைட் லேம்ப் வெளிச்சத்திலேயே… தன்னுடைய மாற்றுடையைய் எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டு அங்கேயே உடையையும் மாற்றிக் கொண்டே தன்னுடைய படுக்கைக்கு வந்தான்.பின் சத்தம் செய்யாமல் மினியின் அருகில் படுத்துக் கொண்டு அந்த மெல்லிய நைட்லேம்ப் வெளிச்சத்தில் அவள் வரிவடிவத்தை பார்த்துக் கொண்டே கண்ணயர்ந்தான்.

இவன் நிம்மதியாக இங்கு உறங்கி கொண்டிருக்கும் போது .அவன் நிம்மதியை கெடுக்க வேறு இடத்தில் சூழ்ச்சி நடந்துக் கொண்டிருந்தது.பிரதாப்பையும் மோனாவையும் சேர்த்து வைத்து போட்டோ எடுத்த பத்திரிகைக்காரன். என்னவோ… மோனாவின் பேச்சிலும்,பணத்திலும் மயங்கியே அந்த போட்டாவை எடுத்துக் கொண்டு தன் பத்திரிக்கை ஆபிசுக்கு சென்றான்.

ஆனால் அங்கு சென்ற பிறகு தான் அந்த போட்டோவின் மதிப்பே அந்த பத்திரிகைகாரனுக்கு தெரிந்தது.ஆம் அந்த பத்திரிக்கையின் எடிட்டர் சங்கருக்கும் தீனதயாளனுக்கும் பத்து வருடம் முன்பே ஒரு பெரிய பிரச்சனை ஏற்பட்டது.தீனதயாளன் ஓட்டலை பற்றி தன் பத்திரிகையில் தரக்குறைவாக சங்கர் எழுதினான்.

அதற்க்கு தீனதயாளன் அதில் சிறிதும் உண்மை இல்லை என்று மானநஷ்ட வழக்கு ஒன்றை அந்த பத்திரிக்கையின் மீதும் சங்கர் மீதும் போட்டு அதில் வெற்றியும் பெற்றார்.அதை தொடர்ந்து ஒரு பெரும் தொகையை தீனதயாளனுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

அதில் இருந்தே அந்த எடிட்டர் சங்கருக்கு தீனதயாளன் மீது பகையிருந்துக் கொண்டே இருந்தது.ஆனால் தீனதயாளன் தொடமுடியாத இடத்தில் இருப்பதாலும்,மேலும் சட்டத்திற்கு புறம்பாக எந்த ஒரு நடவடிக்கையிலும் அவர் ஈடுபாடதாலும் சங்கரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மேலும் கடந்த ஏழு வருடமாக அவர் மகன் பிரதாப் பொறுப்பேற்ற பிறகு அவர்களை நெருங்க கூடமுடியவில்லை.தீனதயாளனாவது பாவம் புண்ணியம் பார்ப்பார். பிரதாப் ஒருவர் தனக்கெதிராக செயல் படுகிறார்கள் என்று தெரிந்தால் மொத்தமாக அழித்த பின் தான் அமர்வான் என்று தெரிந்துக் கொண்டு தன்னை அடக்கிக் கொண்டிருந்தார்.

அதுவும் பிரதாப்பின் பெண்கள் விஷயம் தெரிந்த பிறகு ஆதாரம் இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது.என்று கருதி அதற்கான நேரத்திற்காக காத்துக் கொண்டிருந்தான்.

இப்போது அந்த புகை படத்தை பார்த்த சங்கர் அந்த பத்திரிக்கை காரனை கட்டி பிடித்து தன் பர்சை திறந்து எண்ணிக் கூட பார்க்காமல் கையில் கிடைத்ததை அப்படியே அவன் கையில் தினித்தான்.

பிரிண்டிங் செக்க்ஷனுக்கு சென்று கொஞ்சம் பிரிண்டிங்கை நிறுத்த சொல்லி முதல் பக்கத்தில் தான் சொல்வதை போடசொல்லி சங்கரே அருகில் இருந்து முதல் பக்கத்தை அமைத்து கொடுத்தார்.

தலைப்பே இது தான் பெரிய வீட்டு செல்வந்தர் மகனின் திருவளையாடல் என்று அந்த போட்டோவை போட்டு மேலும் பலதும் எழுதி அவனின் பத்து வருட பகையை முடித்துக் கொண்டான்.

இது ஏதும் அறியாத பிரதாப் காலை எழுந்ததும் மனைவியை படுக்கையில் பார்க்க அவள் படுத்திருந்த இடம் காலியாக இருந்தது.பின் தன் மனைவியை சீக்கிரம் பார்க்க வேண்டும் என்ற அவசரத்தில் தன் காலை கடனை முடித்து தன் ரூமின் கதவை திறந்தான்.

கீழே கேட்ட பெரும் சத்தத்தில் அவசரம் அசரமாக படிகளை இரண்டு இரண்டு படிகளாக தாண்டி இறங்கி வந்து பார்த்த போது அனைவரும் ஹாலில் தான் இருந்தனர்.ஆனால் ஒருவர் முகமும் சரியில்லை.அனைவரின் பார்வையும் தன் மேல் விழுவதை பார்த்த பிரதாப் ஏதோ சரியில்லை என்று விளங்கியது.

அசோக்கும் பிரதாப்பின் கட்டளை படி காலை காபிக்கே அங்கு வந்திருந்தான்.அவனின் முகமும் பதட்டத்தை காண்பித்தது. மினியை பார்த்தான் அவள் முகம் அப்படி ஒலி இழந்து காணப்பட்டது.

மினியின் முகத்தை பார்த்தவன் பதறியவாறு “என்னம்மா.. என்ன பிரச்சினை” என்று அவள் அருகில் சென்று அவள் தோள் தொட கையை நீட்டினான்.ஆனால் தொடவில்லை “அவளை தொடதே” என்று கூறியது வேறு யாருமல்ல பிரதாப்பின் அம்மா தான்.

பிரதாப் தன் அம்மாவை புரியாமல் பார்த்தான்.தன் கையில் உள்ள பத்திரிகையை அவன் மூஞ்சிலேயே விட்டேறிந்தார்.அவரின் இந்த செயலை யாரும் எதிர் பார்க்கவில்லை.தீனதயாளன் “பத்தூ”என்று ஏதோ கூற வந்ததிற்க்கு தடுத்து “நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம். நீங்கள் சொன்னாலும் அதை நான் கேட்க மாட்டேன்.அவன் சொல்லட்டும் அதில் வந்த செய்தி உண்மையா…. ?இல்லையா….? என்று”. என்ற மனைவியை “சொல்வான் பத்தூ சொல்வான் நீ கொஞ்சம் அமைதியா இரு….” என்ற கணவனை சந்தேகத்திடன் பார்த்து.

“எனக்கு என்னவோ உண்மை என்று தான் படுகிறது.இதே பத்திரிகை தான் முன்பு ஒரு முறை நம் ஒட்டலை பற்றி தப்பாக எழுதியதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆவேசம் வந்தது.நான் இப்போது நீங்கள் சொன்னீர்களே பொறுமையுடன் இரு என்று அதே தான் நானும் அன்று சொன்னேன்.அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் உண்மைக்கு புறம்பாக ஒருவன் எழுதுவான்.நான் அமைதியாக இருக்க வேண்டுமா…? என்று கேட்டிர்கள்.இப்போது நம் மகனை பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்கள்.நீங்கள் பொறுமையை கடைபிடிக்க சொல்றிங்க…இதில் இருந்தே தெரிகிறதே…”என்ற மனைவியின் பேச்சில் தலை குனிந்தார்.

பிரதாப்போ தன் முகத்தில் அம்மா வீசியேறிந்த செய்தியை பார்த்து யாரின் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்தான்.நேற்று அவன் ஒரு தப்பும் செய்யவில்லை.ஆனால் அவன் தப்பற்றவன் கிடையாதே….

மினியின் நிலையோ சொல்லவே வேண்டாம்.தன் வாழ்கையில் கடந்த ஒரு மாதத்தில் எவ்வளவு பெரிய மாற்றம்.காதலே வேண்டாம் என்று இருந்தவள் நெஞ்சில் காதல் விதையை தூவி பின் தன்னை திருமணம் செய்துக் கொண்டு பத்து நாளில் வாழ்க்கையின் முழு அர்த்தத்தையும் தனக்கு உணர்த்திய பின் தன்னை ஏமாற்றிய விஷயம் அறிந்தும் அவனை பிரிந்து போக எண்ணாமல் இருக்க காரணம் முன் விதையாய் தன் நெஞ்சில் வீழ்ந்த விதை இன்று வெட்டமுடியாத பெரும் மரமாக வளந்ததே காரணம்.

ஆனால் இப்போது அந்த மரத்தின் வேறிலேயே அமிலத்தை ஊற்றியது போல் இருந்தது.அவளுக்கு யாரின் முகமும் தெரியாமல் கண்முழுவதும் நீரால் நிரம்பியிருந்தது.

அனைவரும் ஏதும் பேசாமல் இருப்பதை பார்த்த பத்மினி அப்போ இந்த விஷயம் உண்மை தான்.அதுவும் இது பற்றி தன் கணவருக்கும், இன்னோறு மகனாக வளர்த்த அசோக்குக்கும் தெரிந்தே தான் இருக்கிறது என்று அவர்களின் செயல்களில் அறிந்துக் கொண்ட பத்மினி.

“தீனதயாளனுடன் நான் என் பேத்தியை அழைச்சிட்டு நம்ம கெஸ்ட் அவுஸ்சுக்கு போறோம்”.என்று கூறி மினியின் கைய் பற்றி வாசலை நோக்கி சென்றார்.பின் ஷாலினியின் புறம் திரும்பி “நீயும் என்னோடவே வந்துடுமா….வயது பொண்ணு தங்க இங்கே பாதுகாப்பு இல்லை.”என்ற அம்மாவின் பேச்சில் பிரதாப் ஒரு கூடை நெருப்பை அள்ளி முகத்தில் தெளித்தது போல் துடி துடித்து போனான்.
 
Top