Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 20

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்-----20

தன் முன் அமர்ந்து இருக்கும் தீனதயாளனிடம் “சாரி தீனா பத்மினிக்கு அபார்ஷன் பண்ணமுடியாது. அதற்க்கு உண்டான உடல் வலிமை அவர்களுக்கு இல்லை.”என்று கூறிய டாக்டர் சேகரை சந்தேகத்துடன் பார்த்தார்.

“தீனா எனக்கு புரியுது என்னை நீ நம்பமாட்ட என்று.ஆனால் நான் சொல்வது உண்மை.சந்தேகம் இருந்தாள் வேறு ஒரு டாக்டரிடம் சென்று உன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்.ஆனால் பிரசவம் இங்கு என் டாக்டர்கள் தான் பார்ப்பார்கள்.”என்ற சேகரின்… பேச்சில் இருந்தே சேகர் சொல்வது உண்மை என்று புரிந்தது.

பெண் டாக்டரிடம் தன் பரிசோதனை முடித்து விட்டு வந்த பத்மினி சேகரின் அறைக்கு சென்றாள்.சேகர் திரும்பவும் தீனாவிடம் சொன்னதே பத்மினியிடம் கூற.பத்மினி தன் கணவரை பார்த்தார்.தீனாவும் தன் மனைவியை பார்த்து ஒரு புன்னகையை சிந்தினார்.

அந்த புன்னகையில் ஒரு நிம்மதி பரவியிருந்தது.பத்மினியும் அப்புன்னகையில் பங்கு கொண்டாள்.அவர்கள் இருவரும் சேர்ந்து தான் இக்குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்தார்கள். ஆனால் இம்முடிவு சாந்தியை மட்டுமே கருத்தில் கொண்டு எடுத்த முடிவு.

ஆனால் குழந்தையை கலைப்பது என்ற எண்ணமே…தன் அடிவயிறு கலங்க போது மானதாக இருந்தது.அதனால் சேகரின் இந்த வார்தை ஒரு நிம்மதியை இருவருக்கும் கொடுத்தது என்றால் அது மிகை அல்ல….

இவர்களை பார்த்த சேகர் “கவலை படாதீர்கள் எல்லாம் நல்ல படியாக நடக்கும்.உங்கள் வளர்ப்பு என்றும் சோடைபோகாது. நீங்கள் ஏன் கெட்ட விதமாக எடுத்து கொள்கிறீர்கள். நாளை உங்கள் காலத்துக்கு பிறகு சாந்தியும் இக்குழந்தையும் ஒருவருக்கு ஒருவர் ஆதாரவாக இருப்பார்கள்.என்று நல்ல விதமாக நினைக்கலாமே…”

என்ற சேகரின் பேச்சில் தாங்கள் ஏன் இது போல் யோசிக்க வில்லை.ஆம் இதுவும் நல்லதுக்கு தான்.நாளை சாந்திக்கு நம் காலத்துக்கு பிறகு இக்குழந்தை ஆதரவாக இருக்கும் என்று இந்த வகையில் அவர் சிந்தனை சென்றதும்.மகிழ்ச்சியுடனே சேகரிடம் விடை பெற்றார்கள்.

காரில் அமைதியுடன் பத்மினி வருவதை பார்த்த தீனதயாளன் காரை ஓரமாக நிறுத்தினார். “பத்தூ என்ன யோசனை செய்கிறாய் எது இருந்தாலும் மனது விட்டு சொல்.இக்குழந்தையால் சாந்திக்கு பாதிப்பு வரும் என்று யோசிக்கிறயா….?என்ற கேள்விக்கு.

“இல்லை குழந்தை விஷயத்தை எப்படி பக்குவமாக சாந்திக்கு எடுத்து சொல்வது என்று தான் …”என்ற பத்மினியின் பதிலில் இருந்தே அவளும் நாம் சிந்திப்பது போல் தான் சிந்திக்கிறாள்.என்ற மகிழ்ச்சியுடன்.

“கவலை படதே பத்தூ நாம் சந்துக்காக மனமே இல்லை என்றாலும் இக்குழந்தை கலைக்க கருதினோம்.ஆனால் நமக்கு இன்னும் ஒரு குழந்தை பாக்கியம் இருக்கிறது போல். நாம் ஏன்…? சேகர் சொன்னது போல் யோசிக்க கூடாது.எல்லாம் நல்ல விதமாகவே நடக்கும். இப்போது நாம் யோசிக்க வேண்டியது. இவ்விஷயத்தை சந்து புரியும் படி எப்படி சொல்வது என்பது தான்.”

என்ற கணவரின் முகம் பார்த்து மென்மையாக “ஆம் நாம் இப்போது தான் மிக கவனமாக இருக்க வேண்டும்.எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது.இக்குழந்தையின் பொறுப்பை நான் நம் சந்துவிடமே விட்டு விடபோகிறேன்.”என்ற பத்மினியின் பேச்சில்.

“என்ன பத்தூ சொல்ரே அவள் குழந்தை அவளையே நாம் தான் கவனிக்க வேண்டும்.நீ என்ன வென்றால்.?என்று தன் பேச்சை பாதியிலேயே நிறுத்தினார்.

பத்மினியின் எண்ணம் இப்போது தீனதயாளனுக்கு புரிந்தது.எப்போதும் சாந்திக்கு ஒரு பழக்கம் தன்னிடம் ஒன்றை கொடுத்தால் அவற்றின் மீது பாசம் வைப்பதோடு அவற்றின் மீது அளவுக்கடந்த உரிமையும் ஏற்படும். மூன்று வருடத்திற்கு முன் ஒரு நாய் குட்டி தெருவில் இருந்து வீட்டுக்குள் வந்து விட்டது.அப்போது மழையாக இருந்ததால் வெளியில் அனுப்பாமல் ஒரு நாள் சாந்தி தன் கையாலேயே பால் கொடுத்தால்.மூன்று நாள் இப்படியே சென்றது.நான்காவது நாள் அக்குட்டியை அனுப்பலாம் என்று கூறியதற்க்கு மறுத்து விட்டாள்.

தீனதயாளன் “சந்து வேண்டம்மா...இதை வெளியில் விட்டு விடலாம்.உனக்கு நாய் வளர்க்க வேண்டும் என்றால்.நான் ஜாதி நாயாக வாங்கி தருகிறேன்.அவற்றை வளர்க்கலாம்.இதை வெளியில் விட்டு விடலாம்.”என்றதற்க்கு சிவன் தன் பிள்ளையிடம் பாடம் கற்றது போல் தன் மகளிடம் தீனதயாளன் பாடம் கற்றார்.

“அப்பா பாரதியார் ஜாதிகள் இல்லையடி பாப்பா….என்று தன் பாடல் மூலம் மனிதர்களிலேயே ஜாதிகள் இல்லை என்று கூறியிருக்கிறார்.நீங்கள் என்னவென்றால் நாயில் ஜாதியாக வாங்கி தருகிறேன் என்று கூறுகிறிர்களே” என்ற தன் மகளின் பேச்சில் வாயடைத்து நின்று விட்டார்.

அப்போது அவளுக்கு வெறும் ஏழு வயது தான்.அவ்வயதிலேயே அவளுக்கு அப்படி பக்குவப்பட்ட மனது.மகள் பேச்சை கேட்ட தீனதயாளன் “தப்பு தாண்டா செல்லம் இனிமேல் நான் இப்படி பேசமாட்டேன். நீ சொன்ன மாதிரி இந்த குட்டி நாயையே வளர்க்கலாம் என்று இழுத்தவாறு நிறுத்தி… நாய் என்று சொல்லலாமா…..?என்ற தீனதாயளனின் கேள்வியில்

“ரெக்ஸ் என்று கூப்பிடுங்கள்.” என்ற சாந்தியின் பேச்சில் இனி நாய் என்று அழைக்க கூடாது என்ற மறைபொருள் கருத்து இருந்தது.இப்போதும் கூட ரெக்ஸ் அவர்கள் வீட்டில் ஒரு அங்கமாக உள்ளது.

பத்மினிக்கு அந்த நினைவு வந்தவுடன் சாந்தியிடம் எப்படி பக்குவமாக இந்த விஷயத்தை சொல்வது என்று தீர்மானித்தார்.தீனதயாளனுக்கும் அந்த எண்ணமே…பின் இருவரும் வீடு வந்து சேர மதியம் ஆகிவிட்டது.தீனதயாளன் அன்று முழுவதும் வேறு எங்கும் போகாமல் பள்ளியில் இருந்து வரும் சாந்திக்காக காத்திருந்தார்.

நான்கு மணிக்கு சாந்தி வந்ததும் தன் தந்தையை எதிர்பார்க்காததால் ஒடி வந்து தன் தந்தையின் கழுத்தை பிடித்து கட்டிக் கொண்டாள்.தீனதயாளனும் தன் மகளை ஆசையுடன் தன் பக்கத்தி அமர்த்திக் கொண்டார்.

பத்மினியிடம் “பத்தூ சந்துக்கு டிபன் எடுத்துட்டு வா…”என்ற குரலுக்கு ரெடியாக இருந்த டிபனை எடுத்து வந்து தன் மகளுக்கு கொடுத்து அவரும் தன் மகள் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

பத்மினியை பார்த்தது “ அம்மா நான் தான் நேற்று இனிமேல் நீங்கள் எதுவும் வேலை செய்யகூடாது.நான் லஷ்மி அம்மா செய்வதையே சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொன்னேன் இல்லையா ….”என்று தன் அன்னையை அதட்டிக் கொண்டிருந்தாள்.

சாந்தியின் குணநலன் இது தான் யாரின் மேலாவது பாசம் வைத்தால் அவள் கவனம் முழுவதும் அதில் தான் இருக்கும்.அது போல் தன்னிடன் பொறுப்பை ஒப்படைத்தால் அதை முழுமனதுடன் நிறைவேற்றுவாள். சாந்தியின் இந்த குணநலன் தான் தன் தம்பியின் மீது மிகுந்த பாசத்தை வைக்க வைத்தது.பின் அந்த பாசமே….அவளின் தம்பியோடு தன் உயிரான அப்பா,அம்மாவையும் பிரிய காரணமாக அமைந்தது.

“அம்மா இனிமேலாவது நான் சொல்வதை கேட்பீங்களா…”என்ற சாந்தியின் கேள்விக்கு தீனதயாளன் “ அதை பற்றி தான் பேசனும் சந்தும்மா.. முதலே நீ சாப்பிடு வர…வர… அம்மா நாம் சொல்வதையே கேட்கிறது இல்லை.இன்னிக்கு கூட டாக்டர் “என்று கூறி பேசுவதை பாதியிலேயே நிறுத்தினார்.

தீனதயாளன் எதிர் பார்த்த மாதிரியே உடனே சாந்தி “என்னப்பா என்ன ஆச்சி திரும்பவும் அம்மா மயக்கமாயிட்டாங்களா…?என்று பதட்டத்துடன் வினாவினாள்.

மகளின் பதட்டத்தை பார்த்த தீனதயாளனுக்கும் பத்மினிக்கும் மிக கவலையாக இருந்தது. இப்படி தன் மகளை பதற வைக்கிறோம் என்று .ஆனால் இன்று இவ்வாறு செய்தால் தான் பிற்காலத்தில் தன் இருகுழந்தைகளும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று கருதியதால்.இந்த கஷ்டத்தை தாங்கி தான் ஆக வேண்டும் என்று கருதி “அது தாம்மா சீக்கிரம் சாப்பிடு நான் உன்னிடம் பேசவேண்டும்.”என்ற வார்த்தைக்கு நல்ல பலன் இருந்தது.

அவசரம் அவசரமாக உண்டு விட்டு தன் தந்தையின் அருகில் போய் அமர்ந்துக் கொண்டாள்.. “சொல்லுங்கப்பா டாக்டர் என்ன சொன்னாங்க”என்ற சாந்தியிடம்.

சட்டென்று “உனக்கு தம்பியோ தங்கச்சியோ பிறக்க போகிறது என்று சொன்னார்.”என்று கூறிவிட்டார்.கூறிய பிறகு தன் மகள் முகத்தையே பார்த்தர்.பத்மினியும் சாந்தியையே பார்த்திருந்தார்.

சாந்தி அப்பா சொன்னதை கேட்டதும் கணமும் தாமதிக்காமல் தன் அன்னையை வந்து வயித்தோடு சேர்த்து கட்டிக் கொண்டாள். பின் “அம்மா இனி மேல் நான் இப்படி கட்டி பிடிக்க கூடாது இல்லையா…?”என்ற சாந்தியின் பேச்சில் தாய் தந்தை இருவரும் அதிர்ந்து “என்னம்மா சொல்ரே”என்ற அப்பா,அம்மா,இருவரின் கேள்விக்கும்.

“என்ன இப்படி கேட்கிறிங்க உங்களுக்கு ஒன்னுமே….தெரியலே நான் அம்மாவே வயிற்றோடு கட்டி பிடிச்சா பாப்பா நசுங்க மாட்டான்.”சாந்தியின் பேச்சில் தாம் எதுவும் சொல்லாமலேயே தன் மகள் புரிந்துக் கொண்டு தங்களுக்கு எந்த சிரமும் வைக்காமல் அக்குழந்தையை ஏற்ற பாங்கு மகிழ்ந்து தன் குழந்தையை கட்டிக் கொண்ட தீனதயாளன்.

“ஏன்..?நீ அம்மாவே கட்டி பிடிக்ககூடாது.எல்லாம் கட்டி பிடிக்கலாம்.என்ன ஒன்று வயிற்றை அமுத்தாதவாறு பிடிக்கலாம்.முதலில் எனக்கு நீ தானேடா...குழந்தை பிறகு தான் எங்களுக்கு இக்குழந்தை இதை எந்த சூழ்நிலையிலும் மறக்ககூடாது.ஆமா…ஒன்னு கேட்கனும் அது என்ன நசுங்க மாட்டான் என்று தம்பியை குறிப்பிடுகிறாய். தங்கை வேண்டமா…?என்று தன் மகளை பார்த்து கேட்டார்.

“அது தான் உங்களுக்கு மகள் நான் இருக்கேனே…..மேலும் எனக்கு தம்பி தான் வேண்டும். என் பிரண்ட் சரசு இல்லேப்பா…அவளுக்கு தம்பி இருக்கான்னு எவ்வளவு அலட்டிகிறா...தெரியுமா…? இன்னிக்கு இது பண்ணான் அது பண்ணான்னு. அப்போது எனக்கும் ஒரு தம்பி வேண்டும் என்று ஆசையாக இருக்கும்பா…”என்று தன் ஆசையை கூறினாள்.

“செல்லம் ஏண்டா இதை முதலிலேயே...சொல்லலே...அப்பா நீ என்ன சொன்னாலும் செஞ்சுட மாட்டேன்.”என்று தன் மகளிடம் கூறிக் கொண்டே..தன் மனைவியை பார்த்து.ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து வைத்தார்.

பத்மினி “குழந்தைக்கிட்டே என்ன பேசுவது என்று விவஸ்த்தை இல்லாமல் போயிடுச்சி” என்று தன் கணவனிடம் கண்டித்தவாரே...தன் மகள் அருகில் சென்றார்.

“சாந்திம்மா...அப்போ உனக்கு தம்பியோ தங்கையோ வந்தாள் நீ தான் பாத்துக்கனும் அம்மாவுக்கு முடியலே இல்லையா….ஆனால் ஒழுங்காவும் படிக்கனும் அந்த குழந்தைக்கு எல்லாம் நீதானே… பார்த்துக்கனும்.அப்போ நீ படித்தால் தானே...அக்குழந்தைக்கும் சொல்லி தரமுடியும்.”என்றதர்க்கு

“கண்டிப்பமா...நான் என் தம்பி பாப்பாவை பத்திரமாக பார்த்துக் கொள்வேன்.”என்று தன் அம்மாவிடம் கூறிக் கொண்டே லஷ்மி அம்மாவை அழைத்து “இனிமேல் அம்மாவே வந்து ஏதாவது சமையல் அறையில் செஞ்சாங்னா…..நான் உங்களை தான் கேட்பேன்.”என்று கூறிவிட்டு. டெலிபோன் செய்ய சென்றாள்.

டெலிபோனில் தன் டாக்டர் சேகர் மாமாவை அழைத்து “மாமா அம்மாவுக்கு உடம்பு வீக்கா இருக்குன்னு நேற்று நீங்க சொன்னீங்களே….அப்போ பாப்பாவும் வீக்கா இருக்குமா….”என்று அந்த சின்ன சிறுமியின் மனதுக்கு தோன்றியதெல்லாம் கேட்டு அப்பக்கத்தில் இருக்கும் சேகரை ஒரு வழி பண்ணியே டெலிபோனையே வைத்தாள்.

இங்கே தன் மகளின் செயல்களை பார்த்திருந்த பெற்றோர்கள் தன் மகளின் பக்குவமும் பொறுப்பையும் பார்த்து மகிழ்ந்து போயினர்.நாம் இதற்கா இப்படி கவலை பட்டோம். இனி எந்த பிரச்சினையும் இல்லை.அவள் தத்து குழந்தை என்று மற்றவர்கள் மூலம் தெரியவந்தாலும் அதனை நாம் சொல்லும் விதத்தில் சொன்னால் புரிந்துக் கொள்வாள் நம் மகள் என்ற நம்பிக்கையில் கவலையற்று தங்கள் புது வரவை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர்.

பிறகு எட்டு மாதம் எப்படி சென்றது என்றே அவ்வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது.அப்படி நாள் இறக்கை கட்டி பறந்தது.அந்த எட்டு மாதத்தில் பத்மினிக்கு சாந்தி குழந்தையா……?சாந்திக்கு பத்மினி குழந்தையா….?என்று பார்ப்பவர்கள் யோசிக்கும் அளவுக்கு தன் அம்மாவை அப்படி பார்த்துக் கொண்டாள்.

அவ்வீட்டில் உள்ளவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது.ஆம் சாந்தியை எப்போது தன் கையில் கிடைத்தாலோ….அன்று தான் பத்மினிக்கும் வலி எடுத்தது.பத்மினிக்கு சாந்தி எதிர் பார்த்த மாதிரியே அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அக்குழந்தை பிறந்ததும் சாந்தி தான் தன் கையில் முதலில் ஏந்தினாள். அக்குழந்தைக்கு பெயரிட்டதும் சாந்தியே….பத்து வயதில் ஒரு அன்னையாகவே மாறி போனால்.பள்ளி விட்டு வந்ததும் முதலில் வந்து பார்ப்பது தன் தம்பியையே….அதுவும் அவனை தொடாமல் பார்த்து விட்டு.பின் தன்னை சுத்தம் செய்த பிறகு தான் தன் தம்பியையே தூக்குவாள்.

அவர்களின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போன்று சென்றது.சாந்திக்கு பதினெட்டு வயதுவரை.சாந்திக்கு எப்போதும் தன் தம்பியின் நினைப்போ….பிரதாப்பும் அனைத்துக்கும் தன் தாயை விட்டு சாந்தியையே நாடுவான்.

தீனதயாளனுக்கு இதில் கொஞ்சம் வருத்தமே…...சாந்தி தன்னை பற்றி சிறிதும் யோசிக்காமல் எப்போதும் தன் தம்பியின் நினைப்பிலேயே...இருப்பது.அதனால் அவர் ஒரு முடிவு எடுத்து இருந்தார்.அதனை பற்றி சொல்வதற்காக தன் மனைவி மகளை அழைத்தார்.

“சந்தும்மா இது நீ படிக்க வேண்டிய கோர்ஸ் என்று ஒரு படிவத்தை காட்டினார்.”அதனை பார்த்த சாந்தி “அப்பா என்னப்பா…?குக்கிங் கிளாஸ்சுக்கு பார்ம் வாங்கி வந்து இருக்கிங்க எனக்கு தான் முதலிலேயே சமையல் நன்றாக தெரியுமேப்பா...இதை வேறு வெளியில் சென்று படிக்கணுமா…..” என்று கூறியவாறு அந்த பார்மை பார்த்தவள் அதில் இருந்த முகவரியை பார்த்து கண்டிப்பாக என்னால் இந்த இடத்தில் படிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினாள்.

பத்மினி தன் கணவரிடம் அப்படி எங்கங்க படிக்க சொன்னீங்க என் பொண்ணு இப்படி அலற அளவுக்கு அது எந்த இடம் “என்று கேட்டதற்க்கு சாந்தி “அம்மா பாருங்கம்மா.. அப்பாவை பார்மை காட்டி இந்த இடம் நம் வீட்டில் இருந்து ஐம்பது கிலோ மீட்டரில் உள்ளது.நான் இந்த கோர்ஸ் படிக்கனுமுன்னா….உங்களை எல்லாம் விட்டு அதுவும் பிரதாப்பை விட்டு அங்கேயே தங்கித்தான் படிக்கமுடியும். அதனால் கண்டிப்பாக என்னால் முடியாது என்று கூறினாள்.

மகள் பேச்சை கேட்ட பத்மினி தன் கணவரை யோசனையோடு பார்த்தார்.கடந்த இரண்டு நாளாக கணவர் சரியாக தூங்காமல் ஏதோ சிந்தனையிலேயே இருந்தது இதற்க்காக தானோ….காரணம் இல்லாமல் தன் கணவர் எதையும் செய்ய மாட்டார்.

ஆம் சில நாளாகவே தன்னிடம் சந்து தனக்காக யோசிக்கவே மாட்டேங்குறா எப்போதும் பிரதாப்...பிரதாப்புன்னு அவனை பற்றியே சிந்தனையிலேயே இருக்கிறாள்.நம் காலத்திற்க்கு பிறகு இந்த தொழிலை எல்லாம் சாந்தியும்,பிரதாப்பும் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அவள் இப்போது அதனை பற்றி படித்தால் தானே ...பிரதாப்பும் படித்து முடித்து இருவரும் பொறுப்பேற்று திறம்பட செயல் படுத்தமுடியும் என்று கூறிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.அதனால் தான் தன் கணவர் இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்.என்ற யோசனையின் முடிவில் தன் மகளிடம் நாம் தான் பேசியாக வேண்டும் என்று கருதினார்.

சாந்தியிடம் “சாந்தி இங்க வாடாம்மா…”என்று அருகில் அமரவைத்து “அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்வார்.”என்ற கேள்வியில் ஆம் என்று தலையசைத்து.”ஆனால்” என்று இழுத்தவாறு நிறுத்தினாள்.

“நான் சொல்வதை முதலில் பொறுமையுடன் கேள் சாந்தி. அப்பாவுக்கு போக போக வயது ஆகும். அப்போது நம் தொழிலை எல்லாம் யார்…? பார்ப்பாங்க.நம் பிரதாப் சின்ன யையன் தானே அவன் வளர இன்னும் சிறிது காலம் பிடிக்கும்.அது வரை நீ தானே நம் தொழிலை பார்த்துக் கொள்ள வேண்டும். நம் முக்கியமான தொழிலே ஒட்டல் தான். மேலும் ஒட்டலை முழுவதும் உன்னிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.ஒரு தொழிலை எடுத்து நடத்த நாமும் அதனை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். முதலில் குக்கிங் கிளாஸ் போ… நீ வெளியே தங்கி படிக்கவேண்டும் என்று அப்பா நினைப்பதற்க்கு காரணம்.வெளியே சென்றால் தான் பலதரப்பட்ட மக்களுடன் நீ பழக வாய்ப்பு கிடைக்கும்.அது நீ தொழில் நடத்த உபயோகமாக இருக்கும்.” என்று கூறி சாந்தியை எப்படியோ சம்மதிக்க வைத்தார்.

சாந்தியை சம்மதிக்க வைத்த அவரால் சாந்தி செல்வதற்க்கு பிரதாப்பை சம்மதிக்க வைக்க தான் பெரும் பாடாகப்போனது.பிரதாப் நானும் அக்காவோடு தான் செல்வேன் என்று அடம் பிடித்தவனை.ஏதோ...ஏதோ…சொல்லி ஒரு வழியாக சாந்தியை படிப்பதற்க்கு என்று முதன் முதலாக அவளை பிரிய. இன்னும் சிறிது காலத்திற்கு தான் என்று தங்களை தயார்படுத்திக் கொண்டனர்.

ஆனால் இந்த சிறு பிரிவு தான்.சாந்தியை நிரந்தரமாக பிரிவதற்கு வழிவகுக்க போகிறது என்று பாவம் அவர்கள் எண்ணவில்லை.
 
:love::love::love:

சொன்னதும் கப்புன்னு புடிச்சுட்டாளே சாந்தி.......
அக்கா தம்பியை பிரிக்க பார்த்தால் அக்கா நிரந்தரமா போய்டுவாளா....... ஏன் இவங்க சரிபண்ணலை???
கேசவன் கூட படித்தவரா???
 
Last edited:
Top