Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 18

Advertisement

Admin

Admin
Member








அத்தியாயம்-----18

பத்மினியின் தடுமாற்றத்தை பார்த்த பிரதாப் மினி என்று அவளை பிடிக்க அருகில் சென்ற போது அவனிடம் பேசாமல் வேண்டாம். என்பது போல் தன் கைய் அசைவில் சைகை செய்து தன் தாத்தாவான தீனதயாளனின் அருகில் சென்றாள்.

ஆம் அவளுக்கு தன்னிடம் அவர்கள் எதுவும் கூறவில்லை என்றாலும்… அவர்கள் பேச்சில் இருந்தே….படுக்கையில் இருக்கும் பிரதாப்பின் அம்மாதான்.தன் பாட்டி என்றும்,தீனதயாளன் தன் தாத்தாவென்றும் தன் அப்பாவுக்கும் இவர்களுக்கும் ஏதோ பிரச்சினை என்ற வரையில் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆனால் அதற்கு மேல் வேறு எதுவும் விளங்கவில்லை.

பிரதாப் பத்மினியின் அருகில் ஏதோ சொல்ல முயலும் போது.”எனக்கு எது தெரிவது என்றாலும் உங்களின் மூலம் தெரிய வருவதில் விருப்பமில்லை.நீங்கள் சொல்ல நினைத்திருந்தால் நம் திருமணத்துக்கு முன் சொல்லி இருக்க வேண்டும்.இல்லை கோவாவுக்கு சென்றவுடனாவது சொல்லியிருக்க வேண்டும்.இப்போது உங்கள் மூலம் எதையும் தெரிந்துக் கொள்ள நான் விரும்பவில்லை.”என்று கூறி அந்த அறையை விட்டு வெளியேற நினைக்கும் போது….பத்மினியின் பாட்டி “ராசாத்தி என்னை விட்டு போயிடாதேம்மா….”என்று கூறிக்கொண்டே தன் படுக்கையில் விட்டு எழும்போது தடுமாறி விழபார்த்தார்.

“பாட்டி”என்று பத்மினியும் “அம்மா” என்று பிரதாப்பும் ஒரு சேர அழைத்தவாரே...அவர் அருகில் சென்று பிடித்தனர். “அம்மா என்ன அவசரம் இப்போ உங்க உடல் நிலையிலே இப்படி எழுந்துக்கலாமா….கொஞ்சம் பொறுமையா இருங்கம்மா”என்ற பிரதாப்புக்கு..

“என்ன பிரதாப் பொறுமையா இருக்க சொல்ற… சாந்தி விசயத்திலும் இப்படித்தான் பொறுமையா… இரு,.பொறுமையா…..இருன்னு சொல்லி சொல்லியே….கடைசியில் என் பொண்ணு முகத்தை கூட பார்க்க முடியாமா...போயிடுச்சி.இன்னும் என்னால… பொறுமையா இருக்க முடியாது.எனக்கு என் பேத்தி என் கூடவே என் கடைசி வரைக்குக் இருக்கணும்.”என்று ஆவேசமாக கத்தியவாறு மயங்கி சரிந்தார்.

தீனதயாளன் “பத்தூ,பத்தூ...என்று பதறி அழைத்தவாரே… தன் பேத்தியிடம் “கண்ணாம்மா…சீக்கிரம் தண்ணிக் கொண்டா…”என்றும் பிரதாப்பிடம் “பிரதாப் டாக்டருக்கு போன் போடு சீக்கிரம்” என்று பதறி தன் மனைவியின் கன்னத்தை தட்டியவாறு இருந்தார். பத்மினி கொண்டு வந்த தண்ணியை தன் மனைவி மீது தெளித்ததும் மயக்கம் தெளிந்ததும்.முதலில் தேடியது தன் பேத்தியை தான்.

பாட்டியின் தேடலை பார்த்த பத்மினி தன் பாட்டியின் அருகில் சென்று அவர் கையை பிடித்தவாறு… “பாட்டி கவலைப்படாதீங்க நான் உங்களை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.”என்று கூறினாள்.

இந்த வார்த்தை அங்கு இருந்த அனைவருக்கும் எவ்வளவு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது என்று அவள் அறிந்தாளா..என்று தெரியாது.ஆனால் அந்த வார்த்தையை கேட்ட பிரதாப்புக்கு மனதுக்குள் நிம்மதி பரவியது.

இது வரை எங்கே தன்னை விட்டு சென்று விடுவளோ…?என்று பயந்துக் கொண்டு இருந்தான்.இப்போது தான் அந்த பயம் அகன்றது.இங்கே இருந்தாள் கண்டிப்பாக அவள் மனதை மாற்றி விடலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது.அவன் நம்பிக்கை பளிக்குமா…..

பத்மியின் கையை பற்றி கொண்டே….”என் ராசாத்தி எனக்கு தெரியும் நீ என்னை விட்டு போக மாட்டேன் என்று சந்தோஷத்துடன் கூறிக் கொண்டே தன் கணவனிடம்… “என்னங்க என்ன…? பேத்தி முதல் முறையா… இப்போ தான் நம்ம வீட்டுக்கு வந்து இருக்கா...எதுவும் செய்யாமல் என் முகத்தையே….பார்த்திட்டு இருந்தால் எப்படி சீக்கிரம் லஷ்மியே.. கூப்பிடுங்க இல்லே… வேண்டாம் நானே போய் பார்க்குறேன் என்று கூறிக் கொண்டே...எழுந்துக் கொள்ள முயன்றார். ஆனால் உடனே பிரதாப் “அம்மா உடம்பே கெடுத்துக்காதீங்க. அது தான் அவள் இங்கே தானே இருக்க போறா….அதனால் முதலில் உங்க உடம்பு சரியாகட்டும்.பிறகு உங்கள் பேத்திக்கு பிடித்தமானது எல்லாம் உங்க கையாலேயே….செஞ்சி போடுங்க...”என்று கூறி பத்மினியை பார்த்தான்.

ஆனால் பத்மினி அவன் பக்கம் திரும்பவே இல்லை.பிரதாப்புக்கு தெரியும் இவள் சீக்கிரத்தில் சமாதானம் ஆக மாட்டாள் என்று.அதனால் ஒன்றும் கூறாமல் தன் அன்னையிடம். “அம்மா நான் வெளியே போகிறேன்.சீக்கிரம் வந்து விடுகிறேன். அது வரை உடம்பை அலட்டிக் கொள்ளாமல் அமைதியா ரெஸ்ட்டு எடுங்க…” என்று கூறி விட்டை பத்மினியை ஒரு ஆழமான பார்வை பார்த்தவாரே….சென்றான்.

என்னதான் பிரதாப் சாதரணமாக காட்டிக் கொண்டாலும் அவன் முகத்தில் உள்ள கவலையை பார்த்த அந்த தாய் மனதுக்கு கவலையாக இருந்தது.காலையில் தான் தன் கணவரின் மூலம் பத்மினியை திருமணம் செய்ய பிரதாப் செய்த காரியம் எல்லாம் தெரிய வந்தது.

மனதுக்கு கவலையாக இருந்தாலும் அவன் யார் என்று உண்மையை சொல்லியிருந்தாள் கண்டிப்பாக கேசவமூர்த்தி பிரதாப்புக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்து இருக்க மாட்டார்.மாறாக திரும்பவும் முதலில் தன் மகளை தங்களிடம் இருந்து கண் காணாத இடத்துக்கு கொண்டு சென்றது போல் இப்போதும் அவ்வாறு செய்திருப்பார்.

இந்த விஷயத்தில் தன் மகன் செய்த வேலை தான் சரி என்று அந்த தாயுள்ளம் வாதிட்டது. ஆனால் தன் பேத்தியின் மனநிலையிலிருந்து பார்க்கும் போது அவள் மனது என்ன பாடு பட்டிருக்கும் என்று அவரால் உணர்ந்துக் கொள்ளமுடிந்தது.

இதில் இருவரும் அவருக்கு முக்கியமானவர்கள். இதில் யாருடைய மனதும் புன்பட அவர் விரும்பவில்லை.மேலும் இருவரும் சந்தோஷமாக வாழவேண்டும் என்று கருதினார்.அதனால் தன் பேத்தியிடம் தான் உடனே…. பேசியாக வேண்டும்.என்று நினைத்து.தன் கணவரிடம் ஏங்க நான் நம்ம பேத்திக்கிட்டே கொஞ்சம் தனியா பேசனும் என்று கூறி தன் வார்த்தையை நிறுத்தினார்.

தீனதயாளன் “பத்தூ”என்ற அழைப்பிற்க்கு இரு பத்மினியும் அவரை பார்த்தனர்.பிறகு தான் தீனதயாளனுக்கு பெயரின் ஒற்றுமை நினைவுக்கு வந்தது. தன் பேத்தியிடம் “ராசாத்தி நான் உன்னை எப்போதும் பெயர் சொல்லி அழைக்க மாட்டேன்.அதுவும் பத்தூ கண்டிப்பாக இல்லை.அப்பெயர் என் மனைவிக்கு மட்டுமே சொந்தமானது”என்று கூறினார்.

தாத்தாவின் அப்பேச்சில் இந்த வயதிலும் பாட்டியின் முகம் வெக்கத்தில் சிவந்ததை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.பத்மினிக்கு தன் தாத்தா பாட்டியை மிகவும் பிடித்து விட்டது. அவர்களின் அன்பான பேச்சு அவர்களின் பாசம். மேலும் அவர்களின் மனதையும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.தன் மகள் இறந்தது கூட தெரியாமல் அவளை பார்ப்போம் என்று எவ்வளவு ஆவளாக இவர்கள் எதிர் பார்த்திருப்பார்கள்.

ஆனால் இனி மேல் தன் மகளை பார்க்கவே முடியாது என்று கேள்வி பட்டதும் எப்படி துடித்து இருப்பார்கள்.என்று அவர்களின் மனநிலையையும் நன்கு உணரமுடிந்தது.ஆனால் அதற்கு பிரதாப் தன்னை ஏமாற்றியதை தான் அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை.

இவள் யோசனையில் மூழ்கி இருக்கும் போதே தீனதயாளன் அவள் அருகில் வந்து அவளின் தலை கோதியே வாரே “மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதம்மா…எல்லாம் நல்ல படியாக முடியும்.உன் பாட்டி உன்னிடம் பேசணுமாம் நான் எவ்வளவோ சொல்லிட்டேன்.அப்புறம் பேசலாம் என்று ஆனால் அவள் கேட்க மாட்டேங்குறா….”என்று கூறியாவாறு தன் பேத்தி முகத்தை பார்த்தார்.

அவரின் கவலையை புரிந்துக் கொண்ட பத்மினி “கவலை படாதீங்க தாத்தா நான் பார்த்து கொள்கிறேன்.அவர்களின் உடல் நிலையை பற்றி எனக்கும் அக்கரை இருக்கு தாத்தா அவங்க என் பாட்டி “என்று தன் உறவு முறை கூறினாள்.

அவ்வார்த்தையை கேட்ட தீனதயாளன் மகிழ்ந்து தன் பேத்தியின் நெற்றியில் முத்தம் இட்டு வெளியேறினார்.அவருக்கு கூடியவிரைவில் அனைத்தும் சரியாகி விடும் என்று நம்பினார்.தன் பேத்திக்கும் தன் மகனுக்கும் கூடிய விரைவில் சரியாகி விடும் என்று கருதினார்.

பத்மினிக்கும் அனைத்தும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று கருதினாள்.அதற்க்கு தன் பாட்டி தான் சரியானவர் என்று கருதியதால் தன் தாத்தா வெளியேறுவதை தடுக்க வில்லை.

தீனதயாளன் வெளியேறியதும் பத்மினி தன் பாட்டியின் அருகில் அமர்ந்துக் கொண்டு அவர் கையை தன் கையோடு சேர்த்துக் கொண்டாள். “சொல்லுங்க பாட்டி …ஆனால் எது சொல்வது என்றாலும் நீங்க உணர்ச்சி வசப்பட கூடாது.”என்று வாக்கு வாங்கியே பேச அனுமதித்தாள்.

பேத்திக்கு தன் மேல் உள்ள அக்கறையை பார்த்து “நீ பார்க்க மட்டும் இல்லை. பாசத்திலும் அப்படியே உன் அம்மாவே தான்” என்று கூறிக் கொண்டே தன்னையும் அறியாமல் தன் கண்ணில் இருந்து நீர் வருவதை தடுக்க முடியவில்லை.

“நான் என்ன சொன்னேன் பாட்டி உணர்ச்சி வசப்படக்கூடாது என்று தானே….இப்படி அழுவது என்றால் நீங்க ஒன்றும் பேசவேண்டாம்.பிறகு பேசலாம்.”என்று தன் பேத்தி கூறியதை கேட்டதும்.

“நான் அழ மாட்டேன்.ஆனால் நான் உன்னிடம் இப்போதே பேசனும் என்ற பாட்டி “எனக்கும் உங்க தாத்தாவுக்கும் திருமணமாகி நான்கு வருடமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை.”என்று கூறிக்கொண்டே தன் கடந்த காலத்தில் மூழ்கினார்.

தீனதயாளனுக்கும் பத்மினிக்கும் திருமணமாகி நான்கு வருடம் சென்று கூட குழந்தை பிறக்காததில் சொந்தக்காரார்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்ததும்.பத்மினியும் கவலை பட ஆரம்பித்திருந்தாள்.தன் கணவரிடம் சென்று இதைப் பற்றி கேட்டதும்.

“பத்தூ கண்டிப்பா பிறக்கும் இப்போ நமக்கு என்ன? வயதாகி விட்டது.உனக்கு இருபத்தியிரண்டு வயதும் எனக்கு இருபத்தியாறு வயதுதானே… ஆகுது.கவலைப்படாதே கண்டிப்பாக கடவுளின் அருளால் நமக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.”என்பதை கடவுள் அருள் என்பதனை கெட்டியாக பிடித்துக் கொண்ட பத்மினி கோயில் கோயிலாக செல்லலானாள்.

தீனதயாளனும் முடிந்த வரை தன் மனைவிக்காக கூடவே தன் வேலை எல்லாம் முடிந்த வரை ஒதுக்கி விட்டு செல்வார்.ஒரு முறை அவ்வாறு கோயிலுக்கு குழந்தை வரம் கேட்டு சென்று வரும் போது நடுயிரவு கடந்து விட்டது. அப்போது…பத்மினி “ஏங்கே…கொஞ்சம் வண்டியை நிறுத்துங்க… அங்கே பாருங்க” என்று பதட்டத்துடன் கூறியதை கேட்ட தீனதயாளன் வண்டியை நிறுத்தி பார்த்தார்.பார்த்தவர் பதறி விட்டார்.

அங்கு ஒரு கார் முன் பக்கம் அடி வாங்கி தலைகீழாக இருந்தது.தீனதயாளன் வண்டியை விட்டு பதறியவாறு இறங்கி அருகில் சென்றார்.கூடவே பத்மினியும் இறங்க தீனதயாளன் வேண்டாம் என்று தடுத்தும் பத்மினியும் உடன் சென்றார்.

அங்கு பார்த்த காட்சியில் பத்மினிக்கு மயக்கம் வருவது போல் இருக்க தன் கணவனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.தீனதயாளனும் தன் மனைவியின் நிலை புரிந்து தோளில் கைய் போட்டு ஆறுதல் அளித்து காரின் அருகில் சென்றார்.

அங்கு கணவன் மனைவி இருவரும் இரத்த வெள்ளத்தில் இருந்தார்கள்.தீனதயாளன் அந்த காரை தன் காரின் டிக்கியில் உள்ள ஸ்பேனர் உதவியுடன் காரை உடைக்க முயன்றார். பிறகு ஒரு வழியாக உடைத்து முடித்ததும்…. அவர்களை வெளியே எடுத்தார்.

அவர்களை வெளியே இழுக்கும் போதே ஆணுக்கு உயிர் இல்லை என்று தெரிந்து விட்டது.அந்த பெண் மூச்சை இமுத்து… இழுத்து...விட்டவாரே ஏதோ கூற முயன்றாள்.அதற்குள் பத்மினி ஒடி போய் தங்கள் காரில் உள்ள தண்ணியை எடுத்து வந்து தன் கையாலேயே அவளுக்கு புகட்டினாள்.

பின் அந்த பெண் காரை நோக்கி கைய் காட்டினாள்.அந்த கையசைவிலேயே காரில் வேறு ஒருவர் இருக்கிறார் என்று புரிந்துக் கொண்ட தீனதயாளன் காரை நோக்கி சென்று பார்த்தார்.காரின் முன் பக்கம் யாருமே...இல்லை.பின் பக்கம் பார்க்கும் போது ஒரு நீலநிறத்தில் ப்ராக் தெரிந்தது பின் பக்கம் கார் அவ்வளவு அடிவாங்க வில்லை.

அதனால் எளிதில் பின் பக்கம் கதவை திறந்து பார்த்தார்.அங்கு ஒரு பெண் குழந்தை இருந்தது.சட்டென்று அக்குழந்தையை தூக்கினார்.தூக்கி பார்க்கும் போது அக்குழந்தைக்கு ஒன்றும் அடிபடவில்லை.ஆனால் கண்ணை மூடியவார் இருந்தது.பின் அக்குழந்தை நாடி துடிப்பை பார்க்கும் போது சீராகயிருந்ததில் இருந்து அக்குழந்தை மயக்கத்தில் தான் உள்ளது என்று அறிந்துக் கொண்டார்.

அக்குழந்தையை அப்பெண்மணியின் அருகில் எடுத்து சென்றார்.அக்குழந்தையை பார்த்த பத்மினி பதட்டத்துடன் ஒடிவந்து அவள் வாங்கி கொண்டாள்.கண்மூடி கிடக்கும் அக்குழந்தையை பார்க்கும் போது மனதுக்குள் சாந்தம் வருவதை உணர்ந்துக் கொள்ள முடிந்தது.

அக்குழந்தையை மார்போடு அணைத்த போது கணவர் சொன்ன கடவுள் நமக்கு குழந்தை கொடுப்பார் என்பது ஏனோ நினைவில் வந்து சென்றது.தீனதயாளன் குழந்தையை இன்னும் அப்பெண்ணிடம் கொடுக்கதா மனைவியை உலுக்கி “பத்தூ சீக்கிரம் குழந்தையை அப்பெண்ணிடம் கொடு நான் வேறு ஏதாவது வண்டி வருகிறாதா என்று பார்க்கிறேன்.” என்று கூறினார்.

அடிப்பட்ட அப்பெண் தீனதயாளனையும், பத்மினியையும் பார்த்து கஷ்டப்பட்டு “நீ… ங்க இரண்...டு பேரு..ம் வாங்க.”அழைத்தார்.தீனதயாளன் உடனே அப்பெண் அருகில் சென்றார்.தன் மனைவி வராததில் திரும்பி பார்க்கும் போது அக்குழந்தையை கெட்டியாக பிடித்தவாறு அவ்விடத்திலேயே நின்று இருந்தாள்.

தீனதயாளன் கோவத்துடன் பத்மினி சீக்கிரம் வா...என்ற அழைப்பிற்க்கு பலன் இருந்தது.தீனதயாளன் கோவத்தில் மட்டும் தான் தன் மனைவியை பத்மினி என்று முழு பெயரிட்டு அழைப்பார்.பெரும்பாலும் அந்த சூழ்நிலை ஏற்படாது..இப்போது தீனதயாளனுக்கு நன்கு புரிந்து விட்டது. அப்பெண்ணுக்கு இன்னும் சிறிது நேரம் தான் உயிர் தங்கும் என்று.மேலும் தன் மனைவியின் மனமும் அக்குழந்தையை தன் மார்போடு பிடித்திருந்தே விதமே தெரியபடுத்தி விட்டது.அதனால் தான் அதட்டி அழைத்தார்.

பத்மினி குழந்தையை எடுத்துக் கொண்டு அப்பெண்மணியிடன் சென்று அவளிடம் கொடுக்க போகும் போது அப்பெண்…. அணைய போகும் விளக்கு பிரகசமாக எரிவது போல் அப்பெண்ணின் பேச்சு தங்கு தடையின்றி ஒளித்தது.

“வேண்டாம் அக்குழந்தையை என்னிடம் தரவேண்டாம்.இனி உங்களிடமே இருக்கட்டும்.”இடையில் பேச வந்த தீனதயாளனை தடுத்து “இன்னும் கொஞ்ச நேரம் தான். நானே பேசிவிடுகிறேன்.நாங்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள்.எங்களை இருவீட்டாரும் ஒதுக்கி விட்டார்கள்.தன் கணவரை பார்த்தவாரு இன்னும் சிறிது நேரத்தில் நானும் என் கணவரிடம் சென்று விடுவேன்.உங்கள் மனைவிக்கு குழந்தையை மிகவும் பிடித்து விட்டது.என்று நினைக்கிறேன்.என்று கூறிக் கொண்டே பத்மினியை பார்த்தவாறு பேச்சை தொடர்ந்தாள்.இனி இக்குழந்தை உங்களது”அவள் பேசிய கடைசி வார்த்தை இது தான்.

 
அடப்பாவமே
அப்போ சாந்தி இவங்களோட சொந்தக் குழந்தை இல்லையா?
ஆஹா பத்மினிக்கும் தீனதயாளனுக்கும் எவ்வளவு பெரிய மனசு?
 
Last edited:

Advertisement

Top