Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வா 14

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்-----14

கேசவமூர்த்தி பிரதாப்பிடம் பேசிக் கொண்டிருக்கும் போது பிரதாப் உங்களுக்கு எப்படி தெரியும்..? என்று கேட்டதற்கு “இங்கு உள்ள டியூட்டி டாக்டர் விக்டர் என்னுடைய பள்ளி தோழன்” என்று கூறினார்.

பிரதாப் ஒரு அமைதியுடனே “அப்போ நீங்கள் படித்ததெல்லாம் சென்னை தானா…?உங்கள் சொந்த ஊரும் இதே தானா…”?என்ற வினாவுக்கு… ஒரு பதட்டதுடன் “ஏன்…?ஏன்…?கேட்கிறீர்கள்” என்று ஒரு வித தடுமாட்டதுடன் வினாவினார்.

கண்ணில் ஒரு வித கூர்மையுடன் அவரை பார்த்தவாறு “நேற்று திருமண விஷயமாக அப்பா,அம்மாவிடம் பேசினேன் அவர்களுக்கு மிக சந்தோஷம். பத்மினியின் போட்டவை காமிக்க சொன்னார்கள். என்னிடம் பத்மினியின் போட்டோ இல்லை. அதனால் உங்களிடம் வாங்கி வாட்சப்பில் அனுப்புவதாக கூறி இருக்கிறேன்.அப்போது தான் அம்மா கல்யாண பத்திரிக்கை அடிக்கும் போது உங்களிடம் தெளிவாக உங்க சொந்த ஊர் என்ன ..?என்று கேட்டு அடிக்கும்மாறு…கூறினார்கள்.”என்று பிரதாப் கேசவமூர்த்தியைய் பார்த்தவாரே கூறினான்.

பிரதாப் பேசி முடிப்பதற்குள் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட கேசவமூர்த்தி”எனக்கு சொந்த ஊர் சென்னை தான். அதனால் திருமண பத்திரிக்கையில் அப்படியே…. அடித்து விடலாம்.ம்..ம். அப்புறம் என்ன கேட்டிங்க… பத்மினியின் போட்டோவை தானே…” என்று உடனே தன் செல்லில் இருந்த ஒரு சில போட்டவை பிரதாப்பின் செல்லுக்கு அனுப்பி வைத்தார்.

செல்லில் பிரதாப்புக்கு போட்டவை அனுப்பி விட்டு கேசவமூர்த்தி ஷாலினியிடன் தீவிரமாக ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் அசோக் பிரதாப்பிடம் “உன்னிடம் பத்மினி போட்டாவே இல்லை. இப்போது இவர் அனுப்பும் போட்டவை தான் நீ முதன் முதலில் பார்க்க போகிறாய்…..பேசாமல் நீ நடிக்க போயிடலாம்டா ….”என்ற அசோகின் பேச்சு கேசவமூர்த்தியின் கோவமான குரலால் அவர்கள் தங்களுடைய பேச்சை நிறுத்தி கேசவமூர்த்தியின் பக்கம் விரைந்தனர்.

பிரதாப்பும், அசோக்கும் அவர்களின் அருகில் சென்ற போது… கேசவமூர்த்தி பத்மினியிடமும் ஷாலினியிடமும் இதை தான் சத்தமாக கேட்டுக் கொண்டிருந்தார். “இந்த டைம் நீங்க காலேஜில் தானே இருக்க வேண்டும்.விபத்து நடந்த இடத்திற்க்கு ஏன்? சென்றீர்கள்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது தான் பிரதாப்பும் ஆம் இவர்கள் காலேஜி இருக்கும் நேரம் அல்லவா….? அந்த நேரத்தில் இவர்கள் ஏன் மவுண்ட்ரோடுக்கு வந்தார்கள் என்ற யோசனையிலேயே பத்மினியையும் ஷாலினியையும் பார்த்தான்.

ஆனால் பத்மினியும் ,ஷாலினியும், கேசவச்மூர்த்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு திரு….திரு...என்று முழித்ததில் இருந்தே ஏதோ திருட்டு தனம் தான் செய்திருக்கிறார்கள் என்று கண்டுக் கொண்ட பிரதாப் இடையில் புகுந்து “நான் தான் அவ்விடத்துக்கு அவர்களை வரவழைத்தேன்”என்று கூறினான்.

பிரதாப்பின் இந்த பதிலால் கேசவமூர்த்தி மனதில் இனிமேல் திருமணத்தை தள்ளி வைக்காமல் சீக்கிரம் முடித்து விட கருதினார்.ஏற்கனவே பத்மினிக்கு பிரதாப்பை பிடித்து இருப்பதால் தான் தன் தாய் தடுத்தும் இந்த இடத்தை முடிக்க சம்மதித்தார்.ஆனால். தன் மகள் பிரதாப் அழைத்ததும் தன்னிடம் கூட சொல்லாமல் அவனை பார்க்க சென்றது...ஏதோ ஒரு வகையில் மனதுக்கு பாரமாக இருந்தது.

பின் கேசவமூர்த்தி பிரதாப்பிடம்… “உங்கள் பெற்றவர்களை நான் எப்போது பார்க்க முடியும்.?அப்புறம் மிக முக்கியமான விஷயம் என்னனா….என் அம்மா ஜாதகம் பார்த்துவிடலாம் என்று அவர்கள் அபிப்பிரயாம் படுறாங்க. எனக்கு எல்லாம் அதில் நம்பிக்கை இல்லை தான். என் அம்மா தான் ரொம்ப பிடிவாதமாக இருக்காங்க….”என்ற கேசவமூர்த்தியின் பேச்சில்….

பிரதாப் மனதுக்குள் இத்திருமணத்தை நடப்பதில் இவருக்கு இஷ்டம் இல்லையோ…..என்று அவர் முகத்தை பார்த்தான்.ஆனால் அப்படி ஏதும் அவர் முகத்தில் தெரியவில்லை. ஒருவரின் முகத்தை வைத்தே அவர்களின் மனநிலையை கண்டு கொள்வான்.

பின் சகுந்தலா அம்மா தான் ஏதோ பிளான் செய்வதாக பிரதாப்புக்கு தெரிந்து விட்டது.பின் பிரதாப் கேசவமூர்த்தியிடம் “உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் ஏன்? ஜாதகம் பார்க்க வேண்டும்.”என்று வினாவினான்.

“அது தான் சொன்னனே.. என் அம்மா தான் ஜாதகம் பார்த்து தான் தீரவேண்டும் என்று பிடிவாதமாக இருக்காங்க…..”கொஞ்சம் தயங்கியவாறே…”என் திருமணத்தில் ஜாதகம் பார்க்க வில்லை. அதனால் தான் என் மனைவி அல்ப ஆயிசில் போயிடதா அம்மா கருதுறாங்க….”என்று கூறி கண் மூடிக் கொண்டார்.

பிரதாப்பின் மனதிலோ சூறாவளியே வீசிக் கொண்டிருந்தது.கேசவமூர்த்தி அவர் திருமணத்தை பற்றி பேச ஆரம்பிக்கும் போதே அவனுக்கு தன்னை கட்டுக்குள் வைத்திருக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான்.

தன் வீட்டில் இருந்து தன் பெண்ணை பொய் சொல்லி திருமணம் செய்ததோடு மட்டும் அல்லாமல்… தங்களை விட்டு நிரந்தரமாக பிரித்து. தன் பெற்றோரின் மனநிம்மதியை கெடுத்த இவரை என்ன செய்தாள்… தான் தகும். என்று நினைத்துக் கொண்டே அசோக்கை பார்த்தான். அசோக் கண்ணால் அமைதியாக இரு என்று கூறிக் கொண்டே பத்மினியை கண்ணால் ஜாடை காட்டினான்.

அப்போது பத்மினி பிரதாப்பையே… தான் பார்த்திருந்தாள்.பிரதாப்பின் மனதில் அலாரம் அடித்தது. அய்யோ…. அவள் தான் கோபத்துடன் அவள் தந்தையை பார்த்ததை பார்த்திருப்பாளோ….தந்தையின் மீது உள்ள பாசத்தாள் தன்னை வேண்டாம் என்று சொல்லி விடுவாளோ… என்று சற்று முன் இருந்த மனநிலைக்கு முற்றிலும் மாறுப்பட்ட மனநிலைக்கு தள்ளப்பட்டான்.

அதற்குள் கேசவமூர்த்தியை அவர் நண்பர் விக்டர் அழைக்க அவரிடம் செல்கிறேன் என்று பிரதாப்பிடம் விடைப்பெற்று சென்றார்.அதையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் பிரதாப் இல்லை.

பத்மினியையே பார்த்திருந்தான். பத்மினியும் பிரதாப்பையே பார்த்தவாறு பிரதாப்பின் அருகில் வந்து அவன் காதில் “கவலை படாதீங்க என் ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை. சுத்த ஜாதகம் என்று தான் என் பாட்டி சொல்வாங்க...உங்கள் ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருந்தாலும் சாங்கியம் செய்து சரிசெஞ்சிக்கலாம்…. மேலும் என் அப்பாவுக்கு தான் ஜாதகத்தில் நம்பிக்கை இல்லையே ...அதனால் கவலையை விடுங்க” என்று பிரதாப்புக்கு ஆறுதல் கூறினாள்.

பத்மினியின் பேச்சை கேட்ட பிரதாப் மனதுக்குள் வாடி…. என் அக்கா பெத்த ரத்தினமே…இதுக்கெல்லாம் நான் பயந்திடுவேனா…. எப்படி எப்படி…என் ஜாதகத்தில் தோஷம்.என் ஒரிஜினல் ஜாதகம் நான் எங்க… ?தரப்போகிறேன்.ஒரிஜினலில் என் தாய் தந்தை பெயரை பார்த்தால் பெண்ணை கொடுத்துட்டு தான் மறு வேலை பார்ப்பார் உன் அப்பா.என்று இவன் இந்த யோசனையில் இருக்கும் போதே பத்மினி நிறைய தடவை அழைத்தும் அவன் நினைவிலேயே மூழ்கி இருந்தான்.

பின் அசோக் வந்து தான் அவன் பாணியில் அவன் காதருகில் கத்தி அழைத்து அவனை இவ்வுலகிற்கு வரவழைத்தான்.பிரதாப் அசோக்கை பார்த்து முறைத்ததற்கு பத்மினியை கை காட்டினான்.

பத்மினி பிரதாப்பை பார்த்து “அது தான் கவலை படாதீங்கன்னு சொல்கிறேன்னே….பின் என்ன…? உங்கள் முகம் தெளியவே இல்லை.”என்ற பத்மினியின் பேச்சில் பிரதாப் மனதுக்குள் சாரல் அடித்தது.தன் முகபாவத்தை கூட பார்க்கிறாளே……என்ன அவள் புரிந்துக் கொண்டது தான் தவறு… என்று எண்ணினான்.பின் இதுவும் நல்லதுக்கு தான் தன்னை சரியாக கவனித்திருந்தாள் தனக்கு தான் ஆப்பு என்று நினைத்துக் கொண்டான்.

பத்மினி தான் இவ்வளவு சொல்லியும் அவன் எதுவும் சொல்லாததை பார்த்து இன்னும் அவருக்கு நம்பிக்கை வரவில்லையே….. ஜாதகத்தால் திருமணம் தடைபடுமோ… என்று தானே அவர் கவலை படுகிறார். இந்த கவலையும் தன்னை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமே என்பதற்கு தானே என்று அவள் உருகி போனால்.

இந்த நெகிழ்சியிலேயே ... பிரதாப்பிடம் “நான் வேண்ணா ஒன்று செய்யட்டுமா…?என்று ரகசியமாக வினாவினாள்.

வாய் திறக்காமல் தன் புருவத்தை ஏற்றி இறக்கி தன் கையை தன் இடது காதை தடவிய வாறு….. “என்ன செய்ய போறே…”என்ற அவன் செயளில் பத்மினி சுத்தமாக தன்னை இழந்தாள்.

“நான் என்னுடைய ஜாதகத்தை உங்களிடன் கொண்டு வந்து தருகிறேன்.அவற்றை நீங்கள் உங்கள் ஜாதகப்படி மாற்றி அமைத்து கொள்ளுங்கள்.”பத்மினியிடம் சத்தியமாக இப்படி பட்ட வார்த்தையை பிரதாப் எதிர் பார்க்க வில்லை.

அந்த இடத்தை கருதி தன்னை அடக்கிக் கொண்டான். தொண்டையில் இருந்து வார்த்தை வருவேனா...என்று சத்தியாகிரகம் செய்தது. தன்னை நிலைப்படுத்திக் கொண்டு பேசினான்.இருந்தும் அவன் பேச்சு ஒரு கரகரப்புடனே ஒலித்தது.

”வேண்டாம் மினி நீ எப்போதும் இருப்பது போல் நேர்மையாகவே இரு. இவற்றை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்”.என்ற அவனின் வார்த்தையில் பத்மினி தானே முன் வந்து தன் கையை அதில் கோர்த்துக் கொண்டு “உங்களின் நேர்மை எனக்கு மிக பிடித்து இருக்கிறது. உங்கள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்று கூறி இன்னும் தன் கைய் அழுத்தத்தில் அவனுக்கென… நான் இருக்கிறேன். என்ற உறுதி அதில் இருந்தது.

பத்மினியின் இந்த பேச்சால் பிரதாப்புக்கு இதுவரை ஏற்படதா குற்ற உணர்வு ஏற்பட்டது. நாம் தவறு செய்கிறோமோ…..பிரதாப்புக்கு தெரியும் பத்மினி எவ்வளவு நியாயமானவள் என்று அப்படி பட்டவளை நான் பொய் சொல்லி திருமணம் செய்துக் கொள்வது ஏனோ மன உருத்தளாகவே இருந்தது.

ஆனால் இனிமேல் இதில் இருந்து பின் வாங்கவும் முடியாது.இதுவரை எப்படியோ….ஆனால்,இனிமேல் எந்த காரணத்துக்காகவும் பத்மினியைய் இழக்க முடியாது.அது பத்மினிக்காக இருந்தாலும் சரி.என்று தன் குற்ற உணர்வை தூரம் எரிந்தான்.

திருமணத்திற்கு பிறகு எப்படியாவது பத்மினியை சமாளித்து விடலாம்… என்று பத்மினியை குறைத்து மதிப்பிட்டான்.அதற்கு காரணமும் இருந்தது, இதோ… இப்போது எனக்காக தானே ஜாதகத்தையே கொண்டு வந்து தருகிறேன். அதனை மாற்றி அமைத்து கொள்ளுங்கள் என்று கூறினாள்.அது தன் மேல் உள்ள காதலால் தானே…

திருமணத்துக்கு பிறகு அவள் தந்தையை பற்றி கூறினாள்.கண்டிப்பாக பத்மினியே தன் தந்தையை வெறுத்து விடுவாள் என்று மணக்கோட்டை கட்டினான்.

பிரதாப்பின் கோட்டை யாரும் தகர்க்க முடியாத இரும்பு கோட்டையா….?

இல்லை ஒரு அலை அடித்தாலும் சரிந்து விடும் மண் கோட்டையா….?





 
சாய்ஞ்சுப்புட்டா மச்சான் சாய்ஞ்சுப்புட்டா
பத்மினி ஒரேயடியாய் பிரதாப்பிடம் சாய்ஞ்சுப்புட்டா
 
ஜாதகம் கேட்டாலும் ஜாக்கெட் கேட்டாலும் ஒண்ணும் வேலைக்காகாது, சகுந்தலா பாட்டி
ஏன்னா உங்க பேத்தி பிரதாப்பிடம் க்ளீன் போல்டாயிட்டாள்
 
Top