Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரேக்க மணிமகுடம் வரலாற்றுத் தொடர் ( அத்தியாயம் 1)

Advertisement

ஆரம்பமே உறையூரிலிருந்து வெகு அருமையாக ஆரம்பித்துள்ளீர்கள், தம்பி
உறையூர்
இந்த பெயரை மறக்க முடியுமா?
உறையூர் பெயரைக் கேட்டாலே கல்கியின் "பொன்னியின் செல்வனும்" கரிகாலன் சோழனும் பழையாறையும் குதிரை குளம்படிச் சத்தமும் ஞாபகம் வரும்
கல்கியின் நாவல் போல இந்த "கிரேக்க மணிமகுடம்" நாவலும் புகழ்பெற்று விளங்கப் போவது திண்ணம், பாரதி தம்பி
 
கிரேக்க மணிமகுடம்ன்னு பேர் கேட்டதும் ஜூலியஸ் சீசர் நெப்போலியன் போனபார்ட் இவர்களின் ரோமானிய ஸ்டோரின்னு நினைத்தேன்
ஆனால் சோழர்களின் கதையைக் கொடுத்து என்னை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள், தம்பி
சோழ இளவல்கள் நெடுங்கிள்ளி, நலங்கிள்ளி இவர்களின் காதையை தெரிந்து கொள்ள வெகு ஆவலாக காத்திருக்கிறேன்
 
தாய் மாமன் உறவென்பது தாய்க்கு சமமான தொப்புள் கொடி உறவைப் போன்றது
ஆனால் மகாபாரதக் காலத்திலிருந்தே தாய் மாமன்களெல்லாம் நல்ல மாமன்களாக இல்லாமல் நாய் மாமன்களாகத்தான் இருக்கிறார்கள்
இங்கே நெடுங்கிள்ளியின் நாய் மாமன் சேச்சே தாய் மாமன் இரும்பிடைவல்லன் சகோதரியின் மகனுக்கு என்ன கெடுதல் செய்யப் போகிறானோ?
 
மிக்க நன்றி சகோதரி...
உங்களை போன்றவர்கள் காட்டும் ஆர்வமே எனக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் எழுத்துவதற்கு தருகின்றது. இந்த நாவல் ஒரு அற்புதமான படைப்பாக ஆக என்னால் ஆன எல்லா முயற்சிகளும் செய்வேன். படிப்பவர்களின் ஆர்வம் அதிகரிக்க செய்யும் அளவிற்கு கதை அற்புதமாக வந்துள்ளது. அடுத்த 10 பாகங்கள் எழுதி முடித்து விட்டேன். இரண்டாம் பாகமும் இன்று பதிப்பித்து உள்ளேன். இது ஒரு நான்கு முனை கதைக்களம். காதல், ஊடல், வீரம், சூழ்ச்சி, பாசம், பரிவு, நட்பு எல்லாம் கலந்து சரி விகிதத்தில் உருவாகியுள்ளேன். தொடர்ந்து வாசியுங்கள். இரண்டாம் பாகம் குறித்து உங்களின் கருத்தையும் பதிவிடுங்கள்... ஆர்வமுடன் உள்ளேன். பாரதிப்பிரியன்
 
Welcome bro.after a gap of 6 years i am reading a historical novel.thanks for that.my all time favourite author is balakumaran who is expert to mix history and imagination .i wish you all the best and good wishes in your efforts to give us a historical novel.the first episode really very nice n indicates yr skill to become a prominent author.
சகோதரிக்கு வணக்கம். கிரேக்க மணிமகுடம் இரண்டாம் பாகம் உங்கள் பார்வைக்கு உள்ளது.தொடர்ந்து வாசியுங்கள். நன்றி...
பாரதிப்பிரியன்
 
Welcome bro.after a gap of 6 years i am reading a historical novel.thanks for that.my all time favourite author is balakumaran who is expert to mix history and imagination .i wish you all the best and good wishes in your efforts to give us a historical novel.the first episode really very nice n indicates yr skill to become a prominent author.
[/

சகோதரிக்கு வணக்கம். கிரேக்க மணிமகுடம் 2ம் அத்தியாயம் பதிப்பித்து உள்ளேன். வாசிக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி... பாரதிப்பிரியன்
 
வணக்கம் & நன்றிகள் பிரியன்...

எனக்கு பழமையான அரச கதைகள் படிப்பதில் சிறிது ஆர்வம் ஆனால் அதற்கு எந்த முயற்சியும் செய்ததில்லை..

எதேச்சையாக என் தோழி முலமாக பொன்னியின் செல்வன் படித்தேன்..

உங்கள் தலைப்பை பார்த்தவுடன் யவனர்கள் பற்றியது என்று நினைத்தேன்.

உங்களுக்கு ஒரு செய்தி அனுப்பி சோழர்கள் கதை ஏதாவது கிடைக்குமா என்று கேட்க நினைத்தேன்...

இப்போது 5 நிமிடத்திற்கு முன்புதான் என்ன கதை என்று பார்ப்போம் என்று உள்ளே வந்தேன் முதலில் பானு அக்கா பதிவை பார்த்து பரவசமானேன்..

இக்கதை கரிகால பெருவளத்தான் காலத்திற்கு பிற்பட்டதா...

மிக்க நன்றி மிகவும் அதிகமாக எதிர்பார்கிறேன்..

யவனராணி யை விட இது நன்றாக வர என் வேண்டுதல்கள்....

வீரம் விளைந்த தமிழ் மண் வீரம் மட்டும் அல்ல அதற்கு நிகரான துரோகம் விளைந்த மண்...

அடுத்த பதிவை ஆவலுடன் படிக்க செல்கிறேன்...
 
Top