Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் கதைகள் போட்டியில் எழுத்தாளர் #88 அவர்கள் எழுதிய “காதல் மழலை அவள் மணவாளன்”

Advertisement

#TNWcontestWriters
#88_காதல்_மழலை_அவள்_மணவாளன்
#விமர்சனம்

இது கதைக்கான விமர்சனம் என்பதைத் தாண்டி, கதையில் என் மனத்திற்குப் பிடித்த விஷயங்களை உங்களிடம் கூறுகிறேன் ஆத்தரே.

அழுத்தமான கதைகளைப் படிக்க விரும்பாத நான், ஒருவிதமான தயக்கத்துடன் தான் உங்கள் கதையைப் படிக்க ஆரம்பித்தேன். பெரும் வயது வித்தியாசத்தில் நடக்கும் திருமணம் (இதுவே எனக்கு அழுத்தமான கதை தான்)

ஆனால் ஏனோ தெரியவில்லை; முதல் அத்தியாயத்திலேயே உங்கள் தொரை மனத்தைக் கவர்ந்துவிட்டார். காரணம், தமயா தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கும்போது அவன் அமைதியாக அதை ஏற்றுக்கொண்ட விதம், என்னை மேலும் படிக்கச் சொல்லி ஈர்த்தது.

இரண்டு கரங்கள் தட்டினால் தான் ஓசை வரும் என்று இருவருக்கு இடையே வளரும் வாக்குவாதங்களைக் குறித்து எங்கள் வீட்டில் பேசி கேட்டிருக்கிறேன். அதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக, கதையின் ஆதி முதல் அந்தம் வரை தொரை குடும்ப உறவுகளை மதித்து, சகித்து, கடந்து, பிரச்சனைகளைக் கையாண்டு வந்த குணாதிசயம் மிகவும் அருமை.

முக்கியமாகத் தமயாவின் உணர்களை மதித்து நடந்த விதம் அழகு. அவள் பணிக்குச் செல்ல வழிவகுத்தது முதல், அவள் கனவுகளை மெய்யாக்கிய வரை அனைத்தும் பிரமாதம். அவள் தன்னை மனதார ஏற்றுக்கொண்ட பின்னும், அவள் வாழ்க்கை திசைமாறியது தன்னால் தான் என்ற குற்றவுணர்வுடன் தினம் தினம் தவித்ததும், அவனை அந்த மனவுளைச்சலில் இருந்து தமயா மீட்டெடுத்த இடங்களும் மெய்சிலிர்க்க வைத்தது ஆத்தரே.

வறுமை நிலைமையிலும் மனம் தளராத நிமிர்வான பெண்ணாக தமயாவின் கதாபாத்திரம் சித்தரித்த உங்களுக்குச் சிறப்பு பாராட்டுகள். எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை குறையாமல் செயல்பட வேண்டும் என்று அவள் மூலம் அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

சாதாரணமான இட்லி மாவு அரைக்கும் காட்சியில் குடும்பத்தின் நிதிநிலைமையை வர்ணித்தது அசத்தல். யார் யார் எந்தெந்த நேரம் உணவு சமைக்க வேண்டுமென்ற பெண்களின் சமையலறை பேச்சு வார்த்தையிலும் இயல்பான பனிப்போரிலும், கூட்டுக்குடும்பத்தின் எதார்த்தத்தை நேர்த்தியாகச் சொல்லிவிட்டீர்.

காதலுக்கும் ஊடலுக்கும் பிரம்மாண்டமான அலங்காரங்களும், விலை உயர்ந்த பொருட்களும் தேவையிருக்கவில்லை என்று தமயாவின் “தொரை” என்ற முணுமுணுப்பிலும், நளனின் “இங்கரே” என்ற அழைப்பிலும், புல்லட் பயணங்களிலும், தோசை ஊற்றும் அழகிலும், முக்கியமாக நோட்டுப்புத்தக தூதுகளிலும் எடுத்துரைத்த விதம் சூப்பரோ சூப்பர்.

இவர்களுக்கு அடுத்தப்படியாக என்னை மிகவும் கவர்ந்த கேரக்டர் சரசு. பொறுப்பில்லாத கணவர், மகன், மகள், மருமகள்கள் பேரப்பிள்ளைகள் என ஒரே வீட்டில் உறவுகளுடன் வாழும்போது வரும் இயல்பான பாசம், கோபம், ஆதங்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், அனைத்தும் தத்ரூபமாக இருந்தது. அதிலும் மூத்த மகனின் நற்குணத்தை மனத்தில் வைத்து, அவனுக்காகப் பேசும் இடங்களும், குடும்பத்தினர் ஒவ்வொருவரின் குணமறிந்து சண்டையிடுவதும், சமரசம் செய்வதும் அனைத்தும் சூப்பர்.

லலிதாவின் கதாபாத்திரமும் அப்படித்தான். புதிதாக வந்த ஓரகத்தியிடம் ஒட்டிப்பழகாமல் விலகியிருப்பது, பிறகு புரிந்து கொள்வதும் நேர்த்தியாக இருந்தது ஆத்தரே.

இதில் சாமியின் பிரச்சனை மட்டும்தான் சற்று நீளமாக எழுதிவிட்டீர்கள் என்று எனக்குத் தோன்றியது. இங்கரே-தொரையின் மனஸ்தாபங்கள் படிப்படியாக குறைந்து அழகிய புரிதல் வளரும் வேளையிலே, சாமி மாட்டிக்கொண்ட பிரச்சனை, அதிலிருந்து அவனை மீட்டெடுக்க தமயா-நளன் பாடுப்படுவது, கதையின் சுவாரசியத்தைக் குறைக்கும் விதமாக இருந்தது என்று எனக்குத் தோன்றியது ஆத்தரே.

அதே மாதிரி நளனின் வயது தான் இக்கதையின் முக்கிய அம்சம். அதை தமயா எப்படி ஏற்பாள் என்ற அதீத Curiosityயுடன் தான் படித்தேன். அவன் குணம் உணர்ந்து, தமயாவின் மனதில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் அசத்தல். குறிப்பாக அவனைத் தனக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி சீண்டிய இடங்களும், டீச்சராக மாறி மிரட்டிய இடங்களும் மனத்தைக் கொள்ளைக் கொண்டது.

அந்த இடத்தில், நளனின் தோற்றம் பற்றிய வர்ணனை (45 என்று சொல்லமுடியாத இளமையான தோற்றம்) என்பதைத் தவிர்த்திருக்கலாம் என்பது என் எண்ணம். அவனின் “நற்குணண்களை” மட்டுமே கருத்தில் கொண்டு படிக்கும் வாசகர்களாகிய எங்கள் கற்பனைக்கே அவன் உருவ அமைப்பைப் பற்றியும் விட்டுவிட்டிருந்தால் அவர்களின் காதலின் ஆழம் இன்னும் அழகாகப் பிரதிபலித்திருக்கும். (Heroes need not necessarily be handsome. It is just my personal thought.)

மறப்போம் மன்னிப்போம் என்ற கூட்டுக்குடும்பத்தின் தார்மீக மந்திரத்தையும், கணவன் மனைவிக்கு இடையே, ஒருவர் கோபம் கொள்ளும்போது, மற்றவரும் அதற்கு இணையாக எகிறி சண்டை போடாமல், அந்த இடத்தில் தன் சரிபாதியின் மனநிலை உணர்ந்து நிதானமாகச் செயல்பட்டால் பிரச்சனைகள் தீரும் என்று சொல்லும் விதமாக இங்கரே-தொரை, அவர்கள் குடும்பத்தினர் மூலம் அழகிய கதை தந்த ஆத்தருக்கு என் மனம்நிறைந்த நன்றிகள் பல பல.

நீங்கள் இப்போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள் நட்பே.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Hi ma..

மிக்க நன்றிம்மா..

அழகாக தெளிவாக புரிந்து விமர்சனம் அளித்தமைக்கு.

வயது வித்தியாசம் என்றால் காதல் அடுத்து வரும் வாழ்க்கைப் பயணங்கள் கொண்டு செல்ல கவனமாக இருந்தேன் அது ஓரளவு நிறைவேறியது, ஆங்காங்கே விட்டு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

பொதுவாக நாயகி, நாயகன் வர்ணனை வைப்பதில்லை ,சொல்ல போனால் பிடிப்பதில்லை, ஆனால் நளனை அந்த நாற்பதைந்து வயதாகவே சொல்லி இருக்கேன் என நினைக்குறேன் எனக்கு தெரிந்து அதுவும் புல்லட் பயணத்திற்காக. ????

சாமி கதை தேவையாக இருந்தது இதுவும் நிஜத்தில் ஒன்று.. ????

மிக்க நன்றிம்மா.. ???
 
Last edited:

ஓரளவு இல்லை ஆத்தரே! எடுத்த கதைக்கருவை மிக மிக நேர்த்தியாக சொல்லிட்டீங்க. There is no doubt about it. Reviewல் சொல்ல விட்ட ஒரு இடம்…தமயா இரண்டாவது பிள்ளை வேண்டுமென்று சொல்லும்போது, அக்குழந்தையின் எதிர்காலம் பற்றியும், தன் வயது பற்றியும் நளனின் பயமும், தவிப்பும்…சான்சே இல்ல… அதைவிட தமயா அவனுக்கு அளிக்கும் பதில்(எண்பது வரை சேர்ந்து வாழ்வோம்) mind blowing love and compassion between the couple???

இத்தனை அழகான தம்பதிகள் என்பதால் தான், வர்ணனை தவிர்த்திருக்கலாம் என்று சொன்னேன். ஏனென்றால்,இருவருக்கும் தோற்ற அமைப்பையும் தாண்டி மலர்ந்த காதல் அல்லவா அது.????

நீங்க சொன்னா மாதிரி, கதையில் அதிக வர்ணனை இல்லை… I totally agree with you…நான் குறிப்பிட்டது, நளன் நண்பன்(I think தர்மன்) மற்றும் தமயாவின் தோழிகள் நளனின் தோற்றம் பற்றி சொன்னது. அது இந்த திருமணத்தை அவர்கள் நியாயப்படுத்துவது போல இருந்தது.

சாமி கதை எதார்த்தமானது தான் நட்பே. ஆனால் அது நீளமாக இருந்ததால், ஒரு கட்டத்தில் இங்கரே தொரையின் அழகான காதல் பயணத்தில் இருந்து divertஆகுறா மாதிரி ஒரு ஃபீல் இருந்துது.same thing I felt with கனிகாவின் அப்பா பிரச்சனை செய்த போது…in my personal opinion….எப்பதான் தொரை திரும்பி வருவாருன்னு தேடுறா மாதிரி இருந்துது….அந்த அளவுக்கு புல்லட் தொரையின் காதல் மனத்தை கொள்ளை கொண்டது?????)

All these are just my personal thoughts ma. I understand it could differ from reader to reader. Also, you are the creator of this story. You know what is best. Keep rocking with more amazing stories. Best wishes.?????
 
.ஹஹஹஹ thanks so much ma.. இங்கரே- தொரை காதல் அழகை தாண்டியது, ஆனால் நட்புகள் முதலில் பார்ப்பது அதை தானே ???

சாமி, கனிகா அப்பா தேவையின் பொருட்டு வரவேண்டியாதாச்சு. புரியுது தொரை, இங்கரே மிஸ் ஆகுறாங்க அங்கனு.. ????? மிக்க நன்றிம்மா..

உங்களை மாதிரி விமர்சனங்கள் வரும் போது இன்னும் எழுத தூண்டுக்கோலாக உள்ளது.. ????
 
நீங்க கதைக்கருவை கையாண்ட விதம் எனக்கு ரொம்ப பிடிச்சுது நட்பே. அதான் மனத்தில் தோன்றிய அனைத்தையும் விமர்சனம் என்ற பெயரில் கொட்டித் தீர்த்துவிட்டேன்.

தொடரட்டும் உங்கள் எழுத்துப்பயணம் என்றென்றும். போட்டிகள் முடிந்ததும் உங்கள் நிஜப்பெயர் தெரிந்துகொண்டு உங்களுடைய மற்ற கதைகளையும் படிக்க ஆவலாக உள்ளேன் நட்பே??
 
Top