Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - முன்னோட்டம் - 4

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

'எனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு..' என்றவாறு தங்கள் முன் நின்ற மகனை குடும்பமே அதிசயித்து பார்த்து நின்றது...​

'என்ன சொல்ற கரண்?' என்று அதிர்வில் இருந்து முதலில் மீண்ட பசுபதி கேட்கவும்...​

'தெளிவா தானே சொன்னேன் உங்களுக்கு காதுல ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே' என்றான் அவர் பின்னே இருந்த கூட்டத்தில் விழிகளை ஓடவிட்டு...​

'நிஜமாவே உனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கா ?'​

'ஆமா'​

'யார் தம்பு அது ? பொண்ணு பேர் என்ன?'​

'பப்...' என்று ஆரம்பித்தவன் குரலை செருமி 'தெரியாது' என்றான்.​

எந்த ஊர்..??​

தெரியாது​

என்ன படிச்சிருக்கா..?​

தெரியாது​

'எங்க இருக்கா..?? அம்மா அப்பா என்ன பண்றாங்க..?'​

தெரியாது​

வேலைக்கு போறாளா இல்லையா ..?​

தெரியாது​

கேட்கும் கேள்விக்கெல்லாம் தெரியாது என்று பதிலளிப்பவனை என்னடா இது? என்பதாக குடும்பம் மொத்தமும் ஒருவரை ஒருவர் அடுத்து என்ன கேட்பது என்று புரியாமல் பார்த்துக்கொள்ள..​

'இவ்ளோ நாள் நாயா பேயா அலைஞ்சு பொண்ணு தேடினோமே முன்னாடியே சொல்றதுக்கு என்ன? சரி சொல்லு எவ்ளோ வருஷமா?' என்று திரு பல்லைகடிக்க​

'வருஷமெல்லாம் இல்லை '​

'அப்போ எத்தனை மாசம் ..??'​

'மாசமா..??'​

'அப்போ எவ்ளோ நாள்ண்ணா?' என்றான் ஜித்து.​

'ப்ச்' என்று வாட்சை பார்த்தவன் 'ஜஸ்ட் செவென் மினிட்ஸ் முன்னாடி தான் பார்த்தேன் பிடிச்சிருக்கு கட்டி வைங்க' என்று நாற்காலியில் அமர்ந்தவன் 'அப்பு பாதாம் டிரிங் எடுத்துட்டு வா' என்றான்.​

'என்னது ஏழு நிமிஷமா..??' என்ற அபிராமிக்கு தலை கிறுகிறுத்து கொண்டு வந்தது..​

'என்னடா சொல்ற ஏழு நிமிஷத்துக்கு முன்னாடி பார்த்த பெண்ணை கட்டி வைக்கணுமா ..??'​

'ஆமா! இல்லனா கல்யாணமே வேண்டாம்' என்று அசால்ட்டாக சொன்னவன் பாதாம் பாலை குடிக்க தொடங்க பெற்றவர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது.​

'அண்ணா நீங்க லவ் பண்றீங்களா?' என்றான் ப்ரணவ் குதூகல குரலில்...​

'லவ்வா?' என்று கீழ்கண்களால் தம்பியை பார்த்து 'இல்லை' என்பதாக தலையசைத்தவன், 'உனக்கு எப்படி தோணுதோ அப்படி வச்சுக்கோ..' என்றிட​

'அப்புறம் எப்படிண்ணா..??'​

'ப்ச் நீங்க தானே பொண்ணு பிடிச்சிருந்தா கூட்டிட்டு வரசொன்னீங்க... ஆனா இந்த கூட்டத்துல அவளை தேடி கூட்டிட்டு வர எனக்கு நேரமில்ல'​

'ஆமா அந்த பொண்ணுகிட்ட பேசினியா..??'​

'இல்லை'​

'ஒருநிமிஷம் அப்போ நீ கேட்ட..' என்று திரு தன் வாக்கியத்தை நிறைவு செய்யும் முன்னமே..​

'இருக்கு' என்று அழுத்தமான குரலில் சொன்னவன் கைபேசியை திறந்து பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து ...​

'இவதான் உங்க மருமகள் சீக்கிரம் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க தாலி கட்டுறேன்' என்ற மகனை என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்திருந்தனர்.​

ஹாய் செல்லகுட்டீஸ்...

சொல்ல மறந்துட்டேன் இது முழுக்க முழுக்க ஜாலி ஸ்டோரி நோ கருத்து நோ எமோஷன் படிச்சிட்டு சொல்லுங்க...

Last edited:
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣பீதியிலே மொத்த குடும்பத்தையும் வச்சிருக்கியே தலைவா 🤣🤣🤣.
இப்படி டம்மி வெடியை கொளுத்தி போட்டு, என்ன பண்ணலாம்னு நெனச்சிட்டு இருக்கீங்க ருத்ரா🤷🤷🤷🤷ஹீரோயின் ஹார்மி ஸ்டார்ட் பண்ணுங்க 🙉🙉
 
Last edited:
🤣🤣🤣🤣🤣 ஏழே நிமிசத்தில ஒரு பொண்ணை பார்த்து பிடிச்சி புரிஞ்சி கல்யாணம் செய்ய முடிவு எடுத்துட்டாரு எங்க ஹீரோ 🥰🥰🥰🥰 எங்க ஹீரோவோட திறமை அப்படி 🤗🤗🤗🤗

நிமிஷ கணக்கு கூட தெளிவா சொல்றான் 🧐🧐🧐🧐 பெத்தவங்க கஷ்ட பட கூடாது என்று போட்டோ எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கான் 🤓🤓🤓🤓🤓 அவ்வளவு பாசம் 🥰🥰🥰🥰🥰

பப் என்று ஆரம்பித்து நிறுத்திட்டானே 🤔🤔🤔🤔 என்னவா இருக்கும் ஒருவேளை பப்ல பார்த்தேன் என்று சொல்ல வந்தானோ 🤔🤔🤔🤔🤔

அதான் சொல்லிட்டான் இல்ல சட்டு புட்டுன்னு கூட்டிட்டு வாங்க தாலிய கட்டட்டும்🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
ஏன்டா வெளங்காவெட்டி வெண்ணை உன்னைய எல்லாரும் பெரிய(பிஸ்தா பருப்பு) இஸ்ஸூக்குன்னு நினைச்சிகிட்டு ஆலோலம் பாடிக்கிட்டு எங்காளு மலையத் தாண்டுவான் கவுத்தை தாண்டுவான் செவுத்தைத் தாண்டுவான்
அரபிக்கடலை அளப்பானு அளந்துவுட்டுகிட்டு இருக்காங்க.

முக்கியமா இந்த ரைட்டர் ஜீ யும் சாமரம் வீசுனாங்க.
நீனு வெண்ணெய்ய வெட்டறதுல வீரன்னு தெரியாம இருக்காங்களே.

ஏன்டா டோங்கிரி தலையா லவ் இல்லையாம் அதுவும் ஏழு நிமிசத்துக்கு முன்னாடி பாத்த பொண்ணுக்கு இவன்லிஸ்ட்டு போட்ட குவாலிபிகேஷனெல்லாம் இருக்காம்.
எருமைமாடு இவனுக்கு புடிச்சா மாத்தரம் போதுமாம்.
உன்ற மூஞ்சைப் பாத்த பொண்ணுக்கு உன்னைய புடிச்சிருக்கானு தெரியவேண்டாமா டா மடையா.

என்ன ஒரு ஆணாதிக்க புத்தி.
😠😠😠😠😠😠😠😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
எங்காளு இழைய சங்கி மங்கி பிங்கின்னு சொன்னவங்களுக்கு தெரிஞ்சிருக்குமே அந்த மலையுட்டு மலை தாவற மங்கி இந்த கரண(ன்)மடிக்கறவன் தான்னு தெரிஞ்சிருக்குமே.
வூட்டுல ஒவ்வொருத்தரையும் சர்க்கஸூ கோமாளி மாதிரி கம்பி மேல நடக்கவக்கிறானே.
நெஞ்சைப் புடிச்சிகிட்டு நிக்கவச்சே எல்லாரையும் ஆஸ்பித்திரிக்கு அனுப்பிட்டு தான் மறுவேலை பாப்பான் போல😏😏😏😏😏😏😏😏
 
ஒரு பொண்ணை பார்த்து பிடிச்சதும் அவகிட்ட கூட சொல்லாம பெத்தவங்ககிட்ட சொல்ல ஓடி வந்துருக்கான் .... தங்கமான பிள்ளை நம்ம ஹீரோ.... 🤩🤩🤩🤩🤩😝😝😝😝 அவனைப் போய் கேள்வியா கேட்டு கொல்லுறாய்ங்க.... 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

மிஸ்டர். திரு இப்படி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்காம போய் அவனுக்கு பிடிச்ச பொண்ணை தேடுற வழியைப் பாருங்க.... 😎😎😎😎
 
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣பீதியிலே மொத்த குடும்பத்தையும் வச்சிருக்கியே தலைவா 🤣🤣🤣.
இப்படி டம்மி வெடியை கொளுத்தி போட்டு, என்ன பண்ணலாம்னு நெனச்சிட்டு இருக்கீங்க ருத்ரா🤷🤷🤷🤷ஹீரோயின் ஹார்மி ஸ்டார்ட் பண்ணுங்க 🙉🙉
ஹீரோ ஹார்மியே Certificate கொடுத்துள்ளார்.... ஹீரோ ஒரு டம்மி வெடி என்று...!!!!

bf65c7b8820651dadd4550ef875deab1.jpg
 
உன்ற மூஞ்சைப் பாத்த பொண்ணுக்கு உன்னைய புடிச்சிருக்கானு தெரியவேண்டாமா டா மடையா.
Confidence ji... confidence....😎 ஹீரோவோட அறிவும் அழகும் இன்னும் உங்களுக்கு புரியலையா.....so sad..
 
'எனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கு..' என்றவாறு தங்கள் முன் நின்ற மகனை குடும்பமே அதிசயித்து பார்த்து நின்றது...​

'என்ன சொல்ற கரண்?' என்று அதிர்வில் இருந்து முதலில் மீண்ட பசுபதி கேட்கவும்...​

'தெளிவா தானே சொன்னேன் உங்களுக்கு காதுல ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே' என்றான் அவர் பின்னே இருந்த கூட்டத்தில் விழிகளை ஓடவிட்டு...​

'நிஜமாவே உனக்கு ஒரு பெண்ணை பிடிச்சிருக்கா ?'​

'ஆமா'​

'யார் தம்பு அது ? பொண்ணு பேர் என்ன?'​

'பப்...' என்று ஆரம்பித்தவன் குரலை செருமி 'தெரியாது' என்றான்.​

எந்த ஊர்..??​

தெரியாது​

என்ன படிச்சிருக்கா..?​

தெரியாது​

'எங்க இருக்கா..?? அம்மா அப்பா என்ன பண்றாங்க..?'​

தெரியாது​

வேலைக்கு போறாளா இல்லையா ..?​

தெரியாது​

கேட்கும் கேள்விக்கெல்லாம் தெரியாது என்று பதிலளிப்பவனை என்னடா இது? என்பதாக குடும்பம் மொத்தமும் ஒருவரை ஒருவர் அடுத்து என்ன கேட்பது என்று புரியாமல் பார்த்துக்கொள்ள..​

'இவ்ளோ நாள் நாயா பேயா அலைஞ்சு பொண்ணு தேடினோமே முன்னாடியே சொல்றதுக்கு என்ன? சரி சொல்லு எவ்ளோ வருஷமா?' என்று திரு பல்லைகடிக்க​

'வருஷமெல்லாம் இல்லை '​

'அப்போ எத்தனை மாசம் ..??'​

'மாசமா..??'​

'அப்போ எவ்ளோ நாள்ண்ணா?' என்றான் ஜித்து.​

'ப்ச்' என்று வாட்சை பார்த்தவன் 'ஜஸ்ட் செவென் மினிட்ஸ் முன்னாடி தான் பார்த்தேன் பிடிச்சிருக்கு கட்டி வைங்க' என்று நாற்காலியில் அமர்ந்தவன் 'அப்பு பாதாம் டிரிங் எடுத்துட்டு வா' என்றான்.​

'என்னது ஏழு நிமிஷமா..??' என்ற அபிராமிக்கு தலை கிறுகிறுத்து கொண்டு வந்தது..​

'என்னடா சொல்ற ஏழு நிமிஷத்துக்கு முன்னாடி பார்த்த பெண்ணை கட்டி வைக்கணுமா ..??'​

'ஆமா! இல்லனா கல்யாணமே வேண்டாம்' என்று அசால்ட்டாக சொன்னவன் பாதாம் பாலை குடிக்க தொடங்க பெற்றவர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது.​

'அண்ணா நீங்க லவ் பண்றீங்களா?' என்றான் ப்ரணவ் குதூகல குரலில்...​

'லவ்வா?' என்று அவனை கீழ்கண்களால் தம்பியை பார்த்தவன் 'இல்லை' என்று தலையசைத்தவன் உனக்கு எப்படி தோணுதோ அப்படி வச்சுக்கோ.. என்றிட​

'அப்புறம் எப்படிண்ணா..??'​

'ப்ச் நீங்க தானே பொண்ணு பிடிச்சிருந்தா கூட்டிட்டு வரசொன்னீங்க... ஆனா இந்த கூட்டத்துல அவளை தேடி கூட்டிட்டு வர எனக்கு நேரமில்ல'​

'ஆமா அந்த பொண்ணுகிட்ட பேசினியா..??'​

'இல்லை'​

'ஒருநிமிஷம் அப்போ நீ கேட்ட..' என்று திரு தன் வாக்கியத்தை நிறைவு செய்யும் முன்னமே..​

'இருக்கு' என்று அழுத்தமான குரலில் சொன்னவன் கைபேசியை திறந்து பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து ...​

'இவதான் உங்க மருமகள் சீக்கிரம் தேடி கண்டுபிடிச்சு கூட்டிட்டு வாங்க தாலி கட்டுறேன்' என்ற மகனை என்ன சொல்வது என்று புரியாமல் பார்த்திருந்தனர்.​

ஹாய் செல்லகுட்டீஸ்...

சொல்ல மறந்துட்டேன் இது முழுக்க முழுக்க ஜாலி ஸ்டோரி நோ கருத்து நோ எமோஷன் படிச்சிட்டு சொல்லுங்க...

Nirmala vandhachu 😍😍😍
Just 7 minutes 🤣🤣🤣🤣🤣
 
Top