ஒற்றை ஜன்னல் - 15

Advertisement

தமிழ் இனி துளசி வாழ்கைல இல்லை, அவனுக்குன்னு வாழ்க்கைத்துணை வந்தாச்சு. துளசி இனி அவளோட வாழ்க்கையை அவள்தான் பார்த்துக்கணும். என்ன முடிவெடுத்து இருக்கா.
 
அப்போ first எபியில காய்ச்சல் வந்து படுத்திருக்கும் குழந்தை கீதாவோடதா??????

நல்ல முடிவு எடுத்திருக்கா துளசி. இனியாவது அவ வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கட்டும். வெற்றி அவன் குடும்பம் இவளை விட்டுட்டாளே போதும். எல்லாம் சரி, இப்போ இவளுக்கு உடம்பில் தெம்பு இருக்கும் வரை உழைத்து, அவளோட தேவைகளை பார்த்துக்கலாம். வயோதிகம் ஆனா பிறகு இவளுக்கு யாரும் துணை இருக்க மாட்டாங்களே🥺🥺🥺🥺🥺🥺

அடுத்த எபியை சீக்கிரமாக கொடுங்க சிஸ்டர் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
வயோதிகத்தைப்பற்றி நினைத்து வாழும் நாட்களில் எல்லாம் நரகத்தில் வாழமுடியுமா? இத்தகைய குடும்பம் எப்படி அவளுக்கு துணையாக இருக்கும்.
 
வயோதிகத்தைப்பற்றி நினைத்து வாழும் நாட்களில் எல்லாம் நரகத்தில் வாழமுடியுமா? இத்தகைய குடும்பம் எப்படி அவளுக்கு துணையாக இருக்கும்.
நான் சொல்ல வரது என்னனா அவளை வெற்றி மற்றும் அவன் குடும்பத்தோடு,அல்லது அவ அம்மா, சகோதரிகளோடு இருக்கனும்னு சொல்லலை.
ஒன்று அவ வேற வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கலாம். இல்லைனா ஏதாவது ஒரு குழந்தையை எடுத்து வளர்க்கலாம்.
ஏன்னா நாங்க இங்க ரெண்டு பாட்டிகளை எங்க தெருவே பொருப்பெடுத்து பார்த்துக்கறோம். ஏன்னா அவங்க அந்த வயதில் குடும்ப வருமைக்காக வேலை வேலைனு ஓடி உழைத்து எல்லா அக்கா பிள்ளை களையும் ஆளாக்கி முடிச்சு. அவங்க ஓய்வெடுக்கும் நேரம் பக்கவாதம் வந்து படுத்துட்டாங்க. அவங்க அக்காக்கள் குடும்பத்தில் யாரும் வந்து இதுவரை பார்க்க வரவில்லை . ஒரு வருஷம் ஆச்சு. நாங்க தான் அவங்க பென்சன் பணம் போக கூடக்குறைய இருந்தாலும் அதையெல்லாம் சரிகட்டி ,எங்க தெருவாசிகளே பார்த்து கவனிச்சு இப்போ அவங்க வாக்கிங் ஸ்டிக் வச்சு ஒரு ஒரு வீடா வந்து நன்றி சொல்லும் போது அழுகையா வருது. அப்போ அவங்க சொல்லுறது என்னனா நான் என் கூட பிறந்தவங்களுக்கு செய்ததை யாரோ ஒரு குழந்தையை எடுத்து வளத்திருந்திருக்கலாம் மா, ஏமாந்துட்டேனு சொல்லுவாங்க. இப்போவும் எங்கயாவது ஹோம்ல சேர்த்து விடலாம்னு கேட்டா,
வேண்டாம் மா நான் கடைசி வரை உங்க கூடவே இருந்துக்கறேன். எனக்கு ஏதாவது ஒன்னுனா நீங்க எல்லாரும் சேர்ந்து தூக்கி போட்டுருங்க.எனக்கு தான் இத்தனை மகன்,மகள்,பேரப்பிள்ளைகள்னு இருக்கீங்களே அப்படினு சொல்லுவாங்க
 
இந்த சாந்தாவ நினைச்சாலே
எரிச்சல் ஆகுறா
 

Advertisement

Advertisement

Back
Top