இங்கே காலையில கமெண்ட்ஸ் போட்டுட்டு, பிரவீணா நிலைமையைப் பார்த்த பிறகும் திருந்தாம ஒரு விஷேஷ வீட்டில் போய் அவமானபட்டு வந்திருக்கேன்.., விதவைங்கிற ஒரே காரணத்துக்காக. அது எப்படித்தானோ சமூகமே.. உங்களையெல்லாம் தெரியாமத்தான் ஒன்னு கேட்கிறேன், விதவைகள் செய்யும் சீர் வரிசையில் மட்டும் உங்களுக்கு தீட்டு இல்லையா????????? அப்படி தீட்டா இருந்தா ஏன் எங்க பேரை மட்டும் பத்திரிக்கையில போட்டு உங்கள நல்லவங்கனு காட்டிக்க யூஸ் பண்ணிக்கறீங்க. ஆனா பிற யார் கண்ணுக்கும் தெரியாத ஜீபூம்பா கத்தியைக் கொண்டு இதயத்தில் வலிக்க வலிக்க சொருகறீங்க. தாங்க முடியலை தெய்வமே.. இன்னும் எத்தனை தலைமுறைக்கள் நாங்க கடந்து, நாங்களும் உயிரும்,உணர்வும் மாதிரி,பூஜை புணஸ்காரங்கள் செய்ய தகுதியானவங்கனு சபையில் நிறுத்தப்போறீங்க. இவ்வளவுக்கும் இன்னைக்கு என்னை விதவைனு ஒதுக்கிவச்சவளும் ஒரு கல்யாண பொண்ணு தான்.