Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 11

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 11
தாராவிடம் தன் மனதை வெளிப்படுத்த சென்றான் தருண்.அவளின் அறையின் முன் நின்று இரண்டு விரலால் கதவை தட்டினான்.கதவு தட்ட படும் சத்தம் கேட்டு "என்ன சதா..புதுசா கதவலான் தட்டற.. உள்ள வா", என்றாள்.

உள்ளே சென்றான் தருண். ஆளுயர கண்ணாடியின் முன் நின்றிருந்தாள் தாரா. கண்ணாடியின் வழியே தருண் பிம்பத்தை பார்த்தாள் தாரா.தன் பின்னே நின்றிருந்த அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருகணம் திகைத்த அவள் தன்னை சுதாரித்துக்கொண்டு"வா தருண்..என்ன வேண்டும், சதாவை பார்க்க வந்தியா", என்று கேட்டாள்.

அவனிற்கு பதில் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பதில் எதுவும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்று இருப்பதை பார்த்தவள்"உன் கிட்ட தான் கேட்கிறேன் தருண்.. என்ன வேண்டும்", என்று கேட்டாள்.

" எனக்கு என்ன வேண்டும்ணு உனக்கு தெரியாதா தாரா", என்று சொன்னவன் அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தான்.

அவனை முறைத்து பார்த்தவள்" என்ன வேணும்னு சொன்னால்தான் தெரியும்..நீ சொல்லாம எனக்கு எப்படி தெரியும்", என்று சொன்னாள்.

" அப்போ நெஜமா உனக்கு தெரியாது எனக்கு என்ன வேண்டும்னு", என்றான் முறைப்புடன்.

" தெரியாது", ஒற்றைச் சொல்லில் முடித்தாள்.

" தாரா என் பொறுமையை சோதிக்காத..உனக்கு மாப்பிள பாக்க போறாங்கு".

" இத சொல்ல தான் வந்தீங்களா...அது தான் எல்லாருக்கும் தெரியுமே", என்று சொன்னாள் எந்த உணர்வும் இல்லாமல்.

" ஓ அப்போ உனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல அப்படிதான", என்றான்.

அவன் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக நின்றாள். அதை பார்த்தவன்"உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன். உனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்லல.. கல்யாணம் பண்ணிக்க போற அப்படித்தான",என்றான் கோபத்துடன்.

தன் மனதை வெளிப்படுத்த விரும்பாமல் திரும்பி நின்று கொண்டாள். ஆனால் கண்ணாடியின் வழியே அவளைப் பார்த்தவன், அவளின் விழியிள் இருந்து நீர் வருவதை பார்த்து தன்னால் தான் என்று அந்த போகத்தையும் அவள் மீதே காட்டினான்.

அவளை நெருங்கியவன் அவள் கையை பற்றி அவளை தன் பக்கம் திருப்ப...அவள் அப்பொழுதும் நிமிர்ந்து பார்க்காமல் கீழே குனிந்து கொண்டு இருக்க...அவளின் மோவாயை அழுத்திப்பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தியவன் "எதுவும் சொல்லமாட்டல..இப்படியே இரு..என்னமோ நடந்துட்டு போகட்டும்..நான் ஏன் கவலை படனும்",என்று அவளை விட்டு சென்றுவிட்டான்.

அவன் பிடித்த இடம் எறியவும் தன் கைகளால் வருடியவள் அவன் நெருக்கத்தை அவன் தொடுகையை ராசித்தாள் அந்த தருணத்திலும்.

"காதலென்றால் அவ்வளவு எளிதானதா இவனுக்கு..அவனே சொல்லும்வரை நான் இப்படியே தான் இருப்பேன்.உனக்கு நான் வேணும்னா நீ தான் முயற்சி செய்யணும்..நான் செஞ்சவரைக்கும் போதும்..இனி நீ தான் செய்யணும்", என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

தாரா அவனை தன் சிறுவயதில் இருந்தே காதலிக்கிறாள்.அது காதல் என்று தெரியாத வயசில் என்று கூட சொல்லலாம்.எப்பாழுதும் அவன் பின்னே சுற்றி கொண்டு இருப்பாள்.அவள் பொழுதுகள் அனைத்தும் அவனுடன் தான்.ஆனால் தருணுக்கு அந்த எண்ணம் துளியும் இல்லை.எப்பொழுதும் ஜாலியாக சுற்றிவருபவன் அனைவரிடமும் கலகலப்பாக பேசுபவன் இவளையும் ஒரு நல்ல தோழியைப்போலவே நடத்தினான்.இவள் கல்லூரியின் இருதி ஆண்டில் படித்துக்கொண்டு இருக்கும்பொழுது தான் அவன் வெளிநாடு செல்லவேண்டி இருந்தது அவர்களின் தொழிலுக்காக.அனைவரும் வழி அனுப்ப ஏர்போர்ட் சென்றிருந்தார்கள்.அனைவரிடமும் கலகலப்பாக விடை பெற்று சென்றவன் கடைசியாக இவளிடம் சொல்ல இவளை பார்த்தான்.இவளை பார்த்தநொடி அவளின் கண்களில் தெரிந்த அந்த பரிதவிப்பு, அவள் காதல்,அவனை பிரியும் மனதின் வலி இப்படி எண்ணற்ற உணர்வலைகள் அவள் ஒரு பார்வை பிரதிபலிக்க இவனுக்கு உலகமே மறந்து போனது.அப்படியே சிலைபோல நின்றுவிட்டான்.அவனை பார்த்த அவன் தந்தை அவனை இழுத்துக்கொண்டு சென்றார் விமானத்திற்கு.

அதில் இருந்து தினமும் கோதை பாட்டியிடம் வீடியோ கால் பேசிவிடுவான்.அவர்களை பார்க்க அல்ல..தாராவை பார்க்க.அதை முதலில் உணராத பாட்டி போக போக அவனின் பார்வை செல்லும் திசையை புரிந்துகொண்டார். அதனால் அவள் எங்கு இருக்கிறாளோ அங்கு சென்று தான் பேசுவார்.அவள் இவனை பார்க்கவே மாட்டாள்.ஆனால் அந்த இடத்தை விட்டும் நகர மாட்டாள்.

அவள் பார்க்காவிட்டாலும் தன்னை பார்க்க சம்மதிக்கிறாள்.அங்கே இருந்து போகமல் இருக்கிறாள்.அதுவே போதும் என்று இருந்தது தருணுக்கு.ஆசை தீர அவளை பார்த்துக்கொள்வான்.இதை உணர்த்தும் அவள் மனம் இறங்க வில்லை.இவ்வளவு வருடம் பக்கத்திலே இருந்தும் நான் சுற்றி சுற்றி வந்தும் தெரியவில்லை.இப்பொழுது இவ்வளவு தூரம் சென்ற பின்பு காதலா என்று அவளுக்கு வருத்தம்.அதையும் அவன் இவளிடம் நேரடியாக கேட்காமல் இப்படியே இருந்தாள்.அதனால் வந்த கோபம் தான் அவளுக்கு இப்பொழுது.

"ச்ச..எவ்வளவு ஆசையா என் மனசுல இருக்கிறத சொல்ல வந்தேன்.எல்லான் சொதப்பிடுச்சு.இவளால தான்.எப்படி பேசுறா..வாயில என்ன வச்சு இருக்கா..சொல்ல வேண்டியதான உங்களை தான் கல்யாணம் செஞ்சிப்பேனு..அவ்வளவு திமிர்", என்று சொல்லிக்கொண்டு கீழே வந்தான்.அவன் செய்த தவறு என்ன என்று புரியாமல்.இவன் மட்டும் தன் காதலை வெளிப்படுத்தினானா அவளை குறை சொல்கிறான்.இது தான் காதலின் விளையாட்டோ.

தருண் கீழே வரவும் கண்ணனும் வந்தான்.அனைவரும் கூடத்தில் இருந்தனர்.புரோக்கர் வந்தார்.அவரை வரவேற்று உபசரித்த பின்பு இரண்டு வரன் வந்துள்ளதாக அவர் கூறினார்.

"இந்தாங்க மாப்பிள்ளை போட்டோ", என்று ஜனார்த்தனன் தாத்தாவிடம் கொடுத்தார்.

அதை வாங்கி பார்த்தவர் கண்ணனிடம் கொடுத்தார்.கண்ணனும் பார்த்துவிட்டு தன் தந்தையிடம் கொடுத்தான்.

"மீசை இல்லாம வெள்ளைக்காரனை போல இருக்க பையன் வெளிநாட்ல வேலை செய்யறான்.சொந்தமா கம்பெனி வச்சி நடத்துறாங்க..கோதுமை நிறத்துல கம்பீரமா நம்ப கண்ணனை போல இருக்க பையன் சொந்தமா ஸ்கூல் காலேஜ் லான் வச்சி இருக்காங்க", என்றார் புரோக்கர்.

"வெளிநாடு செட் ஆகாதுபா..ஸ்கூல் வச்சி இருக்க பையன் வீட்ட பத்தி சொல்லு", என்றார் தாத்தா.

"ஒரே பையன்..மூணு தலைமுறையா ஸ்கூல் காலேஜ் தான் நடத்திட்டு வராங்க..சென்னைல ரொம்ப புகழ்பெற்ற காலேஜ் அது", என்றார்.

அனைவருக்கும் இதுவே நல்லதாக தோன்ற ஜனார்த்தனன் கண்ணனை பார்த்தார்.அவன் யோசித்துவிட்டு"சரி இந்த பையன பத்தி விசாரிச்சிட்டு உங்களுக்கு தகவல் சொல்றோம்", என்றான் ப்ரோக்கரிடம்.

அவரும் சரி சொல்லி அனுப்புங்க என்று விடைபெற்று சென்றுவிட்டார்.

"கண்ணா இந்த வரன் மட்டும் செட் ஆச்சுன்னா நம்ப தாரா ரொம்ப சந்தோஷமா இருப்பாபா", என்று ஒரு தந்தையாக தயாநிதி பெரு மகிழ்ச்சி அடைந்தார்.

ஜனார்தனனும் ஆமாம் என்பதுபோல் தலை அசைத்தார்.துளசியும் தன் மகளின் வாழ்வை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சிகொண்டார்.

அங்கே வருத்தமா இருந்தது கோதை பாட்டியும் தருணும் தான்.

"வெளிநாட்டு பையனும் பாக்க லட்சணமா தான் இருந்தான்.நம்ப பொண்ண பாக்கனும்னு தோணுச்சுனா போற தூரத்துல இருந்த தான நமக்கு நிம்மதி", என்று ஜனார்த்தனன் சொன்னதும் தருணுக்கு பயங்கர கோவம் வந்துவிட்டது.

"உங்க பேத்தி மேல அவ்ளோ அக்கறை இருந்தா அவளுக்கு நெஜமாவே யார் சரினு யோசிச்சி முடிவு எடுத்து இருப்பிங்க.. ஏன் வெளிநாட்டுல வேலை செஞ்சா உங்க பொண்ண தர மாட்டீங்களா.. சரி வெளிநாடுனா தூரமா இருக்கு தரமாட்டிங்க... பக்கத்துல பொண்ணு இருந்தா மட்டும் நல்லா பார்த்துபாங்களா..அப்படின்னு ஒரு நினைப்பு.. சொத்து இருக்கா செல்வாக்கா இருக்காங்களா அப்படின்னு எல்லாத்தையும் பார்த்து பொண்ணு கொடுக்க நினைக்கிறீங்க.. ஆனா அவளுக்காக நான் ஒருத்தன் இருக்கேன்னு நீங்க யாரு யோசிக்கவே இல்ல இல்ல.. என்ன எல்லாம் பாத்தா பொண்ணு கொடுக்கணும்னு தோணலையா.. ஏன் அவளை நான் நல்லா வச்சு பார்த்துக்க மாட்டேனா.. இல்ல எனக்கு அந்த தகுதி இல்லனு நினைக்கிறீங்களா.. தாத்தா இப்போ எனக்கு ஒன்னு நல்லா புரியுது..என்ன இருந்தாலும் பையனோட பையன் வேற தான், பொண்ணோட மகன் வேற தான்..உங்களுக்கு நான் ஒரு பேரனா தெரியவே இல்ல இல்ல..", என்று கோவத்தில் ஆரம்பித்து அழுகையில் முடித்தான் தருண்.

" எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது தாரா கூட தான் இல்லன்னா, நான் இப்படியே இருந்திடுவேன் கடைசி வரைக்கும்", என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அவன் கோபமாக பேசத் தொடங்கியதும் பார்வதியும் வைஷுவும் தங்கள் அறையில் இருந்து வெளியே வந்தனர்.அவன் பேசிய அனைத்தையும் கேட்டதும் பார்வதிக்கு ஒரு அதிர்ச்சி அதைவிட மிகுந்த மகிழ்ச்சியே.. இதுவரை கண்ணனுக்கும் வைஷுவிற்கும் கல்யாணம் செய்துவைக்க நினைத்திருந்தார்.ஒருநாளும் தருணிற்கும் தாராவுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்று நினைக்கவே இல்லை. ஏனென்றால் வைஷு தான் சொல்வதை எல்லாம் கேட்பாள் என்ற தைரியம்.. தருண் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்.அவனிடம் இவருடைய சுயநலம் எடுபடாது. அதனால் அதைப் பற்றி யோசிக்காமல் விட்டு விட்டார். ஆனால் இப்பொழுதோ பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக தானாகவே இது நடந்துவிட்டது அதில் அவருக்கு மிக மகிழ்ச்சி.இனி கண்ணனுக்கும் வைஷுவிற்கும் கல்யாணம் செய்யது வைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு இல்லை. தருண் தாராவின் திருமணம் நடந்து விட்டால் இனி அந்த வீட்டில் அவருடைய ராஜ்ஜியம் தான் எடுபடும். அவர் சொல்லும் பேச்சை தான் அனைவரும் கேட்கும் நிலை உருவாகும் என்ற எண்ணம் அவருக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.

தருண் வெளியே சென்றதும் அனைவருக்கும் ஒன்றுமே புரியவில்லை.அவர்கள் இதைப் பற்றி யோசிக்காமல் இல்லை. தருண் மிகவும் நல்லவன் தாராவை நன்றாகவே பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் இருந்தது.ஆனால் பார்வதி என்ன சொல்வாரோ என்று பயந்து அனைவரும் இதைப் பற்றி பேசாமல் இருந்து விட்டனர்.தருனுக்கும் அதை யார் புரியவைப்பது என்று ஜனார்த்தனன் தாத்தா யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அனைவர் மனதிலும் அப்படி ஒரு மகிழ்ச்சி தருண் தாராவை விரும்புகிறான் என்று தெரிந்த பின்பு எதற்கு இனி மாப்பிள்ளை பார்ப்பது, தருணையே திருமணம் முடித்து வைக்கலாம் என்று அனைவரும் தீர்மானித்தனர். அதுவும் அதை முதலில் சொன்னது பார்வதி தான். அவரே சொன்ன பின்பு மற்றவருக்கு என்ன கருத்து இருக்க போகிறது அனைவரும் ஒத்துக் கொண்டனர் கண்ணனும் சரி என்று சொல்லி விட்டான்.

இங்கு நடந்த அனைத்தையும் சம்யுக்தா வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். தருண் அவளையும் பார்க்காமல் வேகமாக வெளியே சென்று விட்டான். இதைக் கேட்டதும் சமயுக்தாதாவிற்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. தனது தோழிக்கும் அண்ணனுக்கும் திருமணம் இதை நினைக்கும் போதே அவளுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. அவள் முகத்தில் சந்தோஷம் பிரதிபலிக்க அவள் வாசலிலேயே நின்றிருந்தாள்.

ஜனார்த்தனன் இதைப் பற்றி பிறகு பேசலாம் என்று அனைவரிடமும் சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார். கோதை பாட்டியும் மிகுந்த சந்தோஷத்துடன் அவர் பின்னே சென்று விட்டார். அனைவரும் சென்ற பின்பு கண்ணனும் மன நிம்மதியுடன் திரும்ப அங்கே வாசலில் சம்யுக்தா நின்றிருப்பதை பார்த்தான்.

அவள் சிரித்த முகத்தை பார்த்தவனுக்கு புரிந்தது தருணிற்கும் தாராவிற்கும் திருமணம் என்பதில் அவளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்று.

"நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் போல.ச்ச..அவளை எவ்ளோ கஷ்ட படுத்திட்டேன்.என்ன பண்றது என்னோட காதல் என் கண்ணை மறைத்துவிட்டது.அறிவு மங்கிடுச்சு..அதுவும் அவளால் தான்.என்னிடம் எதற்கு வீம்பு பண்ணிட்டு இருக்கனும்.நான் சொல்றத கேட்டு இருந்தா அவளை கஷ்ட படுத்தி இருக்க மாட்டேன்.எதுவாக இருந்தால் என்ன..என் யுக்தா எனக்காக மட்டும் தான்", என்று மனதில் நினைத்து பெருமகிழ்ச்சி கொண்டான்.

அதே ஆனந்தத்துடன் அவளை பார்த்து மென்னகையுடன் கண்ணடிக்க..அவனை எரித்துவிடுவது போல் பார்த்து சென்றாள்.

போகும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் கண்ணன்.

அவளின் மனதை பனியாக கரைப்பானா கண்ணன்.பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Very interesting epi dear.
Ippo romba nalla konduporingo. Theliva, koorvaiya poguthu.1st epi kum intha epi kum nalla vithyasam.good.
Previous epi reply pannum pol kathaya yarum padikkala, reply pannala,solli worry panni irrukanga. Ellavarum vasipanga, silar than reply seyum. Neega frequent epi koduthu irruntha ellavarukum femiliar avum, katha rasippanga,responsum athigam aagum.
You don't worry. Keep up your good work. See the changes soon.only thing is be in touch.
How are you now?take care.stay safe.
 
Very interesting epi dear.
Ippo romba nalla konduporingo. Theliva, koorvaiya poguthu.1st epi kum intha epi kum nalla vithyasam.good.
Previous epi reply pannum pol kathaya yarum padikkala, reply pannala,solli worry panni irrukanga. Ellavarum vasipanga, silar than reply seyum. Neega frequent epi koduthu irruntha ellavarukum femiliar avum, katha rasippanga,responsum athigam aagum.
You don't worry. Keep up your good work. See the changes soon.only thing is be in touch.
How are you now?take care.stay safe.
Tnk u so much..enakey changes theridhu first epi kum ipo ezhudhitu iruka epi kum..unghalukum adhula pangu iruku..credits iruku..padichitu oru 2 words comments kudutha kuda romba happy irukum la..enmelayum thappu iruku..romba long gap ku apram continue panren..adhunala kuda irukalam..bt it's ok.. negha sonna maari na ennoda wrk ah senjitu irupen..
I'm gud..hw r u?
 
Tnk u so much..enakey changes theridhu first epi kum ipo ezhudhitu iruka epi kum..unghalukum adhula pangu iruku..credits iruku..padichitu oru 2 words comments kudutha kuda romba happy irukum la..enmelayum thappu iruku..romba long gap ku apram continue panren..adhunala kuda irukalam..bt it's ok.. negha sonna maari na ennoda wrk ah senjitu irupen..
I'm gud..hw r u?
Pannu, pagan, ellam ennikku venda.idea is yours,you put all your efforts, your hard work must be felicitated.im just booster. I think you picked the right track,go ahead darling.we will enjoy with your presentation.
 
Pannu, pagan, ellam ennikku venda.idea is yours,you put all your efforts, your hard work must be felicitated.im just booster. I think you picked the right track,go ahead darling.we will enjoy with your presentation.
Tnks a lot dear?
 
Top