Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னோடு கைகோர்க்க 10

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 10
வீட்டை நோக்கி சென்றுகொண்டு இருந்த சம்யுக்தாவின் மனதிற்குள் சொல்லமுடியாத உணர்வலைகள்."ஹப்பா..என்ன பார்வடா சாமி..ஒரு செகண்ட் கூட பாக்க முடில..இவன் எதுக்கு என்ன அப்படி பாக்குறான்..ஏதோ கொல குத்தம் செஞ்ச மாரி..நாம அப்படி என்ன பண்ணோம்",என்று யோசித்துகொண்டே போனாள்.

"ஹேய்..சதா..எங்க போன..இவ்ளோ நேரம் உன்னை தான தேடிட்டு இருந்தேன்",என்று அவள் அருகில் வந்தாள் தாரா.

"ரோஜா தோட்டத்துக்கு போய் இருந்தேன்", என்றாள்.

"ஹ்ம்ம்..அங்க பாக்க மறந்துட்டேன் பாரு", என்று நெற்றியை விரலால் தட்டிக்கொண்டாள்.

"சமையல் முடிஞ்சதா ".

"முடிஞ்சது..அண்ணா வந்ததும் சாப்பிடலாம்".

"ஐயோ..அவன் இருந்தா எனக்கு ஒரு வாய் கூட உள்ள போகாதே..அவன் கூட சாப்பிடணுமா",என்று நொந்துகொண்டாள்.

அவளின் முகமாற்றத்தை பார்த்த தாரா "என்ன யோசிச்சிட்டு இருக்க சதா", என்று வினவினாள்.

"ஒன்னும் இல்லை..சும்மா தான் ".

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது கண்ணன் வந்தான்..அவனை பார்த்ததும் "வா அண்ணா..சாப்பிடலானு தான் உன்னை தேடிட்டு இருந்தேன்", என்றாள் தாரா.

சம்யுக்தாவிடம் பேசலாம் என்று வந்தவன் தாராவை பார்த்ததும் ஒன்றும் பேசாமல் நின்றான்."நான் வரேன் தாரா", என்றான்.

கண்ணனை பார்த்த சம்யுக்தா இப்போ பேசு பார்க்கலாம் என்று ஒரு கிண்டல் பார்வையை அவனிடம் வீசினாள்.

அவள் பார்வையை உணர்ந்தவன் தன் பல்லை கடித்து கோபத்தை வெளிப்படுத்தினான்.அதற்குள் உள்ளே இருந்து துளசி தாராவை அழைத்தார்."வரேன்மா", என்று சொல்லி தாரா உள்ளே சென்றாள்.

"அச்சோ..இப்படி மாட்டிக்கிட்டியே சம்யுக்தா",என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

"அப்படி என்ன பேசிட்டு இருந்த..அதுவும் சிரிச்சி சிரிச்சி", என்றான்.

அவனை முறைத்தவள்"அது உங்களுக்கு தேவையில்லாதது", என்றாள்.

"எதுடி எனக்கு தேவையில்லாதது", என்று அவளிடம் சீறினான்.

அவன் அவளை டி என்று சொன்னதும் அவளுக்கு பயங்கர கோபம் வந்துவிட்டது. அவளும் அவனிடம் கோபமாக " ஏதோ உரிமை உள்ளவரை போல் என்னை டி ன்னு கூப்பிடுரிங்க", என்று கேட்டாள.

" அப்படிதாண்டி கூப்பிடுவேன் என்ன பண்ணுவ",என்றான் அலட்சியமாக.

தன்னை இது வரை யாரும் இப்படி அழைத்தது இல்லை. இவன் என்னவென்றால் அப்படி கூப்பிட்டது
மட்டும் இல்லாமல் அலட்சியமாக வேறு பேசுகிறான் என்ற கோபத்தில் சம்யுக்தா வார்த்தையை விட்டாள்." நான் என்ன உன் பொண்டாட்டியா டி சொல்லி கூப்பிட", என்று கேட்ட பின்புதான் அந்த வார்த்தையின் அர்த்தம் புரிந்தது அவளுக்கு. தன் நுனி நாக்கை கடித்துக்கொண்டு அவனை பயத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். அவனோ அவள் பயத்திற்கு மாறாக அவளை பார்த்து புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவள் மேல் இருந்த கோபம் எல்லாம் பனித்துளிகளாக மாற அவளை பார்த்து மந்தகாசப் புன்னகை புரிந்து கொண்டிருந்தான்.

" ஒருவேளை அப்படித்தான் இருக்குமோ.. டீ சொல்லி கூப்பிட்டது எதனாலனா நீ என் பொண்டாட்டினு மனசு சொல்லி இருக்குமோ", என்று அவளை வெறுப்பேற்றினான்.

" ஐயோ தெரியாம வார்த்தையை விட்டதுக்கு இவன் என்னலாம் பேசுறான். எனக்கு இது தேவை தான்..", என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

" நீ என் பொண்டாட்டினா அப்போ மாமா சொல்றத நீ கேக்கணும் தானே", என்றான் புன்னகையுடன்.

" என்னது மாமாவா", என்று அவள் அதிர்ச்சியாக பார்க்க.

" அன்னைக்கு அந்த மாரி பையன் கிட்ட ரோட்டுல நின்னு அப்படித்தானே சொன்ன என் மாமா வராருனு",என்றான் கள்ள சிரிப்புடன்.

" ஐயோ இதையும் கேட்டுடான் போல இவனுக்கு கேட்கலன்னு நினைச்சேன் போச்சு இன்னைக்கு நல்லா மாட்டிக்கிட்டேன் இவன்கிட்ட.. சமயுக்தா நீ காலி", என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.

"சரி இப்போ மாமா சொல்றத கேட்டுக்கோ..இனி நீ தருண் கூட பேச கூடாது..அதையும் மீறி நீ பேசின அதனோட விளைவுகளை நீ சந்திக்க நேரிடும்",என்று கொஞ்சலோடு ஆரம்பித்து எச்சரித்து முடித்தான்.

அதுவரை அமைதியாக நின்று இருந்த சம்யுக்தா தருணிடம் பேசக்கூடாதென்று சொன்னதும் கோவம் கொண்டு " நான் பேசுவேன் உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள்", என்று அவன் பதிலுக்காக காத்திராமல் உள்ளே சென்றுவிட்டாள். நாளை வரப்போகும் விளைவு என்னவென்று தெரியாமல்.

இதமான மனநிலை மாரி ரௌத்திரமாக நின்றுகொண்டு இருந்தான் கண்ணன்.

"என்ன மச்சான்..வேலை இருக்குனு சொல்லிட்டு வந்திங்க..இப்படி வாசல்ல ஒத்தயில நின்னுட்டு இருக்கிங்க..", என்று கேட்டுக்கொண்டு வந்தான் தருண்.

"தாரா சாப்பிட கூப்பிட்டா..அதான் போகணும் ", என்றான் தன் மனதை மறைத்து.

"அப்போ வாங்க போவோம் சாப்பிட", என்று கண்ணனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான் தருண்.

துளசியும் தாராவும் பரிமாற அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.கண்ணனும் தருணும் அவர்களுடன் அமர்ந்தனர்.

கண்ணனை பார்த்த ஜனார்த்தனன் "கண்ணா சாப்பிட்டு வா கொஞ்சம் பேசணும் ", என்றார்.

"சரிங்க தாத்தா", என்றான்.

சம்யுக்தா அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.அவனும் கோவத்தை அடக்கி அமைதியாக உண்டு முடித்தான்.

அனைவரும் கூடத்தில் இருக்க ஜனார்த்தனன் கண்ணனிடம் "நாளைக்கு காலைல புரோக்கர் வரேனு சொல்லி இருக்கார் கண்ணா ", என்றார்.

"சரி தாத்தா..பாக்கலாம்", என்றான்.

"இப்போதைக்கு இரண்டு வரன் தான் நமக்கு ஏற்ற மாதிரி இருக்காம்..நாளைக்கு கொண்டுவர சொல்லிருக்கேன்".

"ம்ம்ம்..பாப்போம்", என்றான் யோசனையாக.

"சரி கண்ணா..நான் போய் படுகிறேன்", என்று அவர் சென்றுவிட்டார்.

அனைவரும் உறங்க சென்றுவிட்டனர்.

"தாரா உனக்கு நிஜமா சந்தோஷமா கல்யாணம் செஞ்சிக்க", என்று கேட்டாள் சம்யுக்தா.

"ஏன் சதா இப்படி கேக்கற".

"உன்னோட முகத்துல அந்த ஹப்பினஸ் இல்லையே ".

"இப்போ தான ஆரம்பித்து இருக்காங்க.. இன்னும் எவ்ளோ இருக்கு..மாப்பிளையை பொறுத்து தான் என்னோட சந்தோஷம் இருக்கு", என்றாள் தாரா.

"அதுவும் சரி தான்..நான் தான் ரொம்ப யோசிச்சிட்டேன்", என்று சிரித்தாள் சம்யுக்தா.

"ஹ்ம்ம்..சரி தூங்கலாம்", என்று சொல்லி கொஞ்ச நேரத்தில் இருவரும் தூங்கிபோனார்கள்.

காலை விடிந்ததும் அவர் அவர்கள் தங்கள் வேலையில் மூழ்கி இருக்க "தருணுக்கு தான் மனம் என்னமோ செய்துகொண்டு இருந்தது. என்ன நடந்தாலும் பரவாயில்லை இன்று பேசிவிட வேண்டும்",என்று திடமாக முடிவுசெய்தான்.

மனது ஒருநிலையில் இல்லாமல் படபடத்துக்கொள்ள அமைதிவேண்டி ரோஜா தோட்டத்திற்கு சென்றான்.

குளித்துமுடித்து வந்தவள் தாரா தங்கள் அறையில் இல்லை என்றதும் கீழே சென்றாள்.வழக்கம் போல் தாரா துளசிக்கு உதவியாக கிச்சனில் இருக்க சம்யுக்தா வெளியே வந்தாள்.சுற்றி பார்வையை செலுத்தியவள் தருணை பார்த்ததும் அவனருகில் சென்றாள்.

"என்ன சொல்லிட்டு இப்போ நீங்க எப்பவும் இங்கயே இருக்க மாதிரி இருக்கு ", என்று சிரித்த முகத்துடன் கேட்டாள் சம்யுக்தா.

அவள் குரலை கேட்டு திரும்பியவன் "ஹேய் சதா..வா வா..தனியா இருக்கோமேனு நெனச்சேன் நீ வந்துட்ட", என்று அவளை அழைத்து அருகில் அமர்த்திக்கொண்டான்.

"என்ன ஏதோ மனசுல ஓடிட்டு இருக்கு போல ", என்றாள்.

"மனச படிச்சிட்டியா", என்றான் வருத்தத்துடன்.

"உங்க மூஞ்சிலே தெரியுது..மனச வேற படிக்கணுமா", என்றாள் அவன் முகத்தை காட்டி.

"அப்படியா தெரிது..ஹ்ம்ம் எல்லாம் இந்த லவ் பண்ற வேலை..முடியல கண்ண காட்டுது ", என்று தலையில் கைவைத்துக்கொண்டான்.

"சரி சொல்லுங்க..என்ன தான் பிரச்சனை".

"என்னத்த சொல்றது..இந்த தாரா என்ன ரொம்ப படுத்தறா..மனசுல காதல வச்சிட்டு சொல்ல மருக்குறா", என்றான் ஆதங்கமாக.

இதை யூகித்து இருந்த சம்யுக்தா.."அப்போ நீங்க ப்ரொபோஸ் பண்ணிட்டிங் களா"என்று கேட்டாள்.

அவளை பாவமாக பார்த்தவன் இல்லை என்பது போல் தலையை இடவலமாகா ஆட்டினான்.

அவனை பார்த்து முறைத்தவள்" நீங்களே சொல்லல அப்போ அவ சொல்லணும்னு நீங்க எப்படி எதிர் பாக்கலாம்", என்று அவனை கேள்வி கேட்டாள்.

"சொல்லி அவ வேண்டான்னு சொல்லிட்டா.. என்னால ஏத்துக்க முடியாது சதா", என்றான் வருத்தமாக.

"அவ உங்கள லவ் பண்ணா கண்டிப்பா ஒதுக்குவா..இப்பவே உங்க மனச அவளுக்கு புரியவச்சிடுங்க..இல்லனா நிலைமை கைமீறி போய்டும்..அப்புறம் வருத்தப்பட்டு ஒன்னும் ஆகப்போறது இல்லை", என்றாள்.

"நீ சொல்றதும் சரி தான்..நானே போய் அவ கிட்ட பேசுறேன்..இப்போ தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு ", என்று மென்னகையுடன் சொன்னான்.

"இதுக்கு தான் நேத்துல இருந்து இவ்ளோ டென்ஷனா உங்களுக்கு", என்று கேட்டாள்.

"நேத்து இல்ல..இவளோட மேரேஜ் பத்தி பேசின ஒடனே கெளம்பி வந்துட்டேன்..அந்த செகண்ட் இருந்து இப்படி தான் இருக்கேன்", என்றான்.

"ஹா ஹா....எதுக்கு இப்படி..இவ்ளோ டென்ஷன் ஆகுறதுக்கு தாராகிட்டயே பேசி இருக்கலாம்", என்றாள் சிரிப்புடன்.

"லவ்னு ஒன்னு வந்துட்டா..மூளைன்னு ஒன்னு இருக்கிறதே மறந்துபோய்டுது..அதுக்காக தான் உன்ன மாரி ஒருத்தர ஹெல்ப்க்கு அனுப்பறாங்க போல", என்றான் கிண்டலாக.

"எனக்கு வேற வேலை இல்லைல..கிண்டலா பண்றீங்க..இனி எப்பவும் நோ ஹெல்ப் ", என்றாள் பொய்யான கோபத்துடன்.

"என் செல்ல சிஸ் தான..கோவ படக்கூடாது", என்று கெஞ்சினான்.

"சரி அண்ணா..கோவம் போய்டுச்சு..சிஸ் னு சொன்னதால", என்று அவள் சிரித்தாள்.

அவள் தலையை வருடி "நிஜமா ரொம்ப குழப்பத்துல இருந்தேன்.உன்னால தான் இப்போ நிம்மதியா இருக்கு..எனக்காக ஒரு வழி சொல்லி இருக்க..தேங்க்ஸ்டா", என்றான் கண்களில் நீரோடு.

"என்ன அண்ணா..இதுக்கு போய் அழறிங்க..உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு..உங்க ஜாலி டய்ப் நேச்சர்..நீங்க இப்படி சோகமா இருக்கிறது எனக்கு பிடிக்கல..அதுனால என்னால முடிஞ்ச சின்ன உதவி அவ்ளோதான்..எமோஷனல் வேணா", என்றாள் அவளும் கண்ணீருடன்.

"ஹேய் எல்லோ ரோஸ் நீ ஏன் அழற", என்றான் அதிர்ச்சியாக.

"நீங்க இப்படி பேசுனதும் என் அண்ணாங்க ஞாபகம் வந்துடுச்சு", என்றாள் சோகமாக.

அவளை சரி செய்ய "அப்போ நான் லான் சும்மா அண்ணனா", என்றான் பொய்யான கோபத்துடன்.

உடனே அவள் பதறி" அச்சோ நான் அப்படி சொல்லல", என்றாள் அழுகையை மறந்து.

அதை எதிர் பாத்தவன்"சும்மா விளையாடினேன்", என்று அவள் தலையில் கொட்டினான்.

அவள் சிரித்ததும் "சரி நீ இங்கேயே இரு...நான் தாரா கிட்ட பேச உங்க ரூம்கு போறேன்", என்றான்.

"ம்ம்..ஆள் தி பெஸ்ட் ", என்று கட்டை விரலை தூக்கி காட்டினாள்.

அவனும் சிரிப்புடன் சென்றான்.

இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தான் கண்ணன் அவனின் அறையின் ஜன்னல் வழியாக.அதுவும் தருண் அவளின் தலையை வருடியது அவனுக்கு கோவத்தை கிளப்ப நான் அவ்வளவு சொல்லியும் இவள் அவனிடம் பேசுகிறாள் என்று அதே கோவத்தோடு சம்யுக்தாவிடம் வந்தான்.

அவனையும் சற்றும் எதிர் பாக்காதவள் என்ன என்பது போல் அவனை பார்த்துவைக்க அதில் இன்னும் கடுப்பானவன் "நேத்து உன்கிட்ட என்ன சொன்னேன் ", என்று கேட்டான்.

"எதை பற்றி ", என்றாள்.

"தருண் கூட பேச வேணான்னு சொன்னேன்.அதையும் மீறி நீ அவன்கூட பேசுற ", என்று கத்தினான்.

அதில் கோவம் கொண்டவள் "அதுனால உங்களுக்கு என்ன பிரச்சனை ", என்றாள்.

கோபத்தை அடக்க முடியாமல் "ஏன்னா நீ எனக்கு மட்டும் தான்..வேற யாருக்காகவும் உன்னை விட்டு தர மாட்டேன் ", என்று அவளை முறைத்துகொண்டே சொன்னவன் அவளை நெருங்கி தன் இதழோடு அவள் இதழ் சேர்த்தான்.

அவள் சுதாரிக்கும் முன் இப்படி அவன் செய்திட அவனை தன் பலம் கொண்டு தள்ளி பார்த்தாள்..முடியாமல் போக கீழே விழாமல் இருக்க அவனையே பிடித்து கொள்ளும் நிலையானது..அவள் கண்களின் நீர் வடிந்துகொண்டு இருக்க சிலகணங்களில் அவளை விடுவித்தவன்"நீ பேசினதின் விளைவு இப்படி தான் இருக்கும்..இனி எப்போ பேசணும்னு நெனச்சாலும் உனக்கு இது ஞாபகம் வரணும் ", என்று சொல்லிவிட்டு அவளை தள்ளிவிட்டு சென்றுவிட்டான்.

கீழே அமர்ந்தவள் எதுவும் செய்ய தோன்றாமல் அழுதுகொண்டே இருந்தாள்.

இவை அனைத்தையும் கோதை பாட்டி பார்த்திருந்தார்..கண்ணனின் மீது அவருக்கு பயங்கர கோவம் வந்தது.இவன் எப்போதிருந்து இப்படி மாறிப்போனான்.எந்த பெண்ணிடமும் இப்படி நடந்துகொள்பவனில்லையே..இந்த முரட்டு குணம் அவனுக்கு எப்படி வந்தது.அவருக்கு அனைத்தும் புரிந்தது.தருண் சம்யுக்தாவிடம் எந்த கள்ளமும் இல்லாமல் பழகுகிறான்.ஆனால் இதை புரியாத கண்ணன் இவளுக்கு தண்டனை கொடுக்கிறேனென்று அவள் மனதை வதைத்துக்கொண்டிருக்கிறான்.இதை அவனுக்கு புரியவைக்கவேண்டுமென்று நினைத்தார்.இந்த காதல் ஒருவனை இந்த அளவுக்கு மாற்றுமா என்றிருந்தது அவருக்கு.ஆனால் அவருக்கு தெரியவில்லை இவர் சொல்லுமுன் கண்ணனே தன் தவறை உணரும் தருணம் வரபோகும் என்பது.

தன் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்புகேட்பானா..காத்திருந்து பார்ப்போம்.
 
Romba nalla poguthu katha.
Athiga gavanama,SPL care eduthu ezhuthi irrukenga pola .super ah workout agirruku pa.
Hero heroin possessive ness nalla casual ah vanthu irruku. Nice dear.
 
Romba nalla poguthu katha.
Athiga gavanama,SPL care eduthu ezhuthi irrukenga pola .super ah workout agirruku pa.
Hero heroin possessive ness nalla casual ah vanthu irruku. Nice dear.
Tnk u so much..ungha comments ku dhan wait pannitu iruken..unghala thavira vera yarum ennoda story padika matranghu..konjam varuthama iruku..bt adha yellam ungha oru comments pathadhum pogha vachidudhu..tnk u so much
 
Top