Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -06

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -06

ரகுநாத ரெட்டி ஐலாவை பார்த்து இதுவும் கடந்து போகும் மகளே என்று கூற...

தன் கண்களில் கண்ணீர் வழிய அவரை ஏறிட்டாள்... அவளின் கண்ணீரை துடைத்தபடி... தங்கம் இப்படி அழலாமா.. அந்த கடவுளிடம் வேண்டாத நாளில்லை எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தையே கொடுக்கலையே... ஆனா உன்னை கண்டெடுத்த அன்று கடவுள் எனக்கு கொடுத்த மகளாக தானே பார்க்கிறேன்... என் பொண்ணு அழுதாள் என்னால் தாங்க முடியாதும்மா என்று சொல்ல..

இல்ல அழலபா.. நான் நார்மலாதான் இருக்கேன்.. நீங்க போய் தூங்குங்க நேரமாகுது.. நாளைக்கு சின்னா வேற வராரு நீங்கதான் கூட்டிட்டு வரனும் அவரை வழியனப்பிவிட்டு அவள் அறைக்குள் வந்தாள்..

பப்பு தூங்குவதை பார்த்து அவனருகில் படுத்து அவனின் தலையை கொதினாள்.. நெற்றியில் விழும் முடியை ஒதுக்கி மெதுவாக சத்தம் வராமல் இதழ் ஒற்றி எடுத்தாள் ஐலா...

அதை உனர்ந்தானோ தெரியவில்லை அச்சிறுவன் ஐலாவின் கழுத்தை கையை போட்டு அனைத்துக்கொண்டான்..

அவன் சைகையை பார்த்து சிரித்துக்கொண்டாள்... அப்பனை போலவே பிள்ளை... வாலு ஜாஸ்தி..அவன் தூங்கும் அழகை பார்த்துக்கொண்டே தன்னை மறந்து தூங்கினாள்..

இங்கே போதையில் , பெட்டில் தலைகீழாக படுத்திருந்தான் இனியன்... யாருமில்லா தனிமை மறுபடியும் அவன் வாழ்வில்... படிக்கும் காலத்தில் எப்படி உணர்ந்தானோ இன்று அதே வேதனைதான் இவன் உள்ளத்தில் தனக்கென்று யாருமில்ல... பெட்டை தடவி தடவி பார்த்தான் பப்புவும் பக்கத்தில் இல்லை.. கடந்த இரண்டு வருடமாக தன் பையனை நெஞ்சில் போட்டு தூங்கவைத்தவன் ஆயிற்றே...

திரும்பி மல்லாக்க படுத்தான் சுவற்றில் மாற்றியிருந்த இவர்களின் கல்யாண போட்டோ... அந்த போதையிலும் தேனுவை மட்டும்தான் பார்த்தான்...

ச்சே என்று திரும்பி படுத்துக்கொண்டான்... அவன் நினைவடுக்கில் அந்த நாள் மட்டுமே ஆயிரம் முறைமேல் வந்திருக்கும்.. இரண்டு வருடம் முன்பு...

தன் மகனுக்கு காதுகுத்தும் விழாவிற்கு அனைவரையும் அழைத்திருக்க.. அப்பதான் தெரிந்தது தேனுவின் வயிற்றில் மறுபடியும் பிள்ளை உருவானது....

அடுத்த நாள் டெல்லியில் மீட்டிங் என்று கிளம்பினான் இனியன்... ஆதலால் தன் மனைவி மகனை ரேனுவின் வீட்டில் விட்டுச்சென்றான். இவர்களை பார்த்து ஒரு வாரமாயிற்று...

அன்று வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு தேனு இனியனை போனில் அழைக்க முக்கியமான மீட்டிங்கில் காவல் அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருந்தான்... அவன் பி.ஏ தான் போனை அவனிடம் எடுத்து வந்து தந்தது.. பிறகு பேசிக்கலாம் என்று அவனிடம் கூறிவிட்டு மறுபடியும் மீட்டிங்கை தொடர்ந்தான்..

மதியம் 3.30 மணிக்கு தேனுவை போனில் அழைத்தான்... கடைசி ரிங்கில் போனை எடுத்தாள்..

ம்ம்.. சொல்லுங்க மாமா தூங்கத்திலே பேசினாள் தேனு

என்னடி பகல் தூக்கம்.. புருஷன பார்த்து ஒரு வாரமாயிற்றே என்ன சாப்பிட்டான் கூட கேட்க மாட்டியா.. அம்மாவீட்டுல போய் உட்கார்ந்தவுடன் என்னை மறந்துட்ட..

யாரு நானா..மதியம் யார் போன் செஞ்சது..

சரி வீடியோ காலுக்கு வா என்று இனியன் வீடியோ காலில் அழைத்தான்... தேனுவின் முகம் தெரிய... ஒரு வாரம் கழித்து பார்க்கும் இனியன் அவளின் அழகில் மயங்கி, தேனு... பிரிட்ஜிலிருந்து எடுத்த ஆப்பிள் மாதிரி சும்மா கும்முனு இருக்கடி... பார்த்தியாடி நான் எப்படி கரைஞ்சி போயிட்டேன்..

அவனை உற்றுப்பார்த்தாள் தேனு..ம்ம் நல்லாதான் இருக்கீங்க சும்மா சொல்லாதீங்க மாமா..

நான் ஊரிலிருந்து வந்து நாலு நாளாச்சு.. இன்னும் வீட்டுக்கு வரல... நான் ரொம்ப பிஸி... நீ வரவேண்டியது தானே..

மாமா, பப்புக்கு ஒரு வயசாச்சு.. அவன் பால் குடிக்கிறதை மறக்கவச்சிட்டு வரேன் தானே சொன்னேன்...

அய்யோ மறக்கவச்சிட்டீயா... அதிர்ச்சியாக கேட்க..

உனக்கு என்ன அப்படி ஒரு ரியாக்ஷன் மாமா..

அட்லீஸ்ட் இரண்டு வயசு வரைக்கு கொடுக்க வேணாமா தேனு.. பிள்ளைக்கு எப்படி இம்மியூன்டி வரும்.. என் பேச்சை எங்காவது கேட்கிறாயா நீ...

ஏன் எலி ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு எனக்கு தெரியும்..

தெரியும்தானே அப்பறம் ஏன்டி இந்த வேலையை செய்யற... புருஷனை கண்டுகிட்டாதானே, எவ்வளவு வீக்கா இருக்கேன்...அவளை திட்டிவிட்டு முகத்தை தூக்கி வைத்துக்கொண்டான்...

தேனு எனக்கு இந்த வேலையே பிடிக்கலடி... பாரு நம்ம அசோக்கு தினமும் மதியம் வீட்டுக்கு போவானாம்... மேட்னி ஷோ முடிச்சிட்டு, நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, சாய்ந்திரம் ஆபிஸ் போவான் தெரியுமா...

எங்கனா பொறுப்பிருக்கா மாமா... ஒரு கலெக்டர் மாதிரியா பேசுற..

அதற்குள் அவன் பி.ஏ வந்து ஸார் மேடம் சாப்பிட கூப்பிடுறாங்க சொல்ல...

அவங்களை சாப்பிட சொல்லு மேன் நான் கொஞ்சம் பிஸி..

பி.ஏ. வெளியே செல்ல...

கோபம் வந்துவிட்டது தேனுக்கு, யாரு மாமா அந்த மேடம்..

சொன்னா உனக்கு பிடிக்காது ஆனாலும் சொல்லுறேன்... நம்ம அனுபமா ராவ் தான்... மினிஸ்டர் சொந்தம்.. அவங்களும் மாநாட்டுக்கு வராங்க.. அதுக்குதான் இந்த விழுப்புரத்தில இவ்வளவு கூட்டம்... மூனு நாளா இந்த மேற்பார்வை நடந்துட்டு இருக்கு தேனு..

ஏன் ஐயா இல்லைன்னா மேடம் சாப்பிடமாட்டாங்க போல... உன் தெற்று பல்லை காட்டி சிரிச்சிருப்பீயே.. தேனு வயிரு எரிய சொல்ல...

அவன் தெற்று பற்கள் தெரிய வாய்விட்டு சிரித்தான்... ஐந்தரைக்கு முதலமைச்சர் வந்துடுவார் தேனு... வேலை நிறையஇருக்கு... நாளைக்கு காலையில ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்துடு சொல்லிட்டேன்..

மாமா அம்மா பப்புவை ஒரு வாரம் வச்சிக்கிறாங்களாம்.. அவன் அப்பதான் மறப்பானாம்...

அய்யோ எங்க அத்தையின்னா அத்தை தான்டி... பையன் எனக்கு தொந்தரவா இருப்பான் என்று அவங்களே வச்சிக்கிறேன் சொல்லுறாங்க... இரண்டு நாள் லீவ் போட்டு வெளிநாட்டுக்கு போயிட்டு வரலாமா தேனு..

மாமா எனக்கு வாமிட்டா வருது தெரியுமா...

சரிடி... வீட்டுலே நான்ஸ்டாப்பா டூ டேஸ்.. அய்யோ நினைச்சாவே ஜாலியாயிருக்கே... அவளுக்கு போனில் முத்தமிட்டு நேரமாயிடுச்சு தேனு போனை வைக்கவா... சொல்லி போனை அனைத்தான்..

வேளை அதிகமானதால் தேனுவை பார்க்க போகவேயில்லை இனியன்... அவன் ரெடியாகி கொண்டிருந்தான் முதல்வரை வரவேற்க...

இங்கு 6 மணிக்கு , பூங்குடி கிராமத்தில் சிகப்பு நிற டிசைனர் புடவை கட்டி அதற்கு மேட்சாக வளையல், காதில் சிமிக்கி நகையணிந்து உதட்டில் லைட்டாக லிப்ஸ்டிக் போட்டிருந்தாள்... இனியனுக்கு பிடித்த ஜாதிமுல்லையை தன் கூந்தலில் சூடி...அம்மா நான் கிளம்பறேன் டிரைவர் ரெடியா என்று ரேனுவிடம் கேட்டாள்..

ம்ம்.. ரெடியாதான் இருக்கான்.. தன் மகனுக்கு முத்தமிட்டு திருப்ப... மோகன் அங்கே வந்தான்... அக்கா ஒன் வீக்காதான் இருக்க இன்னும் கொஞ்சம் நாள் இருந்துட்டு போக்கா மாமாவே நாளைக்கு வந்துடும் மோகன் தன் தமக்கையிடம் கெஞ்ச.

இல்லடா மோகன் மாமா ரொம்ப இளச்சு போச்சு.. சரியா சாப்பிடல போலடா..

யாரு மாமாவா... நேற்று கூட மட்டன் பிரியாணி சாப்பிட்டேன் போன்ல சொல்லுச்சு... மோகன் தன் அக்காவை பார்த்து சிரிக்க...

எப்படா போன் பண்ணாரு..

மிட் நைட் அக்கா, நீங்க தூக்கிட்டிங்க.. உனக்கு தான் போனை போட்டாரு, நீ எடுக்கல அதான் நான் ஆன்லைன்ல இருந்தேனா, வீடியோ கால்ல வந்தாரு,அப்பறம் பப்பு முகத்தையும் உன்னையும் காட்ட சொன்னாரு... சரி மாமாகிட்ட சொல்லிட்டியா நீ வரேன்னு அவர் மாநாடுல இருப்பாரே...

இல்ல மோகன் மாமாக்கு சப்ரைஸ் கொடுக்கலாம் நினைச்சு... இனியன் அன்று இரவு தன் வீட்டுக்கு நேரே வருவதாக தான் ப்ளான் செய்திருந்தான்

இதுல என்னக்கா சப்ரைஸ் சரி என்னை ரயில்வே ஸ்டேஷன்ல விட்ருக்கா.. நான் ஹாஸ்டலுக்கு போனோம்...

மணி 9.30க்கு இனியனுக்கு போன் போட்டான் மோகன்... தன் காதில் ஹேர் பாட் வைத்து பேசினான் மெதுவாக..

சொல்லுடா மோகன்..

மாமா இன்னுமா மீட்டிங் முடியல...

அக்காகிட்ட சொல்லிடுறா நான் நைட் லேட்டானலும் அங்க வந்திடுவேன்னு....

சரிதான் போங்க ,அக்கா சப்ரைஸா இன்னைக்கே அங்க வரா.. உங்களுக்கு தெரியாதா எட்டு மணிக்கே வந்திருக்குனும். சரி வைக்கிறேன் மாமா என்று போனை அனைத்தான்..

மேடையில் முதல்வர் பேச ஆரம்பித்தார்...

இனியனுக்கு தேனு நம்பரிலிருந்து போன் கால் வர... காலை அட்டன் செய்தான்... முதல்வர் போதைமருந்து கும்பலை பிடித்து அதை அடியோட ஒழித்த நம்ம கலெக்டர் இனியனை பாராட்ட ஆரம்பிக்க... செல்லில் கேட்ட செய்தியில் கண்கள் கலங்க, தன்னை மறந்து, சுற்றி நடக்கும் நிகழ்வை மறந்து தன் இதயம் நின்றுவிடும்போல் நெஞ்சில் கையை வைத்தான். பதட்டத்தில் வியர்வை அவன் சட்டை நனைக்க ஆரம்பித்தது... செல் அவன் கையை விட்டு கீழே விழ.. ஓடி வந்தான் இனியனின் பி.ஏ..

ஸார் என்னாச்சு இனியனின் கையை பிடித்து.. குனிந்து கீழே விழுந்த செல்லை எடுத்தான்.. அங்கே மறுமுனையில் ஒருவர் ஹலோ ஹலோ என்று கத்திக்கொண்டிருந்தார்..

பி.ஏ ஹலோ என்று சொல்ல... ஸார் ட்ரைவர் ஸ்பாட்லே அவுட்.. அந்த போன் உங்களுதா.. அவங்க பேமிலிக்கு சொல்லிடுங்க..

பி.ஏ இனியனை கூட்டிக்கொண்டு மேடையை விட்டு கீழே இறக்கினான்.. ஸார் பாருங்க ஸார் என்ன பிரச்சனை தெரியாம யோசிக்காதீங்க.. ஸார் என்று இனியனை உலுக்கினான்..

தன் நினைவு வந்தவன் தேனு என்று கத்தி அழ ஆரம்பித்தான்...

ஸார்.. மேடமுக்கு ஒன்னும் ஆகாது... அதற்குள் மீட்டிங் முடிந்து கலைய, வாங்க இனியனை அழைத்துக்கொண்டு காரில் ஏற்றினான்..

தன் பி.ஏ விடம் நீ பார்த்துக்கோ, நான் கிளம்புறேன் சொல்ல

சரிங்க ஸார்.. இனியன் ஸ்பீடாக ஒட்டினான் கார் ஜெட்டாக பறந்தது...

சிவாவுக்கு தகவல் தெரிவித்தான், நீ முதல்ல அந்த இடத்துக்கு போ... அதுக்குள்ள நான் வந்துடுவேன் சிவா...

வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் சொல்லாமல் சிவாவும் அந்த இடத்திற்கு சென்றான்...

கார் மரத்தில் மோதியிருக்க சுற்றி கும்பல் இருந்தது... ஆம்புலன்ஸ் வந்து ட்ரைவரை தூக்கிச் சென்றன... அதற்குள் இனியனும் வர...

மாமா என்று சிவா அவனருகில் ஓடி வந்தான்... மாமா அக்கா இங்கயில்லை..

என்னடா சொல்லுற... அவ வீட்டுக்கும் வரல அவ போன்லிருந்து தான் எனக்கு போன் வந்துடுச்சு,,,

கார் தானா போய் மரத்தில மோதில மாமா, வேண்டுமென்றே செஞ்சிருக்க மாதிரி தோனுது மாமா... காரின் அருகே சென்றார்கள், தேனு எடுத்துவந்த லக்கேஜ் இருந்தது, பக்கத்தில் அவளுடைய போன்...

சுற்றியிலிருக்கும் இடம் முழுக்க தேடுடா சிவா... சிவா ஒரு பக்கம் கிராமம் முழுக்க தேட, மறுபக்கம் தன் கண்களிலிருந்து விழும் கண்ணீரை துடைத்துக்கொண்டே தன் மனைவியை தேடினான் இனியன், அவன் இதயம் தீயில் வெந்தமாதிரி எரிந்துக்கொண்டிருந்தது....

அந்த நாள் அவன் வாழ்நாளில் வெறுத்த நாள், புரண்டு படுத்தான்... அன்று நடந்ததை நினைத்து...தேனு என்று மனதிலிருந்து தன் மயங்கும் குரலில் அழைக்க..

தூங்கிக்கொண்டிருந்த ஐலா மாமா என்று எழுந்து உட்கார்ந்துக்கொண்டாள்...

போ நீ போ..

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ..
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ..

நீ தொட்ட இடம் எல்லாம்
எரிகிறது அன்பே போ..
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும் அன்பே போ..

...என்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
அடப்பாவமே என்ன ஆச்சு தேனுக்கு
 
எனை மறந்தாய் ஏனோ
என் அன்பே....
உனை மறந்தால் நானோ
உயிர் வாழ்வேனோ
என் உயிரே.....
உன்னில் எனை தேடு
என் துடிப்பே நீ
என அறிவாய் கண்ணே....
 
Top