Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற II -05

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -05

எல்லோரும் கூடியிருக்கும் சபையில் , இனியன் வந்து அமர.. என்ன கலெக்டர் தம்பி எங்க பொண்ண புடிச்சிருக்கா... பட்டென சொல்லிட்டீங்கனா... மேற்கொண்டு ஆகற வேலையை பார்க்கனும்..

ஆமாம் தம்பி, பொண்ணு ஜாதகத்தில இந்த மாசத்திலே முடிக்கனும் இருக்கு, அப்படியில்லையனா இன்னும் மூனு வருஷம் தள்ளி போடனுமாம்... உங்க அத்தை ஓகே சொல்லிட்டாங்க.. ரகுநாத ரெட்டி சொல்லி முடிக்க..

எங்க அத்தைக்கு ஓகேன்னா எனக்கும் சம்மதம் தான் என்று ஐலாவை பார்த்து பதில் அளித்தான் இனியன்..

அப்பாடா இந்த சம்மதம் முடிச்சிடுச்சு... எனக்கு ரொம்ப சந்தோஷம் இனியனின் கையை பிடித்து கூறினார் ரெட்டி..

உங்க கல்யாணம் முடிஞ்ச அடுத்த மாதமே நம்ம ஐலா கல்யாணம் தான்.

அசோக் திடுக்கிட்டு இனியனை பார்க்க, அமைதியாக உட்கார்ந்திருந்தான்...

எங்க தங்கச்சி பையன்தான் அமெரிக்காவிலிருந்து நாளைக்கு வந்துடுவான்... ஐலாவ கல்யாணம் பண்ணி அமெரிக்காவுக்கு கூட்டிட்டு போவான்..

இவங்கதான் என் தங்கச்சி தங்கம்... ரகுநாத ரெட்டிக்கு சேலை கட்டினால் எப்படி இருப்பாரோ அதுப்போல் நல்ல உயரமான திடமான உடம்பு, அவர் அறிமுக படுத்த எங்க மச்சான் சாரங்கன்.. எங்க மில்ல இவர்தான் பார்க்கிறாரு.. தங்கத்திற்கு எதிர்பதம் மெலிந்த தேகம், அவரைவிட உயரமும் குறைவு..

கூடியிருந்த பெரியவர்கள் கலைந்து செல்ல.

இனியா மனுஷன் கொடுத்து வச்சவருடா, நல்ல சோபா கம் பெட்டு போல அவன் காதில் கிசுகிசுதான் அசோக்... சாரங்கணை பார்த்து சிரிப்பு வேறு சிரித்து வைத்தனர் இருவரும்..

மனுஷனுக்கு கோவம் தலைக்கேறியது, ஏற்கனவே மாடுபோல இந்த வீட்டுக்கு உழைக்கிறேன், இந்த வீட்டில எவனும் மதிக்க மாட்டாங்க.. இதில் இவனுங்க கலாய்க்கிறானுங்க.. ஒண்ணும் சரியில்லையே, மாப்பிள்ளையா இந்த வீட்டுக்கு வந்தானுங்க ... நம்மல மதிக்கவே மாட்டான்.. மரியாதைக்கூட தர மாட்டான்.. எப்படியாவது இந்த கல்யானத்தை நிறுத்தடனும்..

உங்க மைன்ட் வாய்ஸ் வெளிய கேட்குது, பார்த்து பேசு சாரு என்று மெதுவாக அவரிடம் பேசினான்...

மச்சான் மூக்க பாரேன் கிளி மூக்குபோல வளைஞ்சியிருக்கு... பார்த்து கொத்திட போது.. அசோக் பதிலுக்கு கலாய்க்க..

டேய் என்ன லந்தா, என் பையன் வரட்டும்... மாவீரன் டா அவன் பார்வை பார்த்தானா பயந்து யூரின் போயிடுவீங்க..யார சாருன்னு கூப்பிடுற மரியாதையா பேசு இனியனை எச்சரிக்க...

எப்படி பார்த்தாலும் உங்க மூஞ்சு டெரர் லுக் வரலையே சாரங்கன் ஸார்..

வராது வராது எங்க பையனை பார்த்தா வரும்... வகுந்துடுவான் அவனுக்கு அருவாவே தேவையில்ல...

இருவரும் எழுந்து அப்ப கிளம்பறோம் என்று விடைபெற்றனர்.. ஆனா நம்ம பப்பு ஐலாவிடமே தங்கினான்..

அன்று இரவு... ரேனு இனியனை போனில் அழைத்தார்...

என்ன இனியா கல்யாணத்திற்கு ஓகே சொல்லிட்ட போல.. ரொம்ப சந்தோஷம்டா எங்க ஒற்றை மரமா இருப்பியோ நினைச்சி எத்தனை நாள் தூங்காம இருந்திருக்கேன் தெரியுமா..

என் டார்லிங் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்... ஒன்னு சொல்லட்டா அத்தை உங்க பொண்ணு போலவே இங்க ரகுநாத ரெட்டி யோட தம்பி பொண்ணு இருக்கு..

என்னடா சொல்லுற.. எனக்கு பார்க்குனும் போல இருக்குடா இப்பவே வந்து பார்க்கட்டுமா இனியா..

வேணா அத்தை, அங்க சக்திக்கு டெலிவரி டைம்... நான் கட்டிக்க போறவளோட தங்கச்சி தான்...

அப்ப அவளை கட்டிக்க வோண்டியது தானே...

ம்ம்...மாட்டேன் சொல்லிட்டா... சரி ரெட்டிக்கிட்ட பேசிட்டு நாள் குறிச்சிட்டு சொல்லு போனை வைக்கவா..

ம்ம்... உடம்பை பார்த்துக்கோ இனியா..

இனியன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான் அசோக்...

என்னடா மச்சான் டல்லா இருக்க... என்னாச்சு தேனுகிட்ட பேசிட்டியா..

ப்ச் பேசினேன்...

என்ன ராகம் இழுக்கிற..

மச்சான்...மச்சான்... தேம்ப ஆரம்பித்தான்..

டேய் இனியா என்னடா ஆச்சு அவனருகில் உட்கார்ந்து அவன் தோளை அனைத்தான்...

தண்ணீ அடிக்கலாமாடா, இனியன் கேட்க..

நீதான் குடிக்க மாட்டீயே... இரு எடுத்துட்டு வரேன்.. இனியன் அசோக்கை முறைக்க..

எனக்காக எடுத்துட்டு வந்தேன்.. ரொம்ப குளிருது இல்ல மச்சான்.. அங்கிருக்கும் பீரோவை திறந்து பாட்டிலை எடுத்தான் அசோக்...

இருவரும் கிளாஸை எடுத்த செஸ் சொல்லி குடிக்க ஆரம்பித்தனர்...

இப்போ சொல்லு என்னாச்சு...

என்னபோய்... என்னபோய் தேம்பி ஆழஆரம்பித்தான் இனியா...

சரி சரி டேம்ம குளாஸ் பண்ணிட்டு மேட்டருக்கு வா...

எங்கடா மேட்டர் செய்றது , இரண்டு வருஷமாச்சு... தேனு..தேனுன்னு மறுபடியும் அழ..

அடத்தூ.. ரெட்டி வீட்டில என்னடா நடத்துச்சு..

அதுவா... இந்த தேனுபொண்ணுல்ல அதான்டா ஐலாவா நடிக்கிறாளே.. என்னைபார்த்து நான் வயசானவன் சொல்லிட்டா அசோக்கு...

நான் கேட்டேன் பேசாம என்னையே நீ கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன்... அதுக்கு அவ சொல்லுறா.. என்று தலையை நிமிர்த்தி சுவற்றை இருவரும் பார்க்க ப்ளாஷ்பேக் ஓடியது...

என்னது வயசான உன்னை கல்யாணம் செஞ்சிக்கிறதா.. அதுவும் ஒரு பையனுக்கு அப்பா நீ.. ஐலா சொல்ல..

அப்ப உனக்கென்ன பதினாறு வயசாகுதா பதிலுக்கு இனியன் கேட்க..

இப்பதான் காலேஜ் முடிச்சேன்..

அடிப்பாவி என்று வாய்மேல் கைவைத்தான்..

அதுவுமில்லாம நான் ஆல்ரெடி கமிட்டட் ப்ரோ... ஐலா சொன்ன மறுநொடி..

அடிங்க செருப்பால.. நான் ப்ரோவா... ஏய் உன் புருஷன்டி... என்று பாவமாக முகத்தை வைத்து கூறினான்..

என்ன செய்றது உங்களை மாதிரி நிறையபேர் ப்ரபோஸ் செய்றாங்க... கடைசியில ஃபீல் பண்ணுறாங்க.. நான் எங்கமாமா சின்னாவதான் கல்யாணம் செய்வேன்..

என்னை நினைச்சிட்டே இந்நேரம் ப்ளைட் ஏறுவாரு.. இங்க பாருங்க கலெக்டர், எங்க சின்னாவ கல்யாணம் செஞ்சி அமெரிக்காவுல செட்டில் ஆயிடுவேன்.. என்ன முறைக்கிறீங்க... நான் உங்களுக்கு செட்டாக மாட்டேன்... ஸாரி மனசில ஆசையை வளர்க்காதீங்க...

இனியா இத கேட்டு நீ அமைதியா இருந்தீயா..

ம்ம்.. என்னடா செய்றது எனக்கு வயசாச்சே மச்சான்...

ச்சீ நம்ம வயசெல்லாம் ஒரு வயசா... பேக் டூ இனியனா வாடா காலேஜில் பார்த்த அந்த இனியன்..

ஆமான்டா என்னை லவ் பண்ணுங்க மாமான்னு ஒத்த கால்ல நின்றாடா இந்த தேனு... இப்ப என்னை பார்த்து ப்ரோவாம்... அவளை கதற கதற கற்பழிக்கல..

டேய் வேற டயலாக் பேசனோம்டா.. இதுயில்ல...

கரெக்டூடா... கதற கதற அழ வச்சி... நான்தான் தேனு.. இந்த இனியனோட தேனு என் கால பிடிச்சி அழ வைக்கல என் பெயர் இனியன் கிடையாது..

செமடா... சரியான சபதம்.. தோத்துட்டா சனியன் வச்சிடுவீயா...

எரும்ம உன்ன அசோக்கை அடிக்க இனியன் கையை ஒங்கி வர...

டேய் மச்சான் உன் மயிலு வருதுடா.. பால்கனியை காட்ட ஐலா வழக்கமாக புக்கை எடுத்துக்கொண்டு பால்கனி சோபாவில் உட்கார்ந்தாள்.. அவள் உட்காரும் சோபா இவர்களை பார்த்திருப்பது போல் போட்டிருந்தன...

அசோக் என்னை பார்க்கிறாளா பாருடா..

இனியா மயிலு உன்னையே வெறிக்குது..

எழுந்து பால்கனி கைபிடியை பிடித்து நின்றான்.. ஏய் எங்க மாமனைதான் கட்டிப்பேன்.. சொல்லிட்டு என்னை ஏன்டி சைட் அடிக்கிற..

இனியா தள்ளாடிய படி கேட்க..

ச்சீ ஒரு கலெக்டர் இப்படி குடிக்கலாமா தேனு இனியனை பார்த்து திட்ட...

ஏன்... ஏஏஏன் கலெக்டரும் மனுஷன் தான்... அதுவும் உயிருள்ள மனுஷன் புரியுதா.. ரோபோ இல்ல..

உங்க கிட்ட போய் பேசினேன் பாரு ஐலா எழுந்து உள்ளே போக திரும்ப..

ஏய் நில்லுடி... நான் கொடுத்ததை திருப்பி கொடுடீ..

என்னத்த கொடுத்த கலெக்டரே..

ம்ம்.. புரியாது மாதிரி கேட்கிறா மச்சான்... அந்த பாட்ட போடு..

“நான் கொடுத்ததை திரும்பி கொடுத்தா முத்தமா கொடு, மொத்தமா...”

எங்க அம்மா சின்னவயசிலே சொல்லி வளர்த்துச்சு நீ யார்கிட்டயும் கடன் வாங்காதே... மற்றவங்களிடம் கொடுத்ததை பத்திரமா திருப்பி வாங்கிக்கோன்னு..

பொறுக்கி தனம் பண்ணிட்டு, அக்காவ பொண்ணு பார்க்க வந்துட்டு தங்கச்சி கிட்ட லிப் டூ லிப் கிஸ் அடிப்பியா...

டேய் இத சொல்லவேயில்ல அசோக் இனியனை பார்க்க...

அசோக்கை பார்த்து இனியன், இதுக்கப்பறம் புருஷன் பொண்டாட்டி பிரச்சனை நீ உள்ளே போய் தூங்கு அசோக்...

அசோக் உள்ளே தள்ளாடிக் கொண்டு செல்ல... ம்ம் அவன் போயிட்டான் வா நான் ரெடியாயிருக்கேன்.. கிஸ் மீ பேபி...

லூஸாடா நீ அறிவிருக்கா இல்லையா... இதே மாதிரி பேசினே எங்கப்பாகிட்ட சொல்லிடுவேன் ஜாக்கிரதை...

ப்ளீஸ் ப்ளீஸ்... சொல்லாத எனக்கு பயமாயிருக்கு என்று கையை கட்டிக்கொண்டு பேச.. போய் சொல்லுடி ரெட்டி என்ன செய்யறானு நானும் பார்க்கிறேன்... ஏய் நான் முதல்ல ரௌடி அதுக்கப்பறம் தான் கலெக்டரு.. கூப்பிடுடி ரெட்டிய..நானே சொல்லுறேன்.. உன் அரும பூனை கண்ணு பொண்ணு என்னை இதோ என்று உதட்டை காட்டி இங்க கடிச்சிட்டான்னு..

தலையில் கைவைத்துக் கொண்டாள் ஐலா... ஏய் என் உயிர் பப்பு எங்கடி..

மடியிலே படுத்து தூங்கிட்டான் ஸார்... இப்போ அங்க தூக்கிட்டு வந்தா பாதியிலே தூக்கம் தெளிஞ்சிடும் அழுவான்.. நாளைக்கு காலையில கூட்டிட்டு போங்க...

சட்டென்று முகமாறியது இனியனுக்கு, நீதான் என்னை விட்டு விலகிட்ட அவனை என்கிட்ட இருந்து பிரிச்சிடாதே தேனு எனக்கு உயிரே போயிடும்...

ஸார்..

போதும் என்று கையை காட்டினான்... நாளைக்கு காலையில என் பையன் என்வீட்டுல இருக்கனும் அவளுக்கு ஆர்டரை போட்டு விறு விறு என்று உள்ளே சென்று கதவை சாற்றினான்...

அந்த கரு இருட்டில் வெள்ளியாக ஜொலிக்கும் நிலவையே பார்த்து நின்றாள் ஐலா.. கண்களிலிருந்து வழியும் கண்ணீரை கூட துடைக்க மறந்து வானில் ஆட்சி செய்யும் அந்த நிலாபெண்ணையே வெறித்தாள்...

அம்மா... ஐலா ரெட்டியின் குரலை கேட்டு அவள் திரும்ப, பதறிய ரெட்டி ஏன்மா அழற தங்கம் யாராவது எதாவது சொன்னாங்களா.

இல்ல என்று தலையை ஆட்டினாள்...

இதுவும் கடந்து போகும் ஐலா நேரமாயிடுச்சு பாரு போய் தூங்கு...

....என்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
 
Top