Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆலம் விழுதாக ஆசைகள் - 7

Advertisement

sharanyaa satyanarayanan

Active member
Member
ஆலம் விழுதாக ஆசைகள் - 7

திருவிழா அன்று விடியலில் பூஞ்சோலை கிராமமே அம்மன் கோவிலில் கூடி இருக்க,பக்தர்கள் கூட்டம் அம்மனை சேவிக்க அலைமோதி கொண்டிருந்தது. அழகிய தங்க பல்லக்கில், முத்து குடை ஆட, மஞ்சள் முகத்தில் மூக்குத்தி மின்ன, பவனி வரும் அம்மனை பக்தியுடன் சேவித்தனர் அனைவரும். பல்லக்கின் அருகில் கூட்டத்தை கட்டுப்படுத்தியபடி ஊர் இளைஞர்களுடன் விஷ்வா மற்றும் ஆதி & கோவும் வர. அவர்களின் பின்னால் ஊர் பெரியவர்களுடன் விஷ்வாவின் தந்தையர்கள் பேசிக்கொண்டு வந்தனர்.

அம்மனை கோவிலில் இறக்கியதும் பெண்கள் பொங்கல் வைக்க, தங்கள் தாய்மார்களுக்கு உதவியபடி கதை அளந்து கொண்டிருந்தனர் துர்வா & கோ. அவர்கள் அருகில் பொங்கல் வைத்து கொண்டிருந்த காவேரியை கண்ட வாசுகி " வாங்க மதினி , எப்ப வந்தீக?எப்படி இருக்கீக? பொங்கல் வைக்க இடம் பாக்குறீகளா ? இங்க வாங்க நம்ம பக்கத்துல இடமிருக்கு " .
இப்படியே பேச்சும் நல விசாரிப்புமாய் பொங்கல் வைத்தனர். சற்றுநேரத்தில் விஷ்வாவுடன் ஆதி குழுவினரும், பிரியா மற்றும் கண்ணனும் சேர்ந்துகொள்ள அங்கே சிறு அமர்க்களமே ஆரம்பமானது.

ஹரியை பார்த்த சாரா அவனை மிரட்சியுடன் பார்த்து கொண்டிருந்தாள். சாந்தினி அவளிடம் " எதுக்கு இப்போ திரு திருனு பார்க்குற ".
சாரா " லே நேத்து சொன்னேனே , விசில ஒரு ... " என்று இழுத்தவள் எதிரில் இருப்பவன் லூசா என்று ஆராய தொடங்கினாள். இதை கேட்ட துர்வா " விசில புடுங்குன லூசா சொல்றியா?" இடை புகந்தவளின் வார்த்தையை அனைவரும் கேட்டுவிட்டனர் .

" மாப்ள நான் சொல்லல அந்த பொண்ணு உன்ன லூசுன்னு தான் நினச்சுருக்கும்னு " என்றான் ஆதி. புரியாமல் பார்த்த விஷ்வாவிடம் நடந்தவற்றை கூறினான் ஹரி. விஷ்வாவோ " சாந்தினியும் சரி சாராவும் சரி கொஞ்சம் பயந்த சுபாவம் " . அதை கேட்ட ஆதி விஷ்வாவை பாவமாக பார்த்து வைத்தான்.

சாராவை பார்த்த ஹரி தன் சட்டை பையிலிருந்து விசிலை சராவிடம் நீட்டி " சாரிங்க நேத்து கூட்டத்தை விளக்கி விட வேறு வலி தெரில , அதுக்கப்புறம் உங்கள தேடுனேன் , விசிலுக்கு தேங்க்ஸ் " என்றவன் கையில் இருந்த விசிலை வாங்கியவள் , ஒரு தலை அசைப்புடன் ஏற்று கொண்டாள் .

அதே நேரம் இவர்களை நோக்கி வந்த பெண்ணிடம் " ராகவி நல்லா இருக்கியா? எப்போ ஊர்ல இருந்து வந்த?" என்ற விசாலாக்ஷியிடம் " இன்னைக்கு காலைல தான் அத்தே வந்தேன், வந்ததும் இங்க தான் வாரேன் ". துர்வா " எங்களை பார்க்க வந்தியா ? இல்ல உங்க அத்தான பார்க்க வந்தியா ?" என்றவளின் கிண்டலில் முகம் சிவந்தாள் ராகவி. விஷ்வாவை ஓர கண்ணால் பார்த்தபடி சாராவிடம் " என்ன சாரா கண்டுக்கவே மாட்டேங்குற?" என்றவளுக்கு பதில் துர்வாவிடம் இருந்து வந்தது, " பாரேன் சாரா இன்னைக்குனு பார்த்து வேஷ்டி சட்டை போட்டுருக்கா போல ". அதை கேட்ட ராகவி " இப்போ உனக்கு என்ன வேணும்?". துர்வாவோ " எனக்கு ஒன்னும் வேணாம்,உனக்கு தான் விஷ்வாகிட்ட எப்படி பேசுறதுனு யோசனை " என்றவளிடம் ராகவி " அந்த கவலை உனக்கு வேணாம் நாத்தனாரே ", என்ற ராகவியிடம் " அதான நீயும் அந்த கல்லுளிமங்கனும் பிளான் போடாமையா இருப்பிங்க " என்று தன் கிண்டலை தொடர்ந்தாள் துர்வா .

இவ்வளவு ரணகலத்துலையும் சிவா துர்வவையே எதிர் பார்ப்போடு பார்த்து கொண்டிருந்தான். ' ஏன் நம்மகிட்ட பேசல? கோவமா இருக்களோ ? நேத்து நெறைய பேசிட்டேனோ?' என்று துர்வா தன்னிடம் பேசாததற்கு காரணம் தேடி கொண்டிருந்தான். யாரும் தன்னை கவனிக்கவில்லை என்ற துணிச்சலில் துர்வவையே பார்த்து கொண்டிருந்த சிவாவை பார்த்த ஆதி ' பயபுள்ள இந்த பார்வை பார்குறான் , சிக்கிட்டானோ, இவன் நம்மள மாதிரி இல்லையே ' என்று யோசித்து கொண்டிருந்தான்.

ஒருவழியாக அம்மனை சேவித்து வீடு திரும்பிய துர்வாவின் குடும்பம், சக்கரவர்த்தியின் தங்கை அன்னபூரணி வாயிலில் காத்துக்கொண்டிருப்பதை பார்த்தனர். சக்கரவர்த்தி தங்கையிடம் " என்னமா வாசல்ல நிக்குற , ஒரு போன் போட்டிருந்தா உடனே வந்திருபேனே " . " இப்போ தான் வந்தேன் அண்ணே , அதான் போன் போடல " என்றவர், நலவிசாரிப்புகளுக்கு பிறகு வந்த விஷயத்தை தொடங்கினார் . " அண்ணே ராகவிக்கு வயசு ஆகிட்டே போகுது, இந்த வருஷமே கல்யாணம் பண்ணிரலாம்னு..." என்று இழுத்தவரிடம் " அதுக்கென்னமா அடுத்த மாசமே நிச்சயம் பண்ணிரலாம்" என்ற தந்தையை இடைமறித்த விஷ்வா " எனக்கு இப்போ கல்யாணம் வேணாம், அப்படி ராகவிக்கு கல்யாணம் பண்ணியே ஆகணும்னா, நீங்க வேற மாப்பிளையை பாருங்க " என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தனர் குடும்பத்தினர்.

தொடரும்.....
 
Top