Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?5?

Advertisement

Rudhra Vikram

Member
Member
அந்த செய்தித் தாளில் தன் உருவப் படத்திற்கு கீழே "வித்தார்த்" என்ற பெயர் நேர்த்தியாக அச்சிடப்பட்டு இருந்தது.

" போதைப் பொருள் கடத்தலுக்கு உதவிய போலீஸ்
அதிகாரி-தலைமறைவு" என்று முதல் பக்கத்திலேயே அச்சிடப்பட்டு இருந்தைப் பார்த்ததும் கோபத்தில் அவன்
கண்கள் இரத்த சிவப்பை ஏறியிருக்க.... கொஞ்சம் கொஞ்சமாக அவன் விழியின் வெண்படலம் கருப்பு நிறத்தில் மாறத் தொடங்கியது.

கண்களில் இருந்து கண்ணீருக்கு பதிலாக ஏதோ கருப்பு நிறத்தில் புகை போல வெளியேற அவன் பார்வையின் வீச்சு தாங்காமல் அந்த செய்தித் தாள் கருக தொடங்கியது.

அவனின் உருவப்படம் சிறிது சிறிதாக தீயிற்கு இரையாக....
தன் மீது இருந்த கோபம் குறைந்தபாடில்லை. அதைப் பார்த்து பயந்து போன ஜாக்கி அங்கிருந்து குறைத்துக் கொண்டே கிட்சனுக்குள் ஓடியது.

பாட்டு பாடியவாறே காஃபி ட்ரேவைக் கையில் எடுத்து திரும்பியதும் ஜாக்கியைப் பார்த்து சற்று பயந்து போனவளாய் கூறினாள்.

" ஒரு நிமிஷம் பயந்துட்டேன்..
ஏன் இப்படி ஓடி வர... பேய், பிசாசா வந்திருச்சு... கம் ஆன் ஜாக்கி... "

அவள் முன்னேறிச் செல்ல ஜாக்கி மெதுவாக ஏதோ முணங்கியவாறே அவள் பின்னால் வந்தது.

ஏஞ்சலின் கண்கள் அதன் முன்னே எரியும் தீப்பிழம்பின் நிறத்தைப் பிரதிபலிக்க... கையில் இருந்த ட்ரே நழுவி கீழே விழுந்தது.

அந்த செய்தித் தாள் பாதி எரிந்த நிலையில் தீயிற்கு உணவாக அருகே இருந்த கெண்டியில் நீரைத் தேடினாள். அதில் சிறிதவளவு கூட நீரே இல்லை. பின் கீழே விரிக்கப்பட்டிருந்த அந்த கார்ப்பெட்டை எடுத்து அந்த செய்தித் தாளில் பற்றி எரிந்த தீயைத் துரிதமாக அணைத்து விட்டாள்.

அவனின் கண்கள் மீண்டும் தன்னிலை பெற உள்ளிருந்த கோபாக்கினி மட்டும் அணைந்ததாக இல்லை.

ஏஞ்சலுக்கு அப்போதே நிம்மதியாக இருந்தது. ஸ்லோ
மோசனில் திரும்பி ஒன்றும் அறியாத ஜாக்கியை முறைத்தவள், " எல்லா உன் வேலை தானா.... நெருப்புனா அவ்ளோ சாதாரணமா போச்சா.... லேசா பட்ருந்தா கூட தாங்க மாட்ட... " என அவள் ஜாக்கியை அர்ச்சனை செய்ய....

சித்துவின் கண்களுக்குள் இன்னும் அந்த காட்சி பதிந்திருந்தது. நெருப்பிற்கு நடுவில் தீக்கிரையான உடலை இவ்வாறு அணைத்திருந்தால்.... இன்று இவ்வாறு நடக்குமா.... என்று தோன்றியது.

ஏஞ்சல் அந்த செய்தித்தாளை அணைத்து விட்டு அதை ஒரு ஓரமாக எடுத்து வைத்தாள். ஆனால், அவனுள் கோபமெனும் நெருப்பு கனன்றுக் கொண்டே இருந்தது.

தப்பித்தவறியேனும் எளிதில் சட்டென்றுத் தீ பிடித்து
விடாதா.... என்று எண்ணியவன் அதிலிருந்து மீண்டு வர.... அவனையே முறைத்தபடி கைக் கட்டி நின்ற
ஏஞ்சலைத் தான் கண்டான்.

" ஏன்டா... நெருப்பு பற்றும் வரை நீயும் பாத்துக்கிட்டே தான் இருந்தியா... " என்க...

அதில் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடனைப் போல முழித்தான் அவன்.

" வந்ததுல இருந்து ஏன்டா வித்தியாசமா நடந்துக்குற... சரி... நியூஸாச்சு படிக்கலாம்னு பாத்தா.... அதுவும் ம்ஹூம்... " என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு அமர.... அவளைப் பார்த்தவாறே நின்று கொண்டே இருந்தான் அவன்.

" நிஜமாகவே நான் இவளுக்கு தெரியிறேனா... " என்று வாய் விட்டே கூறி விட...

அது ஏஞ்சலின் காதில் சரியாக விழுந்துவிட்டது போலும். அவனை ஏதோ ஏலியன் போல பார்த்து விட்டு...

" இல்ல அப்டியே மறைஞ்சு போய்ட்ட... கேக்குற கேள்விய பாரு... " என்றவளை முறைத்தான் அவன்.

" நல்லா தானே இருக்க... நீ என்ன பேயா கண்ணுக்கு தெரியிறேனாவாம்.... போட " என்று அழுத்துக் கொண்டாள் அவள்.

இறப்பதற்கு முன் எல்லாம் தெரியும் என்று சொல்வார்களே அது இது தானா என்பதைப் போல ஜாக்கி அவளை ஏறிட....
அவளின் பதிலில் உறைந்து போயிருந்தான் அவன்.

" உனக்கு நான் பேசுறது கேக்குதா... " மீண்டும் குழப்பத்துடன் அவளை நோக்க....

" ஹ்ம்ம்.... நீ பேசுரது சுமாரா ஒரு 100Hz frequencyல கேக்குது டா குட்டி பையா... " என்றவள் அவனை ஏறிட.... ஏதோ அவன் கையில் இருந்த பஞ்சு மிட்டாயைப் பிடுங்கி சாப்பிட்டு விட்டதைப் போல பார்த்தான்.

" ஒரு வேளை இவன் லூசாகிட்டானோ... " என்றவளை இன்னமும் நம்பாமல் பார்த்தான் அவன்...

" அடப்போடா என்னமோ பண்ணு போ.... உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு இருந்தேன்... " என்றவளை ஆராயும் பார்வை பார்த்தான்.

அவன் எதைப் பற்றி கேட்க கூடாது என்று நினைக்கிறானோ அதைப் பற்றி தான் அவள் கேட்க போகிறாள் என்று தெரிந்ததாலோ என்னவோ முகத்தைத் திருப்பிக் கொண்டு பின் வாசலின் கதவருகில் சென்று நின்று கொண்டான்.

" நீ ஏன் இப்டி பண்றனு தெரியல... நானும் பாக்றேன்... முழுசா மூனு மாசமாச்சு உன்ன பாத்து... ஹோம்க்கு போய் விட்டுட்டா அவ்ளோ தான் பாக்க கூட வரமாட்டீங்க... எவ்ளோ அழுதேன் தெரியுமா... அதெல்லாம் சொன்னா கஷ்டப்படுவீங்கனு தான் சிரிச்சுப் பேசுறேன்... நீ என்னனா... பேசவே மாட்ற... " என தேம்பித் தேம்பி அழுகையுடன் கூறினாள் ஏஞ்சல்.

அதைப் பார்த்ததும் தன்னை அறியாமல் அவள் கண்ணீரைத் துடைக்க கை உயர்த்தியவன் அந்த முயற்சியில் இருந்து பின்வாங்கினான்.

" ஹாஹாஹா... பயந்துட்ட தானே... எப்டி என் பர்ஃபாமன்ஸ்... ரியலிஸ்டிக்கா
இருந்துச்சா.... " என்று முப்பத்திரண்டு பற்களைக் காட்டி கூறினாள் அவள். சிரிப்பதா முறைப்பதா என்ற குழப்பத்தில் இருந்தவன் அவள் கூறியதில் சட்டெனத் திரும்பினான்.

" போடா... நீ வர வர அந்த வித்தார்த் மாதிரியே ஆகிட்டு இருக்க... " என்றதும் சட்டென நாடி நரம்புகள் புடைக்க அந்த வீடே அதிருமளவு கத்தினான்.

" அவன பத்தி பேசாத ஏஞ்சல்... அது தான் உனக்கு நல்லது.... " அவன் உண்மையிலேயே கோபமாக கூற.... ஏதோ விளையாட்டுக்கு கூறுகிறான் என்று நினைத்தவள் சிரித்து விட்டு கீழே சிதறிக் கிடந்தவற்றை எல்லாம் சுத்தம் செய்தாள்.

ஜாக்கி அந்த செய்தித் தாளின் அருகே சென்று அவனின் அந்த புகைப்படத்தையும் அவனையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது.

" டேய்ய்ய்... இப்போ அவன் மேல என்ன கோபம்... இன்னொரு தடவை விளையாட்டுக்குக் கூட அப்டி சொல்லாத... நானே அவன பத்தி ரொம்ப நாளா எதுவுமே தெரியலேனு இருக்கேன்... " என்றவள் சோகத்தை தனக்குள் மறைத்து விட்டு அவனைப் பார்த்தாள்.

அவனோ அவள் கண்களைப் பார்க்க மறுத்த தன் மனசாட்சியை குற்ற உணர்ச்சியின் பிடியில் இருந்து விடுவிக்க முயன்று தன் மீது தானே பழிப் போட்டுக்கொள்ளும் மனநிலைக்கே வந்து விட்டான்..

" டேய்ய்ய்... வந்ததுல இருந்து நீ சரி இல்ல... இதுக்கு மேல சரிப்பட்டு வராது... " என்று அருகில் சென்றவள் அவன் கையை பிடித்து இழுக்க... இதயம் உறைந்து போகும் அளவு அதிர்ச்சி அடைந்தவளாக நின்ற இடத்தில் சிலையானாள்.

" சி... சி... சித்து.... " என தன் கண்ணை தன்னாலே நம்ப முடியாத ஒரு நிகழ்வு நடந்ததை மீண்டும் யோசிக்க கூட முடியாமல் இருந்தாள்.

பேச முடியாமல் உதடுகள் நடுங்க... அவனைப் பார்த்தாள்...

தரையில் கிடந்த அந்த செய்தித்தாளைப் பார்க்க பார்க்க எதனாலோ சினத்தில் சிவந்த கண்களை அதிலிருந்து விலக்க முடியவில்லை.

" இ... இப்போ... உன் கைய நா... நான்... " என வார்த்தை வராமல் தந்தியடிக்க...

" ஆமா... நான் இனி ஒன்னும் இல்ல ஏஞ்சல்... என் உயிர் என்கிட்ட இல்ல... " என்க நிகழ்ந்தது கனவாக இருக்க வேண்டும் என்று எல்லா கடவுளின் பெயரையும் உச்சரித்தவளின் உதடுகள் இன்னமும் பாதி நடுக்கத்திலேயே இருந்தன.

" இப்டி சினிமா டயலாக்லா பேசாத டா... எ... எ... எனக்கு பயமா இருக்கு... நீ... நீ... "

முன்பைப் போலவே அவனைத் தொட முடியாமல் அவன் கைக்குள் ஊடுருவிச் சென்ற தன் கரத்தால் சட்டென வாயைப் பொத்தி கத்தினாள்... கதறினாள்...

ஆனால், உண்மை அதனால் மாறிவிடுமா... என்ன...

" நான் வெறும் soul தான் ஏஞ்சல்... " அவள் கண்களை நேராக பார்த்து கூற முற்றிலும் உடைந்தவளாக சரிந்து விழுந்தாள்...

முகத்தை மூடிக் கொண்டு அவள் தேம்பி தேம்பி அழ... என்ன செய்வதென தெரியாமல் அவள் முன்னே அமர்ந்தான் அவன்...

விழி இரண்டும் கண்ணீரில் நிறைந்திருக்க அங்கே இடம் இல்லாமல் அவள் கன்னத்தைத் தாண்டி உருண்டோடியது.

" கு... குட்டி ப... பையா... நீ... நீ.... இ...இறந்துட்டியா..... "

அழுகைக்கு இடையில் தழுதழுத்த குரலில் கூறியவளுக்கு என்ன சொல்லி சமாதானம் செய்வது என தெரியவில்லை.

" ஏஞ்சல்... உண்மைய யாராலையும் மாத்த முடியாது.
நீ.. இத நம்பி தான் ஆகனும்"
பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான் அவன்.

கண்ணீர் வறண்டு போகும் அளவு அழுது தீர்த்தவள் மெதுவாக நிமிர்ந்து பார்த்தாள். அழுது சிவந்திருந்த கண்களில் மேலும் கண்ணீரை பார்க்க கூடாதென முடிவு செய்தான்.

மெல்ல தன் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள் "ஏன் இப்டி நடக்க வேண்டும்...??? தான் விரும்பும்
நபர்கள் எல்லாம் ஏன் என்னை விட்டு பிரிய வேண்டும்...??? " கேள்விகள் மட்டும் அடுக்கடுக்காய் மூளையில் பெருக்கெடுக்க... அவனைக் கண்டதும் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க தோன்றியது.

" எ... எப்படி ? " வரண்டு போன விழிகளில் கண்ணீரோடு கேட்க....

அவளை எதிர்க்கொள்ளும் திறனின்றி திரும்பி நின்றவன்....

" வித்தார்த்தால தான்... " என்று சுரத்தே இல்லாமல் உடைந்து போன குரலில் கூறினான்.

அழுது கொண்டிருந்தவளுக்கு அவன் பதிலை உள்வாங்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.... முடிச்சிட்ட புருவத்துடன் அவனை ஏறிட்டவள்....

" எ... எ... என்ன... சொன்ன... " அவன் கூறியதை நம்பாமல் மறுபடியும் வினவினாள்.
திரும்பி அவள் கண்களை நேராகப் பார்த்தவன்... அந்த இடமே அதிரும் படி கத்தினான்....

"நான் எப்டி செத்தேனனு கேட்டில... நீ விரும்புனல அந்த
வித்தார்த்தால தான்... அவன பத்தி இன்னொரு தடவை என்கிட்ட பேசாத... அவன் எவ்ளோ மோசமானவன்னு எனக்கு தான் தெரியும்... தயவுசெய்து அவன மறந்திரு... அது தான் உனக்கு நல்லது.... "

அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் இதயம் சுக்குநூறாய் நொறுங்க..
நின்றிருந்தவள் அந்த அதிர்ச்சி தாங்காது அங்கேயே சரிந்தாள்...

ஜாக்கி ஓடி வந்து அவள் மடியில் படுத்து கொள்ள... அதை அணைத்தபடி அமர்ந்திருந்தவள்... கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெல்ல எழுந்தாள்.

" நீ... நீ.. என்ன சொன்னாலும் நம்பிருப்பேன் சி... சித்து... எப்டி என் வித்துவ பத்தி உன்னால இப்டி சொல்ல முடியிது... அவன பத்தி பேச நீ யாரு டா..."
ஆவேசத்தில் கூறியவள் அத்தோடு விடாமல்...

" என் விதுவ பத்தி பேச நீ யாரு முதல்ல..." என்க அதில் கோபம் தலைக்கேற அவளைச் சுவரோடு சுவராக தள்ளி நிறுத்தினான்... ஜாக்கி அவனைப் பார்த்து தொடர்ச்சியாக குரைக்கத் தொடங்கியது.

சுவரில் இருந்து திடீரென இரு கரங்கள் அவள் கழுத்தை நெறித்துப் பிடிக்க...

" உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா... நீ தேவை இல்லாம அவன நினைச்சிட்டு இருக்க... அவன் ரொம்ப மோசமானவன்... "

தொண்டை கிழிய அவன் கத்த அந்த வீட்டில் இருந்த மின்விளக்குகள் தூள் தூளாய்
சிதறின.... காற்று பலமாக வீச துவங்க... ஏற்கனவே மூச்சு விட முடியாமல் திணறியவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கடினப்பட்டு பேசினாள்...

" தயவுசெய்து இங்கிருந்து போய்ரு... உன்ன நான் பாக்கவே விரும்பல.... I don't want to see you again... நீ சித்துவே இல்ல.... " என்றவள் அப்படியே மயங்கி சரிந்தாள்...
 
மிகவும் அருமையான பதிவு,
ருத்ரா விக்ரம் டியர்

அச்சோ
என்னப்பா இது பேய்க் கதையா?
ரொம்பவே பயமாயிருக்கே
 
Last edited:
Top