
கதைகளம் மனதை மென்மையாக வருடி சென்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது
.
நண்பர்களாக அறிமுகம் ஆகிய அன்பு நெஞ்சங்கள் உறவுகளை வளர்த்து தூய்மையான நட்பின் இலக்கணமாய் அமைந்து அவர்களின் பிள்ளைகளையும் அந்த உறவில் என்றும் நிலைக்கச் செய்து பிள்ளைகள் வழியாக நெருங்கிய உறவை ஏற்படுத்தி பாசக்கடலில் இன்புற்று வாழ்வது பார்க்கவே ரசனையாக உள்ளது




.













அரவிந்த்கிருஷ்ணா
அபிநயா
அறியா வயதில் பிரிந்து தவித்து திசைக்கு ஒருவராய் பிரிந்து வாழ்ந்தாலும் இரு உங்களின் ஆள் மனதிலும் ஒருவர் மீதான மற்றொருவரின் அன்பு விதையாய் விழுந்து விருட்சமாய் வளர்ந்து தக்க தருணத்தில் வெளிப்பட்டு வசந்தகால மாலைகளை சூடி திருமண வாழ்வை செம்மையாக வாழ்வது மிக அழகு.
ஒருவரை ஒருவர் பாராமலே உயிர் காதலை சுமந்து காத்திருந்து கரை சேர்ந்து கரைகாணா காதலை வெளிப்படுத்தி இருவரும் எந்த ஓரு விடயத்திலும் உற்ற துணையாக இருந்து நல்வழி படுத்தி சோதனை நிறைந்த தொழிலை சாதனை படைத்து வாழ்வது அருமை



.
என்றும் வாழ்க வளமுடன் இரு சுட்டி தேவதைகளின் கலாட்டாக்களுடன் 



















கணேஷன் -பிரியா :பிள்ளைகள் மனம் போல அவர்களை வழிநடத்தி அவர்களின் வாழ்க்கையை அழகுப்படுத்தி எந்த நிலையிலும் உறுதுணையாக இருந்து அரவணைக்கும் அன்பு தம்பதிகள்




.
அச்சுதன் -பிரமிளா

:
குடும்ப வளர்ச்சி தொழில் வளர்ச்சிக்காக நாடு கடந்து தொழிலில் முன்னேற்றம் அடைந்த காலகட்டத்தில் பிள்ளையின் மனது புரிந்தாலும் வளர்ச்சிப் பாதை வழியே ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்ததன் விளைவு ஒற்றை மகனின் மனதில் ஏக்கத்தை உண்டாக்கி விட்டது. இருப்பினும் அவனது மனம் போல செயல் போல அவன் விரும்பிய வாழ்வை அமைத்துக் கொடுத்து நிறைவை கொடுத்தனர்




.
பவித்ரா - கோகுலன் 


சிவா -விஷ்ணு



தீக்சனா -தீக்சிதா




.
@Padma Subramanian தாங்கள் முதல் கதையை விட இன்னும் எழுத்தில் கவனம் செலுத்தி சிறந்த படைப்புகளை உருவாக்க என்றும் என் வாழ்த்துக்கள்




.
Last edited:
