Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 96

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அவர்கள் தங்களது ஊருக்கு வரும் தினத்தை முன்னரே அறிந்து கொண்ட சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும் அந்த நால்வருக்கும் நல்லவிதமான வரவேற்பைக் கொடுக்க விரும்பி, அவர்களைத் தங்களுடைய இல்லத்திலேயே தங்க வைக்க எண்ணவும்,

அதை அறிந்த கனகரூபிணியோ,”வேணாம் சம்பந்தி. பொண்ணுக்குப் பூ வச்சிட்டாலே, அவளும், மாப்பிள்ளையும் நிச்சயம், கல்யாணம் வரைக்கும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனால், அந்த வழக்கம் எல்லாம் வேண்டாம். தங்க வைக்கிறதை மட்டும் அவாய்ட் பண்ணிடலாமே?” என்று சரியான அறிவுரையை வழங்கினார்.

“பேசாமல் எங்க வீட்டில் தங்க வச்சிடலாமா?” என்று தன் கணவனிடம் வினவினாள் மஹாபத்ரா.

“அது சரியாக இருக்காது ம்மா. அவங்க நம்மப் பக்கத்திலேயே இருக்கனும். சோ, கெஸ்ட் ஹவுஸில் தங்க வைக்கலாம்” என்று அவளிடமும், தந்தை மற்றும் தங்கையிடமும் உரைத்தான் காஷ்மீரன்.

“சரிண்ணா. உங்களோட முடிவு எப்பவும் சரியாகத் தான் இருக்கும்” என்று அதற்கு ஒப்புக் கொண்டாள் ருத்ராக்ஷி.

“எல்லாம் ஓகே. நாம இன்னும் ஷாப்பிங் போகவே இல்லையே?” என்று அவளிடம் கேட்டாள் மஹாபத்ரா.

“ஷாப்பிங் ஆ?” என்று அண்ணனும், தங்கையும் அவளைப் பார்த்துக் குழம்பினார்கள்.

“ஆமாம். உன்னோட பூ வைக்கிற ஃபங்க்ஷனுக்கு ஏதாவது வாங்க வேண்டாமா?” என்றவளிடம்,

“எங்கிட்டே எல்லாமே இருக்கே அண்ணி” எனப் பதிலளித்தாள் ருத்ராக்ஷி.

“அப்படி எல்லாம் இருந்தாலும் பரவாயில்லை. இங்கே வரப் போகிறவங்களுக்கு எதுவும் கிஃப்ட் கொடுக்கனுமா? இல்லையா?” என்று அவர்களிடம் வினவினாள் மஹாபத்ரா.

“ம்ஹ்ம். அந்த விஷயத்தை நான் மறந்தே போயிட்டேன் அண்ணி” என்றவளோ,

“அதுக்குத் தான் உங்களை மாதிரி ஒரு ஆள் வேணும்ங்கிறது!” என அவளைப் பாராட்டிப் பேசினாள் ருத்ராக்ஷி.

“ஹிஹி! என்னைப் புகழ்றதே உங்க மூனு பேருக்கும் வேலையாகப் போச்சு” என்று வெட்கத்துடன் கூறினாள் மஹாபத்ரா.

“உண்மையிலேயே நீ தான் இப்படியான யோசனைகளைக் கொடுக்கிற ம்மா” என்று மருமகளிடம் தெரிவித்து விட்டு,

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வந்துருங்க” என்று அவ்விருவரிடமும் சொல்லி விட்டார் சந்திரதேவ்.

அவர்களும் ஒரு ஓய்வு நாளில் பரிசுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள்.

“பூ வைக்கிற அன்னைக்குக் கட்டிக்கிறதுக்குச் சேலையை செலக்ட் செஞ்சுட்டியா?” என்று அவளிடம் கேட்டாள் மஹாபத்ரா.

“எஸ் அண்ணி. எதுக்கும் அதை நீங்க ஒரு தடவை பார்த்திருங்க” என்று அவளுக்கு அந்தப் புடவையைக் காண்பித்தாள் ருத்ராக்ஷி.

“இந்தக் கலர் உனக்குச் செம்மயா இருக்கும்” என்று சொன்னவளோ,

அந்தச் சேலையின் பிளவுஸையும் ஆராய்ந்து பார்த்து விட்டுத் திருப்தி அடைந்து கொண்டு,

“எப்படியும் தங்க நகை தானே போடப் போற? சோ, இதுக்கு மேட்ச் ஆக ஜூவல்ஸ் பார்க்கிற வேலை மிச்சம்” என்று கூறி விட்டு, அந்த நகைகளையும் சரிபார்த்து விட்டாள் மஹாபத்ரா.

பெண் பார்க்கும் படலம் நடைபெறும் நாளுக்கு முன்தினம் மதியமே வண்டி அனுப்பி விடுவதாக கூறி இருந்ததால், அன்றைய தினம் காலையிலேயே சீக்கிரமாக எழுந்து கிளம்பி விட்டனர் கவிபாரதி, ஸ்வரூபன் மற்றும் மிருதுளா, வித்யாதரன்.

தங்களது வீட்டின் அருகில் வண்டியை நிறுத்தாமல், ஊருக்குச் சற்று தள்ளி நிறுத்துமாறு அவர்கள் கேட்டுக் கொண்டதால், அதன்படியே செய்து விட்டிருந்தார் அந்த வண்டியின் ஓட்டுநர்.

நால்வரும் இணைந்து நடந்து வந்து கொண்டிருக்கும் பொழுது,”யாரும் பார்த்துடலையே?” என்று ஒருவரையொருவர் விசாரித்தனர்.

“ஊஹூம். யாருக்கும் தெரியாமல் எப்படியோ வந்தாச்சு” என்று கூறிக் கொண்டார்கள்.

“அப்போ சரி” எனக் கூறியவர்களைப் பார்த்து,”வாங்க ம்மா. வணக்கம் ங்க ஐயா” என்று வணக்கம் வைத்தார் அந்த ஓட்டுநர்.

“வணக்கம் ங்க” என்றவாறு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டனர் அந்த நால்வரும்.

தாங்கள் வண்டி ஏறி விட்டதாக ருத்ராக்ஷிக்குக் குறுந்தகவல் அனுப்பி வைத்தான் ஸ்வரூபன்.

இப்போது கிளம்பிச் சென்றால் தான், மாலை அல்லது இரவு நேரத்தில் அங்கே போய்ச் சேர முடியும் என்று இந்த நேரத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

“அவங்க வந்ததும், நாங்கப் போய் ரிசீவ் பண்றோம். நீயும், அப்பாவும் வர வேணாம்” என்று தன் தங்கைக்கு அறிவுறுத்தினான் காஷ்மீரன்.

“நான் வரலைன்னாலும் பரவாயில்லை ண்ணா. அப்பாவைக் கூட்டிட்டுப் போங்க. யாராவது பெரியவங்கப் போய் அவங்களை வரவேற்கனும்ல?” என்று அவனிடம் சொல்லிப் புரிய வைத்தாள் ருத்ராக்ஷி.

“ஓகேடா” என்று அதற்கு ஒப்புதல் அளித்தான் அவளது தமையன்.

“நீங்களும், அப்பாவும் நாளைக்கு இங்கே கரெக்ட் டைமுக்கு வந்தால் போதும். சீக்கிரமாகவே வரனும்னு அவசியம் இல்லை. நாங்களே எல்லா வேலையையும் செஞ்சு முடிச்சிட்றோம்” என்று தன் தாயிடம் தெரிவித்தாள் மஹாபத்ரா.

“சரிடி. நீ மெசேஜ் போட்டு விட்ரு” என்று அவளிடம் சொல்லி விட்டார் கனகரூபிணி.

இவ்வாறாக, கவிபாரதி, ஸ்வரூபன் மற்றும் மிருதுளா, வித்யாதரன் இவர்கள் நால்வரும் அந்த ஊரை அடைந்து விட்டதும், ருத்ராக்ஷிக்கு அழைத்து,

“நாங்க எங்கே தங்கனும் மா?” என்று அவளிடம் வினவினார் மிருதுளா.

“அண்ணாவோட கல்யாணத்துக்கு வந்தப்போ நீங்க தங்கி இருந்தீங்களே? அங்கே தான்” என்று அவரிடம் கூறினாள் ருத்ராக்ஷி.

“ஓஹோ சரிம்மா” என்று கூறி அழைப்பைத் துண்டித்ததும்,

அவர்களைச் சந்திரதேவ்வின் விருந்தினர் இல்லத்திற்கு அழைத்துப் போய் விட்டு விட்டுக் காரையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார் அதன் ஓட்டுநர்.

அவர்கள் வந்த செய்தியை அறிந்ததும், சந்திரதேவ், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும் அங்கே சென்றனர்.

“டிராவல் நல்லபடியாக இருந்ததா?” எனக் கேட்டு, அவர்களை வரவேற்கவும் செய்து விட்டு,”ருத்ராக்ஷி வரலையேன்னு தப்பா எடுத்துக்காதீங்க” என்று மன்னிப்புக் கோரினர் மூவரும்.

“ஐயோ! பூ வைக்கப் போறப் பொண்ணை இப்படி வெளியே கூட்டிட்டு வரக் கூடாது சம்பந்தி” என்று கவிபாரதியும் அவர்கள் கூற வருவதைப் புரிந்து கொண்டார்.

“நன்றி ம்மா” என்று உளமார கூறினார் சந்திரதேவ்.

“நீங்க சாப்பிட்டுத் தூங்குங்க. வேறெதாவது வேணும்னா இங்கேயுள்ள ஆளுங்க கிட்டே தயங்காமல் கேளுங்க” என்றான் காஷ்மீரன்.

“சரிங்க” என்று கூறி விட்டார்கள் நால்வரும்.

கவிபாரதி,“அதெல்லாம் பாத்துக்கலாம் ங்க”

“நாளைக்குக் காலையில் அங்கே கொண்டு வர்றதுக்குப் பூ, பழம் வாங்கனும். அதுக்கு மட்டும் கடைத்தெருவைக் காட்டச் சொல்லுங்க” என அவர்களிடம் கேட்டுக் கொண்டார் மிருதுளா.

“உங்களுக்குத் தேவையானதை டிரைவர் கிட்டே சொல்லி விடுங்க. அவர் வாங்கிட்டு வருவார்” என்றாள் மஹாபத்ரா.

“சரி. ருத்ராக்ஷி அங்கே தனியாக இருப்பா. நாங்கப் போயிட்டு வர்றோம்” என்று விடைபெற்றுக் கிளம்பினர்.

தங்களது முதலாளியின் விருந்தாளிகள் எனும் போதே, காஷ்மீரனின் திருமணத்திற்கு வந்திருந்த இவர்களை நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.

இப்போதோ, அவர்களது மாப்பிள்ளை மற்றும் சம்பந்தி ஆகப் போகிறவர்களைக் கையில் தாங்காத குறையாக பார்த்துக் கொண்டனர் அந்த வீட்டிலிருந்த வேலையாட்கள்.

இரவு நேரம் வந்ததும், ருத்ராக்ஷியிடம் குறுஞ்செய்தியில் உரையாடத் தொடங்கியவனோ,

‘ரெண்டு பேரும் ரொம்ப பக்கத்துல தான் இருக்கோம். ஆனால் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கக் கூட முடியலை’ என அவளிடம் தன் மனக் கவலையைப் பகிர்ந்து கொண்டான் ஸ்வரூபன்.

‘ஹ்ம்! நாம தான் நாளைக்கே மீட் பண்ணப் போறோமே ங்க’ என்று கூறி அவனைத் தேற்றினாள் ருத்ராக்ஷி.

‘ஆமாம். உங்களோட ரூமை எனக்குச் சுத்திக் காமிப்பீங்களா?’ என்று அவளிடம் வினவியவனிடம்,

‘உங்க எல்லாருக்கும் கண்டிப்பாக சுத்திக் காட்டுறேன் ங்க’ என்றாள் பெண்ணவள்.

அதன் பிறகு, அனைவரும் உறங்கி எழுந்த போது அதிகாலை ஆகியிருக்க,

“நான் தேவையானப் பொருட்களுக்கான லிஸ்ட்டைக் கொடுத்து விட்டுட்டேன் ம்மா. நீங்கப் பதறாமல் கிளம்புங்க” என்று கவிபாரதியிடம் அறிவித்தார் மிருதுளா.

அதே போலவே, அம்மூவரும் கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில், இங்கே, தானும் விரைவாகவே எழுந்து, தன் நாத்தனாரைத் தயார்ப்படுத்தும் வேலையில் இறங்கி விட்டாள் மஹாபத்ரா.

அவளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டுக் காஷ்மீரன் மற்றும் சந்திரதேவ்வும் தயாராகத் தொடங்கினர்.

இப்படியிருக்கும் போது, அங்கே தங்கள் வீட்டிலோ, கனகரூபிணியும், பிரியரஞ்சனும், தங்கள் பங்கிற்கு ஒரு பரிசை வாங்கிக் கொண்டு காத்திருந்தார்கள்.

வெண்மை மற்றும் சிவப்பு வர்ணங்கள் சேர்ந்து அள்ளித் தெளித்திருந்த அந்தச் சேலையில் எழிலாகத் தெரிந்தாள் ருத்ராக்ஷி.

அதற்கேற்ற நகைகளையும் பாதுகாப்புப் பெட்டகத்தில் இருந்து எடுத்து வந்து அவளுக்குப் போட்டு விட்டு,

“கியூட் ம்மா” என இவளைக் கொஞ்சவும் செய்தாள் மஹாபத்ரா.

அவளிடம் எந்த வித தகவலும் கேட்கவும், கூறவும் செய்யாமல், அதே நிறத்தில் தானும் உடையணிந்து இருந்தான் ஸ்வரூபன்.

இதை மட்டும் இருவரும் அறிந்து கொண்டால் தங்களுடைய மனப்பொருத்தத்தை எண்ணி நிச்சயம் மகிழ்ந்து போயிருப்பர்.

அதற்கென்ன? இன்னும் சில நிமிடங்களில் அது தானே நிகழப் போகிறது!

தாங்கள் கேட்டப் பொருட்கள் யாவும் வாங்கி வந்து ஒப்படைக்கப்பட்டு விட்டதும், அனைவரும் தயாராகி நல்ல நேரம் வரக் காத்துக் கொண்டு இருந்தனர்.

- தொடரும்
 
அப்பா போதும் பா மஹாவ ரொம்ப புகழாதீங்க பா பொண்ணு வெட்கப்படுறாயில்ல.😍😍😍😍

அவளோட கடமையை அவ கவனமாக,சரியா செய்யனும்னு நினைச்சி எல்லாம் எடுத்துக்கட்டி செய்யறா.

பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரே மாதிரி outfit aah, அவங்க சந்திப்புக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்.😍😍😍😍😍😍
 
அப்பா போதும் பா மஹாவ ரொம்ப புகழாதீங்க பா பொண்ணு வெட்கப்படுறாயில்ல.😍😍😍😍

அவளோட கடமையை அவ கவனமாக,சரியா செய்யனும்னு நினைச்சி எல்லாம் எடுத்துக்கட்டி செய்யறா.

பெண்ணும் மாப்பிள்ளையும் ஒரே மாதிரி outfit aah, அவங்க சந்திப்புக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன்.😍😍😍😍😍😍
சந்திப்பு நிகழ்ந்து விட்டது சிஸ். தங்களது மேலான கருத்திற்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி ❤️
 
Top