Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 91

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அவர்கள் அனைவரும் அந்த வீட்டிற்குச் சென்றதும்,”முதல்ல நீ உள்ளே போ ம்மா” என்று தன் நாத்தனாரிடம் சங்கோஜத்துடன் உரைத்தாள் மஹாபத்ரா.

அதைப் புரிந்து கொண்ட ருத்ராக்ஷியோ,”சரிங்க அண்ணி” என்று அனைவருக்கும் முதலாகத் தானே உள்ளே போனாள்.

அவளைப் பார்த்ததுமே,”அடடே! சொன்னபடியே வந்துட்டீங்களே ம்மா” என்றவர்களோ,

அவளுக்குப் பின்னால் வந்த மற்றவர்களைக் கண்டார்கள்.

அவர்களுடன் மிருதுளாவும் வந்திருப்பதைக் கவனித்து விட்டுத் தங்களது வாயைக் கொஞ்சம் மூடியபடியே வைத்துக் கொண்டனர்.

அவர்களைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துக் கொண்டார் மிருதுளா.

“இவர் தான் என்னோட அப்பா மிஸ்டர். சந்திரதேவ்!” எனத் தன்னுடைய தந்தையை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள் ருத்ராக்ஷி.

“எல்லாருக்கும் வணக்கம் மா” என்று இரண்டு கரங்களையும் கூப்பி மரியாதை நிமித்தமாக அவர்களுக்கு வணக்கம் சொன்னார் சந்திரதேவ்.

“வணக்கம் சார்” என இவர்களும் கோரஸ் பாட,

“இவர் என்னோட அண்ணன் காஷ்மீரன், இவங்க என்னோட அண்ணி மஹாபத்ரா. இங்கேயிருக்கிற ஒரு சில பேர் இவங்களோட கல்யாணத்துக்கு வந்து இருக்கீங்களே! உங்களுக்கு இவங்களோட அறிமுகம் தேவையில்லைன்னு நினைக்கிறேன்” என்று அவர்களிடம் தெரிவித்தாள் ருத்ராக்ஷி.

“ஆமாம் மா” என்று அவர்கள் மூவரையும் முதலிலேயே பார்த்தவர்கள் கூறவும்,

மற்றவர்களோ அவர்களை வியந்து பார்த்தனர்.

சந்திரதேவ்,”என் பொண்ணு உங்களுக்கு நல்லா கிளாஸ் எடுக்கிறாளா?” என்று தன் மகளின் பாடம் எடுக்கும் முறையைப் பற்றி அவர்களிடம் விசாரித்தார்.

“நல்லா தெளிவாகச் சொல்லிக் கொடுக்கிறாங்க சார்! நாங்க நிறைய கத்துக்கிறோம்!” என்று ருத்ராக்ஷியைப் பாராட்டிப் பேசினார்கள்.

“ஓஹ் சூப்பர்!” எனத் தங்களது வீட்டுப் பெண்ணை நினைத்துப் பெருமிதம் அடைந்தார்கள் சந்திரதேவ், காஷ்மீர் மற்றும் மஹாபத்ரா.

“உண்மையிலேயே உங்கப் பொண்ணை நல்லவிதமாக வளர்த்து இருக்கீங்க சார்!” என்று அவரையும் வாழ்த்தினர்.

அதில், அந்த மூவருடைய முகங்களும் விகசித்துப் பிரகாசித்தது.

“ரொம்ப நன்றிங்க” என்று அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார் சந்திரதேவ்.

“அப்பறம் சார்! உங்கப் பொண்ணைக் கையோட உங்க ஊருக்குக் கூட்டிட்டுப் போகப் போறீங்களா?” என்று அவரிடம் குறுக்குறுப்புடன் வினவவும்,

அதைக் கேட்ட மிருதுளா, கவிபாரதி மற்றும் ஸ்வரூபனோ அவர்களை மலைப்புடன் பார்த்தார்கள். ஏனெனில், ருத்ராக்ஷி ஊருக்குச் செல்லப் போவதை யாரும் அவர்களிடம் உரைக்காமலேயே இவ்வளவு துல்லியமாகத் தெரிந்து கொண்டது மட்டுமின்றி, அதை அவளது தந்தையிடமே துணிந்து கேட்டுக் கொண்டு இருக்கிறார்களே என்று ஆச்சரியமாகத் தான் இருந்தது.

ஆனாலும்,”ஆமாம் ங்க. அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்கப் போறோம். அதுக்காகத் தான், எங்க கூட கூப்பிட்டுப் போகப் போறோம். அந்தக் கல்யாணத்துக்கு உங்க எல்லாரையும் கண்டிப்பாக கூப்பிடுவோம்” என அவர்களிடம் அறிவித்தார் சந்திரதேவ்.

அவரது இந்த அறிவிப்பைக் கேட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்து விட்டிருந்தனர்.

“அப்படியா சார்? ருத்ராக்ஷிக்கு வரப் போகிற மாப்பிள்ளையை உங்க ஊரிலிருந்து பார்க்கப் போறீங்களா? இல்ல, இந்த ஊரில் தேடுவீங்களா?” என்று அவரிடம் கேட்டனர் ஒரு சிலப் பெண்மணிகள்.

“அதையெல்லாம் இப்போவே எப்படி சொல்ல முடியும் மா? நாங்க திரும்ப இந்த ஊருக்குள்ளே வரும் போது உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்றோம்” என்று கூறி விட்டார் சந்திரதேவ்.

“ஓஹ்! சரிங்க சார். நீங்க எல்லாரும் இங்கே எத்தனை நாளைக்குத் தங்குவீங்க?” என்றார்கள்.

“இதோ இப்போ கொஞ்ச நேரத்திலேயே கிளம்பிடுவோம் மா” என்றுரைத்தார் ருத்ராக்ஷியின் தந்தை.

“ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்புறீங்க சார்?” என்று அவரிடம் வினவினர்.

“அங்கே போட்டது போட்டபடியே இருக்கு ம்மா. அதான், அப்போ சரி. நாங்கப் போயிட்டு வர்றோம்” என அவர்களிடம் சொல்லியவாறே, தன்னுடன் இருந்த மற்றவர்களுக்குக் கண்ணைக் காட்டி வெளியே வருமாறு அழைத்தார் சந்திரதேவ்.

அதைக் கப்பென்று பிடித்துக் கொண்டவர்களோ,”சரிங்க. நாங்க கிளம்புறோம்” என்று அவரைப் பின் தொடர்ந்து வாசலுக்குச் சென்று விட்டார்கள்.

“அப்பப்பா! எவ்வளவு கேள்வி கேட்கிறாங்க? இவங்களை எல்லாம் எப்படித் தான் நீங்க எல்லாரும் சமாளிக்குறீங்களோ!” என்றாள் மஹாபத்ரா.

“அதெல்லாம் ரொம்ப ஈஸி தான் ம்மா” என்று அவளிடம் கூறிப் புன்னகைத்தார் கவிபாரதி.

“அப்போ அதை எங்க ருத்ராவுக்கும் சொல்லிக் கொடுத்துருங்க ம்மா” என்று அவரிடம் சொன்ன காஷ்மீரின் மனைவியிடம்,

“அவ எப்பவோ இதுக்கு டிரெயின் ஆகிட்டா ம்மா” என்றாள் மிருதுளா.

“ம்ம்ம். அப்போ சரிங்க” எனக் கூறி விட்டது, அவர்கள் அனைவரும் ஸ்வரூபனின் வீட்டிற்குப் போனார்கள்.

“அவங்ககிட்ட சொன்ன மாதிரியே நாங்க இப்போ கிளம்பலாம்ன்னு இருக்கோம் சம்பந்தியம்மா” என்று கவிபாரதியிடம் சந்திரதேவ் கூறினார்.

“அட! ஏன் இப்படி சொல்றீங்க சம்பந்தி?” என்று அவரிடம் சங்கடத்துடன் கேட்டார் ஸ்வரூபனின் அன்னை.

ஒருவேளை இடப்பற்றாக்குறை மற்றும் வசதி குறைவு என்பதால் தான், அவர்கள் விரைவாக கிளம்பிச் செல்ல நினைக்கிறார்களா? என்ற தன் சந்தேகத்தை அவர்களிடம் வினவினார் மிருதுளா.

“அச்சோ! அப்படியெல்லாம் இல்லை ம்மா. வருஷம் ஃபுல்லா எங்கப் பொண்ணு இங்கே தான் தங்கி இருக்கிறா! நாங்களும் அவளோட வீட்டாளுங்க தானே? எங்களுக்கு எந்த சங்கோஜமும் இல்லை” என அவரைப் பார்த்துப் புரிய வைக்க முயன்றான் காஷ்மீரன்.

“அப்பறம் எதுக்கு சுடு தண்ணீரைக் கால்ல ஊத்திட்டா மாதிரி இப்போவே கிளம்புறேன்னு நிற்கிறீங்க?” என்று கேட்டார் வித்யாதரன்.

“நாங்க இன்னைக்கு மட்டும் தான் லீவ் போட்டுட்டு வந்திருக்கோம் ண்ணா. அவரும், மாமாவும், சொந்த ஆஃபீஸில் வேலை பார்க்கிறாங்க! ஆனால் நான் அப்படி இல்லையே? இனிமேல் ருத்ராவோட கல்யாணம் முடியிற வரைக்கும் நான் லீவ் எடுத்துட்டே இருக்கனும் தானே?” என்று மிருதுளாவின் கணவரிடம் விளக்கிக் கூறினாள் மஹாபத்ரா.

அவளது அந்த விளக்கம் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்,

உடனே தலை அசைத்து,”நீங்க ஊருக்குப் பத்திரமாகப் போயிட்டு வாங்க” என்று அவர்களிடம் இன்முகத்துடன் கூறினார்கள் கவிபாரதி மற்றும் அவரது மகன் ஸ்வரூபன்.

அவர்கள் எந்த வித எதிர்மறையான முக மாறுதல்களும் இன்றி, தங்களது பயணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததை எண்ணி ஆசுவாசம் அடைந்தனர் ருத்ராக்ஷி மற்றும் அவளது குடும்பத்தார்.

“உங்களைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி!” என்றார்கள் நாள்வரும்.

“நானும், நீயும் உன்னோட வீட்டுக்குப் போய்ப் பெட்டியை அடுக்கி எடுத்துட்டு வந்துடலாம். அது வரைக்கும் உன் வீட்டாளுங்க இவங்க கூடப் பேசிட்டு இருக்கட்டுமே?” எனத் தன்னிடம் வினவிய மிருதுளாவிடம்,

“சரிங்க அக்கா” என்றவளோ, தன் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்து விட்டு அவருடன் சென்று விட்டாள் ருத்ராக்ஷி.

தன்னவள் இன்னும் சில மணித்துளிகளில் இருந்து கிளம்பிச் செல்லப் போகிறாள், இனி அவளைப் பூ வைக்கும் சடங்கின் போது தான் பார்க்க முடியும்தை உணர்ந்து கொண்டவனோ, அவள் செல்வத்தையே ஏக்கம் நிறைந்த கண்களுடன் பார்த்தான் ஸ்வரூபன்.

- தொடரும்
 
ருத்ராக்ஷி அப்படியே திரும்பி ஒரு பார்வை பார்த்துறுமா ஸ்வரூபன.😍😍😍
 
Top