Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 86

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தன்னுடைய நூலக வேலைக்கு உடனே கிளம்பிச் செல்ல வேண்டும் என்பது அப்போது தான், அவளுக்கு ஞாபகம் வந்தது.

எனவே, அந்த வேலையை முடித்து விட்டு, வீட்டுக்கு வந்த பிறகு, கவிபாரதி மற்றும் மிருதுளாவுடனான தன்னுடைய உரையாடலைத் தனது குடும்பத்தாரிடம் அறிவித்து விட முடிவெடுத்தவளோ,

ஆகவே, தனது முகத்தைச் சீர்படுத்திக் கொண்டு, மீண்டுமொரு முறை தனது சேலையை நன்றாக அணிந்து விட்டு நூலகத்திற்குச் சென்று வேலையைப் பார்க்கத் தொடங்கி விட்டாள் ருத்ராக்ஷி.

அவளைப் போலவே, மிகுந்த ஆர்வத்துடன் காணப்பட்ட கவிபாரதியை, வெகு நேரம் காத்திருக்க வைக்காமல், வயல் வேலையை முடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்த அவனுடைய மகனோ,

தன்னைப் பார்த்துப் புன்சிரிப்பை உதிர்த்த அன்னையிடம்,”என்னம்மா? ஏதாவது நல்ல செய்தியா?” என்று அவரிடம் வினவினான்.

“ஆமாம் டா. இதுக்காகத் தான் இவ்வளவு நாளாக காத்துட்டு இருந்தோம்! இப்போ அது நடந்துருச்சு” என்று அவனிடம் உற்சாகத்துடன் உரைத்தார் கவிபாரதி.

“ருத்ராக்ஷியோட சம்மதத்தைத் தான், நாம எதிர்பார்த்துட்டு இருந்தோம் மா?” என்று கேட்டவாறே தாயின் முகத்தைப் பார்த்தான் ஸ்வரூபன்.

“ம்ஹ்ம்ம்” என்று அதை ஆமோதித்து தலையசைத்தார் அவனது அன்னை.

“என்னது? என்னம்மா இப்படி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கிறீங்க?” என்று அவரருகில் சென்று அமர்ந்தவனிடம்,

“அட! அது எனக்கே அப்படித் தான் இருந்துச்சு ப்பா!” எனத் தன்னிடமும், மிருதுளாவிடமும், ருத்ராக்ஷி சொன்னவற்றை எல்லாம் மகனிடம் கூறி விட்டார் கவிபாரதி.

அதைக் கேட்டப் பிற்பாடு, அவனால் தன்னுடைய உணர்வுகளை அடக்கிக் கொள்ள முடியவில்லை.

“ம்மா!!!” என்ற ஆரவார ஒலியை எழுப்பிக் கொண்டே தரையிலிருந்து எழுந்து நடனமாட ஆரம்பித்து விட்டான் ஸ்வரூபன்.

“டேய்! மெதுவா ஆட்டம் போடு! கீழே விழுந்துடப் போற!” என்று அவனுக்கு எச்சரிக்கை விடுத்தார் கவிபாரதி.

“ஹாஹா! என்னால் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியலையே ம்மா!” என்றதோடு மீண்டும் குத்தாட்டம் போட்டுக் கொண்டு இருந்தான் அவனுடைய மகன்.

“சரி போதும்! இப்படி வந்து உட்காரு” என அவனைத் தன்னருகே அழைத்து அமர வைத்துக் கொண்டார் அவனது தாய்.

“சொல்லுங்க ம்மா” என்று அவரது கட்டளைக்கு அடி பணிந்தான் ஸ்வரூபன்.

“அந்தப் பொண்ணோட அப்பா, அண்ணா, அண்ணியும் இங்கே வர்ற வரைக்கும் நாம இதைப் பத்தி யார்கிட்டேயும் மூச்சு விட்டுடக் கூடாது! சரியா? ஏற்கனவே, நீங்க ரெண்டு பேரும் போதுமான அளவுக்கு இந்த ஊர் ஆளுங்க வாயில் விழுந்தாச்சு! இனிமேல் அவங்க உங்களைப் பத்தி எது பேசுறதாக இருந்தாலும் அது உங்களோட கல்யாணத்தைப் பத்தின விஷயமாகத் தான் இருக்கனும்! புரிஞ்சுதா?” என்று அவனிடம் தீர்க்கமாக கூறினார் கவிபாரதி.

“சரிங்க ம்மா. நீங்க சொல்றபடியே நடந்துக்கிறேன். அதே மாதிரி, அவங்களை நேரில் பார்த்துப் பேசவும் மாட்டேன்” என்று அவருக்கு வாக்குக் கொடுத்தான் அவரது புத்திரன்.

“ஆமாம். இதை எப்பவும் மனசில் வச்சுக்கோ” என்றார் அவனுடைய அன்னை.

அதற்குப் பிறகு, தனது நூலக வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவளோ, இரவு உணவைச் சாப்பிட்டு விட்டுத் தன்னுடைய தந்தை, அண்ணன் மற்றும் அண்ணிக்கு ஒரே நேரத்தில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள்.

"ஹாய் ருத்ரா!" என மூவருமே கோரசாக பேசவும்,

"ஹாய் டார்லிங்ஸ்!" என்று அவர்களுக்குப் புத்துணர்வுடன் பதிலளித்து விட்டு,

“உங்ககிட்ட ஒன்னு சொல்லப் போறேனே!” என்று அவர்களிடமும் முதலில் புதிர் போட்டுப் பேசினாள் ருத்ராக்ஷி.

“என்னன்னுத் தெரியலை. ஆனால், கண்டிப்பாக ஏதோ ஒரு ஹேப்பி நியூசாகத் தான் இருக்கப் போகுதுன்னு நினைக்கிறேன்” என்றுரைத்தாள் மஹாபத்ரா.

“அதே தான் அண்ணி!” என்றவளோ,

அன்றைய தினம் நிகழ்ந்த எதிர்பாராத சந்தோஷ சம்பாஷணைகளையும், அது கொடுத்த நேர்மறை உணர்வையும் அவர்கள் மூவரிடமும் சொல்லி முடித்தாள் ருத்ராக்ஷி.

அதைக் கேட்டவுடனே முதலில் தன் குரலை வெளிப்படுத்தியது சந்திரதேவ் தான்!

“அப்படியா ம்மா? அப்போ நாங்க அங்கே வர்றதுக்கு ரொம்ப நாள் இல்லை போலவே?” எனத் தனது மகளிடம் வினவவும்,

“யெஸ் ப்பா!” என்று மகிழ்வுடன் தெரிவித்தாள் ருத்ராக்ஷி.

"காங்கிராட்ஸ் டா!" என்று தன் பங்கிற்குத் தங்கைக்கு வாழ்த்துக் கூறினான் காஷ்மீரன்.

“தாங்க்ஸ் ண்ணா”

“நான் எல்லாம் உனக்கு எல்லாத்தையும் நேரில் தான் சொல்லுவேன்!” என்று தன்னுடைய நாத்தனாரிடம் உறுதியாக உரைத்தாள் மஹாபத்ரா.

“ஓகே அண்ணி” என அவளிடம் கூறி விட்டாள் ருத்ராக்ஷி.

அப்படியே அவர்களுடைய பேச்சு நீண்டு கொண்டே சென்று, ஒரு கட்டத்தில் முடிவடைந்து விட்டது.

இவ்விரு வீட்டாரும், தங்களது விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியதால், தனது செல்பேசி எண்ணைத் தாயின் வாயிலாக, ருத்ராக்ஷியிடம் கொடுத்து, அவளது தந்தைக்கு அனுப்பி வைக்கச் சொன்னான் ஸ்வரூபன்.

அதே மாதிரியே செய்தவளோ, மறந்தும் அவனது நம்பருக்கு அழைப்பு மற்றும் குறுந்தகவல் அனுப்பப்படவில்லை.

ஏனெனில், தங்கள் இருவருடைய திருமணப் பேச்சு நடந்து முடிந்த பிறகு, அவனுடன் உரிமையாகப் பேசிக் கொள்ளலாம் என்று காத்திருந்தவள்,

எப்போதும் போலவே, தனது மெழுகுவர்த்திகள் பயிற்சி வகுப்பு மற்றும் நூலகத்திற்குப் போய் வேலை செய்து வருவதை தன்னுடைய வழக்கமாக வைத்திருந்தாள் ருத்ராக்ஷி.

“இந்த ஆடி மாசம் எப்போடா முடியும்ன்னு இருக்கு ம்மா!” என்று கூறித் தாயிடம் சலித்துக் கொண்டாள் மஹாபத்ரா.

“என்னடி இப்படி அலுத்துக்கிற? உனக்குக் கல்யாணம், முடிஞ்சதுல இருந்து, இப்படித் தான் பேசிக்கிட்டு இருக்கு! இங்க இருக்கப் பிடிக்கலையா உனக்கு?” என்று மகளை அதட்டிக் கேட்டார் கனகரூபிணி.

“ஹூம்! இங்கே இருக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ம்மா! ஆனால், ருத்ராக்ஷியோட கல்யாணப் பேச்சு வார்த்தைக்கு நான் போகனுமோ? அப்போ ஆடி முடிஞ்சா தானே அது நடக்கும்?” என்று அவரிடம் வினவினாள் அவரது மகள்.

“அடிப்பாவி! அதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்கா?” என்றார் அவளது அன்னை.

“அஃப்கோர்ஸ் ம்மா” என்றவளை கடுமையாக முறைத்துப் பார்த்தார்.

“ஹிஹி! ஏன் ம்மா என்னை இப்படி பாசமாகப் பார்க்கிறீங்க?” என்று தாயிடம் கேட்டாள் மஹாபத்ரா.

“அப்படியே எந்திரிச்சு ஓடிரு! இல்லைன்னு வச்சுக்கோ! கல்யாணம் ஆன பொண்ணுன்னு கூடப் பார்க்க மாட்டேன்! உன்னை அடி வெளுத்து விட்ருவேன்!” என்று அவளை எச்சரித்தார்.

“ம்ஹூம்! ம்ஹூம்! போங்க ம்மா! இதைக் கேள்விப்பட்டதுல இருந்து, நான் எவ்ளோ ஹேப்பியா இருக்கேன் தெரியுமா?”என்றாள்.

“அது எனக்குப் புரியுது தான்! நிஜமாகவே அந்தப் பொண்ணு அந்த ஊரிலேயே தான் கல்யாணம் பண்ணி செட்டில் ஆகப் போறாளா டி?” எனத் தன் மகளிடம் வினவினார் கனகரூபிணி.


- தொடரும்
 
என்னமோ தெரியலை இந்த கனகரூபிணி பேச ஆரம்பித்தாலே ஏதாவது வில்லங்கம் வந்துடுமோனு திக்குங்கிது.
 
என்னமோ தெரியலை இந்த கனகரூபிணி பேச ஆரம்பித்தாலே ஏதாவது வில்லங்கம் வந்துடுமோனு திக்குங்கிது.
Inime apdi elam Vara chance ila sis. Thank you so much ❤️
 
Top