Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 82

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தன்னுடைய கணவன் கொடுத்த வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு அதற்குப் பரிசாக ஒரு முத்தத்தையும் வழங்கியவள், தனது விழிகளைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்துப் புன்னகை சிந்தினாள் மஹாபத்ரா.

அதைப் பெற்றுக் கொண்ட காஷ்மீரனும், மனைவியுடன் சேர்ந்து வெளியே வந்தான்.

அவர்களது மனங்களைப் புரிந்து கொண்டு, அந்த இருவரிடமும் கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சனும், ருத்ராக்ஷியும் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

அந்த ஆடி அழைப்பின் முத்தாய்ப்பாகத் தன் மனைவியுடன் இணைந்து தனது மாமனார், மாமியாரின் கால்களில் பணிந்தான் காஷ்மீரன்.

“தீர்க்க ஆயுளோடவும், தீர்க்க சுமங்கலியாகவும், ரெண்டு பேரும் சந்தோஷமாக வாழனும்!” என்று அவர்களை ஆசீர்வதித்து எழுப்பி விட்டார்கள் இருவரும்.

“அப்போ நாங்க வீட்டுக்குக் கிளம்புறோம்” என்று காஷ்மீரனும், அவனது தங்கையும் அவர்களிடம் பொதுவாக அறிவித்தார்கள்.

“சரி. ஆடி பதினெட்டுக்கும் ஒரு சம்பிரதாயம் செய்யனும். அதையும் பண்ணிடுங்க மாப்பிள்ளை. இப்போ போயிட்டு வாங்க” என மஹாபத்ராவும், அவளது பெற்றோரும், அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அவர்கள் போனதும், தங்களது மகளைப் பார்க்கச் சென்றவர்களோ,

“ஆர்‌ யூ ஆல்ரைட் ம்மா?” என்றவாறே அவளருகே அமர்ந்து மகளுடைய தலையைக் கோதி விட்டார் பிரியரஞ்சன்.

“யெஸ் ப்பா. ஐ யம் ஆல்ரைட். அதான், வேலைக்குப் போயிட்டு இருக்கேனே? சோ, எனக்கு இந்த ஒரு மாசம் சீக்கிரம் போயிடும்” என்று தன் தந்தையிடம் தெரிவித்தாள் மஹாபத்ரா.

“ஆமாம் டா. அப்படித் தான் ஸ்ட்ராங் ஆக இருக்கனும்” என்று மகளுக்கு அறிவுறுத்தினார் கனகரூபிணி.

அதன் பின்னர், அவளைத் தங்களால் இயன்றளவு சமாதானம் செய்து தேற்றினர் அவளது பெற்றோர்.

“என்னப்பா, மருமகளை அவங்க வீட்டில் விட்டுட்டு வந்தாச்சா?” என்று தனது மகன் மற்றும் மகளிடம் வினவினார் சந்திரதேவ்.

“ஆமாம் ப்பா” என்றனர் காஷ்மீரன் மற்றும் ருத்ராக்ஷி.

“ஓகே. நாங்க இன்னைக்கும் ஆஃபீஸூக்குப் போகலை. ஆனால், நாங்க உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பேசலாம்னு இருக்கோம்” என்று மகளைப் பார்த்துக் கூறினார் அவளது தந்தை.

“என்ன விஷயம் ப்பா?” என்கவும்,

“அந்த சஸ்வினைப் பத்தி யோசிச்சு இந்த தடவையாவது தெளிவான முடிவை எடுத்தியா ம்மா?” என அவளிடம் தீர்க்கமாக கேட்டார் சந்திரதேவ்.

உடனே அவள் தன் தமையனைப் பார்க்க,”அவனை எதுக்குப் பார்க்கிற ம்மா? உன்னோட பதிலை நேரடியாகவே சொல்லு” என்று அவளை ஊக்கப்படுத்தவும்,

தன் தந்தையின் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்தவளோ,”அவரைக் கல்யாணம் செய்துக்க எனக்கு விருப்பமில்லை ப்பா!” என்று அவரிடம் உறுதியுடன் உரைத்து விட்டாள் ருத்ராக்ஷி.

அதைக் கேட்ட அவளது தமையனும், தந்தையும் ஒருவரையொருவர் நிம்மதியுடன் பார்த்துக் கொண்டார்கள்.

பிறகு,”அப்போ நான் உனக்கு வேற மாப்பிள்ளையைத் தேடவா ம்மா?” என்று அவளது முகத்தை ஆராய்ந்தவாறே வினவினார் சந்திரதேவ்.

அந்தக் கேள்வியில் அவரது மகளுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“என்னடா?” என்று தங்கையிடம் கேட்டான் காஷ்மீரன்.

“எனக்கு எந்த மாப்பிள்ளையும் பார்க்க வேண்டாம்!” என்று உறுதியான குரலில் சொன்னாள் ருத்ராக்ஷி.

“ஏன்டா? நீ கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுன்னு இருக்கியா?” என அவளிடம் கேட்டார் சந்திரதேவ்.

“அப்படியெல்லாம் இல்லை ப்பா. எனக்கு இப்போதைக்குக் கல்யாணம் செய்துக்க விரும்பவில்லை! அவ்ளோ தான்!” என்று அவரிடம் தயக்கத்துடன் உரைத்தாள் அவரது மகள்.

“ஓஹோ! அப்போ இதை ஸ்வரூபன் கிட்டே சொல்லிட்டியா டா?” எனத் தன்னிடம் திடுமென கேட்டவனை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள் ருத்ராக்ஷி.

“ஆமாம் மா. எங்க மூனு பேருக்குமே இந்த விஷயம் முன்னாடியே தெரியும்” என்று தன்னுடன் பிறந்தவளிடம் சொன்னான் காஷ்மீரன்.

“அது எப்படி உங்களுக்குத் தெரிஞ்சது?” என்று தனது தந்தை மற்றும் அண்ணனிடம் வினவினாள்.

“அவர் உங்கிட்ட நடந்துக்கிறது, அப்பறம் அவங்க அம்மா உங்கிட்ட எடுத்துக்கிட்ட உரிமைன்னு இதை எல்லாத்தையும் நாங்க கவனிச்சுட்டுத் தான் இருந்தோம்” எனத் தானும், தங்களது அப்பாவும் கவனித்தவற்றை எல்லாம் அவளிடம் கூறினான் அவளது தமையன்.

அவளது குழப்பம் தீர்ந்த முகத்தைக் கண்டதும்,”அந்தப் பையனைக் கல்யாணம் பண்ணிக்க உனக்குச் சம்மதமா?” என்று தன் மகளிடம் கேட்டார் சந்திரதேவ்.

அதில் சிறிது தயங்கியவாறே,”எனக்கும் அவரைப் பிடிக்கும்!” என்று அவ்விருவரையும் பார்த்துக் கூறினாள் ருத்ராக்ஷி.

“ஹப்பாடா! நீ சம்மதம் சொன்னதே எங்களுக்குச் சந்தோஷம் டா!” என்று அவளிடம் குதூகலத்துடன் உரைத்தான் காஷ்மீரன்.

“ம்ஹ்ம். ஆமாம் ண்ணா. ஆனால்…” என்று கூறித் தடுமாறியவளிடம்,

“என்னம்மா? ஏன் தயங்குற?” என்று மகளிடம் கனிவுடன் வினவினார் சந்திரதேவ்.

“அவரோட ஜாப் அண்ட் ஸ்டேட்டஸ் என்னன்னும் உங்களுக்குத் தெரியும் தானே?” என்றாள் ருத்ராக்ஷி.

“நல்லாவே தெரியுமே! ஏன்டா?” என்று அவளிடம் கேட்டான் காஷ்மீரன்.

“அதனால் உங்களுக்கு எதுவும் சங்கடம் வந்துடாதே? அதுவுமில்லாமல் அவங்க இருக்கிறது ஒரு சின்ன ஊரில் தான்!” என அவர்களிடம் தெரிவிக்கவும்,

“ஹாஹா! நீ ஏன்டா இப்படி யோசிக்கிற?” எனக் கேட்ட சந்திரதேவ்விடம்,

“நம்மளோட ஃபேமிலி ஸ்டேட்டஸூக்கு அவங்க தகுதி ஆனவங்களான்னு நாளப் பின்னே, சந்தேகம் வந்துடக் கூடாதுல்ல ப்பா?” என்று தன் தமையன் மற்றும் தந்தையிடம் கேட்டாள் ருத்ராக்ஷி.

“ம்ம்… இப்போ நான் உங்கிட்ட சொன்ன விஷயத்தில், நானும், ஸ்வரூபனும் பேசிக்கிட்டதையும் சொன்னேன் தானே டா? அப்பறமும் உனக்குச் சந்தேகமா?” என்றான் காஷ்மீரன்.

“சந்தேகம்ன்னு இல்லை அண்ணா. ஆனால், எல்லா நேரமும், இதே மைன்ட்செட் இருக்காதுல்ல? அதான் கேட்கிறேன்” என்று அவனுக்குப் புரிய வைத்தாள் அவனது தங்கை.

அதற்கு அவளது தந்தையோ,”அப்படி யோசிச்சு இருந்தால், நாங்க உன்னையே அந்த ஊருக்கு அனுப்பி இருக்க மாட்டோமே டா?” என்று அவளுக்கு விளக்கிக் கூறினார்.

“அதுவும் கரெக்ட் தான் ப்பா. ஆனாலும் ஒரு சின்ன தெளிவுக்காக கேட்டேன்” என்று அவனிடம் சொன்னாள் ருத்ராக்ஷி.

“நாங்க உனக்குத் தெளிவுபடுத்துறோம் டா” என்று கூறிய சந்திரதேவ்வோ,”நாம என்ன தான் பணக்காரவங்களா இருந்தாலும், என் பையன், பொண்ணோட நிம்மதி, சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். நான் மட்டுமில்லை, உங்க ரெண்டு பேரோட அம்மாவும் உயிரோட இருந்திருந்தால் அவங்களும் இதையே தான் சொல்லி இருப்பாங்க. இப்போ உன் அண்ணன் லவ் பண்ணி இருந்தால் கூட அந்தப் பொண்ணையே தான் அவனுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சிருப்பேன்! ஆனால் அவனுக்கு அப்படி எதுவும் இல்லைன்றதால் தான், அரேன்ட்ஜ் மேரேஜ் பண்ணி வச்சேன்! அதையே தான் உனக்கும் சொல்றேன்! உன்னோட லவ்வை நாங்க அக்சப்ட் செய்துட்டோம் டா! நீ எதுக்கும் கவலைப்படாமல் ஹேப்பியா ஸ்வரூபனைக் கல்யாணம் செய்துக்கலாம்” என்று கூறி அவளுக்கு வலியுறுத்தினார்.

அதைக் கேட்டதும் தான், தனது மனம் தெளிவுற்றதை உணர்ந்து கொண்டாள் ருத்ராக்ஷி.

- தொடரும்
 
சந்திரதேவ் உண்மையில் நல்ல மனிதர். தன்னோட மகளுக்கு தனக்கு சமமான இடமா சம்பந்தம் தேடாமா, அவளோட சந்தோஷத்தை யோசித்து வரன் பார்க்கறது அருமை. 😍😍😍😍😍
 
சந்திரதேவ் உண்மையில் நல்ல மனிதர். தன்னோட மகளுக்கு தனக்கு சமமான இடமா சம்பந்தம் தேடாமா, அவளோட சந்தோஷத்தை யோசித்து வரன் பார்க்கறது அருமை. 😍😍😍😍😍
Ama sis... Thank you so much ❤️
 
Top