Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 81

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தன் கணவனின் இந்த திடீர் செயலால், திகைத்துப் போய் நின்று விட்டவளோ,

அவன் கொடுத்த முத்தங்கள் யாவும் அழுத்தமாகவும், ஆழமாகவும் இருப்பதை உணர்ந்து,”ஏங்க! என்னாச்சு?” என்று மெலிதான குரலில் அவனிடம் வினவினாள் மஹாபத்ரா.

“நான் கேட்காமலேயே நீ எனக்காக ஒரு விஷயத்தைச் செஞ்சிருக்கியே? அதுக்குத் தான் இது!” என்று அவளுக்கு ஒரு அழுத்தமான முத்தத்தை இதழில் பதித்து அவளைத் தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தினான் காஷ்மீரன்.

அவனது வார்த்தைகளைக் கேட்டதும்,”ஐயையோ! அது தான் இல்லைங்க. ருத்ரா தான் கிளம்பி வந்திருக்கா!” என்று மீண்டுமொரு முறை அவனிடம் கூறினாள் மஹாபத்ரா.

“நீ எனக்காக செஞ்சதை ஏன் இல்லைன்னு மறுத்துச் சொல்ற?” என்று அவளிடம் ஏக்கத்துடன் அவளது கணவன்.

அதற்குப் பதில் கூறாமல் சங்கடத்துடனும், தயக்கத்துடனும் அவனை ஏறிட்டாள் அவனுடைய மனைவி.

“சொல்லு ம்மா?” என்று மறுபடியும் வினவினான் காஷ்மீரன்.

“ஆமாங்க. நான் தான், இங்கே ருத்ராவை வரச் சொல்லிக் கேட்டுக்கிட்டேன்” என்று அவனிடம் ஒப்புக் கொண்டாள் மஹாபத்ரா.

“எனக்குப் பிடிச்சதை தானே நீ செஞ்சிருக்கிற, அதை ஏன் அக்சப்ட் பண்ணிக்கலை?” என்று அவளிடம் கேட்டான் அவளுடைய மணாளன்.

“அதுவா? நான் ருத்ராவைப் பத்திப் பேசியதுக்கு அப்பறம், இதை செஞ்சு உங்களைத் தாஜா பண்றதுக்குப் பிளான் போட்றா மாதிரி இருக்கேன்னு உங்களுக்குத் தோனுச்சுன்னா என்னப் பண்றது?” என்று அவனது முகத்தைப் பார்க்காமல் கீழே பார்த்துச் சொன்னாள் பெண்ணவள்.

“ஹேய்!” என அவளை அவளது தலையை நிமிர்த்தி விட்டு,”அதெல்லாம் நான் அப்படி நினைக்கவே மாட்டேன் டா! நீ என்னை சந்தோஷப்பட்றதுக்காக இப்படியொரு எஃபெர்ட் போட்டிருக்கிற அதை நினைச்சு எனக்கு எவ்ளோ ஹேப்பியா இருக்குத் தெரியுமா?” என அவளைத் தன் கை வளைவில் வைத்துக் கொண்டான் காஷ்மீரன்.

“ருத்ராவைப் பார்த்த உங்க முகத்தை வச்சே நான் கண்டுபிடிச்சிட்டேன் ங்க” என்று தன் கணவனிடம் கூறிப் புன்னகைத்தாள் மஹாபத்ரா.

“எஸ் ம்மா. தாங்க்யூ சோ மச் டார்லிங்!” என அவளிடம் மனதார நன்றி தெரிவித்தான் அவளது கணவன்.

“பரவாயில்லை ங்க!” என்றவளோ, அவனது அணைப்பில் அடங்கிப் போய் விட்டாள் அவனது மனைவி.

அதன் பிறகு வந்த நாளில், தங்களது மகளையும், மருமகனையும் ஆடிக்கு அழைத்துச் செல்ல வேண்டி சந்திரதேவ்வின் வீட்டிற்கு வந்திருந்தார்கள் மஹாபத்ராவின் பெற்றோர்.

அங்கே ருத்ராக்ஷியைக் கண்டதும்,”நீ எப்போ ம்மா ஊருக்கு வந்த?” என அவளிடம் விசாரித்தார் பிரியரஞ்சன்.

உடனே, தான் வந்த தினம் மற்றும் நேரத்தை அவர்களிடம் மொழிந்தாள் காஷ்மீரனின் தங்கை.

“அப்படியா? நீ ஊருக்கு வந்ததை இவ எங்ககிட்ட சொல்லவே இல்லை ம்மா” என்று அவளிடம் தன் மகளைக் காட்டிக் குறை கூறினார் கனகரூபிணி.

“நீங்க நேரில் வந்து பார்த்து தெரிஞ்சுக்கனும்ன்னு தான் நான் எதுவும் சொல்லலை ம்மா” என்று அவரிடம் சொன்னாள் மஹாபத்ரா.

“ஓஹோ! இருக்கட்டும் டி!” என்று அவளிடம் கூறியவரோ,

“சம்பந்தி! எங்கப் பொண்ணையும், மருமகனையும் ஆடி மாசத்துக்கு எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறோம்!” என்றார் மஹாபத்ராவின் தாய்.

“சரிங்க சம்பந்தியம்மா. ரெண்டு பேரும் போயிட்டு வாங்க” என்று தனது மகனிடமும், மருமகளிடமும் உரைத்தார் சந்திரதேவ்.

அவர்களும் சரியென்று கூறி விட,”நீயும் அப்படியே எங்க கூட வந்துட்டு சாப்பிட்டுட்டு இவர் கூடக் கிளம்பி இங்கே வந்துருவியாம்!” எனத் தன் நாத்தனாரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் மஹாபத்ரா.

அவளது ஆசையை நிறைவேற்றிக் கொடுக்க நினைத்த ருத்ராக்ஷியோ, அதற்காக தன்னுடைய தந்தையிடம் ஒப்புதல் பெற்றுக் கொண்டு,”ஓகே அண்ணி” என்று அவளிடம் சம்மதம் தெரிவித்து விட்டாள்.

பிரியரஞ்சன், கனகரூபிணியின் மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து ருத்ராக்ஷியும், காரில் பயணம் செய்து மஹாபத்ராவின் பிறந்தகத்தை அடைந்தார்கள்.

அவர்களை வாசலிலேயே நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்று,”முதல்ல உட்கார்ந்து தண்ணீர் குடிங்க” என அவர்களுக்குக் குடிநீரைக் கொண்டு வந்து தந்தார் கனகரூபிணி.

அதன் பின்னர், ஒரு தட்டில் சீருக்குத் தேவையான பொருட்களை வைத்து, அதில் மகள் மற்றும் மருமகனுக்கான உடைகளையும் இடம் பெறச் செய்து விட்டு அவற்றைத் தங்களுடைய மகள் மற்றும் மருமகனுக்குக் கொடுத்தார்கள் மஹாபத்ராவின் பெற்றோர்.

இந்தச் சம்பிரதாயங்களை எல்லாம் ஒரு ஓரமாக நின்று கொண்டு நோட்டம் விட்டாள் ருத்ராக்ஷி.

அவன் எதிலுமே தலையிடவே இல்லை. பார்வையாளராக மட்டுமே இருந்தாள்.

“நீ வர்றது முதலிலேயே தெரிஞ்சிருந்தா உனக்கும் சேர்த்து டிரெஸ் எடுத்து வச்சிருப்போம் மா!” என்று அவளிடம் கூறினார் பிரியரஞ்சன்.

“அச்சோ! இருக்கட்டும் மாமா. இதையெல்லாம் நீங்க அண்ணாவுக்கும், அண்ணிக்கும் மட்டும் தான் செய்யனும். எனக்கு எதுவும் வேண்டாம்” எனச் சொல்லி அவரைச் சமாதானப்படுத்தினாள் ருத்ராக்ஷி.

“நீ ஊருக்குக் கிளம்புற அப்போ உனக்கு மஹா டிரெஸ் எடுத்துத் தருவா” என்று கறாராக உரைத்து விட்டார் கனகரூபிணி.

உணவுண்ணும் நேரம் வந்து விட்டதால், அவர்கள் ஐவரும் தாராளமாக உண்ணும் வகையில், அனைத்து அசைவ உணவுகள் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

அதை ஒரு பிடி பிடித்து முடித்ததும்,”நாம கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு” எனத் தங்கையிடம் கூறி விட்டுத் தன் மனைவியைத் தனியாக அழைத்துச் சென்றான் காஷ்மீரன்.

“நீ இங்கே பத்திரமாகத் தான் இருப்ப - ன்னு எனக்குத் தெரியும். ஆனால், என்னை ரொம்ப மிஸ் பண்ணுவே - ன்னும் நல்லா தெரியும்! ஏன்னா, நானும் அதே சுவிட்சுவேஷனில் தான் இருப்பேன்!” என்றதும்,

அவனும், தானும் ஒரு மாதம் பிரிந்திருக்கப் போகிறோம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டவளுக்கு மளுக்கென்று கண்களிலிருந்து கண்ணீர் வந்து விட, அதைப் பார்த்ததும் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டு,

“நான் கிளம்பும் போது நீ இப்படி அழுதா என்னால் எப்படிடா போக முடியும்?” என் அவளை அமைதிப்படுத்தினான் அவளது கணவன்.

“ஐ மிஸ் யூ ங்க!” என்று அவனிடம் சொன்னவளோ, தன்னவளுடைய முகத்தில் ஒரு இடம் விடாமல் முத்தங்களைப் பதித்து தனது இதழ்களை மீட்டுக் கொண்டாள் மஹாபத்ரா.

“நல்லா சாப்பாடு, ஜாலியாக வேலைக்குப் போயிட்டு வா, ரிலாக்ஸாக இரு. உனக்கு எப்போ எங்கிட்ட பேசனும்னு தோன்றினால் உடனே கால் பண்ணு. நான் கண்டிப்பாக அட்டெண்ட் பண்ணுவேன்னு உனக்குப் பிராமிஸ் செய்றேன்” என்று அவளுக்கு உறுதி அளித்தான் காஷ்மீரன்.

- தொடரும்

நேத்தும், இன்னைக்கும் என்னால் அவ்வளவாக மொபைல் எடுக்க முடியலை ஃப்ரண்ட்ஸ். ஏன்னா, இன்னைக்குத் தான் எங்க ஊர்த் திருவிழா முடியுது. சோ, இரண்டு நாளும் கோயிலுக்குப் போயிட்டு வந்தோம். ரிலேடிவ்ஸூம் வந்திருந்ததால் கொஞ்சம் பிஸி ஆகிட்டேன். இனிமேல் இப்படி டிலே ஆகாது. நாளையிலிருந்து டெய்லி யூடி வந்துரும். எனக்கு அடுத்
த மாசம் செகண்ட் வீக் எக்ஸாம் இருக்கு. அப்போ மட்டும் நான் லீவ் எடுத்துக்கிறேன்…🙏
 
Top