Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 79

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அந்த எண்ணத்திலேயே, தன் அலுவலகத்தில் இருந்தவளோ, அதன் பிறகு யோசிக்காமல், தன் நாத்தனாருக்கு அழைத்து,”ஹாய் ம்மா” என்று பேசினாள் மஹாபத்ரா.

“ஹாய் அண்ணி!” என்று அவளும் உற்சாகமாகத் தான் உரையாடினாள்.

“ருத்ரா! நீ இப்போ ஃப்ரீயாக இருக்கியா?” என்று கேட்கவும்,

“லைப்ரரியில் இருக்கேன் அண்ணி. ஃப்ரீ தான்” என்றுரைத்தாள் அவளது நாத்தனார்.

“ஆடி மாசம் வர்றதால், நான் என் பொறந்த வீட்டுக்குப் போகனும்” என்று கூறினாள் மஹாபத்ரா.

“அப்படியா? எப்போ நம்ம வீட்டுக்கு வருவீங்க?” என்று விசாரித்தாள் ருத்ராக்ஷி.

“அடுத்த மாசம் தான் வர்ற மாதிரி இருக்கும் மா” என்றுரைத்தாள் அவளது அண்ணி.

“அப்போ அண்ணாவும் அங்கே வருவாங்களா?” என்றாள்.

“ஆடி ஒன்னு அப்போ என்னை வீட்டுக்குக் கொண்டு வந்து விட வருவார். அப்பறம் ஆடி பதினெட்டு அன்னைக்கு வந்துட்டுப் போவார். அந்த மாசம் முடிஞ்சதும் என்னை அங்கே கூட்டிட்டுப் போயிடுவார்” என அவளுக்கு விளக்கிக் கூறினாள் மஹாபத்ரா.

“சூப்பர் அண்ணி” என்கவும்,

“அதைச் சொல்லிட்டு, உங்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்க கால் பண்ணேன் ம்மா” என்று அவளிடம் தயக்கத்துடன் உரைத்தாள் காஷ்மீரனின் மனைவி.

“எதுவாக இருந்தாலும் சொல்லுங்க?” என்று அவளை ஊக்கப்படுத்தினாள் ருத்ராக்ஷி.

“அந்த ஆடி அழைப்பு அன்னைக்கு நீயும், உங்க வீட்டில் இருக்கனும். அதே மாதிரி, எங்களோட என் பொறந்த வீட்டுக்கு வந்துட்டுப் போகனும் மா. இதான் என்னோட ரிக்வெஸ்ட்!” என்று அவளிடம் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டாள் மஹாபத்ரா.

அதில் சற்று தடுமாறிப் போய் விட்டவளோ,”நான் அங்கே வரனுமா? ஏன் இப்படி அண்ணி?” என்று அவளிடம் வினவினாள் அவளது நாத்தனார்.

“ப்ளீஸ் ம்மா‌” எனத் தன்னிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தவளிடம்,

“இப்படி ப்ளீஸ் போட்டுக் கேட்கிற அளவுக்கு அங்கே ஏதாவது நடந்துச்சா அண்ணி?” என்று ஐயத்துடன் கேட்டாள் ருத்ராக்ஷி.

“உன்னைப் பார்க்கனும்னு உங்க அண்ணன் ரொம்ப ஆசைப்பட்றார் ம்மா! அதான்” என்று திக்கித் திணறிக் கூறினாள் மஹாபத்ரா.

“ஆஹான்! அப்படி போகுதா கதை?” என அவளைக் கிண்டல் செய்தாள் அவளுடைய நாத்தனார்.

“ஹிஹி! ஆமாம் டா. எனக்காக கொஞ்சம் மனசு வை!” என்று அவளிடம் அசடு வழிய சொன்னாள் காஷ்மீரனுடைய மனைவி.

“உங்க மூனு பேருக்காகவும் கண்டிப்பாக ஊருக்கு வந்துட்றேன் அண்ணி” என்று கூறிப் புன்னகைத்தாள் ருத்ராக்ஷி.

“நீ இங்கே வர்றது அவருக்குத் தெரிய வேண்டாம் டா” என்று தன் நாத்தனாரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டாள் மஹாபத்ரா.

“ஓகே அண்ணி. நான் உங்களுக்குப் பிராமிஸ் பண்றேன்” என்று கூறியதும்,

“தாங்க்ஸ் ம்மா” என அவளுக்கு நன்றி தெரிவித்தாள் அவளது அண்ணனின் மனைவி.

“அச்சோ! இட்ஸ் ஓகே அண்ணி” என்றவள், சில மணித்துளிகள் அவளுடன் பேசி விட்டு நூலக வேலையைப் பார்க்கப் போய் விட்டாள் காஷ்மீரனின் தங்கை.

தன்னுடைய கணவனின் மகிழ்ச்சிக்காக இதைச் செய்து முடித்ததில் தனக்குள்ளேயும் சந்தோஷம் படர்வதை உணர்ந்தாள் மஹாபத்ரா.

அதை அவனிடம் வெளிப்படுத்தும் நோக்கம் எல்லாம் அவளுக்கு இல்லை.

அவனது சந்தோஷம் தனக்கும் நிம்மதியைத் தந்தால் போதும் என்று நினைத்துக் கொண்டாள் காஷ்மீரனின் மனைவி.

தன் அண்ணிக்கு உறுதி அளித்ததைப் போலவே, தன்னிடம் பயிற்சி பெறும் பெண்களிடம், தான் ஊருக்குச் செல்வதாக சொல்லி விட்டு, மிருதுளாவிடம் மட்டும் அதற்குரிய காரணத்தை மொழிந்தாள் ருத்ராக்ஷி.

“அவங்க சொல்றா மாதிரி அப்பப்போ ஊருக்குப் போயிட்டு வா ம்மா” என்று அவளுக்கு அறிவுரை வழங்கினார்.

“சரிங்க அக்கா. இப்போ அவங்க இன்னும் முணுமுணுப்பாங்களே!” எனவும்,

“அதெல்லாம் நானும், கவியக்காவும் சேர்ந்து எல்லாருக்கும் சொல்லிப் புரிய வச்சாச்சு ம்மா. அதனால், அவங்க எப்பவும் உன்னை எதுவும் சொல்லிட மாட்டாங்க” என்று அவளிடம் உறுதியாக கூறினார் மிருதுளா.

“அப்போ ஓகே அக்கா. உங்களுக்கும், அவங்களுக்கும் ரொம்ப தாங்க்ஸ்” என்றாள் ருத்ராக்ஷி.

“இருக்கட்டும் டா. நீ கிளம்பி ஊருக்குப் போயிட்டு வா” என்று அவளிடம் சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

அவளும் வழக்கம் போல, தனது உடைமைகளை அடுக்கிக் கொண்டாள்.

ஆடி அழைப்பிற்காக இன்னும் மூன்று நாட்களே இருந்த தருவாயில், ஏதாவது சந்தேகம் இருந்தால் தனக்கு அழைத்துக் கேட்டுக் கொள்ளலாம் என்று தன்னிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளும் பெண்களிடம் அறிவுறுத்தி விட்டுத், தான் இருந்த ஊரிலிருந்து சொந்த ஊருக்குக் கிளம்பத் தயாரானாள் ருத்ராக்ஷி.

தனது தங்கையை நினைத்து வாடுவதை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டிருந்தான் காஷ்மீரன்.

அதைப் பார்த்துக் கமுக்கமாகச் சிரித்தவாறே வளைய வந்தாள் மஹாபத்ரா.

“என்னம்மா ரொம்ப குஷியாக இருக்கிற மாதிரி தெரியுதே?” என்று அவளிடம் வினவினார் சந்திரதேவ்.

“அது ஒன்னுமில்லை மாமா! நான் ஆடிக்கு எங்க வீட்டுக்குப் போறேன்ல. அப்போ என் கூட உங்க மகனைத் தவிர இன்னொரு ஆளும் வந்து வழியனுப்பி வைக்கப் போறாங்க” என்று அவரிடம் பொடி வைத்துப் பேசினாள் அவரது மருமகள்.

“நம்ம வீட்டுக்குப் புதுசாக வரப் போறவங்க யாரது?” என்று கேட்டார் அவளது மாமனார்.

“புது ஆள் இல்லை மாமா? இந்த வீட்டுக்குப் பழக்கப்பட்டவங்க தான்!” என்று தன் மாமனாரிடம் கூறினாள் மஹாபத்ரா.

அவளது குறும்புப் புன்னகையைக் கண்டு சந்தேகப்பட்டு,”ருத்ரா வரப் போறாளா ம்மா?” என்று அவளிடம் வினவினார் சந்திரதேவ்.

“கண்டுபிடிச்சிட்டீங்களே மாமா!” எனக் கூறிச் சிரித்தாள் அவருடைய மருமகள்.

“அடடா! இது எப்படி சாத்தியம் ஆச்சு ம்மா?” என்று அவளிடம் வியந்து போய்க் கேட்டார் அவளது மாமனார்.

“நான் தான் அவகிட்டே ப்ளீஸ் பண்ணிக் கேட்டேன் மாமா. அதான், இங்கே வர்றதாக ஒத்துக்கிட்டா” என்று அவருக்கு விவரித்துக் கூறினாள் மஹாபத்ரா.

“ஏன் ம்மா? நீ அவளை ரொம்ப மிஸ் பண்றியா?” என்றார் சந்திரதேவ்.

“நான் மட்டுமில்லை மாமா. மூனு பேருமே ருத்ராவை மிஸ் செய்றோம் தானே?” என்று அவரிடம் கேட்டாள் காஷ்மீரனின் மனைவி.

“ம்ஹ்ம். அது நிஜம் தான் ம்மா” என்று அவளுக்குப் பதிலளித்தார் அவளுடைய மாமனார்.

“அதான், நம்ம வீட்டுப் பொண்ணை வர வைக்கப் போறேன் மாமா!” என அவருக்குத் தெரிவித்தாள் மஹாபத்ரா.

அவர்களது உரையாடல் நடந்து முடிந்த சில தினங்களில், ஆடி அழைப்பிற்கான முதல் நாளில் தனது வீட்டிற்குள் நுழைவதற்காக அதற்கு முந்தைய நாள் மாலையில் பேருந்தில் ஏறிப் பயணமானாள் ருத்ராக்ஷி.

-
தொடரும்
 
இன்னா மா மஹாபத்ரா சர்ப்ரைஸா ருத்ராக்ஷிய வர சொல்லிட்டு, அவ அப்பாக்கிட்ட நீயே சொல்லி வச்சிட்டீயே, அவருக்கும் உண்மைய சொல்லாம சர்ப்ரைஸ் பண்ணியிருக்கலாம். 😍😍😍😍😍😍😍
 
இன்னா மா மஹாபத்ரா சர்ப்ரைஸா ருத்ராக்ஷிய வர சொல்லிட்டு, அவ அப்பாக்கிட்ட நீயே சொல்லி வச்சிட்டீயே, அவருக்கும் உண்மைய சொல்லாம சர்ப்ரைஸ் பண்ணியிருக்கலாம். 😍😍😍😍😍😍😍
Husband ku matum surprise kuduka nenachita pola sis... Thank you so much ❤️
 
Top