Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 78

Advertisement

SHALU shalu

Well-known member
Member
இப்படியாக, நாட்கள் வேகமாக ஓடி விட, ஆடி மாதம் வந்து விட்டது.

அதனால், தங்களது மகளை அவளது புகுந்த வீட்டிலிருந்து, பிறந்தகத்திற்கு அழைத்து வர வேண்டிய சம்பிரதாயம் இருந்ததால்,

“ஆடி ஒன்னாம் தேதி நாம அங்கே போய் இரண்டு பேரையும் அழைச்சிட்டு வரனும் ங்க” என்று தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டார் கனகரூபிணி.

“அட! ஆமாம் மா. அவங்களுக்குத் துணி எடுத்துக் கொடுக்கனும்ல? முதல்ல மஹா கிட்டே பேசிட்டு, அப்பறம் சம்பந்திகிட்ட சொல்லுவோமா?” என்று மனைவியிடம் வினவினார் பிரியரஞ்சன்.

“சரிங்க‌. உங்க மகளுக்கு நீங்களே கால் பண்ணிக் கேளுங்க” என்று சொல்லி விட்டார் மஹாபத்ராவின் தாய்.

அவ்வாறு கூறியதைக் கேட்டவுடனேயே, மகளுக்கு அழைப்பு விடுத்து,”மஹா ம்மா” என்று அவளிடம் கனிவுடன் பேசினார் தந்தை.

“ப்பா! எப்படி இருக்கீங்க?” என்று அவரிடம் விசாரித்தாள் மகள்.

“நானும், உங்க அம்மாவும் ரொம்ப நல்லா இருக்கோம் டா. நீங்க மூனு பேரும் சௌக்கியமா?” என்று அவளிடம் கேட்டார் பிரியரஞ்சன்.

“எல்லாரும் நல்லா இருக்கோம் ப்பா” என்றவளிடம்,

“ஆடி மாசம் ஆரம்பிக்கப் போகுது டா. சோ, இன்னும் ஒரு மாசத்துக்கு நீ இங்கே தான் வந்து தங்கிட்டுப் போகனும்!” என்று மகளிடம் சொன்னார் அவளுடைய தந்தை.

“அது வேற இருக்கோ? ஓகே ப்பா. இதைப் பத்தி என்னோட மாமானார் கிட்டே பேசியாச்சா?” என்று அவரிடம் கேட்டாள் மஹாபத்ரா.

ஏனெனில், அவள் தனது அலுவலகத்தில் இருக்கும் போது தான், அவளுக்கு அழைத்திருக்கிறார் பிரியரஞ்சன். சிறிது நேரம் ஓய்வு எடுத்த இருந்ததால், அந்த அழைப்பை ஏற்று அவளால் பேச முடிந்தது. அதனால் தான், அவரிடம் இப்படி கேட்டிருந்தாள் மகள்.

“இல்லை ம்மா. உங்கிட்ட முதல்ல கேட்க நினைச்சோம்” என்று விவரித்துக் கூறினார் பிரியரஞ்சன்.

“சரிப்பா. அதுக்கு என்னென்ன சம்பிரதாயம் எல்லாம் இருக்கு?” என்று அவரிடம் வினவினாள் மஹாபத்ரா.

“உனக்கும், மாப்பிள்ளைக்கும், நாங்கத் துணி எடுத்துக் கொடுத்து அழைக்கனும் டா. அப்பறம் அதெல்லாம் நடக்கும் போது நீயே பார்த்து தெரிஞ்சுக்கலாம்!” என்றுரைத்து விட்டார் அவளுடைய அப்பா.

“அப்போ ஓகே ப்பா. அம்மா என்னப் பண்றாங்க? எங்கிட்டே பேசனும்னுக் கேட்காமல் அமைதியா இருக்கிறா மாதிரி தெரியுதே?” என்றாள் அவரது மகள்.

“இங்கே தான் இருக்கிறா. கொடுக்கிறேன் பேசு” என்று தன் மனைவியிடம் செல்பேசியைத் தந்தார் பிரியரஞ்சன்.

“ஹலோ” என்ற தன்னுடைய அன்னையின் குரலைக் கேட்டதும்,”ம்மா!” என்று உற்சாகத்துடன் பேசிய மகளிடம்,

“எப்படி டி இருக்கே?” என்று கேட்டவருக்குத் தகுந்த பதிலைக் கொடுத்தவளோ, அவரது நலனையும் விசாரித்துக் கொண்டாள் மஹாபத்ரா.

“அப்பா சொன்னது ஞாபகத்தில் இருக்குல்ல? உனக்கு வேறெதாவது சந்தேகம் இருக்குதா?” என்று அவளிடம் வினவினார் கனகரூபிணி.

“நினைவு இருக்கு ம்மா! டிரெஸ் எடுக்க எப்போ வரனும்?” என்று இடக்காகத் தன் தாயிடம் கேட்கவும்,

“நான் எந்த ஆர்டரும் போடப் போறது இல்லை ம்மா! நீயும், உன் புருஷனும் சேர்ந்து யோசிச்சு ஒரு நாளைச் சொல்லுங்க. அப்போவே போகலாம்” எனக் கூறி விட்டார் கனகரூபிணி.

“பார்றா! சரிம்மா‌. நாங்கப் பேசிட்டு சொல்றோம். அப்பறம் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் ஒரு விஷயத்தைச் சொல்லனும்ன்னு நினைச்சேன்” என்றவள், தனது மாமனார், அவரது அலுவலகத்திற்குத் தினமும் சென்று வருவதை தன் பெற்றோரிடம் விளக்கிச் சொல்லி முடித்தாள் மஹாபத்ரா.

“ஹேய்! ரொம்ப சந்தோஷம் மா!” என்று அவளிடம் தெரிவித்து விட்டுத், தன் மனைவியிடமும் இதைக் கூறினார் பிரியரஞ்சன்.

“நல்லது தான்!” என்றார் கனகரூபிணி.

“அதனால், நாங்க மூனு பேருமே ரொம்பவே பிஸி ஆக இருக்கோம் ப்பா!” என்று தன் தந்தையிடம் உரைத்தாள் அவரது மகள்.

“இருக்கட்டும் டா. உடம்பையும் பாத்துக்கோங்க” என்றவரிடம்,

“கண்டிப்பாக ஹெல்த்தைப் பாத்துக்கிறோம் ப்பா. எனக்கு இப்போ வேலை நேரம் வந்துருச்சு. நான் அப்பறம் பேசுறேன்” என்று அவரிடம் சொன்னாள் மஹாபத்ரா.

“நீ போய் வேலையைப் பாரும்மா” என்று அவளிடம் கூறி, அழைப்பைத் துண்டித்து விட்டு,”இப்போ சம்பந்தி கிட்டேயும், மாப்பிள்ளை கிட்டேயும் பேசனும் மா” எனத் தன்னுடைய மனையாளிடம் மொழிந்தார் பிரியரஞ்சன்.

“காஷ்மீரன் கிட்டே பேசிடுவோம் ங்க” என்று அவருக்கு யோசனை தந்தார் அவரது மனைவி.

“நானே பேசிடவா?” என்று கேட்க,

“சரிங்க. அவரோட அப்பாகிட்டேயும் நீங்களே விஷயத்தைச் சொல்லிடுங்க” என்றுரைத்து விட்டார் கனகரூபிணி.

உடனே காஷ்மீரனுக்கு அழைத்தவரோ, இது தான் விஷயம் என்று அவனிடம் உரைத்து விட்டு,

ஏற்கனவே அவனது மனைவிக்குக் கூப்பிட்டுப் பேசி விட்டதாகவும் கூறினார் பிரியரஞ்சன்.

“ஓகே மாமா. நான் மத்ததை எல்லாம் மஹாகிட்ட கேட்டுக்கிறேன்” என்று தன் மாமனாரிடம் சொல்லி விட்டான் காஷ்மீரன்.

“நீங்களும் ஆஃபீஸில் தான் இருக்கீங்களா மாப்பிள்ளை?” என்று அவனிடம் விசாரிக்கவும்,

“ஆமாம் மாமா. எங்க அப்பாவும் இந்த டைமில் ஆஃபீஸில் தான் இருப்பார்!” என்று அவரிடம் கூறிச் சிரித்தான் அவரது மருமகன்.

“அது தெரியுமே மாப்பிள்ளை” என்று சொல்லியவரோ, அந்த அழைப்பை வைத்து விட்டுச் சந்திரதேவ்விற்குக் கூப்பிட்டு, தங்களது மகளை ஆடிக்கு அழைப்பதைப் பற்றி மூன்றாவது முறையாகப் பேசிக் கலந்துரையாடினார் பிரியரஞ்சன்.

அதற்கு அவரும் சம்மதித்து, மகன் மற்றும் மருமகளைத் துணி எடுக்க அனுப்பி வைப்பதாக அவருக்கு வாக்கு கொடுத்து விட்டார் காஷ்மீரனின் தந்தை.

“தாங்க்ஸ் சம்பந்தி” என்று அவரிடம் கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தார் மஹாபத்ராவின் தந்தை.

“இன்னும் மூனு நாள் தான் இருக்குங்க. ரெடிமேட் துணியாகவே எடுத்து தந்துடலாம்” என்று கணவனிடம் கூறினார் கனகரூபிணி.

“ம்ம். மஹாவுக்குச் சுடிதார், மாப்பிள்ளைக்கு வேட்டி, சட்டை தானே? அப்பறம் என்னம்மா? நீ டென்ஷன் ஆகாதே!” என்று சொல்லி மனைவிக்கு ஆறுதல் அளித்தார் பிரியரஞ்சன்.

அதேபோலவே, அவர்களை அழைத்துக் கொண்டு, துணி எடுத்து விட்டு வந்தார்கள் மஹாபத்ராவின் பெற்றோர்.

அதன் பிறகான நாட்களில், தன்னுடைய தங்கையும் உடன் இருக்க வேண்டுமென்று எண்ணிய காஷ்மீரனோ, அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் வெளியே சொல்லவில்லை.

ஆனால், கணவனின் யோசனை நிறைந்த முகத்தைக் கண்டு கொண்டு அது எதற்காக இருக்கும் என்பதையும் அவனது மனைவி அறியாமல் இருப்பாளா? அவனுடைய மனக்குறையைக் களையத் தன்னாலான முயற்சியை மேற்கொள்ள முடிவு செய்தாள் மஹாபத்ரா.

- தொடரும்
 
மாப்பிள்ளைக்கு வேஷ்டி சட்டை வாங்கினா, மகளுக்கு சாரி வாங்கனும். அத விட்டுவிட்டு சுடிதாரும், வேஷ்டியும் நல்லாயிருக்கும்??? 🤔🤔🤔
 
மாப்பிள்ளைக்கு வேஷ்டி சட்டை வாங்கினா, மகளுக்கு சாரி வாங்கனும். அத விட்டுவிட்டு சுடிதாரும், வேஷ்டியும் நல்லாயிருக்கும்??? 🤔🤔🤔
Haha... avaluku pudichadha vangi kuduthutanga sis. Thank you so much ❤️
 
Top