Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 77

Advertisement

SHALU shalu

Well-known member
Member
தனக்கே உரித்தான கம்பீரத்துடன் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருந்தார் சந்திரதேவ்.

அவரது அறைக்குள் நுழைந்த காரியதரிசியோ,”வெல்கம் சார்! உங்களை ரொம்ப வருஷம் கழிச்சு ஆஃபீஸில் பார்க்கிறது எங்க எல்லாருக்கும் சந்தோஷமாக இருக்கு!” என்று அவரிடம் மனதார உரைக்கவும்,

“யெஸ் ரமேஷ்! எனக்கும் அதே ஃபீல் தான்! இனிமேல் என் பொண்ணோட கல்யாண வேலை ஸ்டார்ட் ஆகுற வரைக்கும் இப்படித் தான் டெய்லி இங்கே வந்துட்டுப் போவேன்!” என்று கூறிப் புன்னகைத்தார்.

“சூப்பர் சார். இன்னையோட அப்டேட்ஸ்ஸை உங்களுக்குச் சொல்லவா சார்?” என்றார் காரியதரிசி.

“ஓகே. அப்படியே ஏதாவது மீட்டிங் இருந்தாலும் சொல்லுங்க” என்றுரைத்தார் சந்திரதேவ்.

“ஷூயர் சார்” என்றவரோ, அன்றைய நாளிற்கான அனைத்து திட்டங்களையும் அவருக்குக் கூறி முடித்தார் காரியதரிசி.

“இதையெல்லாம் நான் நேராகவே வந்து சூப்பர்வைஸ் செய்றேன். அப்போ தான் நானும் கொஞ்சம் டச் விட்டுப் போனதை எல்லாம் மறுபடியும் தெரிஞ்சிப்பேன்” என்று சொல்லியவர், அடுத்த நிமிடமே தனது அறையிலிருந்து வெளியே வந்து

“இங்கே உங்க எல்லாருக்கும் வேலை செய்ய சௌகரியமாக இருக்கா? யாருக்கும் ஏதாவது குறை இருக்கா? அப்படி இருந்தால் கண்டிப்பாக சொல்லுங்க. நான் வீட்டில் இருந்த வரைக்கும் ரமேஷ் கிட்டே கேட்டுத் தெரிஞ்சிப்பேன். இப்போ நேரிலேயே வந்து கேட்கிறேன். எதுவாக இருந்தாலும் தயங்காமல் ஷேர் பண்ணுங்க” என்று அங்கே வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களிடம் தன்மையாகப் பேச்சுக் கொடுத்தார் காஷ்மீரனுடைய தந்தை.

“இங்கே வொர்க் பிரஷர் அவ்ளோவா இல்லை சார்” என்றவர்கள், தங்களுக்கான நியாயமான தேவைகளை மட்டும் அவரிடம் பகிர்ந்து கொண்டனர்.

“நான் இதையெல்லாம் கண்டிப்பாக செஞ்சுக் கொடுக்கிறேன். ஃப்ரீயாக வொர்க் செய்யுங்க” என்று அவர்களிடம் உரைத்து விட்டு மீண்டும் அறைக்குள் போய்,

“எத்தனை மணிக்கு மீட்டிங் இருக்கு ரமேஷ்?” என்று காரியதரிசியிடம் கேட்கவும்,

“லன்ச்சுக்கு அப்பறம் தான் சார்” என அவரும் கூறி விட,”அப்போ அந்த டைமில் பார்ப்போம். இப்போ போய் உங்க வொர்க்கைப் பாருங்க” என்று அவரை அனுப்பி வைத்து விட்டு டேபிளில் இருந்த கணினியை இயக்கத் தொடங்கி விட்டார் சந்திரதேவ்.

அந்த ஒரு நாளிலேயே அலுவலகத்தைப் பற்றிய அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொள்ள முடியாது தான்! அதனால், கொஞ்சம், கொஞ்சமாக அதைச் செய்து கொண்டு இருந்தார்.

தேநீர் இடைவேளைகளின் போதெல்லாம் அலுவலகத்தைச் சுற்றிப் பார்த்தவர், கேன்டீனிற்கும் சென்று வருவார் சந்திரதேவ்.

அதிலேயே மணித்துளிகள் பல கடந்து விட, மதிய உணவு நேரமும் வந்து விட்டிருந்தது.

அவரது அலுவலக ஊழியர்களைப் பொருத்தவரையில், அவர்கள் தங்களது வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து உண்ணலாம் அல்லது கேன்டீனில் விநியோகம் செய்யும் சாப்பாட்டையும் தாராளமாக வாங்கி உண்ணலாம். அதுவும், உப்பு, உறைப்பு இன்றி சப்பென்று இல்லாமல் தரமான உணவுகளாகத் தான் இருக்கும் என்பதால், பலதரப்பட்ட ஊழியர்கள் இந்த உணவைத் தான் மதியத்திற்கு உண்டு கொள்வர்.

தானும் அவர்களுடன் சேர்ந்து கேன்டீன் உணவையே சுவைத்துச் சாப்பிட்டார் சந்திரதேவ்.

அதற்குப் பிறகு தான், தொழில் சம்பந்தமான சந்திப்பு நிகழப் போவதால், அதற்காகத் தனது அறையில் தயாராகிக் கொண்டிருந்தார்.

“எக்ஸ்கியூஸ் மீ சார்!” என்று அவரது அறைக் கதவைத் தட்டி விட்டு வெளியே நின்று காத்திருந்தார் அவருடைய காரியதரிசி.

“யெஸ் கமின் ரமேஷ்” என்று அவருக்கு உள்ளே வர அனுமதி அளித்தார் சந்திரதேவ்.

“மீட்டிங்கிற்கு ரெடி பண்ணிடலாமா சார்?” என்று அவரிடம் விண்ணப்பித்தார்.

“ம்ம். நானும் தயார் ரமேஷ்” என்று அவருக்கு ஒப்புதல் அளித்தார் காஷ்மீரனின் தந்தை.

அவர்களது கம்பெனியின் நட்பு பாராட்டும் அலுவலக உரிமையாளர்கள், யாவரும் அவரது வருகையை அறிந்தவுடன் மேலும் ஆர்வத்துடன் அன்றைய சந்திப்பிற்காக காத்திருந்தார்கள்.

அவர்கள் அமர்ந்திருந்த அறைக்குள் நுழைந்தார் சந்திரதேவ்.

உடனே அங்கேயிருந்து அனைத்து உறுப்பினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அவர்களுக்கு நன்றி கூறி விட்டுத் தன்னுடைய அலுவலகத்தில் இனிமேல் செய்யப் போகும் மாற்றங்களை அவர்கள் அனைவரிடமும் தெரிவித்து முடித்தார் சந்திரதேவ்.

“எல்லா பிளான்ஸூம் சூப்பராக இருக்கு சார். இதையே நாம ஃபிக்ஸ் பண்ணிடலாம்” என எல்லாரும் ஒரு மனதாக சம்மதித்து விட்டார்கள்.

பிறகு, தனக்கு அண்டையில் இருக்கும் அலுவலக உறுப்பினர்களிடமும் அவர்களுடைய திட்டங்களைப் பற்றிக் கேட்டறிந்து கொண்டார் காஷ்மீரனுடைய தந்தை.

“எல்லாத்தையும் சுமூகமாக செய்திடலாம்” என்றுரைத்து விட்டு அவர்களிடமிருந்து முறையாக விடைபெற்றுக் கொண்டு அவர்களையும் மரியாதையாக அனுப்பி வைத்து விட்டு வந்தார் சந்திரதேவ்.

இவற்றையெல்லாம் ஒரு குறிப்பாக சேமித்துக் கொண்டு அதை தன்னுடைய மின்னஞ்சலில் சேமித்துக் கொண்ட பிறகு, அன்றைய அலுவலக நேரம் முடிந்து விட்டதென்று, அங்கேயிருந்து அனைவரிடமும் சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்பி போனார்.

தன் மகனிடமும், மருமகளிடமும் இந்த அனுபவங்களை எல்லாம் ஒன்று விடாமல் பகிர்ந்து கொண்டார் சந்திரதேவ்.

“நானும் இன்னைக்கு ஒரு ஸ்டூடண்ட்டுக்குக் கவுன்சிலிங் கொடுத்ததைப் பத்தி அவளோட பேரன்ட்ஸ் கிட்டே டிஸ்கஸ் செய்தேன்!” என்றவாறு தன்னுடைய கதையையும் அவர்களிடம் உரைத்து விட்டாள் மஹாபத்ரா.

“வாவ்! அப்போ நானும் சொல்லுவேன். நிறைய குழந்தைகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் எல்லாமே வித்துப் போகுது. இன்னைக்கு மட்டுமே ப்ராஃபிட் ரொம்பவே அதிகமாக இருந்துச்சு. இன்னொரு பிரான்ச்சை ஓபன் பண்ணாலும் நல்லாவே பிக்கப் ஆகும்!” என்று அவர்கள் இருவருக்கும்
விவரித்துக் கூறினான் காஷ்மீரன்.

இதுவே இந்த மூவருக்கும் தினசரி வாடிக்கையாகி விட்டது.
_______________________

“என்னப்பா? ருத்ராக்ஷி பொண்ணு ஏதாவது சொன்னாளா?” என்று தன் மகனிடம் வினவிக் கொண்டு இருந்தார் கவிபாரதி.

அவர்களது சம்பாஷணைகளை அவன் வாயிலாக கேட்டறிந்த பின்னர், அவருக்கு ஆர்வம் தாளவில்லை.

அதனால் தான், இந்தக் கேள்வியை அவனிடம் கேட்டார் அவனுடைய தாய்.

“இல்லை ம்மா. அவங்க ஊருக்குப் போய் அப்பா கிட்டேயும், அண்ணா கிட்டேயும் இதைப் பத்திப் பேசிட்டு என்கிட்ட சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்” என்று அவரிடம் கூறினான் ஸ்வரூபன்.

“ஓஹோ! நானும் வகுப்பில் இருக்கும் போதெல்லாம் அந்தப் பொண்ணோட முகத்தையே தான் பார்க்கிறேன். ஆனால், எந்தப் பாவனையையும் காட்டாமல் பாடத்தை மட்டும் சொல்லிக் கொடுத்துட்டுப் போறா! அதான், உங்கிட்ட கேட்டேன்” என்றார் கவிபாரதி.

“நாங்கப் பேசிக்கிட்டதை உங்ககிட்ட சொல்லிட்டேன்னு அவங்களுக்கு இன்னும் தெரியாது ம்மா” என்று அவரிடம் தெரிவித்தான் அவரது மகன்.

“அப்படின்னா சரிப்பா. அவங்க வீட்டிலிருந்து நம்மகிட்ட பேச வரும் போது பாத்துக்கலாம்” என்று அவனிடம் கூறி முடித்து விட்டார் அவனது அன்னை.

-
தொடரும்
 
அது எப்படிங்க கவிபாரதி மா. முதலில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான பொண்ணு கேட்க போவாங்க. இங்க நீங்க பொண்ணு வீட்டுல இருந்து வரட்டும் பார்த்துக்கலாம்னு சொல்றீங்க.🤔🤔🤔
 
அது எப்படிங்க கவிபாரதி மா. முதலில் மாப்பிள்ளை வீட்டில் இருந்து தான பொண்ணு கேட்க போவாங்க. இங்க நீங்க பொண்ணு வீட்டுல இருந்து வரட்டும் பார்த்துக்கலாம்னு சொல்றீங்க.🤔🤔🤔
முதல்ல அவங்க இருக்கிற ஊருக்கு எல்லாரும் வந்துரட்டும் சிஸ். அப்பறம் முறையாகப் பொண்ணுப் பார்க்கப் போவாங்க. தாங்க்யூ சோ மச் ❤️
 
Last edited:
Top