Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 76

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அதன் பின்னர், மாலையில் வீடு வந்து சேர்ந்த தன் மகன் மற்றும் மருமகளிடமும் விஷயத்தைப் பகிர்ந்தார் சந்திரதேவ்.

ருத்ராக்ஷியைப் போலவே, இந்த முடிவைக் கேட்டதும், அவ்விருவரும் அவரைப் பாராட்டினார்கள்.

“என்னோட பிரான்ச்சுக்கே நீங்க வரலாமே ப்பா?” என்று அவரிடம் வினவினான் காஷ்மீரன்.

“இல்லை ப்பா. அங்கே என்னால் உன்னோட வேலை பாதிக்கும். நான் வேற பிரான்ச்சுக்குப் போறேன்” என்று மகனிடம் தெரிவித்தார் சந்திரதேவ்.

“ஓகே ப்பா” என்று அவருடைய விருப்பத்திற்கே விட்டு விட்டான் அவரது புத்திரன்.

“நீங்க வேணும்னா என்னோட ஸ்கூலுக்கும் வந்து எங்களோட கவுன்சிலிங்கையும் பாருங்க மாமா” என்று அவரைத் தான் வேலை பார்க்கும் பள்ளிக்கு வருமாறு அழைத்துப் பார்த்தாள் மஹாபத்ரா.

“இருக்கட்டும் மா. அங்கே நீ வேலை பார்க்கிற நான் வர்றதால் ஏதாவது பிரச்சனை ஆகிட கூடாது!” என்று அவளிடமும் மறுத்து விட்டார் சந்திரதேவ்.

“சரிங்க மாமா. உங்க இஷ்டம். எப்போதிலிருந்து ஆஃபீஸூக்குப் போகப் போறீங்க?” என்று அவரிடம் கேட்டாள் அவரது மருமகள்.

“நாளையிலிருந்தே போகலாம்னு முடிவு செய்திருக்கேன் ம்மா” என்று அவளிடம் சொன்னார் அவளது மாமனார்.

“சரிப்பா. எந்தப் பிரான்ச்சுன்னு என்கிட்ட நைட் சொல்லிடுங்க. நான் இயர்லி மார்னிங் அங்கே இருக்கிற மேனேஜர் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிடறேன்” என்றுரைத்தான் காஷ்மீரன்.

அதற்குச் சம்மதம் தெரிவித்த அவனது தந்தையோ,

“நம்மப் பொண்ணுக்கும், அந்தப் பையனுக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை! அப்போ, ஒரு பத்து நாளுக்கு அப்பறம் கல்யாணப் பேச்சை எடுத்துடலாமா?” என்று இப்போது ருத்ராக்ஷி மற்றும் ஸ்வரூபனைப் பற்றிய பேச்சைத் தொடங்கினார்.

“முதல்ல ருத்ராக்ஷியை நேரில் வர வச்சு விஷயத்தைக் கிளியர் ஆகப் பேசிட்டு அப்பறமாக அவங்ககிட்ட பேசுவோமே மாமா?” என்றாள் மஹாபத்ரா.

“அதைத் தான் செய்யப் போறோம் மா. முதல்ல ருத்ராக்ஷி ஊருக்கு வரும் போது அவகிட்ட எல்லாத்தையும் கேட்டுக்குவோம்” என்று அவளுக்கு உறுதி அளித்தார் சந்திரதேவ்.

இரவு உணவை உண்பதற்குள், அடுத்த நாள் தான் செல்லப் போகும் அலுவலகத்தின் கிளையைப் பற்றித் தனது வேலையில் மூழ்கியிருந்த தனது மகன் காஷ்மீரனிடம் கூறி விட்டார் அவனது தந்தை.

அடுத்த நாளே, மகன் மற்றும் மருமகளுடன் சேர்ந்து தானும் குளித்து தயாராகி விட்டிருந்தார் சந்திரதேவ்.

“நானே உங்க ரெண்டு பேரையும் டிராப் செஞ்சிடறேன்” என்று அவர்களிடம் கூறி, இருவரையும் தனது மகிழுந்தில் ஏறுமாறு கேட்டுக் கொண்டான் காஷ்மீரன்.

முதலில் தனது மனைவி மஹாபத்ராவை அவள் வேலை செய்யும் பள்ளியில் இறக்கி விட்டவன், பிறகு, தன் தந்தையை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கே இறங்கச் சொல்லி விட்டுத் தன்னுடைய வேலைக்குப் போனான்.

தங்களது அலுவலக அறைக்குள் வந்த மஹாபத்ராவிடம்,”உன்னோட ஹஸ்பெண்ட்டோட காரில் தானே வந்த?” என்று வினவினாள் நவ்யா.

“ஆமாம். அது உனக்கு எப்படி தெரியும்?” என்றவளிடம்,

“இங்கேயிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தேன். அவரை உள்ளே கூப்பிட்டு இருக்கலாமே?” என்றாள் அவளுடைய தோழி.

“எங்க கூட என்னோட மாமனாரும் வந்தார். இரண்டு பேருக்குமே ஆஃபீஸூக்கு லேட் ஆச்சு. அதான், உடனே கிளம்பிட்டாங்க. நெக்ஸ்ட் டைம் இரண்டு பேரையுமே இங்கே கூட்டிட்டு வர்றேன்” என்று அவளுக்கு விளக்கிக் கூறினாள் மஹாபத்ரா.

“ஓகே” என்று கூறி விட்டுத் தாங்கள் தற்சமயம் கருத்துரை வழங்கிக் கொண்டு இருக்கும் மாணவ, மாணவியருடைய பெற்றோர்களை வரவழைத்து இருந்ததால், அவர்களது மகன் மற்றும் மகளைப் பற்றிய குறிப்புகளை அவர்களிடம் விவரிக்கத் தொடங்கினார்கள்.

“மேம்! எங்கிட்ட உங்கப் பொண்ணோட ரிப்போர்ட் ஹார்ட் காப்பியாக (hard copy) இருக்கு. இதை முதல்ல வாங்கிப் படிச்சுப் பார்க்கிறீங்களா? இல்லைன்னா, நானே எல்லாத்தையும் உங்களுக்கு டீடெயில் ஆகச் சொல்லவா?” என்று அவர்களிடம் நிதானமாக வினவினாள் மஹாபத்ரா.

“இதை எங்களுக்கு ஒரு காப்பி தருவீங்களா மேம்?” என்று அவர்கள் வினவவும்,

“நம்ம டிஸ்கஷன் முடிஞ்சதும் கண்டிப்பாக தருவோம்” என்றவுடன்,

“அப்போ நம்ம டிஸ்கஷனை ஸ்டார்ட் பண்ணலாம் மேம். இதை நாங்க வீட்டுக்குப் போய்ப் பொறுமையாக வாசிச்சுப் பார்த்துக்கிறோம்” எனக் கூறினார்கள் அந்த மாணவியின் பெற்றோர்.

“ஓகே” என்றவளோ, சிந்துஜா என்ற மாணவியிடமிருந்து தான் தெரிந்து கொண்ட, அவளது மனக் குறைகளை எல்லாம் அவளுடைய பெற்றோரிடம் சொல்ல ஆரம்பித்தாள் மஹாபத்ரா.

“கொஞ்ச நாளாகவே, உங்க மகளுக்குப் படிப்பில் கவனம் இல்லைன்னு நீங்களும், அவளோட கிளாஸ் டீச்சரும் சொன்னீங்க தானே?” என்று கேட்கவும்,

“யெஸ் மேம்” என ஒப்புக் கொண்டனர் சிந்துஜாவின் பெற்றோர்.

“அதுக்குக் காரணமே நீங்களும், உங்களோட பொறுப்பில்லாத தன்மையும் தான்!” என்றுரைத்தாள்.

“வாட்! நாங்களா? என்னப் பொறுப்பில்லாமல் நடந்துக்கிட்டோம்?” என்று அவ்விருவரும் சினத்துடன் வினவினார்கள்.

“ரிலாக்ஸ் ங்க! நீங்க என்ன தான் கோபப்பட்டாலும் நான் சொல்றது உண்மை மேம்!” என்று அவர்களிடம் உரைத்தாள் மஹாபத்ரா.

“அது எந்த விதத்திலேன்னு நீங்க சொன்னால் நல்லா இருக்கும்!” என்று அவளிடம் கேட்டார் அந்த மாணவியின் தாயார்.

“அவளுக்கு மொபைலில் கேம் விளையாட்றது ஒரு பொழுதுபோக்கு தானே?” என்று வினா எழுப்பியவளிடம்,

“ஆமாம் மேம்” என்று பதில் சொன்னார் சிந்துஜாவின் அன்னை.

“அது தான், அவளது கவனத்தைப் படிப்பில் இருந்து திசை திருப்புது. சும்மா உன்னோட ஹாபி (hobby) என்னன்னுக் கேட்டால் இதைத் தான் ஆர்வமாக சொல்றா! அப்போ, அவகிட்ட மொபைலைக் கொடுத்த உங்களைத் தானே நான் காரணம்னு சொல்ல முடியும்!” என்று அவர்களுக்குப் பொறுமையாக விளக்கினாள் மஹாபத்ரா.

“நாங்க அவளுக்குன்னுத் தனியாக மொபைல் வாங்கித் தரவை மேம். என்னோடது இல்லைன்னா, இவங்களோடதை எடுத்து கேம் விளையாடிட்டு இருந்தால் நாங்களும் கண்டிச்சிட்டு இருந்தோம் தான்! ஆனாலும் அதை மாத்திக்க மாட்டேங்கிறா! இப்போ என்னப் பண்றது?” என்று அவளிடம் கூறினார் அந்த மாணவியின் தந்தை.

“உங்க நிலைமையும் எனக்குப் புரியுது ங்க. ஆனால் உங்களோட மொபைல் அண்ட் லேப்டாப்பையும் ஆஃபீஸ் ரூமில் மட்டும் யூஸ் பண்றா மாதிரி வச்சுக்கோங்க. அப்பறம், அவளுக்காக டைம் ஒதுக்குங்க. இன்டோர் அண்ட் அவுட்டோர் கேம்ஸ் நிறைய இருக்கு. அதை உங்கப் பொண்ணு கூட சேர்ந்து விளையாடுங்க. அதை விட்டுட்டு இப்படியே, அவ கேம் விளையாடிக்கிட்டு இருந்தால் கண்டிப்பாக கண்ணும், மூளையும் ரொம்பவே பாதிக்கும். அதனால் அவளுக்கும், உங்களுக்கும் தான் கஷ்டமாக இருக்கும்!” என்று அவர்களுக்குத் தனது அறிவுரைகளை வழங்கி முடித்தாள்.

“சரிங்க மேம். நீங்க சொல்றதை செய்றோம். எங்களுக்கு எங்கப் பெண்ணோட ஹெல்த் தான் முக்கியம்!” என்று அவளிடம் தெரிவித்தவர்களைத் கண்டு திருப்தியுடன் புன்னகைத்து விட்டு, அவர்களது மகள் சிந்துஜாவைப் பற்றிய தகவல்கள் அடங்கிய தாள்களின் நகல் ஒன்றை இருவரிடமும் கொடுத்து அனுப்பி வைத்தாள் மஹாபத்ரா.

வெகு வருடங்கள் கழித்து, அன்றைய தினம், தனது அலுவலகத்திற்குச் சென்ற சந்திரதேவ்வை அங்கிருந்தவர்கள் மரியாதையாக வரவேற்றனர்.

தானும் அவர்களுக்கு வணக்கம் வைத்து விட்டு அலுவலக அறைக்குப் போய் விட்டார் காஷ்மீரனுடைய தந்தை.

- தொடரும்
 
இந்த பிரச்சினை இன்னைக்கு எங்க வீட்டிலயும் நடந்தது. மகன் கிட்ட Board exam முடிஞ்ச பிறகு mobile use பண்ண சொல்லி சொன்னதுக்கு நான் game அடுத்த level முடிச்சிட்டா full concentrate பண்ணி படிப்பேன். இல்லனா game பத்தி தான் யோசிச்சிட்டு இருப்பேன்னு சொல்றான்.😒😒😒😒😒
 
இந்த பிரச்சினை இன்னைக்கு எங்க வீட்டிலயும் நடந்தது. மகன் கிட்ட Board exam முடிஞ்ச பிறகு mobile use பண்ண சொல்லி சொன்னதுக்கு நான் game அடுத்த level முடிச்சிட்டா full concentrate பண்ணி படிப்பேன். இல்லனா game பத்தி தான் யோசிச்சிட்டு இருப்பேன்னு சொல்றான்.😒😒😒😒😒
அதிகமாக மொபைல் யூஸ் செய்ய விடாதீங்க சிஸ். அப்பறம் அதுவே பழக்கமாகிடும். அதிலிருந்து குழந்தைகளை விடுவிக்கிறது ரொம்பவே கஷ்டமாகிடும்... டேக் கேர் ஆஃப் ஹிம்... தாங்க்யூ சோ மச் சிஸ் ❤️
 
Last edited:
Top