Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 75

Advertisement

SHALU shalu

Well-known member
Member
அதில் கூரான பார்வையைத் தனக்கு உரித்தாக்கிக் கொண்டு அவளை ஏறிட்டான் காஷ்மீரன்.

அதைக் கண்டு எச்சில் விழுங்கியவாறே,”உங்களோட தங்கச்சி ருத்ராக்ஷி இங்கே இல்லை, அப்பறம் அவங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நினைச்சுட்டு எங்கிட்ட இருந்து தள்ளி இருக்கனும்னு முடிவு செஞ்சு, என்னை இப்படி தவிக்க விட்டுட்டு இருக்கீங்களோன்னு தோனுது ங்க!” என்று சொன்னவளை அடிபட்டப் பார்வை பார்த்தான் அவளுடைய கணவன்.

அதைக் கேட்டதும் சீற்றம் கொண்ட விழிகளுடன் அவளை உறுத்து நோக்கியவன்,”ப்ச்! என்னப் பத்தி ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கிற மஹா!” என்று கொஞ்சம் சினமும், கொஞ்சம் ஆற்றாமையும் தோய்ந்த வார்த்தைகளை வெளிப்படுத்தினான் காஷ்மீரன்.

“அச்சோ! என்னை மன்னிச்சிருங்க!” என்று அவனது வருத்தத்தைத் தாங்க இயலாமல் உரைத்தாள் மஹாபத்ரா.

“ம்ஹூம்! உன்னோட பயம் எனக்குப் புரியுது ம்மா” என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு கூறினான்.

“பயம்ன்னு இல்லைங்க. ஒரு ஏமாற்றம் தான்!” என அவனுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தாள் மனைவி.

“என்ன? நான் இதுவரைக்கும் உன்னை எந்த விஷயத்திலாவது ஏமாத்தி இருக்கேனா?” என்று குழப்பத்துடன் அவளிடம் வினவினான் காஷ்மீரன்.

“ஐயையோ! நீங்க வேறெதையும் கற்பனை செய்துடாதீங்க! நீங்க எனக்குச் சரியாக டைம் ஒதுக்கலைன்னு தான் நான் சொல்ல வந்தேன்” என்று தன் கணவனிடம் பதறிப் போய்க் கூறினாள் மஹாபத்ரா.

“அதை நீ அப்போவே சொல்லிட்ட ம்மா. என்ன தான், எனக்குத் தங்கச்சி மேலே பாசம் இருந்தாலும், அவளுக்காக கண்மூடித்தனமாக மத்தவங்களை ஒதுக்கி வைக்கிற பழக்கம் எனக்கு இல்லவே இல்லை! இனிமேலும் உனக்கு இப்படியொரு யோசனை இருந்தால் அதை மனசில் இருந்து முழுமையாக அழிச்சிரு!” என அவளிடம் அழுத்தமாக வலியுறுத்தினான் அவளது கணவன்.

“நிச்சயமாக அப்படி எந்த ஒரு யோசனையும் இனிமேல் எனக்குத் தோனாது ங்க! ஒருவேளை, நமக்கு அரேன்ட்ஜ் மேரேஜ் நடந்ததால் கூட எனக்கு இந்த மாதிரி தாட் வந்து இருக்கலாம்!” என்று அவனுக்குத் தெளிவுபடுத்தினாள் பெண்ணவள்.

“அப்படியும் இருக்கலாம் மா. ஏன்னா, நாம கண்டிஷன்ஸ் போட்டுட்டுக் கல்யாணம் செய்துக்கிட்டாலும் கூட சில சமயத்தில், அதையெல்லாம் ஃபாலோவ் செய்ய முடியாத மாதிரியான சுவிட்சுவேஷன் வந்துருது! அதுக்காக அதை நான் நியாயப்படுத்த மாட்டேன். ஆனால், இதுக்கப்புறம் இப்படி நடக்காதுன்னு உனக்குப் பிராமிஸ் செய்றேன்!” என்று அவளிடம் வாக்கு அளித்தான் காஷ்மீரன்.

“ஆமாங்க. அதனால் தான், எனக்கும் புத்திக் கேட்டுப் போச்சு போல!” என்று தன்னையே நொந்து கொண்டாள் மஹாபத்ரா.

“அப்படியெல்லாம் இல்லை டா. உன்னோட எமோஷன்ஸூம், என்னோட எமோஷன்ஸூம் ரொம்பவே முக்கியம்! அதை எப்படி ஹேண்டில் பண்றோம்ன்றதுல தான், நம்மளோட கல்யாண வாழ்க்கையே‌ முழுமை அடையுது!” என்று அவளுக்கு அறிவுறுத்தினான் அவளுடைய மணாளன்.

“எஸ் கரெக்ட் ங்க!” என்றவளிடம்,

“நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் உங்கிட்ட நடந்துக்கிட்டது, உன்னைக் கஷ்டப்படுத்தி இருந்தால், என்ன மன்னிச்சிரு ம்மா!” என்று தன்னவளிடம் மனதார வேண்டிக் கேட்டுக் கொண்டான் காஷ்மீரன்.

“ஹேய்! ப்ளீஸ் ங்க! நான் தான், உங்களைத் தப்பா நினைச்சதுக்கு சாரி கேட்கனும்!” என்றவளுடைய இளஞ்சிவப்பு நிறத்திலான உதடுகளைச் சிறை பிடித்துக் கொண்டவன், ஒரு சில நிமிடங்களுக்கு அதிலேயே மூழ்கிப் போய் விட்டான் அவளது காதல் கணவன்.

அவனது தோள்களை அழுத்திப் பிடித்துக் கொண்டு தன் காதலை அவனுக்குள் கடத்தும் வேலையைச் செய்தாள் மஹாபத்ரா.

மெல்லத் தங்களது இதழ்களைப் பிரித்தெடுத்துக் கொண்டவர்கள், அடுத்தது, இவ்வளவு நாட்களாக தங்களுக்குள் இருந்த ஊடலை நேர் செய்து கொள்ள முடிவெடுத்து, கவிதைகளைத் துறந்து, உணர்வுகளையும், காதலையும் பகிரத் தொடங்கி விட்டார்கள் இருவரும்.

அவர்களுக்குள் இருந்த பிணக்குகள் தீர்ந்து விட்டதால், அன்றைய இரவு முழுவதும் நீண்டு கொண்டே போய் விட்டது.

காலையில் நேரம் கடந்து தான் இருவருமே எழுந்தார்கள்.

அதையெல்லாம் விகற்பமாக எண்ணாமல், தன் மகன் மற்றும் மருமகள் எப்போது மாடியிலிருந்து இறங்கி வந்தாலும் புன்னகை முகமாகவே அவர்களை வரவேற்பார் காஷ்மீரனின் தந்தை.

இப்போதும் அப்படித் தான், அவர்களைக் அழைத்துக் காஃபி பருகச் சொல்லி உபசரித்தார் சந்திரதேவ்.

அதேபோலவே, தாங்களும் அவரிடம் புத்துணர்ச்சியுடன் அளவளாவி விட்டு தத்தமது வேலைக்குப் போனார்கள் காஷ்மீரன் மற்றும் மஹாபத்ரா.

மகனும், மருமகளும் அலுவலகத்திற்குச் சென்ற பிறகு வீட்டினுள் அடைந்து கிடப்பது ஒரு மாதிரியாகவே இருந்தது அவருக்கு.

இதற்கு முன்னரும் கூட, தனது குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை விற்கும் கம்பெனிக்குச் சென்று விடுவான் காஷ்மீரன். அதே மாதிரி, தான் தங்கி இருக்கும் ஊரை விட்டு வரவே மாட்டாள் அவருடைய இளைய மகள் ருத்ராக்ஷி.

அந்தச் சமயங்களிலும் கூட, தனது ஓய்வு நாட்களும், நேரங்களும் வீணாக செலவாகிக் கொண்டிருப்பதை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு தான் இருந்தார் சந்திரதேவ்.

இப்போது அந்தக் கவலை அதிகமாகி விட்டது எனலாம்!

‘நாமளும் பேசாமல் நம்மளோட கம்பெனிக்குப் போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்துட்டு வரலாமா?’ என்று சிந்தனை செய்தவர், அதை மாலையில் வீட்டுக்கு வரும் மகன் மற்றும் மருமகளிடமும் கூறி விட முடிவு செய்து அவர்களுக்காக காத்திருந்தார்.

அவர்களிடம் கூறுவதற்கு முன்னர், தன் மகளிடம் இவ்விஷயத்தைச் சொல்லி விடலாம் என்று ருத்ராக்ஷிக்குச் செல்பேசியில் அழைப்பு விடுத்தார் சந்திரதேவ்.

“ஹலோ ப்பா!” என்று உற்சாகம் பொங்க அவரிடம் பேசினாள் மகள்.

“ஹாய்‌ ம்மா” என்று கூறி அவளது நலனை விசாரித்தார் தந்தை.

தானும் அவருடைய உடல்நலத்தைக் கேட்டறிந்து கொண்டாள் ருத்ராக்ஷி.

“நம்மளோட ஏதாவது ஒரு கம்பெனிக்குப் போய் டெய்லி சூப்பர்வைஸ் பண்ணிப் பார்க்கலாமான்னு எனக்கு ஆசை வந்துருச்சு ம்மா!” என்றார் சந்திரதேவ்.

“வாவ்! செம்ம ஐடியா ப்பா! நானே இதை உங்ககிட்ட சொல்லலாம்னு இருந்தேன். உங்களுக்குப் பிடிச்ச பிரான்ச்சுக்குப் போயிட்டு வாங்க” என்று அவருக்கு யோசனை கூறினாள் அவரது மகள்.

“சூப்பர் ம்மா!” என அவளைப் பாராட்டியவர், அவ்வூரில் அவளுக்கு ஏதாவது குடைச்சல் இருக்கிறதா? என்று வினவிப் பார்த்தார் ருத்ராக்ஷியின் தந்தை.

“இங்கேயா? அப்படி எதுவுமே இல்லை ப்பா. நான் சுதந்திரப் பறவையாக ஜாலியாக சுத்திட்டு இருக்கேன்!” என்று அவரிடம் உரைத்தாள்.

“அப்போ சரிம்மா” என்று சிறிது நேரம் அவளுடன் பேசி விட்டு வைத்தார் சந்திரதேவ்.

அவளை ஸ்வரூபன் எதுவும் தொல்லை செய்கிறானா? அல்லது அவனுடைய அன்னை திருமணத்தைப் பற்றி அவளிடம் வலியுறுத்துகிறாரா? என்பதை தெரிந்து கொள்ளத் தான், அவர் தன் மகளிடம் அவ்வாறு கேட்டார்.

அப்படி எதுவும் இல்லை என்ற பிறகு தான், சந்திரதேவ்விற்கு நிம்மதியாக இருந்தது.

இனிமேல், அவர்களுடைய நடவடிக்கைகளை அவதானித்து விட்டு மேற்படி ஆயத்தங்களைச் செய்ய நினைத்து விட்டார் சந்திரதேவ்.

- தொடரும்
 
Lovely episode
அது சரி, ருத்ராக்ஷிய எப்படி தனியா ஒரு ஊருல அதுவும் ரொம்பவும் தூரம் இருக்கும் இடத்தில் தங்க ஒப்புக்கொண்டாங்க. அப்பாவும்,அண்ணனும்.🤔🤔🤔🤔
 
Lovely episode
அது சரி, ருத்ராக்ஷிய எப்படி தனியா ஒரு ஊருல அதுவும் ரொம்பவும் தூரம் இருக்கும் இடத்தில் தங்க ஒப்புக்கொண்டாங்க. அப்பாவும்,அண்ணனும்.🤔🤔🤔🤔
அதுக்கான பதிலைக் கதையில் முன்னாடியே சொல்லிட்டேன் சிஸ்... தாங்க்யூ சோ மச் ❤️
 
Last edited:
Top