Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 5

Advertisement

Aarpita

Active member
Member
வலியில் துடிக்கும் வர்ஷாவை கண்டவனுக்கு அடுத்து செய்வது யாதென்பது அறியாமல் விக்கித்து நிற்க, மறுபுறம் வர்ஷாவிற்கு வலி சற்று அதிகமாய் கொண்டே போய், தரையில் சுருண்டு துடித்து கொண்டு இருந்தாள்.

“ஹையோ இதுக்கு இப்போ என்ன பண்ணனும்னு தெரியலையே.. இந்த மாதிரி இதுக்கு முன்னாடி நான் பேஸ் பண்ணது இல்லையே.. இவ வேற இவ்ளோ துடிக்குறாளே…" நினைத்தவனுக்கு முதலில் வந்தது என்னவோ தாரிகாவின் நினைவு தான்.

“அவ இருந்து இருந்தா கூட, அவளே ஏதாவது யோசிச்சி பண்ணி இருப்பா.. அவளும் ஹாஸ்பிடல்ல இருக்காளே" நொந்தவன், வர்ஷாவை அழைத்து கொண்டு தன் காரில் நேரே சென்றான் மருத்துவமனை நோக்கி.

வண்டி வாசலை கூட நெருங்காத போதே, தன் அவசரம் மொத்தமும் பிரேக் மீது காட்டியவன், அதே வேகத்தில் வர்ஷாவை இறக்கியவன், அவசர சிகிச்சைக்கு அழைத்து சென்றான் தர்ஷன்.

அவசரமாய் வர்ஷாவிற்கு சிகிச்சைகள் அளிக்கப்பட, வெளியில் பதட்டமாய் காத்து கிடந்தவனுக்கு எதுவுமே ஓடாமல்,

“இத்தனை வருஷம் கழிச்சி இவங்களை சந்திக்க வந்தேன்.. அங்க தாரு அடி பட்டு இருக்கா, இங்க வர்ஷா வலியில துடிச்சுகிட்டு இருக்கா.. நான் இவங்களுக்கு ராசி இல்லை போலயே.. என்னால தானே வருவுக்கும் தாரிகாவுக்கும் இப்போ இவ்ளோ மனஸ்தாபம் வந்து இருக்கு.. இதெல்லாம் என்னால் தானோ" நினைத்து கொண்டு இருந்தவனை,

“டேய் தர்ஷா.. இங்க என்ன பண்றே? நீ எதுக்கு ஹாஸ்பிடல் வந்தே?" தன் பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்து திரும்பியவனின் கண் முன் இருந்தான் சக்தி.

“சக்தி..வரு.. வந்து" பதறியவன் பேசும் போதே கண்ணில் நீர் வர, அதில் என்னவோ ஏதோஎன்று பதறிய தாரிகா,

“என்ன ஆச்சு தர்ஷன்.. வருக்கு என்ன? நீங்க எதுக்கு இங்க வந்தீங்க?" பதறி கேட்டவளிடம் நடந்த அனைத்தையும் கூறினான் தர்ஷன்.

“ஹையோ.. என்னடா சொல்றே.. இதுக்கு முன்னாடி இத மாதிரி எந்த பிரச்சனையும் வந்ததே இல்லையே.. இப்போ என்ன?" பதறிய சக்திக்கு வர்ஷாவை நினைத்து தான் பயம் அதிகம் வந்தது.

“டாக்டர்ஸ் என்னடா சொன்னாங்க.. இப்போ வரு எப்படி இருக்கா? ஏதும் ப்ராப்ளம் இல்லையே?" கேட்டவனிடம்

“இப்போ வரைக்கும் எதுவும் சொல்லலடா.. உள்ள அவளுக்கு டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு.. என்ன ஏதுனு தெரியல" தர்ஷன்.

“சரி இரு. ஒன்னும் ஆகாது.. இப்போ வரைக்கும் அவளுக்கு காம்ப்ளிகேஷன் எதுவும் வந்தது இல்லை.. டாக்டர்ஸ்கு கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்" நிதானமாய் பேசினாலும் சக்திக்கும் அவ்விடத்தின் வீரியம் புரியாமல் இல்லை.

அந்த நேரம் அவ்விடம் வந்து சேர்ந்தாள் ஸ்ரீஜா.. வந்தவள்

“சக்தி வருக்கு என்ன ஆச்சு.. ஏதோ வலி வந்துடுச்சினு சொல்லி ஹாஸ்பிடல் போனதா சிஸ்டர் சொன்னாங்க.. என்ன ஆச்சு?" பதறிய படி வந்தவள், அவ்விடம் நிற்கும் தாரிகாவை கண்டும் காணாதவளாய், தர்ஷன் அருகே சென்று நின்று கொண்டாள்.

“தெரியல ஸ்ரீ.. இன்னும் எதுவும் சொல்லல" கூறினான் சக்தி

“இதுக்கு முன்ன இதை போல வருக்கு வலி வருமா? வேற எதுவும் காம்ப்ளிகேஷன் வந்து இருக்கா?" கேட்டாள் ஸ்ரீஜா.

“அதெல்லாம் இதுக்கு முன்னாடி எதுவும் வந்தது இல்லை ஸ்ரீ.. இதான் பர்ஸ்ட் டைம்" சக்தி

“அதுக்கு காரணம் என்ன தெரியுமா சக்தி.. சிலரோட துஷ்ட சக்தி எதுவும் படமா இத்தனை நாள் நிம்மதியா இருந்தது.. இப்போ அவுங்க வந்துட்டாங்கல்ல, இனி நாம எதிர் பார்க்காதது தான் நடக்கும்.. மூணு வருஷத்துக்கு முன்னாடி, வர்ஷாவுக்கு ப்ராப்ளம் வந்த அப்போவும் கூட, இவங்க தானே கூட இருந்தாங்க.. உயிர் பிழைக்குறதே கஷ்டம்ன்ற நிலைமைக்கு தானே வரு இருந்தா.. இப்போ தான் அதோட காரணம் முழுசா புரியுது" தாரிகாவை பார்த்த படியே ஸ்ரீ பேச,

“போதும் ஸ்ரீ. நடக்குற எதுக்கும் யாரும் காரணம் இல்லை.. யாரையும் யாரும் குறை சொல்லவும் வேணாம்.. ப்ர்ஸ்ட் டாக்டர்ஸ் என்ன சொல்றாங்கனு கேப்போம்.. அதுக்கு அப்றம் பேசிக்கலாம்" ஸ்ரீஜாவை அமைதியாக்கிவனுக்கு வர்ஷாவை நினைத்து தான் பயமாய் இருந்தது.

அவனின் பதட்டத்தை வெளியில் அதிகம் காட்டி கொள்ளாமல், நின்று இருந்தவனிடம் வந்தார் அந்த அறையை திறந்து கொண்டு மருத்துவர் ஒருவர்.

“உள்ள ப்ரெக்னன்ட்டா இருக்கிறவங்க கூட யார் வந்தது?" கேட்டார் அவர்.

“நாங்க தான் சார்.. நான் அவளோட ஹஸ்பண்ட்.. என்ன ஆச்சு சார்? வருக்கு ப்ராப்ளம் எதுவும் இல்லையே?" கேட்டான் சக்தி.

“குழந்தை நல்லா தானே சார் இருக்கு.. அதுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?" கேட்டாள் ஸ்ரீஜா, தாரிகாவை முறைத்தபடியே.

“நோ நோ.. ரெண்டு பேருமே நல்லா தான் இருக்காங்க.. நத்திங் டு ஒர்ரி.. அவுங்க சாப்பாடு எல்லாம் கரெக்ட்டா எடுத்துக்குறாங்களா? இல்லை சூடாகுற மாதிரி ஏதாவது சாப்பாடு சாப்பிட்டாங்களா? லைக் மாங்காய், புளி அப்படி ஏதாவது?" கேட்டார் அவர்.

“இல்லையே டாக்டர்.. அவளுக்கு சாப்பாடு எல்லாமே நான் தான் குடுப்பேன்.. அதுல இந்த மாதிரி எந்த ஐட்டமும் சேர்க்குறது இல்லையே.. அண்ட் டாக்டர், இது பிரசவ வலி மாதிரியா? இல்லை சாதரண வயித்து வலி போலயா..?" எனக் கேட்டான் சக்தி.

“ஓகே.. இது பிரசவ வலி மாதிரி தெரியல.. அடி வயிறு மட்டும் தான் வலிக்குறதா சொல்றாங்க.. பட் இருந்தாலும், ஒரு சேப்டிக்கு ஸ்கேனும் பண்ணிட்டேன்.. பேபி நல்லா தான் இருக்கு.. நத்திங் டூ ஒர்ரி" என்றார் அவர்.

“நாங்க உள்ள போய் பாக்கலாமா டாக்டர்.. வீட்டுக்கு எப்போ போல கூட்டிட்டு போகலாம்?" கேட்டான் சக்தி.

“போய் பாருங்க.. பட் அதிகமா சத்தம் போட வேணாம்.. ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு.. அது முடிஞ்சதும் கூட்டிட்டு போகலாம்" என்றவர் சென்றும விட்டார்.

“இனி அவளோட சாப்பாட்டுல இன்னும் கவனமா இருக்கனும் போலயே.. கொஞ்ச நேரத்துல எவ்ளோ வலியில துடிச்சிட்டா.. இதுல டெலிவரி டைமை எப்படி சமாளிக்க போறாளோ" புரியாமல் யோசித்து கொண்டு இருந்த சக்தியிடம்,

“மொதல்ல உள்ள போய் அவளை பாப்போம்டா.. உனக்கு தெரியாம அவ ஏதாவது சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இருக்குல.. உள்ள போவோம் வாங்க" தர்ஷன் கூற, உள்ளே நுழைந்தனர் நால்வரும்.

“பாவம் போல பெட்டில் படுத்து இருந்தவளுக்கு வலது பக்கத்தில் ட்ரிப்ஸ் போய் கொண்டு இருக்க.. அவளை பார்க்கவே மனம் கொள்ளாத தாரிகா, ஓடிப் போய் அவளை அணைத்துக் கொண்டாள்.

அவளை அணைத்தவள் கண்ணில் இருந்து சில துளி நீரும் கூட வெளியேறிக் கிடந்தவளை,

“அடியே உன் பாசம் புரியுது.. அதுக்குன்னு இப்டி போட்டு அமுக்காத.. பாப்பா பாவம்.. வெளிய வந்து உன்னை தான் உதைக்கும் பாத்துக்கோ" என்றாள் இத்துணை நாள் இருந்த கோபம் போன படியாய்.

“இல்லை வரு.. உன்னை இப்டி பாப்பேன்னு நான் நினைச்சி கூட பாக்கல.. அதுவும் அன்னைக்கு நடந்து எல்லாத்துக்கும் அப்புறம், டாக்டர்ஸ் எல்லாம் அப்படி சொன்னதுக்கு அப்புறம் உன்னை இப்டி பாக்குறது எவ்ளோ பெரிய சந்தோசமா இருக்கு தெரியுமா? இது உண்மைனு கூட நம்ப முடியல" கண்ணை துடைத்த படி பேசினாள் தாரிகா.

அவளின் கையில் நான்கு கிள்ளி வைத்த வர்ஷா, “இப்போவாச்சும் நம்பிக்கை வருதா.. பாரு உனக்கு வலிக்குது" என்றாள் முன்பு அவர்களுக்குள் இருந்து குறும்பில்.

“போடி..அழ வெச்சிட்ட.. சாடிஸ்ட்" என்றாள் தாரிகா,லேசாய் அவளின் கன்னத்தில் தட்டி

“நீ எங்க எல்லாரையும் அழ வெச்சத்தை விடவா, வரு பண்ணிட்டா.. அதுவும் இத்தனை வருஷமா எங்க எல்லாரையும் கஷ்ட படுத்திட்டு, இப்போ நல்லவ மாதிரி வந்து பேசுறா பாரு" விஷம் கக்கியது ஸ்ரீஜா பேச்சில்.

“ஸ்ரீ, இங்க வேணாம்.. இடம் பார்த்து பேச கத்துக்கோ" அதட்டினான் தர்ஷன்.

அதற்கு ஏதோ பேச வந்தவளை தடுக்கும் விதமாய்,

“ஏய்ய்ய், குண்டச்சி.. உண்மையை சொல்லு.. நேத்து என்ன சாப்பிட்ட" கேட்டான் சக்தி, வர்ஷாவிடம்.

அவனின் கேள்வியை எதிர் பார்த்தவள், என்ன சொல்வது என்று முழித்துக் கொண்டு இருக்கும் போதே,

“முழிக்காதடி.. உண்மைய சொல்லு.. மாங்கா எதுவும் சாப்டியா?" கேட்டான் கண்ணை சுருக்கி தீவிரமாய்

“ஹையோ என்ன இவன்.. இவனுக்கு எப்படி தெரியும்.. இப்போ என்ன சொல்லி சமாளிக்குறது!!" யோசித்து கிடந்ததவளிடம்

“அடியே உண்ண தான்.. சொல்லி தொலை" என்றான் சக்தி.

“ஆமா, சப்பிட்டே.. ஆனா ஒண்ணே ஒன்னு தான் சாப்பிட்டேன் தெரியுமா? அதிகமா எல்லாம் சாப்பிடல.. நான் உனை எப்போல இருந்து மாங்கா வாங்கி தர சொல்லி கேட்டுட்டு இருக்கேன்.. ஆனா நீ தான் வாங்கி தர மாட்டேன்னு சொல்லிட்ட…”

“பட் நானே போய் ஒன்னும் சாப்பிடல.. ஆஸ்ரமத்துல பசங்க தான் ஆசையா சாப்பிட சொன்னாங்க.. அதான் லைட்டா சாப்பிட்டேன்" என்றாள் கண்கள் சுருக்கி குழந்தை போல்.

அவளின் அந்த செயலில் கோபம் மொத்தம் காற்றில் கரைந்து இருக்க,

“இப்படியே ரியாக்ஷன் குடுத்து என்னை ஏமாத்துடி நீ" நினைத்தவன்,

“ஓ.. அந்த லைட்டான்றது எத்தனைனு சொல்ல முடியுமா மேடம்" கேட்டான் சக்தி.

அதற்கும் விழித்தவள், கை உயர்த்தி இரண்டு என்று விரலில் காட்ட,
“அட சோத்து மாடு.. அதெல்லாம் சாப்பிடுறது உனக்கு நல்லது இல்லனு தானே நானே வாங்கி தராம இருக்கேன்.. எனக்கு தெரியாம தின்னுட்டு.. இப்போ பாரு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி படுத்து இருக்குறத.. இதுல மேடமுக்கு சேவை செய்ய நாலு பேரு வேற" நக்கலாய் அவன் பேச கேட்ட மற்றவர்களும் அங்கு சிரிக்க, அதை கண்ட வர்ஷா,

“துரோகிகளா.. ஒரு அப்பாவி புள்ளத்தாச்சி பொண்ணை இவன் திட்டுறான், நியாயம் கேக்குறதை விட்டுட்டு, நீங்களும் சேர்ந்து சிரிச்சிகிட்டு இருக்கீங்க.. இருங்க இருங்க, பாப்பா வெளிய வரட்டும், உங்க யார் கூடவும் பேச வேணாம்னு சொல்லுடுறேன்" என்றவள் கோபம் போல முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து கொள்ள, அதுவே அழகாகவும், சிரிப்பையும் தான் தந்தது.. இதில் சக்தி வேறு

“ரொம்ப பண்ணாதடி. நீ இல்லை, பாப்பா பொறந்து ஒரு வருஷத்துக்கு, யார் சொன்னாலும் பேசாது.. அந்த தைரியத்துல தானே வாய் பேசுற" என்றான் அவளிடம் ஒழுங்கு காட்டி கொண்டு.

அதில் சிணுங்கியவள், “பாரு தர்ஷா.. இவன் எப்போ பாரு என்னை கிண்டல் பன்றான்.. அவனை நல்லா போட்டு மொத்து.. உன் கிட்ட அடி வாங்கி ரொம்ப நாள் ஆச்சாம்.. அதன் ஓவரா பேசுறான்" என்றவன் முகத்தை சுருக்கி பேச.

“அடியே, இப்போ எதுக்கு இந்த காட்டான் கிட்ட என்னை கோர்த்து விடுற.. சும்மாவே அவன் அடிப்பான்.. இதுல அடி அடினு சொன்னா சும்மாவா இருப்பான்" என்றான் உண்மையில் ஏதோ பதறிய படி,

ஒரு அரைமணி நேரம் முன்பு வரை இருந்த சூழ்நிலை மாறி, இப்போது சிரிப்பும் கேலியுமாய் இருக்கும் அவர்களை கண்டவளுக்கு, சக்தியை காணும் போது தான் வியப்பாய் இருந்தது.

“கொஞ்சம் விட்டு இருந்தா கூட ஸ்ரீஜா வார்த்தையாலேயே கொன்னு இருப்பா என்னை.. உள்ள புகுந்து எவ்ளோ சுலபமா சக்தி எல்லாத்தியும் சரி பண்ணி, இப்போ சிரிக்க வெச்சி சூழலையே மாதிட்டானே..

ஒரு வேளை அன்னைக்கு நானும் சக்தி கிட்ட என்னோட பிரச்சனையை சொல்லி இருந்தா, அதுக்கு வேற ஏதாவது வழி சொல்லி இருப்பானோ.. இன்னைக்கு சூழலே வேற மாதிரி ஆகி இருக்குமோ" நினைத்து கொண்டு நின்று இருந்த தாரிகாவின் மனதை படித்தவன் போல.

“எல்லாம் சரி ஆகிடும் தாரு.. பதில் இல்லாத கேள்வியே கிடையாது.. ஆனா, அந்த கேள்விக்கு ஒரு வேளை பதில் நமக்கு கிடைக்கலனா, நம்மை சுத்தி இருக்கிறவங்க கிட்ட அந்த கேள்வியை கேக்கணும்.. ஒரு வேளை அவுங்க கண்ணுக்கு பதில் ஈஸியா கிடைக்கவும் வாய்ப்பு இருக்கு.”

“பேசு தாரிகா.. மனசு திறந்து பேசு.. அப்போ தான் உன் மன பாரமும் குறையும் இங்க இருக்க எல்லாரோட மன பாரமும் குறையும்" என்றான் சக்தி, தர்ஷனை பார்த்த படி.

இனியாவது பேசுவாளா தாரிகா.. இதுவரை இருக்கும் மனஸ்தாபங்கள் குறையுமா?
 
Top