Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 4

Advertisement

Aarpita

Active member
Member
எதேச்சையாய் அவன் காற்றில் வீசிய கை கத்தி, தாரிகாவின் கையை பதம் பார்த்து இருக்க, வலி தாங்காமல், அலறிய படி அவள் தரையில் விழுந்த பின் தான், அவ்விடம் நடந்ததை உணர்ந்தவன், பதறி போய் தாரிகாவை பார்க்க, ரத்தம் கையில் இருந்து வடிந்த நிலையில் தரையில் கிடந்தாள் அவள்.

“ஹையோ தாரு.. என்ன ஆச்சு?" பதறியவன், அவள் அருகே சென்று அவள் தலையை தன் மடி மேல் தாங்கியவன்,

“தாரு இங்க பாரு, உனக்கு ஒன்னும் இல்லை.. எல்லாம் சரி ஆகிடும்.. ரத்தம் வேற இவ்ளோ வருதே" பதறியவன்,

“மேடம் தண்ணி கொஞ்சம் குடுங்க" கேட்டான் தர்ஷன்

“தண்ணி வேணாம் தர்ஷன்.. பர்ஸ்ட் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போவோம்.. தாரிகா மயங்கி வேற போய்ட்டாங்க.. சோ ஹாஸ்பிடல் போகலாம் வாங்க" கூறினார் சிஸ்டர்.

“நோ நோ மேம்.. இவளுக்கு ரத்தம்னா பயம்.. ரத்தத்தை பார்த்தா மயக்கம் வரும்.. மத்த படி ஒன்னும் இல்லை" என்றவன் தண்ணீரை வாங்கி அவள் முகத்தில் தெளித்தவன் செய்கையில் அடுத்த நிமிடமே கண் திறந்தாள் தாரிகா.

“கண் விழித்தவள், தர்ஷா ரத்தம்.. இங்க பாரு" காட்டினால், பயந்து பதறிய குழந்தையாய்.

“பதறாதடி.. ஒன்னும் இல்லை.. நீ அதை பார்க்காத.. ஒன்னும் ஆகாது" என்றவன் பேசும் போதே, சிஸ்டரிடம் கேட்டு துணி ஒன்றை வாங்கி அவள் காயத்தில் கட்டி விட்டவன்,

“என்னடி இப்டி பண்ணிக்கிட்ட.. கவனமா இருன்னு சொன்ன கேக்குறியா.. எப்போ பாரு விளையாட்டா இருந்தா எப்படி" ஐந்து ஆண்டுகள் முன்பு இருந்த தர்ஷன் பேசி கொண்டு இருந்தான்.

“அதற்குள் தகவல் தெரிந்து சக்தி அவ்விடம் வர, சிடு மூஞ்சி தர்ஷன் வெளிவந்து, கை கட்டி வேடிக்கை பார்க்க, தாரிகாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்லும் பொறுப்பு சக்தியுடையதாகி போனது.

அவன் செய்த அனைத்தையும் பார்த்து கொண்டு இருந்த சிஸ்டர் மேரி,

“இவ்ளோ காதலை மனசுல வெச்சிக்கிட்டு எப்படி தான் நடிக்க முடியுதோ தெரியல ரெண்டு பேராலயும்" நினைத்து கொண்டவருக்கு பெரு மூச்சே வெளிவந்தது.

சக்தி தாரிகாவை அழைத்து சென்றதில் நிம்மதி அடைந்த தர்ஷன்,

“அவளுக்கு ஊசினா வேற பயம் ஆச்சே.. கைல பட்ட காயத்துக்கு, தையல் எதுவும் போடணும்னு சொல்லிட்டா, ஹாஸ்பிடலயே ஒரு வழி பண்ணிடுவாளே... சக்தி தான் பாவம்" நினைத்து கொண்டவனுக்கு சக்தியை நினைத்து பாவமாய் தான் இருந்தது.

வந்ததில் இருந்து வர்ஷாவை சந்திக்கவில்லை என்று அவளைக் காண அவள் அறைக்கு சென்றான் தர்ஷன்.. ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த வர்ஷாவை கண்டவன்,

“என் மருமகன் என்ன சொல்றான்? சமத்தா இருக்கானா?" கேட்ட படி உள்ளே வந்தான் தர்ஷன்

அவனைக் கண்டதும் கண்கள் கலங்க நின்றவள்,

“என்னடா இப்டி ஆகிட்ட? தேவதாசே தோத்து போய்டுவாரு போல உன் முன்னாடி.. அவளோட ஒற்றை காதல் உன்னை இப்டி அடையாளமே தெரியாம மாத்திடும்னு தெரிஞ்சி இருந்தா, அவளை உனக்கு அறிமுகமே பண்ணாம இருந்து இருப்பேனேடா.. இத்தனை நாள் தோணல, ஆனா உன்னை இப்டி பாக்கும் போது, தப்பு பண்ணிட்டேனோனு முதல் தடவை தோணுது" வருந்திய படி பேசினாள் வர்ஷா.

“ஹலோ மேடம், என்ன சோக ரெகார்டிங் பாடிக்கிட்டு இருக்க.. யாருமே எதையும் எதிர்பார்த்து பண்றது இல்லை வரு.. சோ இவ்ளோ பீல்லாம் பண்ணாத.. பேபிக்கு நல்லது இல்ல" என்றான் நிதானமாய்.

“நீ இன்னும் அவளை விரும்புறியா தர்ஷா.. அன்னைக்கு நடந்த எல்லாத்துக்கு அப்புறமும் உனக்குள்ள அவள் மேல காதல் இருக்கா? இல்லை இந்த சீரியல்லலாம் வருமே அது மாதிரி, கோபமா, வில்லத்தனமா மாறி, அவளை கஷ்ட படுத்தனும்னு இருக்கியா?" கேட்டாள் வர்ஷா தீவிரமாய்

“மறந்தும் கூட தினமும் நெனைக்க வெக்குற காதலை அவ எனக்கு குடுத்துட்டு போய்ட்டா வரு.. நான் செத்தே போனாலும், அவ்ளோட இருந்த நாட்கள் எனக்குள்ள எப்பவும் இருக்கும்..”

“சொல்ல போனா, என்னோட வாழ்க்கையோட மிக இனிமையான நாட்கள் அவை மட்டும் தான்.. உனக்கே தெரியும் என்னோட குடும்பம் எப்படினு.. ஒரு குறுகிய வாழ்க்கை வாழ்ந்த எனக்கு, சிரிக்கவும் பறக்கவும் சொல்லி கொடுத்ததே அவ தான்.”

“சொல்ல போனா, சில நேரத்துல, பிஸ்னஸ்ல ஏதாவது பிரச்சனை வந்துட்டா, அவளை போல சிரிச்சிகிட்டே சமாளிக்க தான் முயற்சி பண்ணுவேன்..என்னோட வாழ்க்கையோட வாழுற கோணத்தையே மாத்துன அவளே எனக்கு இவ்ளோ பெரிய வலியை குடுப்பானு நினைக்கல.”

“இல்லாட்டி, நான் தான் அவ கூட ரொம்ப தூரம் வாழ கனவு கண்டுட்டேன் போல.. அதான் இவ்ளோ வலிக்குது.. இப்போ கூட எனக்கு அவளை பார்த்தாளோ, நேருக்கு நேர் சந்திச்சாளோ, மறுபடியும் எங்க அவ கிட்ட அதே எதிர் பார்ப்பும், அவளோட காதலுக்கும் ஏங்கி நின்னுடுவேனோனு இருக்க பயத்துனால தான், இத்தனை வருஷம் உங்க யாரையும் சந்திக்க வராம ஒதுங்கியே இருந்தேன்.”

“இப்போ கூட, அவ அன்னைக்கு ஏன் அப்படி நடந்துகிட்டா, அப்படி பிஹேவ் பண்ண என்ன காரணம்னு மட்டும் தெரிஞ்சா கூட போதும், ஒரு வேளை அதுல லாஜிக் இல்லாமலோ, அவளோட சுயநலத்துனாலயோ இதை பண்ணி இருந்தா கூட நான் ஏத்துக்க தயாரா தான் இருக்கேன்..”

“அவ என் வாழ்க்கையில இல்லன்ற எண்ணத்தை விட, அவ எதுக்கு என்னை விட்டுட்டு போனான்ற கேள்வி தான், அவளை நினைக்க வெச்சிகிட்டே இருக்கு..”

“இன்னும் ஸ்ட்ராயிட்டா சொல்லணும்னா, அவ எங்க விட்டுட்டு போனாலோ அங்கேயே தான் நான் இன்னும் நின்னுட்டு இருக்கேன்" என்றான், இந்த ஐந்து வருடத்தில் முதல் முறையாக மனம் திறந்த படி.

“ஹ்ம்ம்ம்.. அவ வந்துட்டாளா? நீ பாத்தியா?" கேட்டாள் வர்ஷா

“ஹ்ம்ம்ம்.. அவ வந்ததும் அவளை நான் பார்த்தேன்.. இல்லை இல்லை, நாங்க பார்த்துகிட்டோம்" என்றவன் தாரிகா வந்ததில் இருந்து மருத்துவமனை சென்றது வரை அனைத்தையும் கூறி முடித்தான்.

“என்ன காயமா.. ஹையோ.. இந்நேரம் ஹாஸ்பிடல் என்ன நிலைமையில இருக்குனு தெரியலையே.. டாக்டர்ஸ் பாவம்" என்றாள் முதலில் பதறி, பின் அவ்விடம் நடக்கவிருப்பதை உணர்ந்து சிரித்தவளாய்.

அதை உணர்ந்த தர்ஷனுக்கும் சிரிப்பு வர, கிட்டத்தட்ட ஐந்து வருடம் கழித்து மனம் முகமும் மலர சிரித்தவனை கண்டவள்,

“நீங்க இதுக்கு அப்புறம் ஒன்னா சேருவீங்களோ இல்லையோ தெரியாது தர்ஷா.. பட் இப்போ உன் முகத்தோட புன்னகை வாடாம இருக்க என்ன தேவையோ, அந்த அளவுக்கு உங்களுக்குள்ள சரி ஆனா கூட எனக்கு போதும்" என்றாள் கண்ணின் இறுதியில் வெளியேறிய சிறு துளி நீரை துடைத்தபடி.

அதை உணர்ந்து தர்ஷன், அவளின் மனம் மாற்றும் பொருட்டு,

“ஹாஸ்பிடலுக்கும் அந்த டாக்டருக்குமே அந்த நிலைமைனா, கூட போன உன் புருஷன் உயிரோட வருவான்னு நெனைக்குற..??!!!" கேட்டான் வடிவேலு பாணியில், அதை கேட்டவள் சிரித்து விட்டு.

“சாகட்டும்.. தப்பில்லை.. ஐஞ்சு வருஷமா என் கிட்ட கூட சொல்லாம அண்ணனும் தங்கச்சியும் பேசிகிட்டு தான் இருந்து இருக்காங்க.. என் கிட்ட கூட இதை சொல்லல.. அவ சொல்ல வேணாம்னு சொல்லிடலாம்.. இப்போ தனியா அவஸ்த்த படட்டும்.. தப்பில்லை" முகம் சுழித்த படி பேசிய அவளை கண்ட தர்ஷன்,

“ரெண்டு பேருக்கும் குழந்தையே பொறக்க போகுது, இன்னும் சின்ன பசங்க மாதிரி பழி வாங்கிட்டு சுத்திக்கிட்டு இருக்கீங்க" என்றான் அதே மலர்ச்சியுடன்.

சிறிது நேரம் அவனுடன் பேசி கொண்டு இருந்தவளுக்கு,

“ஸ்ஆஆஆஆ... தர்ஷா.. அடி வயிறுல ஏதோ வலிக்குற மாதிரி இருக்குடா" என்றாள் வயிற்றில் கைவைத்த படியாய்.

அவள் துடிப்பதில் பதறிய தர்ஷன்,

“என்ன ஆச்சு வரு.. ஏன் திடீர்னு வலிக்குது.. ஆமாம் இது எத்தனாவது மாசம்?" அவளை அருகே இருக்கும் நாற்காலியில் அமர வைத்த படி கேட்டான் தர்ஷன்.

“எட்டாவது மாசம் தர்ஷன்..என்னனு தெரியல... ரொம்ப வலிக்குது.. இது மாதிரி இதுக்கு முன்னாடி வந்ததே இல்லை.. சக்திக்கு கால் பண்ணுடா" என்றாள் வலியில் துடித்த படி.

“இதோ இரு கூப்பிடுறேன்" என்றவன் சக்தியை அழைக்க, முதல் முறை அழைப்பு சென்றும் அவன் எடுக்கவில்லை.. அடுத்த மூன்று முறை அழைப்பு அவனை அடையாமலே போக, வலியில் துடிக்கும் வர்ஷாவை பார்த்தவன் செய்வதறியாது நின்றான் தர்ஷன்.
 
அடேய் தர்ஷா செய்வதறியாது நிற்கிற நேரமாயிது. வர்ஷாவ ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ முதல்ல.
 
Top