Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 111

Advertisement

SHALU shalu

Well-known member
Member
ருத்ராக்ஷியும், அவளது குடும்பத்தாரும் அந்த ஊரை விட்டுச் செல்லும் நேரம் வந்து விடவே, அனைத்துப் பொருட்களையும் பையினுள் புகுத்தி வைத்து விட்டு, அங்கேயிருக்கும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டிருந்தனர்.

வழக்கமானத் தனது ஏக்கப் பெருமூச்சு மற்றும் பார்வையால் அவளைத் தொடர்ந்து கொண்டே இருந்தான் ஸ்வரூபன்.

“என்னங்க! நான் ஊருக்குப் போயிட்டு வர்றேன்” என்றதும்,

தனது வருங்கால மாமனாரிடம் சென்று,”மாமா! உங்கப் பொண்ணுக் கூட நான் கொஞ்ச நேரம் பேசிக்கலாமா?” என்று வேண்டுகோள் விடுத்து விட்டுக் காத்திருந்தான் ஸ்வரூபன்.

உடனே தனது மகளைப் பார்த்து,”என்னம்மா?” என்று கேட்டதும்,

அவளும் அதற்குச் சம்மதம் தெரிவித்து விட,

“அப்போ தாராளமாகப் போய்ப் பேசிட்டு வாங்க” என்று அனுமதி அளித்து அவர்களைத் தனியாக அனுப்பி வைத்து விட்டார் சந்திரதேவ்.

உங்களுக்கான இடத்தைக் கண்டறிந்து எதிரெதிரே உட்கார்ந்து கொண்டவர்களுக்குத் தங்களுக்கு இடையே நிகழப் போகும் சிறிய பிரிவால் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால், இப்போது இந்த இருவருடைய பார்வைகளும் அவசர அவசரமாக மற்றவரைத் தழுவிக் கொண்டது.

அதன் பிறகு, தங்களது குரலைச் செருமிக் கொண்டார்களோ, முதலில் யார் பேசுவது என்று தயங்கினர்.

தானே முன் வந்து பேச்சைத் தொடங்கும் விதமாக,”நீ இந்த ஊருக்கு வந்ததில் இருந்து எப்பவும் உன்னோட சொந்த ஊருக்குப் போயிட்டு வர்றேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிட்டுப் போவியே? அப்போ எல்லாம் நீ பஸ் ஏறும் போது நான் உன்னைப் பார்ப்பேன்” என்று அவளிடம் கூறினான் ஸ்வரூபன்.

அதைக் கேட்டதும் தன்னுடைய விழிகளை அகலப்படுத்தியவளோ,”அப்படியா ங்க?” என்று உட்சபட்ச வியப்புடன் கேட்டாள் ருத்ராக்ஷி.

“ஆமாம் மா. எங்க அம்மாவும், நீயும் நல்லா பேச ஆரம்பிச்ச நேரத்தில் நானும் உன்னைக் கவனிக்க ஸ்டார்ட் பண்ணேன் ம்மா. அப்போ இருந்து தான், நீ ஒவ்வொரு தடவை ஊருக்குப் போற நேரத்திலேயும் நான் அங்கே சரியாக வந்து சேர்ந்துருவேன்” என்று நாணத்துடன் உரைத்தவனிடம்,

“என்னது? நீங்கப் பஸ் ஸ்டாண்டுக்கு எப்பவுமே வந்துருவீங்களா?” என்று அவனிடம் ஆர்வம் தாளாமல் கேட்டவளுக்கு,

“ம்ஹ்ம். ஆனால் தப்பான எண்ணத்தில் உன்னைப் பார்க்க வரலை ம்மா. அப்போ இருந்து எனக்கு உன்னைப் பிரியிறது ரொம்ப கஷ்டமாகவே இருக்கும். அதனால் தான் அப்படி செஞ்சேன்” எனப் பதில் கொடுத்தான் ஸ்வரூபன்.

“பார்றா! இந்த வேலையெல்லாம் பண்ணி இருக்கீங்களா?” என அவனிடம் புன்னகையுடன் வினவினாள் ருத்ராக்ஷி.

“ஆமாம்” என்று அதைத் தானும் ஒப்புக் கொண்டான்.

“ஆனால் நான் உங்களை ஒரு தடவை கூட அங்கே பார்த்ததே இல்லையே? ஒருவேளை வெளியே நிற்காமல் பஸ்ஸூக்கு உள்ளே இருந்துட்டு அதை எடுத்ததும் கிளம்பிட்டீங்களோ?” என்றவுடன்,

“ஊஹூம்! நான் தான் உன் கண்ணு முன்னாடி வரக் கூடாதுன்னு பஸ்ஸூக் கிளம்புற வரைக்கும் மறைஞ்சு நின்னுப் பார்த்துட்டுக் கிளம்பிடுவேன்” என்று அவளுக்கு விளக்கிக் கூறவும்,

“அச்சோ! ஏங்க இப்படியெல்லாம் செஞ்சு வச்சிருக்கீங்க?” என்று அவனிடம் வினவினாள் ருத்ராக்ஷி.

“வேற என்னப் பண்றது ம்மா? என்னோட மனசில் நீ தான் இருக்கன்னு உறுதியாகத் தெரிஞ்சதும் என்னால் உன்னைப் பார்க்காமல் இருக்க முடியலை! அதான் அப்படி நடந்துக்கிட்டேன்” எனக் கூறினான் ஸ்வரூபன்.

“ம்ம். உங்களைப் பத்தி இப்போ எனக்கு நல்லா தெரிஞ்சதால் நீங்க என்ன மாதிரியான எண்ணத்தில் என்னை அப்போ பார்த்தீங்கன்னு என்னால் புரிஞ்சுக்க முடியுது! ஆனால், அப்போ எனக்கும், உங்களுக்கும் அவ்வளவாக அறிமுகம் இல்லை. அப்படியே இருந்திருந்தாலும் உங்க மேல் உடனே நம்பிக்கை வச்சிருக்க மாட்டேன் தானே?” என அவனிடம் கேட்டு விடவே,

அதைப் புரிந்து கொண்ட ஸ்வரூபனும்,”ம்ம். நானும், நீயும் சரியாகப் பேசிக்கிட்டது கூட இல்லை. எப்போதாவது பார்த்துக்கிட்டாலும் சிரிச்சது கூடக் கிடையாது உன்னோட இந்தக் கேள்வி நியாயம் தான் ம்மா” என்று தன் தவறை உணர்ந்து சொன்னான்.

அவனது வதனம் சுருங்கியதைப் போன்று அவளுக்குத் தெரியவும்,”ப்ளீஸ்! நான் உங்களைத் தப்பா நினைச்சுட்டேன்னு ஃபீல் பண்ணிடாதீங்க!” என்று உடனே அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள் ருத்ராக்ஷி.

“ஹேய்! நீ சொன்னதை நான் நல்லா புரிஞ்சிக்கிட்டேன் ம்மா‌. உன்னையும் எதுவும் நினைக்கலை” என்று கூறி அவன் புன்னகைக்கவும் தான், அவளது முகமும் இலகு நிலைக்குத் திரும்பியது.

“ம்ம்‌. இதைச் சொல்லத் தான் உன்கிட்ட தனியாகப் பேசக் கூப்பிட்டேன்” என்றான் ஸ்வரூபன்.

“இதைச் சொல்ல மட்டும் தானா?” என்று அவனிடம் ஏமாற்றமாக வினவிய பெண்ணவளை ஏறிட்டவனோ,

“இல்லை. உன்னை ரொம்ப மிஸ் பண்றேன். இதுக்கப்புறம் நீ ஊருக்குப் போனதும் இன்னும் அதிகமாக மிஸ் பண்ணிட்டு இருப்பேன்! இதைத் தான், முதலில் உங்கிட்ட சொல்ல வந்தேன்!” என்று அவளுக்கு விளக்கம் அளித்தவனைக் காதலுடன் பார்த்தவளோ,

“க்கும்! அப்போ நான் மட்டும் எந்த உணர்வுமே இல்லாமல் இருக்கேனா?” என்று பொய்யான கோபத்துடன் கேட்டுத் தனது வெண்பற்கள் தெரியக் குறுநகை புரிந்தாள் ருத்ராக்ஷி.

“நான் அப்படி சொல்லவே இல்லையே ம்மா! உனக்கும், எனக்கும் ஒரே மாதிரியான உணர்வுகள் தான் இந்த விஷயத்தில் இருக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவளிடம் அடித்துச் சொன்னான் ஸ்வரூபன்.

“யெஸ். யூ ஆர் ரைட்! என்னால் எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியலை ங்க… ஆனால்…” என்று சொல்லிப் பாதியிலேயே நிறுத்தி விட்டவளைக் கண்டவனுக்கு அவளின் மீதான நேசம் அதிகமாக ஊற்றெடுத்தது.

“ரிலாக்ஸ் ம்மா. உன்னை என்னால் கண்டிப்பாகப் புரிஞ்சுக்க முடியும்” என அவளை அமைதிப்படுத்தினான் ஸ்வரூபன்.

“சரி. வாங்க போகலாம்” என்றபடியே, அவனுடன் சேர்ந்து குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் இடத்திற்குப் போனாள் ருத்ராக்ஷி.

அதே சமயம், இங்கோ,”என்ன இவங்களைக் காணோம்? ஊருக்குப் போக நேரமாகிருச்சே!” என்று மற்றவர்களிடம் கூறிக் கொண்டு இருந்தார் கனகரூபிணி.

அதற்குள் ஸ்வரூபனும், ருத்ராக்ஷியும் வந்து விட, அவர்களைப் பார்த்ததும்,”இதோ வந்துட்டாங்க சம்பந்தி” என்றார் சந்திரதேவ்.

அவர்களிடம்,”பேசியாச்சா? அடுத்து நிச்சயித்தன்னைக்குத் தான் பார்த்துக்க முடியும்ன்றதால் எல்லாத்தையும் சேர்த்து வச்சு இப்போவே பேசிட்டீங்க போலவே?” எனக் கேட்டார் மிருதுளா.

அதைக் கேட்டு இருவருடைய முகங்களிலும் புன்னகையின் சாயல்!

“இப்போ கிளம்பலாமா? இல்லை?” என்று தன் நாத்தனாரிடம் கிண்டலாக வினவினாள் மஹாபத்ரா.

“ப்ளீஸ் அண்ணி! கிளம்பலாம்!” என்று அவளிடம் வெட்கம் கலந்த சிரிப்புடன் சொன்னாள் ருத்ராக்ஷி.

அதற்குப் பிறகு, அனைவரிடமும் சொல்லி விட்டு அவ்வூரில் இருந்து தங்கள் சொந்த ஊருக்குப் பயணம் செய்தார்கள் ருத்ராக்ஷியும், அவளது வீட்டாரும்.

- தொடரும்
 
Top