Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 2

Advertisement

Aarpita

Active member
Member
ஒரு வழியாய் வர்ஷாவை வைத்து தர்ஷனை வெற்றிகரமாய் வரவழைத்து விட்டான் சக்தி. ஐந்தாண்டில் என்னென்னவோ முயற்சித்தும் கூட தர்ஷனை சந்திக்க இயலவில்லை வர்ஷாவால்.

இத்தனைக்கும் இரண்டு வருடம் முன்பு நடந்த தங்கள் திருமணத்திற்கு கூட, அழைத்தும் அவன் வரவே இல்லை. அதுவும் வர்ஷா தான் பேசி வரும் படி கேட்டுக் கொண்டாள். அப்படி இருந்தும் கூட தர்ஷன் அவ்விடம் வரவே இல்லை.

"எப்படியோ, என்னமோ பண்ணி ஒரு பைத்தியத்தை வர வெச்சிட்டோம். இப்போ இன்னொரு பைத்தியம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கோ தெரில. அதை எப்படி சமாளிக்க போறேனோ…??!” புலம்பியபடி அவளை அழைத்தான் சக்தி.

"ஹலோ, சொல்லுடா அண்ணா. என்ன வேணும்?" கேட்டாள் தாரிகா.

"ம்ம்ம்... ரெண்டு செட் பூரி.. நாலு வடை.. அப்புறம் ரெண்டு பிரியாணி.. அனுப்பி வெச்சிடு" கடுப்புடன் சொன்னான் சக்தி.

அதை கேட்டு சிரித்தவள், "போதுமாடா.. என்ன இன்னைக்கு டயட்டா.. கம்மியா கேக்குற?" தாரிகா.

"அடி வாங்க போற பாரு. நேரம், காலம் தெரியாம ஜோக் பண்ணிக்கிட்டு இருக்க. மொதல்ல நீ எங்க இருக்கனு சொல்லு. அதுக்கு அப்புறம் உன்னோட ஜோக்குக்கு நான் சிரிக்குறேன்" சக்தி.

"சரி சரி.. ரிலாக்ஸ்... நான் ஹோட்டல்ல தான் இருக்கேன்.. இப்போ தான் இன்டர்வியூ முடிஞ்சது.. இதோ வெளிய வந்துகிட்டு இருக்கேன்" தாரிகா.

"ஓகே வெரி குட்... அப்டியே டாக்ஸி புக் பண்ணி நேரா ஆஸ்ரமம் வந்துடு" முடித்தான் சக்தி.

தர்ஷன் காத்த அதே மௌனம் இப்போது இவளிடத்தில்.

"ரெண்டுக்கும் இதே வேலையா போச்சு. இதுங்கள மேய்க்குறதுக்கே தனியா சாப்பிடணும் போல நானு" தலையில் அடித்து கொள்ளாத குறையாய் நினைத்த சக்தி,

"இங்க பாரு தாரிகா, வம்பு பண்ணிகிட்டு இருக்காத.. ஐஞ்சு வருஷமா நீ சொன்னதை எல்லாம் கேட்டுட்டு நான் உன்னை வற்புறுத்தாமல் அமைதியா இருந்தேன்... ஆனா இப்போவும் இப்டி பண்ணாதே.. சீக்கிரம் கிளம்பி வா.. இங்க வந்து எல்லாம் பேசிக்கலாம்" காட்டமாய் முடித்தான் சக்தி.

"அவன் வந்துட்டானா?" சுரமற்ற குரலில் கேட்டாள் தாரிகா.

"இதெல்லாம் மட்டும் சரியா பண்ணுங்க.. ஆனா காதல் மட்டும் இல்லனு சொல்லி எங்களை ஏமாத்துங்க" நினைத்தவன்.

"அவன்னா யாரு தாரு?" சக்தி.

"அது.. வந்து.. அவன் தான்.. உன் பிரண்ட்" தாரிகா.

"அவனை பத்தி உனக்கு என்ன வந்தது தாரிகா.. அவன் வந்தா உனக்கென்ன வராம போனா உனக்கென்ன... நீ என்ன அவனை பாக்கவா வர்ர?" குத்தலாய் கேட்டான் சக்தி.

"அது.. அப்படி இல்ல.. வந்து... " பேசவே தடுமாறியவளிடம் தாரிகா, இங்க வா.. மீதியை பேசிப்போம்" என்றவன் அத்துடன் எதையும் பேசாமல் அழைப்பை வைத்து விட்டான்.

"இப்போ என்ன பண்றது.. போகவா வேணாமா? அஞ்சு வருஷம் கழிச்சி இன்னைக்கு அவனை பாக்கணுமே.. அன்னைக்கு நான் செய்த காரியத்துக்கு அப்பறம், எப்படி அவுங்க எல்லாரையும் நேர்ல சந்திக்க முடியும்" தனக்குள்ளேயே யோசித்து நின்று கொண்டு இருந்தவளுக்கு நன்கு தெரியும், இம்முறை அங்கு செல்வதை தவிர்க்க இயலாதென்று.

வேறு வழியின்றி தன் காரை கிளப்பி கொண்டு கிளம்பியவனால், அன்றைய நினைவை விட்டு வெளிவர இயலவில்லை.

"எனக்கு எதுக்கு இப்டி நடக்கணும். நான் என்ன தப்பு பண்ணேன்?" என்ற வலியே அவனுள் அதிகம் இருந்து அது இன்றோ, கோவமாய் மாறி இருந்தது.

"அவ மட்டும் என் முன்னாடி வரட்டும்.. அவளுக்கு இருக்கு" இத்தனை வருடமாய் கோபத்தில் கிடந்தவனுக்கோ,

இன்று அவளை பார்க்க வேண்டும் என்ற நாள் வந்ததும், ஏனோ கண்ணில் நீர் நிற்காமல் வெளிவருவது அவனையே வியக்கவும் வெறுக்கவும் வைத்து இருந்தது.

கோபம் மொத்தமும், காரின் வேகத்தில் காட்டியவன், அடுத்த அரைமணி நேரத்தில் கூறப்பட்டு இருந்த இடத்தை வந்து அடைந்தான்.

இறங்கியவன், சக்திக்கு அழைக்க,

"சொல்லுடா.. எங்க இருக்க?" கேட்டான் எடுத்த எடுப்பில்.

"நீ எங்க இருக்க.. அத மொதல்ல சொல்லு?" கேள்வியே வந்தது தர்ஷனிடம் இருந்து.

"ஏண்டா, ஒரு மனுஷனை மதிக்கவே மாட்டிங்களா? கேள்வி கேட்டா பதில் சொல்லி பழகுங்கடா.. திரும்ப கேள்வியே கேட்டுகிட்டு" சலித்து கொண்ட சக்தியிடம்.

"இப்போ நீ எங்க இருக்கனு சொல்லல, நான் திரும்ப போய்டுவேன்.. அப்புறம் வரு கிட்ட நீயே சமாதானம் சொல்லிக்கோ" என்றான் இம்முறை மிரட்டிய படி.

"சரிடா சரிடா.. அண்ணனும் தங்கச்சியும் என்னை வெச்சே கேம் ஆடுங்க.. இதோ இங்க ஸ்டேஜ் பக்கத்துல தான் இருக்கேன்.. வா" சக்தி.

அவன் கூறியது போலவே ஸ்டேஜ் அருகே அவனை தேடி சென்றவன் அவன் அருகே சென்று நிற்க, தர்ஷனை முடி முதல் அடி வரை பார்த்தவன்.

"என்னடா இது.. இப்டி வந்து இருக்க.. ஏன்டா இப்டி ஆயிட்ட? ஏதோ பஞ்சத்துல அடி பட்டு, கையில காசும் இல்லாம, முடி வெட்டாம, இது என்ன மூஞ்சி புல்லா தாடியை வளர்த்தே கவர் பண்ணலாம்னு நெனச்சியா.. ஏன்டா இப்டி ஆயிட்ட?" ஐந்து ஆண்டு கழித்து சந்திக்கும் தன் நண்பனின் நிலை கண்டு வருந்தி போய் சக்தி கேட்க.

"அது இருக்கட்டும், வரு எங்கே? எப்படி இருக்கா?" கேட்டான் தர்ஷன் பேச்சை மாற்றும் பொருட்டு.

"அவ அங்க பிரேயர்ல இருக்கா.. இப்டி ஒரு நிலைமையில அவ முன்னாடி போய் நிக்காத.. அவ தாங்க மாட்டா.. பிரேயர் முடியட்டும்.. அப்புறம் மீட் பண்ணிக்கோ" என்றவன் பார்வை மொத்தம் தர்ஷனின் முகத்தை தான் அளந்து கொண்டு இருந்தது.. அதை உணர்ந்த தர்ஷன்.

"என்னடா.. என் முகத்துல அப்படி என்ன இருக்கு.. எதுக்கு இப்டி பாக்குறே" கேட்டான் கடுப்பில்.

"இல்ல காட்டுவாசி மாதிரி இருக்கியே, அதான் மண்டையில மரம் ஏதாவது முளைச்சி இருக்கானு பாக்குறேன்.. கொஞ்சம் குனி.. பாக்கணும்" கேட்டபடியே அவன் தலையை ஆராய துவங்க,

"கல்யாணம் ஆயிடுச்சி.. அப்பாவா ஆக போறே.. கொஞ்சமாச்சும் பொறுப்பா நடந்துக்கோடா.. இன்னும் சின்ன பையன் மாதிரி விளையாடிக்கிட்டு இருக்க" தர்ஷன்.

"பொறுப்பு பருப்பை பத்தி எல்லாம் நீ பேசவே பேசாதே.. கல்யாணத்துக்கு வராதவன் எல்லாம், எங்க குழந்தையை பத்தி பேசவேணாம்... எத்தனை தடவை கால் பண்ணி கூப்பிட்டு இருப்பேன்.. ஒரு தடவையாச்சும் பதில் சொல்லி இருக்கலாம்ல.. வரு எவ்ளோ ஃபீல் பண்ணா தெரியுமா?" இம்முறை உண்மையில் வருந்தி பேசினான் சக்தி.

"விடுடா.. அதான் நான் வந்துட்டேன்ல.. எல்லாத்தையும் சமாளிச்சிடலாம்" தோள் தட்டியபடி தர்ஷன் பேசினாலும், அவன் விழிகள் மட்டும் எதையோ தேடியபடி அங்கும் இங்கு அலைபாய கண்டவன்,

"தேடு ராஜா தேடு.. நீ தேடுற ஆள் இங்க இல்லை.. எங்க இருக்கான்னும் நான் சொல்ல மாட்டேன்.. எவ்ளோ ட்ராமா போடணுமா போட்டுக்கோ.. அவ வந்துட்ட அப்புறம் உன்னால நடிக்க முடியாது.. உங்க ரெண்டு பேரையும் நேர்ல கொண்டு வர தானே இந்த ப்ரோக்ராமே ஏற்பாடு பண்ணேன்" மனதில் நினைத்த படி சிரித்து நின்றவனை கவனித்தான் தர்ஷன்.

"என்னடா, தனியா சிரிக்குற.. பைத்தியம் ஆய்டியா?" தர்ஷன்.

"அதுக்குள்ளயா, இன்னும் நாள் இருக்கு" என்றவன் பேச்சில் லேசாய் முறுவல் தோன்றாமல் இல்லை தர்ஷனுக்கு.

"அது சரி.. எல்லாரும் வந்தாச்சா? இல்லை யாரும் வர பாக்கி இருக்கா?" பதில் தெரிந்தே கேள்வி கேட்டான் தர்ஷன்.

"தெரிலடா.. எல்லாரும் வந்தாச்சு.. தாரு மட்டும் ஆள காணோம்.. வரளோ இல்லையோனு கூட தெரியல" சக்தி.

"ஏன் உனக்கு தெரியாதா என்ன? உன்கிட்ட சொல்லாமலா இருப்பா?" கேட்டான் தர்ஷன்.

"அதெல்லாம் எனக்கு தெரியாதுடா.. அவ எதுக்கு என்கிட்ட சொல்ல போறா. அவ நம்பர் கூட என்கிட்ட இல்ல" என்றவன் தர்ஷனின் முக மாற்றத்திற்காக காத்திருக்க, தாடிக்குள் புதைந்து இருந்த முகத்தில் இருந்து, எந்த ஒரு உணர்வும் வெளிவரவில்லை.

"சரி கொஞ்சம் உன் போன் தாயேன்.. ஹோட்டல்க்கு போன் பண்ணனும்.. என்னோட போன்ல சார்ஜ் தீந்துடுச்சி" என்றவன் சக்தியின் கைபேசியை வாங்கி, அழைப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் போதே, அந்த கைபேசிக்கு வந்த அழைப்பை கண்டதில் கோபம் உச்சிக்கு ஏறி, கண்கள் சிவந்தவன், சக்தியை முறைத்தபடி நிற்க.,

அதை கவனித்தவன், இப்போ எதுக்கு இவன் என்னை முறைக்கிறான்?" யோசித்தவன் எட்டி கைபேசியை பார்க்க, அழைத்து இருந்தது தாரிகா தான்.

"ஈஈஈ" என்று பற்கள் அனைத்தும் தெரிய இளித்தவன், அங்கிருந்து நழுவி விட,

அவளின் பெயர் மின்னும் கைபேசியை வெறித்தவனுக்கு தெரியாது, இன்னும் சிறிது நேரத்தில் கையில் ரத்த வெள்ளம் பெறுக தன்முன் நிற்க போகிறாள் தாரிகா, அதுவும் தன்னால் என்று.
 
"எப்படியோ, என்னமோ பண்ணி ஒரு பைத்தியத்தை வர வெச்சிட்டோம். இப்போ இன்னொரு பைத்தியம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கோ தெரில. அதை எப்படி சமாளிக்க போறேனோ…??!”

நண்பர்கள்னா இப்புடி இருக்கணும்.... இப்படியான ஆசீர்வாதங்களுக்கெல்லாம் குடுத்து வச்சிருக்கவும் வேணும்......

ரொம்ப அழகான ஒரு flow இந்த கதையோட்டத்துல.....(y)(y)(y)🥰🥰🥰❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
 
Top