Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'நெஞ்சமெல்லாம் அலரே !' - 23 & 24 (நிறைவுற்றது)

Advertisement

RudraPrarthana

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்..

இதோ 'நெஞ்சமெல்லாம் அலரே !' முதல் பாகம் நிறைவடைந்தது. இது தான் என்னுடைய முதல் கதை தத்தி தவழ்ந்து நடை பழகும் குழந்தையாக நான் முதன் முதலில் எழுத்து பழகியது இந்த கதையில் தான்.. உண்மை சம்பவங்களை கொண்டு எழுதபட்ட கதையில் நாதன், சரசு, பிரகாசம் எல்லாமே நிஜ கதாபாத்திரங்கள் அதேபோல அலர் எழில் திருமணம் முடிவு செய்யப்பட்டதில் தொடங்கி இன்னும் சில நிகழ்வுகளும் உண்மையானது அதில் கற்பனை கலந்து எழுதி இருக்கிறேன். போட்டியில் கிடைத்த ஆக்கபூர்வமான விமர்சனங்கள் கொண்டு கதையின் நீளம் மற்றும் வாக்கிய கோர்வில் திருத்தம் செய்து தான் கதையை பதிவிட்டிருக்கிறேன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் அடுத்து 'நெஞ்சமெல்லாம் அலரே' பாகம் 2 மற்றும் 'உயிரில் உறைந்த உறவே' கதையில் சந்திக்கலாம் Since both are parallel stories will give each one update daily but it could get changed according to the scenario😍

நன்றிகள் ....

ருத்ரபிரார்த்தானா❤️❤️❤️


 
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை கொஞ்சம் கூட சலிப்படைய வைக்கவில்லை ஒவ்வொரு எபியும் விருவிருப்பா சுவாரசியமாக இருந்துச்சு 🤩🤩🤩🤩

சரசு மாதிரி சாகுற வரைக்கும் திருந்தாத பிறவிகள் இருக்கத்தான் செய்யுது 😔😔😔😠

நந்தன் இவர் தான் சரசுவால அதிகம் பாதிக்கபட்டவர் . அவருக்கு கடைசியில் ஆத்திரம் தீர அந்த சரசுவை அடிக்கிற வாய்ப்பு கிடைத்தது சந்தோஷம் ஆனாலும் எழில் கல்யாணம் புது வீடு விஷேசம் குழந்தையோட விஷேசம் எதிலும் அவர் கலந்து கொண்டது போல தெரியலையே 🤔🤔🤔🤔🤔🤔🤔

இனியாவது அலர் எழில் அவரை தங்களோட வச்சிக்கிட்டா நல்லது 😄😄😄

அவந்திய நாதன் மாதிரி ஆட்கள் எல்லாம் மாற முடியாது கொஞ்ச நாள் முயற்சி பண்ணி பார்ப்பாங்க ஆனால் அடிப்படை குணம் தான் அதிகமாக தலைகாட்டும் 😁😁😁😁😁

வளர்மதி மாதிரி வாழ்கிற பெண்கள் தான் நம்ம அம்மாக்கள் தலைமுறையில் அதிகம் இனி எதிர்காலத்தில் மாறினா சந்தோஷம் தான்.

அலர் ஆரம்பத்தில் இருந்தே இவளோட அப்பா பாசம் கடுப்பா தான் இருந்துச்சு ஆனால் கடைசியில் அப்பா நிக்க வச்சு கேள்வி கேட்டபோது ரொம்ப சந்தோஷம் ஆகிட்டேன் 💃💃💃💃💃💃💃

அலர் மாதிரி பொண்டாட்டி என்கிற ஸ்தானத்துக்கு வந்த பிறகு தான் நம்ம அப்பா அம்மாவை எப்படி நடத்துறாருன்னு புரியும் அதே போல் நம்ம பிள்ளைகள் வந்த பிறகு தான் நம்ம அம்மாவையும் உணர்வோம் . அவங்களை எப்படி படுத்திருக்கோம்ன்னு அப்போ தான் புரியும் 🤩🤩🤩🤩🤩🤩🤩

அப்பத்தா நீலா சுடர் கொஞ்சம் தான் வந்தாங்க இருந்தாலும் எப்பவுமே நியாபகத்தில இருப்பாங்க 🤪🤪🤪🤪

வெற்றி மாதிரி ஒரு பாவப்பட்ட நண்பன் எல்லா கேங்க்லயும் இருப்பான் 😆😆😆😆

அலர் எப்படியோ தத்தி தடுமாறி திட்டு வாங்கி அடி வாங்கி கடைசியில் எழிலை புரிஞ்சிகிட்ட . ஆரம்பத்தில் அவன் காதலை சொன்ன போது புரிஞ்சுக்காமல் அவனை நோகடிச்சதுக்கும் இப்போ மருத்துவ மனையில் அந்த நிலைமையில் எழில் விட்டுட்டு போன போது கூட எழில் என்ன செஞ்சாலும் சரியா தான் இருக்கும் என்று நீ சொல்றதுக்கும் நடுவில் எழில் பெரும் போராட்டமே நடத்தி முடிச்சுட்டான் 😉😉😉😉😉

எழில் முதலில் எதுக்கெடுத்தாலும் கோபபட்டு முரட்டு தனமாக நடந்துகிறானேனு தோணுச்சு ஆனால் கடைசியில் அவன் தான் பொறுமையாவும் நிதானமா எல்லோரையும் பத்தி யோசித்து நடந்திருக்கான் . யாரையும் காயப்படுத்தாமல் அவங்க மனநிலையையும் புரிஞ்சுகிட்டு யாருக்கும் எந்த வித கஷ்டமும் வராமல் தன்னோட காதலிலும் ஜெயிச்சு வாழ்க்கையிலும் ஜெயிச்சிட்டான் 💃💃💃💃💃

தன் காதலோடு மதிப்பையும் தன் உறவுகளோட மதிப்பையும் சமமா கொண்டு போயிட்டான் . ஆனால் இவன் மகன் வளர்ந்து வந்து என்ன கூத்து பண்ண போறானோ தெரியல 🤩🤩🤩🤩🤩

கடைசியா ஒரு முக்கியமான ஆள் அந்த சந்திரு . டேய் யாருடா நீ கதையில் வராமலே மொத்த குடும்பத்தோட நிம்மதியையும் கெடுத்ததுல உன்னோட பங்கும் இருக்கு. கடைசி அவ பிணத்துக்கு உன்னோட அடையாளம் தான் . 😔😔😔😔

எழில் தான் இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம் 💜💜💜💜
 
அலர் அம்மாவோட வலியை புரிஞ்சு அப்பாகிட்ட பேசுனதுல நான் happy....
நாதன் and அகனா bonding க்காக next part க்கு waiting....

Good work Rudra.....அங்கங்க முரண்பாடுகள் இருந்தாலும், கதையை சுவாரசியமானதா கொண்டு போயிட்டீங்க 🙌
 
கதை அருமை. எழில் நாதன் இருவரும் அலரின் மேல் அன்பை காட்டுவது சூப்பர்.. வளர் செம. நீலா பாட்டி சூப்பர் எழில் அவனுடைய காதல் அழகு. அவனின் காதலை அலரே எதிர்த்தாலும் அவளை மணம் முடித்து தள்ளி நின்று காதலை ஜெயித்தது அழகு. அலர் சிலநேரம் முட்டாள். நாதன் பொண்ணு விசயத்தில் மட்டும் சூப்பர். பையன் மனைவி விசயத்தில் டூ மச். நீலா சுடர் பாலா வெற்றி தாமரை நந்தன் சூப்பர். வில்லிக்கு சரியான தண்டனை. மொத்தத்தில் கதை அருமை
 
Super ending.... 🤩

சரசு தன்னோட சுயநலத்துக்காக எவ்ளோ தரம் இறங்கி மோசமான வேலை எல்லாம் செஞ்சுட்டாங்க..
பையனை கூட விட்டு வைக்கல... அவ்ளோ ஆங்காரம் வெறி... ஆடுன ஆட்டத்துக்கு கடைசி காலத்துல அனுபவிச்சுட்டு போய் சேர்ந்துட்டாங்க..... அப்போ கூட திருந்தல.....

அலர் நாதனை கேள்வி கேட்டது சூப்பர்..... அவர் செல்லப் பொண்ணு பேசவும் தான் தன்னோட தவறை உணர்ந்தாரு....

எழில் காதல் சூப்பர்.... 💓💓💓இத்தனை வருஷம் காத்திருந்து கைப்பிடித்து தன்னோட காதலால அலரோட காதலையும் உணர வைச்சது அருமை... 💜
Super story 💛💛💛💛💛💛💛💛
 
Nice family drama 🤩🤩😍😍👪💐
சரசுவுக்கு கிடைத்த தண்டனை நியாயம் தான் என்றாலும் படிக்கும் போது ஒரு மாதிரி தான் இருக்கு 😱😱😱

நாதன்.....செல்ல மகள் கேள்வி கேட்ட பிறகு தான் தன்னை உணரனும்னு இருக்கு அவருக்கு😥😥😥😥

எழில்_வெற்றி நட்பு அருமை... Honeymoonக்கு தான் சேர்ந்து போனாங்கன்னு பார்த்தால்.. அவரவர் மனைவியின் பிரசவத்திற்கும் சேர்ந்துத்தான் போயிருக்காங்க பா 🤗🤗🤭🤭🤓

எழிலனின் ஆத்மார்த்தமான காதல் அழகு என்றால் ♥️♥️♥️
அலரின் எதிர்ப்பார்ப்பு மிகுந்த காதல் அழகோ அழகு ❤️❤️💖💓

தொடரட்டும் எழிலின் குடும்ப காவியம் 😍😍🥰🥰💞💞❣️❣️💝💝
 
Top