Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnodu kaikorkka 3

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
உன்னோடு கைகோர்க்க 3
அதிகாலை பேருந்து பயணம்.. சில்லென்ற பனிக்காற்று...ஜன்னலோர இருக்கை..இவை அனைத்தும் சம்யுக்தாவிற்க்கு மிகவும் பிடித்தது..இதுவரை தங்க கூண்டு கிளியாக சிறைப்பட்டு இருந்தாள், இனி தன் இறக்கையை விரித்து வானில் பறக்க போகிறாள்.மனதில் சொல்ல முடியாத அளவு சந்தோஷம்.கண்கள் மூடி அனைத்தையும் ரசித்து கொண்டிருந்தாள்.

"எம்மா, எம்மா உன்ன தான், கண்ண மூடிட்டு என்ன கனவு கண்டுட்டு இருக்க காலையிலே", என்று விசில் அடித்து கத்திக்கொண்டு இருந்தார் கண்டெக்டர்.

"நீ எறங்க வேண்டிய ஸ்டாப் வந்துடுச்சுமா",என்றார்.

சம்யுக்தவிற்கு எதுவும் காதிலே விழவில்லை..அவள் ஒரு தனி உலகில் பயணித்துக் கொண்டிருந்தாள்.

கோவமாக வந்த கண்டெக்டர் அவள் காதருகில் விசிலை ஊதினார்.

அந்த சத்தம் தாங்காமல் தன் அழகான மனநிலை வேறு களைந்த கடுப்பில் யாரென கண்ணை திறந்தாள்.
கண்டெக்டரை பாத்ததும் வந்த கோவத்தில் அவரை கண்டபடி திட்ட தொடங்கிவிட்டாள்.

"ஏன்யா..அறிவிருக்க இப்படி தான் காதுல வந்து விசுல் அடிப்பியா..உனக்குளான் யார் வேலை குடுத்தாங்க..பேஸஞ்சர் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாத..உன்மேல இப்பவே கம்பளைண்ட் குடுக்கிறேன் பாரு..உன்பேரு என்ன சொல்லு", என்று மூச்சு விடாமல் பேசினாள்.

அவள் பேசியது அணைத்தும் கேட்டவுடன் அந்த கண்டெக்டர் காலில் விழாத குறையாக அவளிடம் சரணடைந்தான்.

"மேடம் நா ரொம்ப நேரமா கூப்பிட்டேன்..உங்களுக்கு கேக்கல போல..அதான்", என்று அவன் இழுக்க.

"அதுக்காக காதுல விசுல் அடிப்பியா", என்றாள்.

"மன்னிச்சிடுங்க மேடம்..நீங்க எறங்க வேண்டிய இடம் வந்துடுச்சு..அதான் கூப்பிட்டேன்", என்றான் பயத்துடன்.

ஜன்னல் வழியாக வெளிய பார்த்தாள்..இரும்பு பலகையில் "தேவலோகபுரம்" என்று எழுதி இருந்தது.அதை பார்த்ததும் வந்துட்டோம் போல..இருந்தும் இவனை சும்மா விட கூடாது என்று அவனை திட்ட போனாள்.ஆனால் அப்பொழுது தான் கவனித்தாள் பேருந்தில் உள்ள அனைவரும் அவளையே வாயை பிளந்து பார்த்துக்கொண்டு இருப்பதை.

"எதுக்கு இப்படி பாக்குறாங்க..ஏதோ அதிசயத்தை பாக்கிறதா போல..இதுக்கு மேல இங்க இருக்கவேனா..இருந்தாலும் இவனை விட முடியாது..இன்னொரு முறை இப்படி யார்கிட்டயாச்சும் நடந்துகிட்ட அவ்ளோதான்", என்று அவனை எச்சரித்துவிட்டு அவளின் ஹாண்ட்பேகையும் டிராவல்பேகையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினாள்.

விட்டால் போதும் என்று அந்த கண்டெக்டர் விசுல் அடிக்க பேருந்து கிளம்பியது.

சம்யுக்தா யாராவது இருக்கிறார்களா என்று சுற்றி பார்த்தாள்..ஒரு டீ கடை இருப்பது தெரிந்தது.அங்கு சென்று விசாரிக்கலாம் என்று முடிவு செய்தாள்.

"அண்ணா, ஊருக்குள்ள போக இன்னும் எவ்ளோ தூரம் போகணும்", என்றாள்
.
அந்த கடைக்காரர் "யாருமா நீ..ஊருக்கு புதுசா..இன்னும் பத்து மயில் போகணும்", என்றார்.

"ஏன் பாத்த தெரிலயா..ஊருக்கு புதுசா இருக்கிறதால தான் எவ்ளோ தூரம்னு கேக்கறேன்", என்று மனதில் நினைத்துக் கொண்டு.."ஆமாங்கண்ணா..புதுசா வந்து இருக்க டீச்சர்", என்றாள் பவ்வியமாய்.

"அப்படியாமா..ரொம்ப சின்ன புள்ளையா இருக்கியே".

"சின்ன பொண்ண இருந்தா என்னவாம்", என்று மனதில் நினைத்து கொண்டு."டீச்சர் வேளைக்கு படுச்சுட்டு தான் வந்து இருக்கேன் அண்ணா", என்றாள் பொறுமையாய்.

"சரி மா...உலகம் நல்லா முன்னேறிடுச்சுமா..நீ நடந்து போக முடியாது..ரொம்ப தூரம் போகணும்..அதோ நம்ப பெரிய வீட்டு வண்டி போது பாரு..அதுல போ", என்றார்.

"நன்றி அண்ணா", என்று சொல்லிவிட்டு அந்த வண்டியை பார்த்தாள்.ரெட்டை மாட்டு வண்டி தான் போய்க்கொண்டு இருந்தது.அவளுடன் பயணித்த ஒருசிலர் அதில் போய்க்கொண்டு இருந்தார்கள்.
வண்டி கொஞ்சம் தூரம் செல்வதை பார்த்து, எங்கே வண்டி சென்று விடுமோ என்ற பயத்தால் "மாட்டு வண்டி..ஒய்,மாட்டு வண்டி"என்று கத்தினாள்.இல்லை என்றாள் அவ்வளவு தூரம் யார் நடப்பது.இருள் சூழ்ந்த காலை வேளையில் புதிய ஊரில்.

ஆனால் வண்டி நிற்கவில்லை.அதை பார்த்து அவள் இன்னும் சத்தமாக "மாட்டு வண்டி..மாட்டு வண்டி..."என்றாள்.
அப்பொழுதும் வண்டி நிற்க வில்லை.

வண்டியின் பின்னே ஓடி "ஒய்..பச்ச சட்ட", என்றாள்.
வண்டி உடனே நின்றது.
முன்னாடியே இப்படி கூப்பிட்டு இருக்கலாமோ என்று யோசித்தாள்.

வண்டி ஓட்டுபவனிடம் சென்று "மாட்டு வண்டி..எவ்ளோ நேரமா குப்படறேன்..காதுல விழலயா", என்றாள்.

கோவம் உச்சந்தலைக்கு ஏற அவளை முறைப்புடன் பார்க்க திரும்பியவன்..அப்படியே கண் இமைக்கவும் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்க்கும் பார்வையை பொறுக்காமல்"யோவ்..உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்" என்றாள்.

அவள் பேசிய விதத்தில் கண பொழுதில் சுதாரித்தவன்..அவளை முறைத்துக் கொண்டு"யார கூப்பிட்ட", என்றான்.

"இவன் எதுக்கு இப்படி முறைக்கிறான்",என்று யோசித்துக் கொண்டே திரும்பியவள் வண்டியில் உள்ள அனைவரும் அவளை முறைப்பதை பார்த்து "இது ஊரா என்னனு தெரிலயே..நல்லா வந்து மாட்டிகிட்டேன்..ஒரு நல்லா விஷயம் நம்ப சின்ன அண்ணி இந்த ஊர்ல பிறந்தாலும் நம்பல மாரி நல்லா குணமா இருகாங்க", என்று நினைத்துக்கொண்டாள்.

"உன்ன தான் கூப்பிட்டேன்", என்றாள்.

"அதான் கேக்கறேன்.. என்னனு கூப்பிட்ட", என்றான் கோபத்தை அடக்கி.

"இவன் என்ன லூசா..இப்ப தான கூப்பிட்டேன்..மறுபடி கூப்பிட சொல்றான்"..என்று நினைத்துக் கொண்டு."மாட்டு வண்டினு கூப்பிட்டேன்..ஏன் உனக்கு கேக்கலையா", என்றாள்.

"எம்மா பொண்ணு பாத்து பேசு",என்று வண்டியில் இருந்த ஒரு பெண்மணி சொல்ல.

"யார்கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சி பேசுமா", என்று இன்னொரு ஆள் சொல்ல.
சம்யுக்தவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.கடவுளே இப்படியே வீட்டுக்கு ஓடிவிடலாமா என்று எண்ணினாள்.

"உன் பேரு என்னனு எனக்கு என்ன தெரியும்..தெரிஞ்சா தான கூப்பிட முடியும்", என்றாள் எரிச்சலாய்.

"அதுக்காக இப்படி தான் கூப்பிடுவாயா", என்றான் அவனும் விடாமல்.

ஊருக்குள் போனால் போதும் என்று "அடுத்த முறை உங்க பேர் என்னனு தெரிஞ்சிட்டு கூப்பிடுறேன்..இப்போ என்ன ஊருல எறக்கி விட்ருங்க..கோதை பாட்டி வீட்டுக்கு போகணும்", என்றாள்.

அவள் கோதை பாட்டி என்றதும் அவன் அவளை தீர்க்கமாக பார்த்தான்.

"அங்க யார பாக்கணும்", என்றான்.

"அது உனக்கு தேவையில்லாத விஷயம்", என்றாள்.

"இவளை வழிக்கு கொண்டு வருவது ரொம்ப கஷ்டம் போல", என்று மனதில் நினைத்து கொண்டான்.

"சொல்லமாட்டன போ..நா கிளம்பறேன்..நீ இப்படியே பத்து மயில் நடந்து வா", என்றான்.

அவன் இப்படி சொன்னதும் வண்டியில் உள்ள அனைவரும் ஆ என்று வாயை பொளந்து பாத்து கொண்டிருந்தனர்.யாரிடமும் அதிகம் பேசாத பெரிய ஐயாவின் மகன், ஒரு பெண்பிள்ளையிடம் இவ்வளவு நேரம் பேசுகிறார் என்றால் அவர்கள் அப்படி தானே பார்ப்பார்கள்.அதுவும் வம்பு பேச்சு வேறு..

"ஐயோ..அவ்ளோ தூரம..இந்த இருட்டுல யார் நடக்கிறது..இவன் கிட்ட சண்டை போடுறத விட்டுட்டு எப்படி போலன்னு யோசிக்கலாம்"என்று தனக்குள்ளே பேசிக்கொண்டாள்.

"இங்க பாரு.. நா யாருனு தெரியாம பேசிட்டு இருக்க..நா கோதை பாட்டியோட பேத்தி..அவங்க மகளோட பொண்ணு..நீ இப்படி பேசுனனு மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சது..அவ்ளோதான்", என்று எச்சரித்தாள்.

ஆனால் நிஜம் என்னவென்று தெரியும்போது அவளின் நிலை என்ன ஆகும் என்று தெரியாமல்.

அவள் இதை சொன்னதும் புதியவன் தீவிர யோசனைக்கு சென்றிவிட்டான்.ஆனால் இவளை இவ்வளவு நேரம் முறைத்து கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தவர்கள் ஏதோ பெரிய தப்பு செய்து விட்ட சங்கடத்துடன், "என்னம சொல்ற..பெரியம்மா பேத்தியா நீ..ஐயோ மன்னிச்சிடுமா..தெரியாம பேசிட்டோம்..உனக்கு இல்லாத வண்டியா..ஊரே உன்னோடது தான் கண்ணு... வந்து ஏறு", என்று சொல்லி அவளுக்கு ஏற உதவியும் செய்தார்கள்.

"ஹாப்பா.. எப்படியோ ஏறிட்டோம்..வீட்டுக்கு போன போதும்", என்று எண்ணிக்கொண்டாள்.

அந்த புதியவன் இவள் யாராய் இருப்பாள் என்ற யோசனையிலே வண்டியை ஓட்டிக்கொண்டிந்தான்.சம்யுகதாவோ அந்த ஊரின் அழகில் அவளை தொலைத்து மெய்மறந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.
பெயருக்கு ஏற்றார் போல் அந்த ஊர் அவ்வளவு அழகு என்று எண்ணினாள்.வழி முழுவதும் சிலுசிலு காற்று, வயல்கள், மரங்கள்,பறவைகள், குருவி சத்தம், கிளிகள், வயல் முழுவதும் பயிரிட பட்டு இருந்தது.கரும்பு, நெல், சோளம், காய்கள் இப்படி எல்லாமே அங்கே பயிரிடப்பட்டு இருந்தன.சம்யுகதாவிற்கு இவை அனைத்தும் மிகவும் பிடித்து விட்டது.அதை ரசித்து பார்த்துக்கொண்டு வந்தாள்.

அவள் சிந்தனை கலைவதை போல் வண்டி ஆடி நின்றது.
அவள் கோவமாக அவனை பார்க்க..கூட வந்த அனைவரும் இறங்கி கொண்டிருந்தார்கள்.

"ரொம்ப நன்றி தம்பி", என்று அனைவரும் அவனிடம் பணிவாக விடை பெற்று சென்றார்கள்.
"ஐயோ..எதுக்கு நன்றிலான்..என்னோட கடமை இதெல்லாம்", என்று அவன் அடக்கமாக சொன்னான்..அதே நேரம் ஒரு கம்பிரமும் அவனிடம் தெரிந்தது போல் இருந்தது சம்யுக்தாவுக்கு.

"இவங்க எல்லாரும் ஒரே ஸ்டாப் ல எறங்கிடாங்கு", என்று அவனிடம் கேட்டாள்.

"அவங்க எல்லாரும் மரியாதை தெரிஞ்சவங்க", என்றான்.

"இவன் என்ன லூசா.. நா என்ன கேக்கறேன்..இவன் என்ன சொல்றான்..வீட்டுக்கு போனதும் கோதை பாட்டிகிட்ட இவனை போட்டு குடுக்கணும்", என்று நினைத்து கொண்டாள்.

அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை.
ஒரு பெரிய வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் அவன்.அதுவும் தனியாக இருந்தது அந்த வீடு.புதிய வீடாக இருந்தாலும் பழமையை பொருந்தி கட்டி இருந்தார்கள்.தூண்கள், மண் தரை, வீட்டை சுற்றி வேப்பமரம், தென்னை மரம், மா மரம், கொய்யா எல்லாம் இருந்தது.பார்த்ததும் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டது.

அவள் அந்த வீட்டை ரசித்து பார்ப்பதை அவனும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.அவனும் ரசித்து பார்த்தான் வீட்டை அல்ல அவளை.

இவர்களை பார்த்துகொண்டே வந்த கோதை பாட்டி "வாடா கண்ணா..வயலுக்கு நீர் பாய்ச்சிட்டு வரியா..ஆமா இந்த பொண்ணு யாரு? ", என்றார்.

அவரின் பார்வையிலே புரிந்து கொண்டான் பாட்டிக்கு அவளை உண்மையாகவே தெரியாது என்று.

"அச்சோ..இந்த பாட்டி இப்படி மாட்டி விட்டுட்டாங்களே.. இவன் இப்போ என்ன பண்ண போறானே தெரியலையே", என்று அவனை பார்த்தாள்.

அவன் ரௌத்திரமாக அவளை முறைத்து கொண்டு இருந்தான்.
 
Top