Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnodu kaikorkka 2

Advertisement

Divya sathi

Tamil Novel Writer
The Writers Crew
unnodu kaikorkka 2
காலை நேர பரபரப்பு அந்த வீட்டு பெண்களிடம் தெரிந்தது.சமையல் வேலையை முடித்துவிட்டு, டைனிங் டேபிள் மீது சமைத்த உணவுகளை வரிசை படுத்தி வைத்தனர்.
அமராவதி எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்த்து கொண்டார்.அம்பிகா சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு வந்தார்.

அமராவதி அனுவிடம் "அணு மாமா வர நேரம் ஆயிடுச்சு. ஆஷிக் இன்னும் வரல பாரு..போய் கூட்டிட்டு வா சீக்கிரமா..இல்லனா மாமா கோவா பட போறாரு.."என்றார்.

"சரிங்க அத்த", என்று அணு அவள் அறைக்கு சென்றாள்.

அப்பொழுது,
ஆஷிக் டையை கட்டிக் கொண்டிருந்தான்.அணு அவனுக்கு உதவ சென்றாள்.அணுவை தன் கை வளைவுக்குள் அனைத்து கொண்டான்.

"என்ன பண்றிங்க விடுங்க..டைம் ஆயிடுச்சுன்னு அத்த கூட்டிட்டு வர சொன்னாங்க..மாமா வந்தா கோவ பாடுவாங்க போலாம்".

"என்ன அணு நீ..நைட் நித்தின் குட்டி டிஸ்டர்ப் பன்றான்..காலைல எழுஞ்சி பாத்தா நீ வேல செய்ய போயிட்ற..இப்போ இந்த கொஞ்ச நேரம் கூட எனக்காக யோசிக்க மாட்டிய போ", என்று பொய்யாக கோவம் கொண்டான்.

"ரொம்ப தான்..வீக்எண்ட் பிரீயா தான இருக்கீங்க..அப்போ கொஞ்சிக்கலாம்..இப்போ டைம் ஆயிடுச்சு.. கீழ வாங்க"என்று செல்ல கட்டளையிட்டுவிட்டு சென்றாள்.

அணுவை நினைத்து பெருமை பட்டு கொண்டான் ஆஷிக்.வேலை வேலை என்று அவளுக்காக கொஞ்ச நேரம் கூட ஒதுக்க முடியவில்லை அவனாள்.இருந்தும் அவள் எதுவும் கேட்காமல் அவனை புரிந்துக்கொண்டு நடக்கிறாள்.இப்படி ஒரு மனைவி கிடைக்க தானே எல்லோரும் ஆசை படுகிறார்கள். புரிதல் தானே வாழ்க்கை.

அணு கீழே சென்றதும் ஆஷிக்கும் அவள் பின்னே வந்தான்.

" என்னமா வேலை எல்லாம் முடிஞ்சதா", ஆஷிக்.

" வாடா ஆஷிக்..எல்லாம் முடிஞ்சது..ஏன் இவ்வளவு நேரம்,அப்பா வந்தா உன்னதானே முதல்ல கேப்பாரு"என்றார் அமராவதி.

"நைட் லேப்டாப்ல கொஞ்சம் வேலமா".

ஆதிசேஷன் தனது அறையில் இருந்து வெளி வருவதை பார்த்து அனைவரும் கப் சிப் என்றானர்.

" ஆஷிக் இங்க வா" என்று ஆதிசேஷன் அவனை அழைத்தார்.

" சொல்லுங்கப்பா".

" இன்னைக்கு ஆபீஸ் போக டைம் ஆகும் மீட்டிங் எல்லாம் கொஞ்சம் கேன்சல் பண்ணிடு".

" சரிங்கப்பா...உங்களுக்கு ஏதாவது உடம்பு முடியலையா".

" இல்லப்பா சம்யுக்தா கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு".

ஆதிசேஷன் இதை சொன்னதும் அனைவர் முகத்திலும் பயம் தொற்றிக்கொண்டது.

" அம்பிகா இங்க வாமா", என்று அதிசேஷன் அழைத்தார்.

" சொல்லுங்க மாமா".
" சம்யுக்தாவ கூட்டிட்டு வரியாமா கொஞ்சம் பேசணும்"..

" சரிங்க மாமா கூட்டிட்டு வறேன் "..

இந்த வாலு இப்போ என்ன பண்ணி வச்சிருக்குனு தெரியலையே பெரிய மாமா வேற ரொம்ப கோவமா இருக்காரு.. மனதில் பலவித யோசனைகளுடன் சம்யுக்தாவின் அரை முன் நின்றார்..

" சம்யுக்தா....சம்யுக்தா... கதவ தர", என்று கதவை தட்டினார் அம்பிகா.

" வரேன் மா இருங்க".

" சீக்கிரமா வாடி".

" எதுக்குமா இப்படி கத்திரிங்க என்ன அவசரம்", என்று கதவை திறந்தபடி சம்யுக்தா கேட்டாள்..

" இப்போ என்னடி பண்ணி வச்சிருக்க..பெரியப்பா ரொம்ப கோவமா இருக்காரு.. உன்ன கூப்பிட்டு வர சொன்னாரு", என்று பதட்டமாக சொன்னார் அம்பிகா.

" இப்போ நான் எதுவும் பண்ணலமா...கூப்பிட்டா நான் எதாவது தப்பு பண்ணதா அர்த்தமா", என்று எரிச்சலுடன் கேட்டாள் சம்யுக்தா.

" நிஜமா எதுவும் பண்ணல தான", என்று சந்தேகமாக கேட்டார்.

" அம்மா என்ன டென்ஷன் பண்ணாம போங்க நான் வரேன் கீழே", என்று அவரை முறைத்தாள்.

" சரி சீக்கிரம் வாடி..பெரியப்பா வெயிட் பண்ணிட்டு இருக்காரு.. நான் கீழ போறேன்"..

"பெரியப்பாவ பாத்து எதுக்கு தான் எல்லாரும் இப்படி பயபடரங்குனு தெரில..வீடு மாறியா இருக்கு..ஜெயில்ல கூட இவ்ளோ ரூல்ஸ் இருக்காது,பயம் இருக்காது போல..ச்ச"...

"என்ன ஆனாலும் சரி..இன்னைக்கு கண்டிப்பா என் மனசுல இருக்குறத சொல்ல தான் போறேன்..அதுனால என்ன பிரச்சனை வந்தாலும் சரி"...என்று கண்ணாடி முன் நின்று அவளிடமே பேசிக் கொண்டாள் சம்யுக்தா.

கீழே சென்ற அம்பிகா"சொல்லிட்டேன் மாமா..வரா",என்று ஆதிசேஷனிடம் சொன்னார்.

அனைவரின் மனத்திலும் பலவிதமான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தது.

சம்யுக்தா தன் பெரியப்பாவின் முன் வந்து நின்றாள்.

அனைவரின் பார்வையும் அவளின் மேல் தான் இருந்தது.

"பெரியப்பா என்ன வர சொன்னிங்கனு அம்மா சொன்னாங்க",என்றாள் சம்யுக்தா.

"ம்ம்..வாடா,இப்படி வந்து என் பக்கத்துல உக்காரு", என்றார்.

"பெரிய ஆப்பா இருக்கும் போலவே..நால்லா மாட்டிக்கிட்டா சம்யுக்தா"..என்று மனதில் சொல்லிக் கொண்டே அவர் பக்கத்தில் உட்கார்ந்துகள்.

"என்னடா முடிவு பண்ணி இருக்க..நீ கேட்ட ஒரு வருஷ டைம் முடிஞ்சது..அதான் கேக்கலானு கூப்பிட்டேன்".

"இன்னும் ஒரு மூணு மாசம் மட்டும் டைம் கூடுங்க பெரியப்பா.. ப்ளீஸ், நா அதுக்குள்ள நல்ல பதில் சொல்லிடறேன்", என்று மனதில் இருப்பதை சொல்லிவிட்டாள்.

அவருக்கு கோவம் வர"நீ என்ன தான் நெனச்சிட்டு இருக்க சம்யுக்தா..ஏற்கனவே ஒரு வருஷம் டைம் கொடுத்தாச்சு..இன்னும் டைம் கேட்டா என்ன அர்த்தம்", என்று வீடே அதிரும் அளவு கத்தினார்.

பயத்தில் அவள் எழுந்துவிட்டாள்.

"ப்ளீஸ் பெரியப்பா..நா ரொம்ப நாள்ளெல்லாம் கேக்கல..ஜஸ்ட் த்ரீ மந்த்ஸ் தான கேட்டேன்".

"அதெல்லாம் முடியாது சம்யுக்தா..உன்னோட டைம் எல்லாம் முடிஞ்சது..இனி நா சொல்றது தான் முடிவு..நாளை மறுநாள் உன்ன பொண்ணு பாக்க வராங்க..அன்னைக்கே எங்கேஜ்மெண்ட் டேட் பிக்ஸ் பண்ண போரோம்..உனக்கு புரிஞ்சதா", என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

அமராவதி அவரை சாப்பிட அழைத்தும் அவர் மறுத்துவிட்டார்.

ஆதியும் அவர் பின்னே சென்றுவிட்டான்.

"நீ எதுக்கும் கவலைபடாத..பெரியப்பாகிட்ட நா பேசுறேன்", என்று சம்யுக்தாவின் தலையை வருடிவிட்டு சென்றுவிட்டார் அமராவதி.

"அத்த பேசுறேன்னு சொல்லி இருகாங்குல..நீ தைரியமா இரு சம்யுக்தா", என்றாள் அணு.

"சம்யுக்தா"என்று பயந்துடன் அழைத்தார் அம்பிகா.

"அப்பா எங்க", என்றாள் வந்த கோவத்தை அடக்கி.

"அவர் சீக்கிரமா வேளைக்கு கெளம்பிட்டாரும".

"இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சி எஸ்கேப் ஆகிட்டாரா..வரட்டும் இருக்கு", என்று சொல்லிவிட்டு தன் சின்ன அண்ணியை பார்க்க சென்று விட்டாள்.

"அண்ணி..அண்ணி..என்ன பண்ணிட்டு இருக்கீங்க",என்று கேட்டுக்கொண்டே அந்த அறையினுள் நுழைந்தாள்.

"என்ன ஆச்சு சம்யுக்தா..எல்லாம் ஓகேவா", என்றாள்.

"நீங்க தான் சொல்லணும்..நம்ப பிளான் எல்லாம் ரெடியா".

"பெரிய மாமா ஒதுக்கலையா".

"தெரிஞ்ச விஷயம் தான..விடுங்க அண்ணி..பாத்துக்கலாம்.."

"எனக்கு ரொம்ப பயமா இருக்கு"..

"உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது..பயப்படாதீங்க"..

"சரி.. உனக்காக தான் செய்றேன்..பாத்து பத்திரமா இருக்கனும்"..

"ஓகே..டீல்", என்று சிரித்து கொண்டே தன் கட்டை விரலை தூக்கி காட்டினாள்.

பிரணவீயும் அவளுடன் இணைத்து சிரித்தாள்.

"சரி அண்ணி..எல்லாம் ரெடி பண்ணனும்..நா போறேன்"..

"சரி..சொன்னதுலான் ஞாபகம் இருக்குல"..

"எல்லாம் ஞாபகம் இருக்கு..நா பாத்துக்கிறேன்".. என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

வேலை முடிந்து அனைவரும் வீட்டுக்கு வந்துவிட்டனர். இரவு உணவு மட்டும் அனைவரும் சேர்ந்து தான் சாப்பிடுவார்கள்.
ஆதிசேஷன் அனைவரும் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டார். "சம்யுக்தா எங்க காணும்".. என்று கேட்டார்.

"அவ சீக்கிரமா சாப்பிட்டு தூங்க போய்ட்டா மாமா"என்றார் அம்பிகா.

"அவர் யோசனையாக உணவை உண்டு முடித்தார்".

அவரின் முகத்தை பார்த்த அமரேந்திரன்"கொஞ்சம் கோவமா இருப்பா அண்ணா.. நீங்க கவலை படாதீங்க ", என்றார்.

ஆதிசேஷனும் காலையில் பார்த்து கொள்ளலாம் என்று தூங்க சென்றுவிட்டார்.

அனைவரும் தூங்க சென்றுவிட்டனர்.

"அவ உங்க மேல ரொம்ப கோவமா இருக்கா"என்று அம்பிகா அமரேந்திரனிடம் சொன்னார்.

"எனக்கு தெரியும் அம்பிகா..அண்ணா என்கிட்ட முன்னாடியே சொன்னாரு பேசப்போறேன்னு..அதான் சீக்கிரமா கெளம்பி போயிட்டேன் காலைல"..

"எனக்கு சம்யுக்தாவ நெனச்சா பயமா இருக்குங்க"..

"எதுக்கு பயம்"..

"எதனா பண்ணிடுவாளோனு"..

"அவ என் பொண்ணு..எனக்கு நம்பிக்கை இருக்கு.. நீ எதுவும் யோசிக்காம படு".

ஆஷிக்கும் அணுவிடம் இதை பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தான்.

"காலைல என்ன ஆகுமோ தெரில அணு"..

"அத்த மாமா கிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்காங்க பாக்கலாம்..எதுவும் யோசிக்காம தூங்குங்க".

பிரவீனிடம் அனைத்தும் சொல்லலாமா வேண்டாமா என்று யோசனையுடன் தூங்கிவிட்டாள் பிரணவீ.
பிரவீன் வரும்போது அவள் தூங்கி இருந்ததால் அந்த விடியல் அவர்கள் அனைவருக்கும் பெரிய இடியை தருவதாக ஆனது.

மறுநாள் அனைவரும் எப்பொழுதும் போல் அவர்களின் வேலையை செய்துகொண்டு இருக்க..அம்பிகா எழுந்தவுடன் சம்யுக்தாவை பார்க்க சென்றார்.

"இவளுக்கு எதுவும் புரியவே மாட்டுது..அவ நல்லதுக்கு தான சொல்றோம் எல்லாரும்", என்று வருத்த பட்டுக்கொண்டு அவளின் அறைக்கு சென்றார்.

அங்கு அவள் இல்லாமல் போக அதுமட்டும் இல்லாமல் டேபிள் மேல் ஒரு கடிதம் வேறு இருந்தது.
பயத்துடன் அதை பிரித்து பார்த்தவர் நிஜத்தை நம்ப முடியாமல் தன் கணவரிடம் சென்று அந்த கடிதத்தை காட்டினார்.
வீட்டில் அனைவருக்கும் தெரிந்துவிட்டது.சம்யுகுதா வீட்டை விட்டு போய்விட்டாள் என்று.

இங்கே அனைவரும் கலங்கி இருக்க அங்கே சம்யுக்தா ஒருவனிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த புதியவனோ அவளை கண் இமைக்கவும் மறந்து பார்த்துக்கொண்டு இருந்தான்.
 
ரொம்ப அருமையான பதிவு
என்ன எதுக்கு இந்த முடிவு
சம்யுக்தா
 
ரொம்ப அருமையான பதிவு
என்ன எதுக்கு இந்த முடிவு
சம்யுக்தா
Tnk u...சம்யுக்தாக்கு கல்யாணம் செஞ்சிக்க விருப்பம் இல்ல போல..?
 
Top