Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 6

Advertisement

அத்தியாயம்---6

உடனே பிரபாகர் சித்தார்த்திடம். “நாம் போகலாம் சார்.காலையில் இருந்து நாம் இங்கயே தான் இருக்கிறோம். வேறு பகுதிக்கும் செல்லலாம்.” என்று கூறி அவ்விடத்தை விட்டு போக எண்ணினார்.

உடனே சித்தார்த்தும் பரினிதாவை பார்த்து “என்ன குட்டிம்மா போகலாமா….?” என்றதற்க்கு பரினித்தா அங்கு ஆவளுடன் விளையாடும் ஆஸ்ரமத்து குழந்தைகளை பார்த்து

“நீங்க போறது என்றால் போங்க நான் இங்கயே இருக்கிறேன்.” என்றதற்க்கு சித்தார் பதில் அளிக்கும் முன் பிரபாகர் “இங்கு தனியாக எல்லாம் வேண்டாம்மா. இவ்வளவு நேரம் விளையாடினீங்க இல்லையா…? போதும் வாங்க நாம் மத்த பகுதிக்கு போகலாம்.” என்ற பேச்சைக் கேட்டு பரினிதாவின் முகம் வாடி விட்டது.

அதனை பார்த்த ஆஷிக் சித்தார்த்திடம் “நீங்கள் மத்த பகுதியை பார்ப்பது என்றால் பாருங்கள். இங்கு இருக்கும் குழந்தைகளுக்கும், பரினிதாவுக்கும் பாதுகாப்பை நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று கூறியதற்க்கு.

பரினிதா “ஆமாம் அண்ணா நீங்கள் போவது என்றால் போங்கள். நான் இன்னும் கொஞ்சம் நேரம் குழந்தைகளுடன் விளையாடுகிறேன்.” என்றதற்க்கு சித்தார்த யோசனை செய்யும் போதே ஒரு போன் கால் வந்தது.

உடனே சித்தார்த் பிரபாகரிடம் “நாம் உடனே போக வேண்டும். ஏதோ ஒரு மருந்தை சாப்பிட்ட நூறுக்கு மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்த்திருக்கிறார்களாம். நான் அங்கு செல்ல வேண்டும்.” என்று கூறிக் கொண்டே ஆஷிக்கிடம்

“ குழந்தைகளையும்,பரினிதாவையும் காண்பித்து இவர்களுக்கு பாதுகாப்பு செய்து விட்டேன். இருந்தும் உங்கள் உழியர்களை கொஞ்சம் பார்த்துக் கொள்ள சொல்லுங்கள்.” என்று ஆஷிக்கிடம் கூறிவிட்டு.

பிரபாகரிடம் “இவர் என்னிடம் அப்பாயின்மென்ட் கேட்டார் என்று சொன்னீர்கள் இல்லையா அடுத்த வாரம் கொடுத்து விடுங்கள்.” என்று கூறிக் கொன்டே அவ்விடத்தை விட்டு அகன்றான்.

காரில் ஏறியதும் சித்தார்த்திடம் பிரபாகர் “என்ன தான் இருந்தாலும் இப்போது தான் பார்த்த அவரை நம்பி நம்ம பாப்பாவையும், குழந்தைகளையும் விட்டு விட்டு வந்து இருக்க கூடாது சார்.” என்று தன் மனதில் பட்டதை கூறினார்.

இந்த மூன்று மாதமாக பிரபாகர் சித்தார்த்தை பாத்துக் கொண்டு தானே இருக்கிறார்.யாரிடமும் அதிகம் பேசாதவர் ஆஷிக்கிடம் மட்டும் ஏன் பேசினார்.அதுவும் தன் தங்கையை அவர் பாதுகாப்பில் விடும் அளவுக்கு என்று அவர் எண்ணம் ஒடும் வேளையில் சித்தார்த்தும் இதே தான் யோசித்துக் கொண்டு இருந்தான்.

அவன் சிறு வயது முதலே முசுடு எல்லாம் இல்லை.மற்றவர்கள் பேசினால் இவனும் பேசுவான்.இன்னும் சொல்ல போனால் கொஞ்சம் கலகலப்பான பேர் வழி தான்.எப்போது தன் இருபதாவது வயதில் தன் அம்மா ,அப்பா ,தாத்தாவை விபத்தில் பரிகொடுத்ததும் இல்லாமல் அதனால் தன் காதலையும் இழந்தானோ அதில் இருந்து தன் பேச்சை குறைத்துக் கொண்டான்.தன் தங்கைக்கு மட்டும் இதில் கொஞ்சம் விதி விலக்கு.

பின் தன் பதவி காரணமாக மற்றவர்கள் வலிய வந்து பேசினாலும் இவன் தன் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொள்வான். அவனுக்கு தெரியும் முதலில் பேசி பின் அவர்கள் தன்னிடம் ஏதாவது செய்து கொடுக்கும் படி கேட்பார்கள் என்று. அதனால் அனைவரையும் ஒரு எல்லை கோட்டோடு நிறுத்திக் கொண்டான்.

அப்படி இருந்த நான் ஆஷிக்கிடம் மட்டும் நானே வலிய சென்று பேசியதற்க்கு காரணம் அவன் மனதுக்கு தெரியும் ஏன் என்று. தன்னவளின் வாயிலிருந்து அதிகமாக உதிர்த்த பெயர் ஆஷிக் என்பது.

இவனும் கிண்டலாக நிறைய தடவை கேட்டு இருக்கிறான். நீங்கள் இருவரும் இரட்டையர்கள் என்று சொல்கிறாய். இதில் நீ முதலில் பிறந்தாயா…? இல்லை ஆஷிக்கா என்று.

அவளும் நாங்கள் இந்த ஆராய்ச்சியில் எல்லாம் இறங்கியது கிடையாது.நாங்கள் இருவரும் பெயர் சொல்லி தான் அழைப்போம். உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் திருமணத்திற்க்கு பிறகு உங்கள் மாமியாரை கேட்டுக் கொள் என்றதற்க்கு. தான் சொன்ன திருமணத்திற்க்கு பின் எனக்கு வேறு ஆராய்ச்சி இருக்கும் போது எனக்கு எதற்க்கு இந்த ஆராய்ச்சி என்ற தன் வார்த்தையில் தன்னவளின் முகம் சிவந்ததை இப்போதும் நினைக்கும் போது மனதுக்குள் பெரும் வலி ஏற்பட்டது.

பழைய நினைவிகளில் மூழ்கி இருந்த சித்தார்த்தை பிரபாகரின் “ சார் ஆஸ்பிட்டல் வந்து விட்டது.” என்ற அழைப்பில் நிகழ் காலத்திற்க்கு வந்த சித்தார்த் காரை விட்டு இறங்கினான்.

இங்கு பரினிதாவோ போகும் அண்ணாவையே ஏக்கத்தோடு பார்த்திருப்பதை பார்த்த ஆஷிக் “உனக்கு உங்க அண்ணாவை ரொம்ப பிடிக்குமா…?” என்று கேட்டான்.

இவன் கேள்வியில் இவனை பார்த்த பரினிதா “ லூசா நீங்க” என்ற இவள் கேள்வியில் சுற்று முற்றும் இவன் பார்த்தான்.

மந்திரி கூட தன்னிடம் பார்த்து தான் பேசுவார்கள். இவள் என்ன என்றால் இப்படி பேசுகிறாளே அதுவும் இப்படி சத்தமாக. அப்போது தான் அவன் ஒன்று உணர்ந்தான் இவள் பார்ப்பதற்க்கு மட்டும் சின்ன பெண் போல் இல்லை. இவள் எல்லாம் செயலும் அப்படி தான் இருக்கிறது.

அப்போது தான் அவனுக்கு இன்னொன்றும் நியாபகத்தில் வந்தது. சித்தார்த் குடும்பத்தை பற்றி விசாரிக்கும் போது இவளின் பொழுது போக்கு என்று கார்ட்டூன் பார்ப்பது மற்றும் அருகில் இருக்கும் சிறுவர்களுடன் விளையாடுவது பற்றி அதில் போட்டு இருந்ததும் தான்.

பரினிதா திரும்பவும் ஆஷிக்கிடம் “என்ன நான் கேட்டது சரியா. அது தான் பதிலே இல்லையா…?” என்ற அவள் பேச்சில் தன் சிந்தனையில் இருந்து தன் கவனத்தை அவள் பக்கம் திருப்பினான்.

“ஏன் அப்படி கேட்கிறாய்.”

“பின் என்ன யாருக்கு தான் அண்ணனை பிடிக்காது. அது தான் உங்களுக்கு இது கூட தெரியலையே லூசான்னு கேட்டேன்.” அவள் பேச பேச கோபப்படாமல் ரசித்து கேட்டிருந்தான்.

அவனுக்கே அவனை நினைத்தால் ஆச்சரியமாக இருந்தது.அவன் நினைவு தெரிந்து இது வரை யாரும் இப்படி பேசியது கிடையாது.அவன் மாமா வீட்டில் இருக்கும் போதும் தன் வேலையை பார்த்துக் கொண்டு ஒதுங்கியே சென்று விடுவான்.

பின் தொழிலில் இறங்கிய உடன் இன்னும் சொல்லவே வேண்டாம். அவனிடம் அனைவரும் பார்த்து தான் பேசுவார்கள். அப்படி பட்ட நான் எப்படி இவள் பேச்சுக்கு கோபப்படாமல் இப்படி அமைதியாக இருக்கிறேன். என்று நினைத்துக் கொண்டே அவளுக்கு பதிலும் அளித்தான்.

“நான் லூசு எல்லாம் இல்லை.ஆனால் உன் போல் அறிவாளியும் இல்லை.” என்ற அவன் பேச்சைக் கேட்ட பரினிதா அவனை சந்தேகத்துடன் பார்த்தாள்.

அவன் அருகில் வந்து “என்ன என்னை சைட் அடிக்கிறாயா…?” என்ற அவள் கேள்வியில் கொஞ்சம் அதிர்ந்து தான் போய் விட்டான்.மனதுக்குள் என்ன தான் சின்ன பெண் போல் பேச்சிம் செயலும் இருந்தாலும். இந்த விஷயத்தில் வயதுக்கு ஏத்த பக்குவமாக தான் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டே

“ஏன் அப்படி கேட்கிறாய்.” என்று கேட்டதற்க்கு.

“என் பிரண்ட்ஸ் தான் சொன்னாங்க. ஒரு பைய்யன் உன்னை பத்தி உங்கிட்ட இல்லாதது பற்றி சொன்னாங்கனா… அவன் உன்னை சைட் அடிக்கிறான். அதனால் அவன் கிட்ட பேசதேன்னு சொன்னாங்க .” என்ற அவள் பதிலில் முன் தான் நினைத்த அவள் பக்குவமான பெண் என்ற நினைப்பை உடனடியாக அழித்தான்.

அவள் கேட்ட நீ என்னை சைட் அடிக்கிறாயா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் அதனை அவள் மறப்பற்க்காக தன் பேச்சை மாற்றினான்.

“அப்போ நீ அறிவாளி இல்லை என்று ஒத்துக் கொள்கிறாய்.”

“நான் எப்பவும் பொய் பேச மாட்டான். நான் அறிவாளியா இருந்தால் எதற்க்கு எட்டு சப்ஜெக்ட் அரியஸ் வைத்திருக்க போகிறேன்.” என்ற அவள் பேச்சைக் கேட்ட ஆஷிக் மனம் விட்டு சிரித்தான்.

அங்கு வேலை செய்யும் உழியர்கள் கொஞ்ச நேரமாகவே ஆஷிக் பரினிதாவிடம் பேசுவதையே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருந்தவர்கள் இப்போது சிரிப்பதை பார்த்ததும் இது நம்ம முதலாளியா என்று சந்தேகத்துடன் பார்த்திருந்தனர்.

முதலில் பரினிதாவின் பேச்சை கேட்டு தான் எங்கு இருக்கிறோம் என்று மறந்து சிரித்த ஆஷிக் பின் தான் தாங்கள் இருக்கும் இடம் கருதி சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் நினைத்த மாதிரி ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டு தன்னை பார்த்திருந்த ஊழியர்களை கண் அசைவிலேயே வேலையை செய்யும் மாறு பணித்தான்.

பின் ஒரு ஊழியரை மட்டும் அழைத்து அங்கு விளையாடும் ஆஸ்ரமத்து குழந்தைகளுக்கு ஐஸ் க்ரீம் கொடுக்கும் படி கூறி பரினிதாவை தன் கூடவே அழைத்துக் கொண்டு ஐஸ் க்ரீம் வைத்திருக்கும் இடத்திற்க்கு சென்று “நீயே உனக்கு என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்.” என்றதற்க்கு அவன் எதிர் பார்த்த மாதிரியே அவள் கண் இரண்டும் விரிந்தது.

அவள் தனக்கு பிடித்த ஐஸ்க்ரீமை எடுத்துக் கொண்டு ஆஷிக்கிடம் “நீங்க ரொம்ப நல்லவர். பின் ஏன் பிரபாகர் அங்கிள் போகும் போது அப்படி சொன்னார்.” என்று அவனிடமே கேள்வி கேட்டாள்.

“என்ன சொன்னார்.”

அவள் தன் இரு கண்களையும் உருட்டி “உங்க கிட்ட என்னை பார்த்து நடந்துக்க சொன்னார்.” என்று அவள் பேச்சையும் அதை அவள் சொன்ன விதத்தையும் பார்த்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டான்.

மனதில் பிரபாகரை பராட்டவே தோன்றியது.பரவாயில்லை புத்திசாலி தான் நான் பார்க்கும் பார்வையை வைத்தே புரிந்துக் கொண்டாரே என்று அவன் மனது எண்ணமிடும் போதே இப்போது நான் என்ன செய்து கொண்டு இருக்கிறேன். இந்த சிறு பெண்ணின் மீது எனக்கு விருப்பமா...? எனக்கும் அவளுக்கும் எந்த விதத்திலும் பொறுத்தம் இல்லையே…நான் சிறுவயது முதலே வயதுக்கு மிறிய பக்குவத்தோடு இருந்தேன். இவள் என்னவென்றால் டீன் ஏஜை கடந்த பின்னும் இன்னும் குழந்தையாகவே நடந்துக் கொள்கிறாள்.

தோற்றத்திலும் அப்படி தான். அப்படி இருக்கும் போது எனக்கு இவள் எப்படி பொறுந்துவாள். நான் திருமணம் செய்துக் கொள்ளும் பெண் எனக்கு எல்லா வகையிலும் எனக்கு ஈடு கொடுக்க வேண்டும்.

அது தொழில் என்றாலும் சரி, குடும்பம் என்றாலும் சரி.இவளை நான் திருமணம் செய்துக் கொண்டாள்.இவளையும் சேர்த்து நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு இது சரி வராது.அவள் தன் மீது மோதியதால் வந்த ஈர்ப்பாக தான் இருக்கும். இதற்க்கு நாம் முக்கியத்திவம் கொடுக்க கூடாது என்று நினைத்துக் கொண்டே பின் ஒரு முடிவு எடுத்தவனாக பரினிதாவிடன் இருந்து விடைப்பெற்று சென்றான்.பாவம் அவனுக்கு தெரியவில்லை எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதை.

தன்னிடம் பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று எழுந்து சென்றதும் முதலில் பரினிதாவுக்கும் ஒன்றும் புரியவில்லை.அவன் எழுந்து இரண்டு அடி தான் எடுத்து வைத்திருப்பான்.

“ஆஷிக் சார்” என்ற பரினிதாவின் குரல் காதில் விழுந்தும் நிற்காமல் சென்றான்.பரினிதாவோ தான் கூப்பிட கூப்பிட செல்பவனை சிறிது நேரம் பார்த்திருந்து விட்டு தனக்குள்ளாகவே சிரித்துக் கொண்டாள்.

அப்போது அங்கு வந்த ஒரு ஆஸ்ரமத்து குழந்தை “ என்ன அக்கா நீங்களே சிரிச்சிக்கிறீங்க.” என்று கேட்டதற்க்கு .

“ இந்த சொர்க்க பூமியின் ஒனர் நல்லாதான் பேசிட்டு இருந்தார்.ஐஸ் கிரீம் எல்லாம் வாங்கி தந்தார்.உங்களுக்கு கூட இங்க வேலை செய்றவங்க எடுத்துட்டு வந்து கொடுத்தாங்களா அதுவும் அவர் சொல்லி தான். பின் என்னையும் இந்த ஐஸ்கிரீம் வைத்திருக்கும் இடத்துக்கே அழைச்சிட்டு வந்துட்டார்.

நான் நினைக்கிறேன் அவர் வாழ்க்கையில் செய்த பெரிய தவறு என்னை இங்க அழைச்சிட்டு வந்ததுன்னு தான்னு. நான் ஐஸ் கிரீம் சாப்பிடுவதை பார்த்துட்டு பயந்து போய் கூப்பிட கூப்பிட ஒடி போயிட்டார்.” என்று அப்பெண்ணிடன் சொல்லி விட்டு திரும்பவும் விழுந்து விழுந்து சிரித்தாள்.

அவ்விடத்தை விட்டு வந்தவன் அந்த சொர்க்க பூமியின் ஆபிஸ் அறையில் அமர்ந்துக் கொண்டு அந்த சொர்க்க பூமியின் மனேஜரை போனில் அழைத்து.

“கலெக்டரின் தங்கை மற்றும் ஆஸ்ரமத்து குழந்தைகள் வந்து இருக்கிறார்கள். நம் ஊழியர் இரண்டு பேர் எப்போதும் அவர்கள் மேல் ஒரு கண் வைக்கும் மாறு பார்த்துக் கொள்.” என்று கூறி விட்டு தன் இரு கண்ணையும் மூடி தன்னை கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு பின் அவ்விடத்தை விட்டு அகன்றான்.

சித்தார்த் அந்த மருத்தவனையில் அட்மிஷன் செய்தவர்களிடம் பேசி ஒரு அறிக்கை எழுதி தன் பி.ஏ பிராபகரிடம் கொடுத்து விட்டு வீட்டுக்கு வந்தவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

தன் தங்கை அங்கே என்ன செய்துக் கொண்டிருப்பாள் என்ற யோசனையாகவே இருந்தது.பின் தன் தங்கைக்கு பாதுக்காப்புக்கு ஏற்பாடு செய்து இருந்தவனை போனில் அழைத்து தங்கை மற்றும் குழந்தைகளை பாதுக்காப்பாக அழைத்துக் கொண்டு வந்து விடு என்று கூறிவிட்டான்.

அதன் படி சரியாக இவன் போன் செய்த இரண்டு மணி நேரம் கழித்து பரினிதா மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு அவன் முன் வந்து நின்றாள்.

“இப்போது எதற்க்கு அண்ணா என்னை அவ்வளவு அவசரமாக அழைச்சிட்டு வர சொன்னீங்க.”

“இல்லே குட்டிம்மா நான் இல்லேம்மா நீ தனியா இருப்பது அவ்வளவு பாதுகாப்பு இல்லேம்மா.” என்றதற்க்கு

“இந்த மூன்று மாதமாக தான் நீங்க என் கூட இருக்கீங்க. என் பன்னிரண்டு வயதிலிருந்து நான் தனியாக தான் இருக்கிறேன். இது வரை எனக்கு எதுவும் ஆகவில்லை.” என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றாள்.

சித்தார்த்துக்கு அவள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சம்மாட்டியால் அடுத்தது போல் இருந்தது.அறைக்கு சென்ற பரினிதா தன் படுக்கையில் படுத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள டெட்டிபியரை கட்டிக் கொண்டே அதனுடன் பேச ஆராம்பித்தாள்.

அவளுக்கு இது ஒரு பழக்கம் இருந்தது.சிறு வயது முதலே தன் கூட பேச ஆள் இல்லாததால் அந்த டெட்டிபியரிடம் தான் அன்று நடந்தது எல்லாம் கூறுவாள்.அந்த வழக்க படி அதனை கட்டி பிடித்துக் கொண்டு .

“பாரு டெட்டி அண்ணா தான் வந்துட்டு உடனே போயிட்டாருன்னு பார்த்தா...என்னையும் குழந்தைகளையும் தங்க விடமா அழைச்சிட்டு வர சொல்லிட்டார்.” என்று அதனுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது தன் தங்கையிடம் கொஞ்சம் மனது விட்டு பேச வேண்டும் என்று பரினிதாவின் அறைக்கு வந்த சித்தார்த் . பரினிதாவின் குரல் கேட்டு இவள் யாரிடம் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்று யோசனையுடனே அவள் அறைக்குள் நுழைந்தான்.

அப்போது பரினிதாவின் பேச்சையும் அவள் செயலையும் பார்த்து அவளிடம் ஒன்றும் பேசாமல் தன் அறைக்கு வந்த சித்தார்த் தன் பாட்டியை போனில் அழைத்தான். “பாட்டி அங்க என்ன வேலை இருந்தாலும் பரவாயில்லை உடனே வாங்க.” என்ற சித்தார்த்தின் பேச்சில் பயந்து போன வரலட்சுமி.

“என்ன சித்தார்த் என்ன விஷயம் ஏதாவது பிரச்சினையா…” என்ற பாட்டுயின் கேள்விக்கு இன்று சொர்க்க பூமிக்கு சென்றது பின் பரினிதாவையும், குழந்தைகளையும்,தங்கவிடாமல் அழைத்துக் கொண்டு வந்தது என்று அனைத்தையும் தடங்கள் இல்லாமல் சொன்னவன் கடைசியாக அவள் சொன்ன நான் இத்தனை வருடம் தனியாக தானே இருந்தேன் என்று அவள் சொன்னதை சொல்லும் போது அவனுக்கே குரல் கரகரத்து விட்டது.

அனைத்தையும் கேட்ட வரலட்சுமி “சரி நான் நாளை வருகிறேன்.” என்று கூறிவிட்டு போனை வைத்த வரலட்சுமி.

கல்யாண ப்ரோக்கரை அழைத்து “ என் பேரனுக்கு ஏத்த மாதிரி பெண்ணோட போட்டோவை எடுத்துட்டு வாருங்கள்.” என்று கூறிவிட்டு ப்ரோக்கருக்குக்காக காத்துக் கொண்டு இருந்தார்.


அவர் வந்ததும் அவரிடம் இருந்த பெண்களின் போட்டோவை தன் பேரனுக்கு சரி வரும் என்று கருதிய நான்கு இடத்தை செலக்ட் செய்த வரலட்சுமி ஒரு முடிவுடன் சென்னை கிளம்பினார்.
Superb sis
 
Top