Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 3.2

Advertisement

Admin

Admin
Member
தன் தந்தை நீதி, நேர்மை, என்று பார்த்து எல்லோரையும் நம்பி தன் பார்ட்னரிடம் நம்பி கொடுத்ததால் தானே கோழை மாதிரி தற்கொலை செய்துக் கொண்டு எங்களை நடுதெருவில் நிற்க வைத்தார். ஆம் அவன் யாரை மன்னித்தாலும் தன் தந்தையின் செயலை மன்னிக்க தாயாறாக இல்லை. மனைவி குழந்தைகள் என்று பார்க்காமல் தான் மட்டும் தப்பிப்பதற்க்கு கோழை மாதிரி தற்கொலை செய்துக் கொண்டதை அவனால் ஏற்கவே முடியவில்லை.

எந்த நிலை வந்தாலும் எதிர்த்து போராடி இருக்க வேண்டும் அதனை விடுத்து இப்படி செய்தது பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்த கோபத்தில் அவன் இன்று வரை தன் தந்தைக்கு திதீ கூட கொடுத்தது கிடையாது. அன்று முடிவு செய்தது தான் நான் நம் தந்தையை போல் இருக்க கூடாது. இந்த உலகம் பணம் இருப்பவர்களை தான் மதிக்கும். அந்த மதிப்பை இந்த சமூகம் நமக்கு கொடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்தான்.

அதற்க்கு ஏற்ற மாதிரி அவன் படிப்பு முடிந்ததும் அவன் இடத்தை ஒரு பில்டர் வந்து “தம்பி இவ்வளவு பெரிய இடத்தை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் .உங்களுக்கு வேண்டிய இடத்தை வைத்துக் கொண்டு மீதம் இடத்தை விற்று விட்டால். நீங்கள் ஒலை குடிசையில் இருக்க தேவை இல்லை. அந்த பணத்தை வைத்துக் கொண்டு நல்ல வசதியாக வீடு கட்டிக் கொள்ளலாம். மேலும் வீட்டில் வயது பெண் வேறு இருக்கிறார் அவருக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்கலாம்.” என்று அவர் தொழில் தந்திரத்தை ஆஷிக்கிடம் காட்டினார்.

அதனை எல்லாம் பொறுமையாக கேட்ட ஆஷிக்” எனக்கு ஒரு இரண்டு நாள் அவகாசம் கொடுங்கள்.” என்று கேட்டதற்க்கு.

“கண்டிப்பாக தம்பி ஆனால் நீங்கள் இதனை வேறு யாருக்கும் விற்க கூடாது.ஒரு தொகையை கூறி இந்த விலைக்கு யாரும் கொடுக்க மாட்டார்கள். நான் லாபம் நிறைய வரவில்லை என்றாலும் பரவாயில்லை என்று கருதி நான் இந்த அமொண்டை கோட் செய்து இருக்கிறேன். பாவம் சின்ன பைய்யனாக இருக்கிறாயே …” என்று கூறி தன் விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு சென்றார்.

அவர் போன உடனே கலையரசி “ஆஷிக் அவர் சொல்வது சரியான யோசனையாக உள்ளது. அவர் சொன்ன தொகை கொடுத்தால்.நாம் ஆருண்யாவுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பதோடு நாம் மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கை வாழலாம்.” என்று சந்தோஷத்துடன் கூறினார்.

அவன் மனதுக்குள் இந்த மாதிரி ஏமாளி இருக்கும் வரையில் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டு வெளியில் “ நான் இது பற்றி விசாரிக்கிறேன் அம்மா “ என்று கூறி அவன் நேராக சென்றது அந்த இடத்தை ரிஜிஸ்ட்டர் செய்யும் இடத்துக்கு. அங்கு தங்கள் இடத்தின் மதிப்பை கேட்டு அவனுக்கு மயக்கம் வரும் அளவுக்கு இருந்தது.

ஆம் அந்த பில்டர் சொன்ன தொகையிலேயே அந்த இடத்தின் மதிப்பை ஆஷிக் அறிந்து கொண்டான். அவரே முன் வந்து இந்த தொகையை சொல்வது என்றால் கண்டிப்பாக இந்த இடம் அவர் சொன்ன தொகைக்கு இரு மடங்காவது அதிகம் இருக்கும் என்று கருதினான்.

ஆனால் அந்த ரிஜிஸ்டர் ஆபிஸில் சொன்ன தொகை அந்த பில்டர் சொன்ன தொகைக்கு அருகில் கூட வரமுடியாது. தன் இடத்தின் மதிப்பை தெரிந்துக் கொண்ட ஆஷிக் நேராக தன் அன்னையிடம் வந்து அவர் அருகில் அமர்ந்துக் கொண்டு தன் சகோதரி ஆருண்யாவையும் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான்.

முதலில் தன் அம்மாவிடம் “அம்மா என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது தானே…?” என்று கேட்டான்.

“என்ன ஆஷிக் இது என்ன கேள்வி. உன்னை நம்பி தான் நான் தைரியமாக என் அண்ணன் வீட்டில் இருந்து வெளியேறினேன். உன்னை நம்பாமல் வேறு யாரை நம்ப போகிறேன்.” என்று அன்னை கூறியதை கேட்டுக் கொண்ட ஆஷிக் தன் சகோதரியிடம் உனக்கு என்று கேட்டான்.

“ஆஷிக் இது என்ன கேள்வி. முதலில் நீ இப்போது எதற்க்கு இப்படி பேசுகிறாய் …?”

“காரணம் இருக்கு ஆருண்யா. அதிலும் உன் சம்மதம் எனக்கு கண்டிப்பாக தேவை. ஏன் என்றால் இந்த இடத்தில் நம் இருவருக்கும் உரிமை இருக்கிறது.உன் சம்மதம் இல்லாமல் நான் எதுவும் செய்யமுடியாது .” என்று கூறியதற்க்கு .

சுருக்கமாக “நீ எங்கு கைய்யெழுத்து போட சொன்னாலும் நான் போடுவேன்.” என்ற வார்த்தையால் அவன் மேல் தான் வைத்த நம்பிக்கையை வெளிபடுத்தினாள்.

அவள் கையைய் பற்றிக் கொண்ட ஆஷிக் “எனக்கு இது போதும் ஆருண்யா .உங்கள் நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றுவேன்.” என்று கூறி பின் தன் அன்னையிடம்.

“அம்மா முதலில் நாம் சொல்வதை கேளுங்கள். ஆருண்யாவின் திருமணத்தை ஒரு மூன்று வருடம் கழித்து செய்யலாம். அவளுக்கு இப்போது தான் இருபது வயதாகிறது. மேல் கொண்டு படிப்பது என்றாலும் படிகட்டும். மேலும் இந்த இடத்தை காலி மனையாக விற்பதை விட நாமே வீடு கட்டி விற்க்கலாம். நான் நினைத்தது மட்டும் நடந்தால் மூன்று வருடம் கழித்து நான் பார்க்கும் மாப்பிள்ளையின் மதிப்பே வேறாக தான் இருக்கும்.நீங்கள் நினைத்து பார்க்க முடியாத இடத்தில் நான் கண்டிப்பாக உங்களை நிறுத்துவேன்.” என்று தன் அன்னையிடம் வாக்குறுதி கொடுத்தான்.

பின் எல்லாம் மல மல வென்று நடந்தது. ஆருண்யா ரிப்போர்டர் சம்பந்தமாக மேல் படிப்பு படிக்க டெல்லிக்கு சென்று விட்டாள். இங்கோ ஆஷிக் தன் இடத்தின் சிறு இடத்தை வங்கியில் அடமானம் வைத்து அந்த பணம் கொண்டு மீதம் உள்ள ஒரு பகுதியில் பிளாட் கட்ட ஆராம்பித்தான்.

அவன் கடக்கால் போட்டதும் இவனிடம் விலை பேசிய பில்டர் வந்து “தம்பி இந்த வேலையை இதோடு நிப்பாட்டி விட்டு என்னிடம் உன் இடத்தை கொடுத்து பணம் வாங்கி கொண்டால் உனக்கு நல்லது இல்லை என்றால் நடப்பதற்க்கு நான் பொறுப்பு இல்லை.” என்று கூறி அவனுக்கு இரண்டு நாள் அவகாசம் கொடுத்து விட்டு சென்றான்.

ஆனால் ஆஷிக்கோ எனக்கு இரண்டு நாள் எல்லாம் அதிகம் என்று கூறும் வகையில் அடுத்த நாளே அந்த பில்டர் வீட்டுக்கே இவன் அடியாட்களுடன் சென்று “ உன் வயதுக்கே இப்படி துள்ளினால் என் வயதுக்கு நான் எப்படி துள்ளுவேன். உனக்கு வயதாகி விட்டது .அதனால் நீ சம்பாதித்தது போதும் இனி மேல் நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று அவனுக்கே செக் வைத்து விட்டு வந்தான்.

அதில் இருந்து அவனுக்கு ஏறு முகம் தான். அவன் கட்டின பிளாட் நல்ல விலைக்கு போனது.அந்த பணத்தை கொண்டு தன் இடத்தை மீட்ட ஆஷிக் மீதம் இருந்த இடத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக பிளாட் கட்டி விற்க ஆராம்பித்தன்.

பின் தன் இடத்தில் மட்டும் அல்லாது மற்றவர்களின் இடத்தையும் விலை பேசி பிளாட் கட்டி விற்று நல்ல லாபம் பார்த்தான்.பின் செங்கல் பட்டு கூடுவாஞ்சேரி மட்டும் அல்லாது சிட்டியிலும் அவன் தொழில் கொடி கட்டி பறந்தது.பின் அடையாரில் அவர்களுக்கு என்று ஒரு பங்களா கட்டி தன் அன்னையை அமர வைத்து “ அம்மா நான் சொன்ன வார்த்தையை ஒறு பாதிகாப்பாற்றி விட்டேன். மறு பாதி ஆருண்யாவை நல்ல இடத்தில் திருமணம் செய்வது .இப்போது நான் அதற்க்கு உண்டான ஏற்பாட்டையும் செய்து விட்டேன்.” என்ற மகனை பெருமையுடன் பார்த்தார் கலையரசி.

ஆனால் பாவம் அந்த மறு கடமையை அவனால் நிறைவேற்றுவது அவ்வளவு சுலபம் கிடையாது என்று தாய் மகன் இருவருக்கும் அன்று தெரியவில்லை.அவன் வசதிக்கு பெரிய இடத்தில் இருந்து எல்லாம் சம்மந்தம் வந்தது. ஆனால் எல்லா வற்றையும் ஆருண்யா நிராகரித்து விட்டாள். அதற்க்கு உண்டான சரியான காரணத்தையும் அவள் சொல்லவில்லை.

சென்னைக்கு வந்தால் தானே தன்னை திருமணம் செய்ய தொல்லை செய்கிறார்கள் என்று கருதி அவள் தன் படிப்பு முடிந்ததும். டெல்லியிலேயே ஒரு பத்திரிகை துறையில் வேலையை தேடிக் கொண்டு அங்கயே இருந்து விட்டாள்.

ஆஷிக்கும் கலையரசியும் எவ்வளவு சொல்லியும் எனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறிவிட்டாள். மேலும் வற்புறுத்தினால் நான் டெல்லியில் இருந்து வெளிநாட்டுக்கே போய் விடுவேன் என்று கூறிவிட்டதால் இவர்களால் அதற்க்கு மேல் வற்புறுத்த முடியவில்லை.

டெல்லியில் இருந்தாலாவது நாம் நினைத்தவுடன் அவளை பார்க்க முடிகிறது. வெளிநாட்டுக்கு சென்று விட்டால் என்ன செய்வது என்று கருதி அவள் திருமண பேச்சையே கலையரசி ஆஷிக் இருவரும் இப்போது எடுப்பது இல்லை.

ஆஷிக் ஆருண்யாவுக்கு தன்னால் முடிந்த வசதியை மட்டும் தான் டெல்லியில் செய்து கொடுக்க முடிந்தது. அவளுக்கு என்று அங்கு ஒரு பங்களாவை அவள் பெயரில் வாங்கி அவளை அதில் இருக்கும் படி செய்தான்.

பின் ஆஷிக் சென்னையில் முதலில் ஒரு மால் கட்டினான். பின் அதில் கிடைத்த லாபத்தை பார்த்து அடுத்து அடுத்து இரண்டு மால் கட்டினான்.அப்போது தான் ஒன்று புரிந்துக் கொண்டான்.முதலில் எல்லாம் பணக்காரர்கள் மட்டும் தான் இது மாதிரி பணம் பார்க்காது பொழுது போக்குக்கு செலவு செய்வார்கள்.

ஆனால் இப்போது நடுத்தர மக்கள் கூட வீக் எண்டில் தன் குடும்பதோடோ இல்லை நண்பர்களோடோ இது மாதிரி ரிலாக்சேக்ஷன் தேவை படுவதால் பணம் பார்க்காது செலவு செய்வதை கருத்தில் கொண்டு தான் அவன் இந்த சொர்க்க பூமியை கட்டினான். அவன் கணக்கு தவறாமல் அனைத்தும் சரியாக தான் நடந்தது.

ஒன்றை தவிர ஆருண்யா திருமணத்தை தவிர. அவன் எவ்வளவோ ஆருண்யாவிடம் மன்றாடி பார்த்து விட்டான்.ஒரு படி மேல் போய் “ உன் மனதில் யாராவது இருந்தாலும் தயங்காது சொல். அவன் எந்த நிலையில் இருந்தாலும் அவனை மாற்றி உனக்கு திருமணம் செய்து விடுகிறேன் என்று.” அதற்க்கு ஒரு விரக்தியான புன்னகையே பதிலாக கிடைக்கும்.

கடந்து போன காலத்தை கலையரசி தன் அறையில் இருந்து நினைத்துக் கொண்டிருந்தார் என்றால். தன் அறைக்கு வந்த ஆஷிக்குக்கும் அதே நினைவு தான். ஆஷிக் தன் தங்கை திருமணம் வேண்டாம் என்று மறுப்பதற்க்கு தன் மாமாவின் செயல் தான் ஆண்களையே வெறுத்து விட்டாள் என்று நினைத்திருந்தான்.ஆனால் அவளின் இந்த முடிவுக்கு காரணம் காதல் முறிவு என்று தெரிந்தால்.
 
Top