Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Un Arugil En Ithaiyam 3.1

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம்---3

ஆஷிக் தன் மேனஜர் ஸ்ரீதரிடம் கலெக்டரின் விவரத்தை சேகரிக்க கூறிவிட்டு அவன் தன் அனைத்து வேலையும் ஒதுக்கி விட்டு நேராக சென்ற இடம் அவன் பங்களா. வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஹாலில் ஒருவரும் இல்லாததை பார்த்து நேராக தன் அன்னை அறையை நோக்கி சென்றான். அவர் அங்கு கட்டிலில் கண் மூடி படுதிருப்பதை பார்த்து அவர் அருகில் அமர்ந்து அவர் தோளில் கைய் வைத்து.

“அம்மா கண்ணை திறங்க நீங்க தூங்க வில்லை என்று எனக்கு தெரியும்.என் கார் சத்தத்தில் தான் ஹாலில் இருந்த நீங்கள் இங்கு வந்து தூங்குவது போல் படுத்து விட்டீர்கள் என்று எனக்கு நன்றாக தெரியும். அதனால் கண்ணை திறந்து நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்

. இன்று நான் எவ்வளவு பெரிய வெற்றியைய் கொண்டாட்டினேன் என்று தெரியுமா...காலையில் உங்களிடத்தி எத்தனை தடவை சொன்னேன். கண்டிப்பாக விழாவுக்கு வரவேண்டும் என்று.

அது மாதிரி தான் ஆருண்யாவிடமும் அந்த ரிப்போட்டர் வேலையைய் தூக்கி போட்டு விட்டு டெல்லியிலிருந்து இங்கே வந்துடுன்னு சொன்னேன். அவளும் என் பேச்சை கேட்பதில்லை. அவளுக்கு என்ன தலையெழுத்து மத்தவங்க கிட்ட கைய் கட்டி வேலை செய்வதற்க்கு. நம்மிடமே ஆயிரத்துக்கு மேலே வேலை பார்க்கிறாங்கா…

அவள் இங்கு வந்தாள் ஏதாவது ஒரு தொழிலை அவள் பார்த்துக் கொண்டாள். நான் அந்த நேரத்தை வேறு தொழிலை பார்த்துக் கொள்வேன் இல்லையா…?அட்லீஸ்ட்டு விழாவுக்காவது வா என்று சொன்னேன் அதற்க்கும் வரவில்லை. விழாவுக்கு நீங்கள் ஏன் வரவில்லை என்று தெனவாட்டாக அந்த அமைச்சர் கேட்கிறார். அப்போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா…?” என்று தன் மன ஆதாங்கத்தை தன் அன்னையிடம் கொட்டினான்.

ஆஷிக் பேச்சைக் கேட்ட அவனின் அம்மா கலையரசி கோபத்துடன் “நான் ஏன் உன் பேச்சை கேட்க வேண்டும். நீயும் உன் கூடபிறந்தவளும் என் பேச்சை கேட்கிறீங்களா…? சொல்லுங்க.நீங்க என் பேச்சை கேட்காத போது நான் மட்டும் ஏன் உன் பேச்சை கேட்க வேண்டும். இப்போது கூட அவள் வந்தால் ஒரு தொழிலை அவளிடம் ஒப்புவித்து விட்டு நீ வேறு தொழிலை ஆராம்பித்து பணம் சம்பாதிக்க தான் நினைக்கிறாயே தவிர அவளுக்கு இருபத்தெட்டு வயதாகிறதே இன்னும் கல்யாணம் செய்ய வில்லையே என்று அதை பற்றி நினைக்காமல் பாழாய் போன பணத்தை மட்டும் தான் நீ யோசிப்பியா...ஏண்டா இப்படி ஆயிட்டே.” என்று ஆவேசத்துடன் கேட்டார்.

அம்மாவின் பேச்சைக் கேட்ட ஆஷிக் “ இப்போ என்ன சொன்னீங்க பாழாய் போன பணம் . இந்த பணத்துக்காக தான் உங்கள் கணவர் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த பணம் இல்லாததால் தான் உங்கள் அண்ணன் வீட்டிலேயே நீங்கள் வேலைக்காரி மாதிரி இருந்தீங்க. நானும் என் தங்கையும் அடிமை மாதிரி உங்கள் அண்ணன் பிள்ளைகள் சொல்லும் வேலையை செய்துக் கொண்டு இருந்தோம்.

ஒரு வேலை சோரு போட்டு அதனை ஆயிரம் முறை சொல்லிக்காட்டி கடைசியில் அந்த நாய் என்ன செய்தது பொண்ணு வயசிலே இருக்கிற நம் ஆருண்யாவை கல்யாணம் செய்துக்க கேட்கிறான். அவன் அப்படி கேட்டதால் தான் அவள் ஆண்களை வெறுத்து விட்டு இப்படி இருக்கிறாள்.” என்று கூறிக் கொண்டே சென்றவன் தன் அன்னையின் முகத்தில் குற்ற உணர்ச்சியை பார்த்து அதற்க்கு மேல் எதுவும் சொல்லாமல் தன் அன்னை அறையைய் நோக்கி வெளியேறினான்.

போகும் தன் மகனையே பார்த்த கலையரசி வேதனையுடன் தலை குனிந்தார். அவன் சொல்வது அனைத்தும் உண்மை தானே .ஆம் ஆஷிக் சொன்னது சரியே...ஆஷிக்கின் அப்பா வேதாச்சலம் பார்ட்னர்ஷிப்பில் பைனன்ஸ் செய்துக் கொண்டு இருந்தார்.வேதாச்சலம் கலையரசி தம்பதியருக்கு ஒரே பிரசவத்தில் ஆண் ஒன்று பெண் ஒன்றுமாக இரட்டை குழந்தைகள் பிறந்தது.ஆஷிக் ஆருண்யா என்று பெயரிட்டார்கள். அவர்களின் பதினைந்து வயது வரை வாழ்க்கை நன்றாக தான் போய் கொண்டிருந்தது.

ஆஷிக் ஆருண்யாவின் பதினைந்தாவது வயதில் வேதாச்சலத்தின் பார்ட்னர் எல்லோருடைய பணத்தையும் எடுத்துக் கொண்டு தலை மறைவாகி விட்டார். பணம் போட்டவர்கள் எல்லாம் வேதாச்சலத்தின் கழுத்தை பிடிக்க அவரும் தன் மொத்த சொத்தையும் விற்று பணத்தை கொடுத்து விட்டார்.

அப்படியும் பாதி பேருக்கு தான் அவரால் பணம்கொடுக்க முடிந்தது. மீதி பேரு அவர் மேல் வழக்கு போட எங்கே கைது செய்ய போகிறார்களோ என்ற பயத்தில் தற்கொலை செய்துக் கொண்டார்.

படிப்பறிவு இல்லாத கலையரசி தன் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன் அண்ணன் வீட்டுக்கு சென்றாள். அப்போதும் ஆஷிக்குக்கு இதில் உடன் பாடு இல்லை.செங்கல்பட்டில் இருக்கும் தங்கள் இடத்தில் ஒரு ஒலை குடிசையாவது போட்டு செல்லாம் என்று தான் கூறினான். வேதாச்சலம் அனைத்தையும் விற்று விட்டாலும் அதனை விற்கவில்லை.

ஏன் என்றால் அந்த இடம் ஆருண்யா ஆஷிக்கின் தாத்தாவுடயது. அதை அவரின் பேரன் பேத்தி பெயரில் அவரின் தாத்தா உயில் எழுதி விட்டதாலும், அவர்களும் மேஜர் ஆகாததாலும் அதனை விற்க முடியாமல் போனது. அது பல ஏக்கர் நிலம்.

ஆனால் பக்கத்தில் வீடு கூட இல்லாத அந்த இடத்தில் எப்படி ஒரு வயது பெண்ணையும், இரண்டு கெட்டான் வயதில் இருக்கும் ஒரு பையனையும் வைத்துக் கொண்டு அங்கு இருக்க முடியாது என்ற காரணத்தால் ஆஷிக் பேச்சை கேட்காது தன் அண்ணன் வீட்டுக்கு அடைக்கலாம் ஆனார்.

ஆனால் கலையரசியின் அண்ணன் அவரை தங்கையை போல் நடத்தாமல் சம்பளம் இல்லாத வேலைகாரியாக தான் நடத்தினார்.ஆஷிக் தன் கல்லூரி படிப்பிலிருந்தே பார்ட் டைம் வேலை பார்த்து தன் உடன் பிறப்புக்கும் தனக்குமான கல்லூரி செலவை பார்த்துக் கொண்டான்.

அவர்கள் வீட்டில் இரு வேலை தான் உணவு உண்பார்கள். அதுவும் காலையில் அவர்கள் பூரி, பொங்கல், என்று சாப்பிடும் போது இவர்களுக்கு நேற்று மீந்த பழையதை தான் போடுவார்கள் . அத்தோடு மதியத்துக்கு எதுவும் எடுத்து செல்லாமல் இரவில் தான் சாப்பிடுவார்கள்.

இந்த வாழ்க்கைக்குயும் அவனின் பி.சி. ஏ மூன்றாம் ஆண்டு இறுதியில் இருக்கும் தருவாயில் முடிவுக்கு வந்தது.அவன் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் போது தான் மாமாவின் மனைவி இறந்தார். அவ்வீட்டில் அவர் இறப்பு எந்த வகையிலும் பாதிக்காமல் தான் சென்றது. ஏன் என்றால் அவர் இருக்கும் போதும் அனைத்து வேலையும் கலையரசியே செய்ததால் அவரின் இரண்டு பெண்களும் எப்போதும் போல் தன் அத்தையிடமே வேலை வாங்கி கொண்டு சொகுசாக தான் இருந்தார்கள்.

மாமி இறந்த மூன்றாம் மாதம் கலையரசியின் அண்ணன் ஒரு நாள் இரவு அவரிடம் வந்து உன் பெண்ணை எனக்கே திருமணம் செய்து கொடுத்து விடு .நீயும் வெளியில் செலவு செய்து திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டு தன் அறை நோக்கி சென்று விட்டார்.

அதன் பின் கலையரசி ஒரு நிமிடம் கூட யோசிக்காது அந்த வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் தன் அண்ணன் வீட்டுக்கு அடைக்கலம் ஆனாதே தன் பெண் பாதுகாப்பு கருதிதான்.அவ்வீட்டில் தன்னை வேலைகாரியாக நடத்திய போது ஆஷிக் நாம் போய் விடுவோம் என்று எவ்வளவு கூறியும். அதனை கேட்காது அங்கு இருந்ததுக்கு காரணம் அந்த பாதுகாப்புக்கு தான்.

எப்போது இந்த வயதில் தன் பெண் வயதில் இருக்கும் தன் பெண்ணை கேட்கிறோ அப்போதே அவருக்கு தெரிந்து விட்டது. நான் நினைத்த பாதுகாப்பு இனி வீட்டின்னுள்ளேயே நம் பெண்ணுக்கு கிடைக்காது என்று.அதனால் உடனே அவ்வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆஷிக்குக்கு காரணம் தெரியவில்லை என்றாலும் தன் அன்னை சகோதரியைய் அழைத்துக் கொண்டு வெளியேறினான். அதுவும் இல்லாமல் இப்போது ஆஷிக் முதல் போல் இல்லாமல் கலையரசியின் கண்ணுக்கு வளர்ந்த ஆண் மகனாக தோன்றியதால் அனைத்தும் அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அவன் கைய் பற்றி தன் அண்ணன் வீட்டு வாசப்பாடியை தாண்டினார்.

ஆஷிக்கும் கலையரசியின் நம்பிக்கையை பொய்யாக்காமல் அவர்கள் வெளியே வந்த இரு நாள் தான் ஓட்டல் அறையில் தங்க வைத்தான். மூன்றாம் நாள் செங்கல்பட்டில் இருக்கும் அவர்களின் இடத்தில் ஒரு குடிசையை போட்டுக் கொண்டு தன் அன்னை சகோதரியுடன் அங்கு குடியேறினான். இந்த ஐந்து ஆண்டுகளில் அந்த இடத்தில் வீடுகளும் வந்து விட்டதால் எந்த பயமும் இல்லாமல் அங்கு குடிபோனார்கள்.

அன்று தான் மனது பாராம் தாங்கமால் கலையரசி தன் மகனிடம் கணவர் இறந்ததில் இருந்து தன் அண்ணன் வீட்டில் தான் பட்ட அனைத்தையும் கொட்டினார்.கடைசியாக தன் மகனின் கைய் பற்றி “அனைத்தும் நான் உங்களை மனதில் நினைத்து பொறுத்துக் கொண்டேன். ஆனால் கடைசியாக உன் பெண்ணை வெளியில் திருமணம் செய்து கொடுக்க முடியாது அதனால் எனக்கே கொடுத்து விடு என்று சொன்னது தான் என் மனது ஆறவில்லை.” என்று வெடித்து அழுதார்.

அப்போது பக்கத்தில் இருந்த ஆருண்யாவும் தன் அன்னையுடன் அழுதுக் கொண்டே “அவர் கடைசியாக தான் உங்களிடம் அப்படி பேசினார் அம்மா.ஆனால் ஒரு மாதமாகவே மறைமுகமாக என்னிடம் இதனை பற்றி பேசினார்.” என்று கூறியதும்.

ஆஷிக் வெறிபிடித்தவன் போல் அப்போதே “நீ ஏன் சொல்லவில்லை.” என்று கத்தினான்.

“ எப்படி சொல்ல முடியும் ஆஷிக் எப்படி சொல்ல முடியும். நீயும் இன்னும் படிப்பை முடிக்கவில்லை ,நானும் இன்னும் படிப்பை முடிக்கவில்லை.இந்த நிலையில் நாம் வெளியேறினாள் என்ன செய்வது என்று தான் நான் தயங்கினேன்.மேலும் இது பற்றி கேள்வி பட்டால் அம்மா வருத்தப்படுவார்கள் என்று நினைத்து தான் நான் சொல்லவில்லை.ஆனால் மாமா இதனை அம்மாவிடமே கேட்பார் என்று நான் நினைத்துக் கூடபார்க்கவில்லை ஆஷிக்.”

ஆருண்யா பேச பேச கோபத்தின் உச்சத்துக்கு போன ஆஷிக் ஆவேசத்துடன் எழுந்தான் அதனை தடுத்த கலையரசி “ நீ இப்போது அவரிடம் உன் கோபத்தை காண்பிப்பதை விட அவர் சொன்ன உன் பெண்ணை வெளியில் உன்னால் திருமணம் செய்துக் கொடுக்க முடியாது என்பதை பொய்யாக்கி ஒரு நல்ல இடத்தில் ஆருண்யாவை திருமணம் செய்து கொடுத்து அவர் முகத்தில் நீ கரியை பூசு.” என்ற வார்த்தையை கேட்ட ஆருண்யா உடனே..

“எனக்கு திருமணமே வேண்டாம்.” என்று கூறி மறுத்ததை அன்று சாதரணமாக எடுத்துக் கொண்டு தன் அன்னை தடுக்க தடுக்க அவன் மாமாவின் வீட்டுக்கு சென்றான். அங்கு போய் வீட்டுக்கு உள் செல்லாமல் வெளியில் இருந்துக் கொண்டே அவர் பெயர் சொல்லி கத்தி கூப்பிட்டான்.

அவன் சத்ததில் அவன் மாமா மட்டும் இல்லாமல் மாமாவின் இரு மகள்களும் வெளியில் வந்தனர். தன் மாமானை பார்த்து ஆவேசத்துடன் அவர் சட்டையை பிடித்துக் கொண்டு.

“உன் பெண் வயதில் இருக்கும் பெண்ணிடம் எப்படிடா உன்னால் இப்படி கேட்க முடிந்தது. நான் உன் இரு பெண்ணையும் மாமா மகளாக இருந்தாலும் ஆருண்யாவை போல் தான் அவர்களை பார்த்தேன். ஆனால் நீ இந்த வயதில் உனக்கு இந்த சபல புத்தியா…?” என்று கேட்டுக் கொண்டே அடி பின்னி எடுத்து விட்டான். அவன் பேச்சைக் கேட்ட ஆஷிக் மாமாவின் இரு மகள்களும் தலைகுனிந்து நின்றனர் தன் தந்தையின் செயளால்.

ஆஷிக் தன் மாமாவை அடித்த பிறகும் அவனுக்கு தன் கோபத்தை அடக்க முடியவில்லை.அந்த நாய் அப்படி கேட்டதற்க்கு காரணம் தங்களிடம் பணம் இல்லாதது தானே காரணம்.மேலும் அவன் தயவில் தாங்கள் இருந்ததால் தானே ஆருண்யாவிடம் அப்படி நடந்துக் கொண்டதும் இல்லாமல் தன் ஆசையை கூச்சமே இல்லாமல் தன் அன்னையிடமும் அதனை வெளியிட்டான் என்று நினைத்து பணம் சம்பாதிப்பதில் ஒரு வெறியே அவனுக்குள் எழுந்தது.
 
Top