Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

TN_Writer_027 அவர்கள் எழுதிய “முத்தத்தின் ஈரம் கதைக்கு, “கவிக்குயில் திருமதி. பீனா லோகநாதன்” அவர்களின் கவிதை விமர்சனம்.

Advertisement

முத்தத்தின் ஈரத்தில்.....

பாரதி ❤️கண்ணம்மா...
பாரதியாரின் கவிதைகள் பாடல்கள் எல்லாம் மனம் கவர்ந்தவை......

சுசீந்திரன் ? மஹிமா....
சிறு வயது தோழி
பகிர்தலில் தொடங்கி
நட்பில் புரிந்து
காதலில் அறிந்து
பிரிவை உணர்த்திய அன்பின் முத்தம்
காதலாக மாறி
காதலை தக்க வைத்துக் கொள்ள
காதலியை பற்றிய ஒரு சொல்
மற்றவர்களிடம் இருந்து
கண்ணம்மாவை காத்து
கல்யாணம் செய்த பின்
கணவன் கூறிய
கள்ளத்தனம் எல்லாம்
கண்ணம்மாவிற்கு தெரிய வர.....
களை கட்டுது
காதல் ஊடல்......

பெண்மையை உணர வைத்தவன் நீ பாரதி
புரியாமல் போய் விடுவாளோ உன் கண்ணம்மா.....
❤️❤️❤️❤️❤️❤️❤️
உருவக் கேலி_ நாம்
உணராமலே தினம் பலர்
உள்ளங்களை சொற்களால்
உயிரோடு கொல்கிறோம்...
உறவுகளை மீட்போம்
உரிமையாக தடுப்போம் உணர்வுகளை காப்போம்....
????????
தன் தவறே புரியாமல்
தன் தவறை உணராமல்
தவறுக்கு வருந்தி
தினம் தொடர்ந்து
நித்தம் மன்னிப்பு வேண்டி
முத்தம் தந்து
யுத்தம் முடிக்க போராடும்
காதல் பாரதி.....
????????
தன்னை பற்றி
தவறாக யார் கூறினாலும்
தடைகளை தாண்டி வந்தவள்
தன்னவனின் ஒரு சொல்
தன்னை பற்றிய அவன் எண்ணம் என்ன என்ற
தன்னிலை விளக்கம் அறிய
தனியாக வாழ்ந்தாலும்
தவிர்க்க முடியாமல்
தனக்கு தானே சுய அலசல் செய்து
உள்ளுக்குள் தவித்து
அவன் பால் உருகி
அவனிடமே தஞ்சம் அடையும் கண்ணம்மா....
????????
பக்கத்து வீட்டு மஹி
பெண்ணுக்கு
பக்க பலமாய் ஜெயம்மா...
மருகளாக மஹி
மாறியதும்
மாமியாராக
மாறிடும் ஜெயா அத்தை....
நிதர்சனமான மனிதர்களின் நிலை....
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
எத்தனை சண்டைகள்
எத்தனை சமாதானங்கள்
எத்தனை ஊடல்
எத்தனை நேசம்
எத்தனை பாசம்
எத்தனை காதல்....
எல்லாம் ஒன்றாய் சேர்த்து
எத்தனை அழகான புரிதல்....

என்னடா பாரதிக்கு வந்த சோதனை
மக்கு மண்ணம்மாவை வைத்து கொண்டு ரோதனை
புரிந்தும் புரியாமலும்
பிரிந்து வேதனை
மீண்ட காதலில் பெற்ற
மகள் சாதனை.....

சுசீ ? மஹியின்
காதல் பரிசு
சுஹி _ சூப்பர்.....

சாய்வு இருக்கையில்
சாய்ந்து அமர்ந்து
சமுதாய சிந்தனையை
சத்தமின்றி காதலில்
சொதப்பும் பாரதியும்
கலங்கும் கண்ணம்மா
சோகமாய் திரிந்தாலும்
சந்தோஷத்தை அளிக்கும்
சதா பாரதியின் முத்தமும்
சாரலாய் மனதில் பொழியும்
முத்தத்தின் ஈரத்தில்
சுகமான காதல் அனுபவம்......
????????
நெரித்த திரைக்கடலில் நின்முகங்கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங்கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங்கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங்கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன்றில்லை.''

காதலடி நீ யெனக்குக் காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதியிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்ல உயிரே கண்ணம்மா!

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா என்று
சரணாகதி அடையும் பாரதி....

????????
நல்லா வளர்ப்பதை விட
நம்பிக்கையா வளர்ப்பது
நல்லது.....

தட்டி கொடுத்து
தன்னம்பிக்கை
தந்து வளர்ப்பது அழகு....

என் சிறு புன்னகை கூட
எதிரில் இருப்பவரை காயப்படுத்தி விட கூடாது...
???????

கண்டவர் கண்டதை
கண்ட கண்ட இடத்தில்
கண்டவரை கண்டபடி
கதைத்தால்....
கண்டுக் கொள்ளாதே
கண்ணம்மா......
கவலைக் கொள்ளாதே
கண்ணம்மா......
????????????????
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் சகி ????

பின்குறிப்பு:
அன்புள்ள ஆத்தரே!
சில தவிர்க்க முடியாத காரணங்களால், திருமதி.பீனா லோகநாதன் அவர்களால் இதைப் பதிவிட முடியவில்லை. அவர் சார்பில் உங்களிடம் சேர்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.
 
Top