Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 7

Advertisement

Sarayu

Tamil Novel Writer
The Writers Crew
தோகை 7:

“இதென்ன இவ்வளவு சின்ன இடமா இருக்கு..? இதுல நான் எப்படி சிட் பண்ண முடியும்...? “ என்று உதவியாளரிடம் காய்ந்து கொண்டிருந்தாள் துப்னா.

சக்தி...அருகில் உள்ள பெரிய வரப்பில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க.... அஜய்க்கோ...அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உணர்வு.ஆனால் முடியாத சூழ்நிலையில் இருந்தான்.

கதைப்படி...அஜய்க்கும்,துப்னாவிற்கும் இடையிலான ஒரு பாடல் அங்கு படமாக்கப் படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க...நடன இயக்குனர்..அஜய்யின் அருகில் இருந்து அனைத்தையும் விளக்கிக் கொண்டிருந்தார்.

“ஒரு சீன்க்கு மட்டும் வயலுக்கு உள்ள இறங்கி நில்லுங்க சார்..துப்னா மேம்..நீங்களும்...” என்று டைரக்டர் சொல்ல...

“சார்...வெறும் காலோட போங்க..இல்லன்னா அந்த பொண்ணு...சண்டைக்கு வந்துடும்..” என்று மகேஷ் நியாபகமாய் சொல்ல...

ஒரு நிமிடம் யோசித்தவன்...தனது செருப்பைக் கலட்டி விட்டு வெறும் காலுடன் உள்ளே இறங்கினான்.

“வாட் நான் சென்ஸ்...வெறும் காலோட எப்படி இறங்க முடியும்..என்னால முடியாது..” என்று அவள் கத்திக் கொண்டிருக்க...

“மேடம் புருஞ்சுக்கங்க...” என்று மகேஷ் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

அஜய் வயலுக்குள் நின்றபடி முறைத்துக் கொண்டிருக்க....துப்னாவின் அருகில் சென்ற இயக்குனர்..

“நீங்க வெறும் காலோட இறங்குனாதான் உங்களுக்கு சேப்டி..இல்லைன்னா தவறி விழுந்தா..உங்களுக்கு தான் சங்கடமாய் போய்டும்..!” என்று சொல்ல..

“ஆமாம்..அப்பறம்..மீடியாக்காரன் கிழிகிழின்னு கிழிப்பான்..” என்று மனதில் எண்ணியவள்...அவர் சொன்னபடியே செய்தாள்.

காட்சிப்படி...அஜய்யின் தோளில் முன்னால் இருந்து சற்று சாய்ந்த படி...ஒரு கையை அவன் கையுடன் மடக்கியும்....ஒரு கையை அவன் கையுடன் விரிந்தபடி இணைத்து... சாய்ந்து ஒரு இரண்டு ஸ்டெப் போட வேண்டும்...

அஜய் தனக்குள் பொறுமையை வரவழைத்துக் கொண்டவனாய் நிற்க...துப்னாவிற்கோ...மிகுந்த சந்தோசம்.அவள் தான் அஜயை கைக்குள் போடுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறாளே..!

“என்ன சக்தி...இப்படி தான் படம் எடுப்பாங்களா..?” என்றாள் அருகில் இருந்த பெண்.

“என்னைக் கேட்டா..எனக்கு என்னக்கா தெரியும்...நானும் இப்பதான பார்க்குறேன்..!” என்ற சக்திக்கு ஏனோ மனது ஒரு மாதிரியாக இருந்தது.

“படத்துல பார்க்க நல்லாருக்கு..ஆனா நேர்ல பார்க்க கன்றாவியா இருக்கு..” என்று அந்த பெண் சொன்ன விதத்தில் சக்தி பட்டென்று சிரிக்க..அந்த சிரிப்பு சத்தத்தில் திரும்பினான் அஜய்.

அவள் சிரிப்பதை ஒரு நிமிடம் ரசித்துப் பார்த்தவன்...”எதுக்கு சிரிக்கிறா..?” என்று யோசித்தபடி நின்றான்.

இதையெல்லாம் கண்ணனும் பார்த்துக் கொண்டிருக்க..”கடவுளே..இது மட்டும் நடக்கவே கூடாது..அந்த பொண்ணை பார்த்தால் அப்பாவியாய் தெரியுது..!” என்று கடவுளை வேண்டிக் கொண்டான்.

“ரெடி..டேக்..ஆக்சன்...” என்ற வார்த்தையில் நினைவுக்கு திரும்பியவன்...டைரக்டர் சொன்னபடி செய்ய...துப்னாவோ அதற்கு ஒரு படி மேலே போய்..தன் முழு உடலும் அவன் மீது படும் படி சாய..அதைப் பார்த்த சக்திக்கு வெறுப்பாக இருந்தது.

“ச்சி..அவங்க நடிக்க சொன்னா..இந்த பொண்ணு...நிஜமாளுமே பண்ற மாதிரி இருக்கே..!” என்று கண்டுபிடித்தாள்.

அஜய்யோ பல்லைக் கடித்தவன்..வெளியில் தெரியாமல் இருக்க..அரும்பாடு பட்டான்.

“கட்..கட்..” என்ற டைரக்டரின் வார்த்தையில் பட்டென்று அவளை விட..அவளோ தடுமாறி பின் நின்றாள்.

“சீன் ஓகே சார்..” என்று சொல்ல..அடுத்த சீனைப் பற்றி மகேஷிடம் பேசிக்கொண்டிருக்க...சுற்றும் முற்றும் பார்த்தான் அஜய்.

சக்தியும் வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருக்க...பட்டென்று துப்னாவின் கன்னத்தில் அறைந்தான்.

இதை எதிர்பார்க்காத துப்னா..தடுமாறி விழப் போக..அவனோ பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

“இந்த மேல சாயிறது..ஒட்டிக்கிட்டு உரசுறது..இதையெல்லாம் வேற எங்கயாவது வச்சுக்க..என்கிட்டே வச்சுகிட்ட..என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..!” என்று அவன் எச்சரிக்க...

அவனையே பார்த்துக் கொண்டிருந்த சக்திக்கு..ஏனோ மனதில் இனம் புரியாத நிம்மதி ஒன்று இழையோடியது.

கோபத்தில் அறைந்தவன்....ஒன்றுமே தெரியாததைப் போல்...அடுத்த ஷாட்டுக்கு ரெடியாக...

“டச் அப்..”பண்ணி விட வந்த பெண்ணை...கடித்து துப்பிக் கொண்டிருந்தாள் துப்னா.

“ஒரு பொண்ணுக்கு இவ்வளவு அகங்காரம் இருக்க கூடாதுக்கா..!” என்று சக்தி அருகில் இருந்த பெண்ணிடம் சொல்ல..

“உண்மைதான் சக்தி....எனக்கென்னவோ..இதை பார்க்கவே பிடிக்கலை..வா நாம போவோம்...வேலையை கெடுத்துட்டு இங்க நின்னா..இந்த கன்றாவியை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கு...படத்துல இவ எவ்வளவு நல்லவளா இருக்கா..நேர்ல பாரு...மூஞ்சியும் முகரையும்...அந்த மூஞ்சில எவ்வளவைத் தேய்க்கிறான்னு பாரு...” என்று அவள் குமுற..

“சரி விடுங்கக்கா...படத்துல பார்க்குற மாதிரியே நேர்லயும் இருப்பாங்கன்னு...நாம தான் கற்பனை பண்ணிக்கிறோம்..ஆனா நேர்ல பார்த்தா..இவங்களா..ச்சி இப்படியான்னு போய்டும்...நாமளா இவங்க இப்படித்தான்னு கற்பனை பண்ணிக்கிறதுக்கு அவங்க எப்படி பொறுப்பாவாங்க..?” என்றாள்.

“அது என்னவோ உண்மைதான் சக்தி..!” என்றாள்.

“சரிக்கா..நீங்க போய் வேலையைப் பாருங்க...நான் வரேன்..!” என்று அவளை அனுப்பினாள் சக்தி.

தான் போக வேண்டும் என்று நினைத்தாலும் ஏதோ ஒன்று அந்த இடத்தை விட்டு அவளை நகர விடமால் தடுக்க..அப்படியே நின்றாள்.வயலுக்கு காவல் என்று தனக்குத் தானே காரணம் வேறு சொல்லிக் கொண்டாள்.

கேரவனை..சற்று தள்ளி..அங்கிருந்த மண் சாலையில் நிறுத்தியிருந்தனர். டிரஸ் சேன்ஜ் செய்வதற்காக உள்ளே சென்ற அஜய்யின் கண்களில்.. சக்தியின் இந்த தோற்றம் விழ...மனதிற்குள் குறித்துக் கொண்டான்.

அவளோ.... அங்கே இருந்த அனைவரையும் தீவிரமான பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.ஆனால் அஜய் மேல் அவளுக்கு சந்தேகமே வரவில்லை.

அவ்வளவு பெரிய ஹீரோ மேல் சந்தேகப்பட அவள் என்ன முட்டாளா..? இல்லை இதையெல்லாம் அவன் தான் செய்திருக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்க்க முடியுமா..? அவள் இடத்தில் யார் இருந்திருந்தாலும் அவன் மேல் சந்தேகம் வர கூடுமா..?
 
அவனை எட்ட நின்று பார்ப்பதே பாக்கியம் என்று எண்ணுபவர்கள்.. அவனை எப்படி சந்தேகப் பட முடியும்...?

அப்படிப் பார்த்தவளுக்கு யாரையும் அடையாளம் காணமுடியவில்லை.ஆனா அந்த குரலை...இங்க இப்ப கேட்டேனே...ஆனா அப்ப ஹஸ்கியா இருந்தது..இப்ப தெளிவா பேசுறாங்க..யாரா இருக்கும்..?ஒருவேளை இங்க யாரும் இல்லையோ...? என்று எண்ணிக் கொண்டிருக்க...

அவளின் குழப்பத்தை வண்டியின் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்தவன் சிரித்துக் கொண்டான்.

“கொஞ்ச நாள் அவஸ்தை படு பெண்ணே..!” என்று மனதிற்குள் சொல்ல..

“நீதாண்டா அவஸ்தைப்பட போற..!” என்ற விதியின் குரலை கவனியாமல் விட்டு விட்டான்.

“ஏய் சக்தி...!” என்ற மருதாணியின் குரலில் திரும்பினாள் சக்தி.

“வாடி மருதாணி..” என்றாள்.

“என்கூட பேசாதடி..நான் உன்கிட்ட என்ன சொன்னேன்..ஷூட்டிங் பார்க்க போலாமான்னு கேட்டேன்..!”

“ஆமா..!”

“நீயென்ன சொன்ன..?”

“என்ன சொன்னேன்...!”

“சரின்னு சொன்ன..!”

“இப்ப அதுக்கென்ன..?” என்றாள் சக்தி.

“அதுக்கு என்னவா..? வேலையை முடிச்சுட்டு பார்க்க போகலாம்ன்னு சொன்ன..இங்க வந்து பார்த்தா..என்கிட்டே கூட சொல்லாம நீ மட்டிடும் தனியா வந்து பார்த்துட்டு இருக்கியா..?” என்றாள் மருதாணி.

“கொஞ்ச நேரம் பேசாம இருடி..!” என்றாள் சக்தி அதட்டலாய்.

“அதெல்லாம் முடியாது..இவங்க... யாரையும் பக்கத்துலையே விடலை...ஆனா நீ மட்டும் எப்படி இங்க இவ்வளவு பக்கத்துல நிக்குற..?” என்றாள்.

“அடியேய்..நல்லா பாரு..நான் நம்ம வயல்ல தான் நிக்குறேன்..அவங்க தான் நம்ம வயல்ல இருக்காங்க..என்னை இங்க இருக்க கூடாதுன்னு யார் சொல்ல முடியும்..?” என்றாள்.

“அட ஆமால்ல...இதை எப்படி மறந்தேன்...” என்ற மருதாணி அவள் உடன் இணைந்து நிற்க...வெளியே வந்தான் அஜய்.

“ஹய்யா அஜய்டி...” என்றாள் மருதாணி குதூகலாமாய்.

“ஆமா..! இப்ப அதுக்கு என்ன பண்ண சொல்ற..?” என்றாள்.

“அடியேய்...இவரை இவ்வளவு பக்கத்துல பார்ப்பேன்னு..கனவுல கூட நினைக்கலைடி...” என்று அவள் தன்னைத் தானே கிள்ளிக் கொண்டிருக்க.. சக்தியோ அமைதியாகவே இருந்தாள்.

“ஹேய் சக்தி..அவங்க கிட்ட கேளுடி..ஒரு ஆட்டோகிராப் வாங்கிக்கலாம்..அப்படியே ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கலாம்டி..” என்று கெஞ்சினாள் மருதாணி.

“சும்மா இருடி...ஆட்டோகிராப் வேணுமின்னா வாங்கிக்க..போட்டோல்லாம் எடுக்க முடியாது..!” என்றாள்.

“ஏண்டி இப்படி பண்ற...உனக்கு இதில் என்ன கஷ்ட்டம்..?” என்றாள்.

“புரியாம பேசாத மருதாணி...போட்டோ எடுக்குற அளவுக்கு போன் நம்மகிட்ட இல்லை...இந்த ஓட்டை செல்லை வச்சுகிட்டு ..போய் ..போட்டோ வேற எடுக்கணுமா..? நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க..?” என்றாள்.

“இந்த வெட்டி கவுரவத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை..உங்கப்பா எத்தனை வாட்டி..நல்ல போன் வாங்கித் தரேன்னு சொன்னார்..நீதான் பெரிய இவ மாதிரி வேண்டாம்ன்னு சொல்லிட்ட..இப்ப பாரு...இருந்திருந்தா நம்ம போட்டோ எடுத்திருக்கலாம்ல..” என்று மருதாணி ஆதங்கப்பட...

அவளைப் பார்த்த சக்திக்கு அழுவதா..சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆனால் மனதின் ஒரு மூலையில்..மருதாணி சொன்னது தனக்கும் தோன்றிய என்னத்தைக் கண்டு திகைத்தாள்.

“என்னடி யோசிக்கிற..?”என்றாள் மருதாணி.

“ஒண்ணுமில்லை..” என்க...

“சக்தி...பிளீஸ்டி...வா போய் ஒரு ஆட்டோகிராப் ஆவது வாங்கிட்டு வரலாம் என்க....”

“லூசா நீ..எதுல ஆட்டோகிராப் வாங்குவ..கைல நோட் ஒண்ணுகூட இல்ல..!” என்றாள் சக்தி.

“ஆமால...” என்று யோசித்த மருதாணி..

“அங்க பாருடி..ஒருத்தர் பேப்பர் வச்சிருக்கார்..” என்று மகேஷைக் கை காட்ட...ஸ்க்ரிப்ட் பேப்பரை கையில் வைத்துக் கொண்டிருந்த மகேஷ் அதையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்க..

“உன் தொல்லை இருக்கே...வந்து தொலை...!” என்றபடி நடக்க...மகேஷின் அருகில் போய் நின்றனர் இருவரும்.

தன் முன்னால் நிழலாடுவதைக் கண்ட மகேஷ் நிமிர்ந்து பார்க்க...அவ்வளவு அருகில் சக்தியைப் பார்த்தவனுக்கு இதயம் படபடவென்று அடித்துக் கொள்ள...அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.

இந்த காட்சி அஜய்யின் கண்களிலும் பட்டுத் தொலைத்ததுதான் மகேஷின் கெட்ட நேரம்.

“சொல்லுங்க..!” என்றான்.

“இல்லை..இவளுக்கு...ஹீரோ...” என்று சக்தி இழுக்க..

அந்த தயக்கத்தை..தன்னுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறாள்...! என்று எண்ணிக் கொண்டான் மகேஷ்.

“எதுக்குடி இழுத்துட்டு இருக்க...எனக்கு அஜய் சார்கிட்ட ஆட்டோகிராப் வாங்கணும்...பிளீஸ் ஒரு பேப்பர் குடுக்க முடியுமா..?” என்று மருதாணி கேட்க..

“ஓ..ஷியர்..இந்தாங்க..!” என்று அவன் இரண்டு பேப்பரை நீட்ட...

“இல்லை அவளுக்கு மட்டும் போதும்..எனக்கு வேண்டாம்..!” என்று மறுத்தாள் சக்தி.

ஏனோ அவளின் அந்த பதில் மகேஷிக்கு பிடித்துப் போக..அவன் மனம் குதியாட்டம் போட்டது.அஜய்யிடம் ஒரு பெண் ஆட்டோகிராப் வாங்க பிரியப் படவில்லை என்றால்...அவள் மனதில் வேறு ஒருவன் இருக்க வேண்டும்...” என்று அறிவு இழந்தவனாய் அவன் யோசிக்க...

“அட முட்டாளே..! அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்..?” என்று விதி அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

சற்று தள்ளி..டான்சிற்கு தேவையான ஸ்டெப் மூமெண்ட்டை ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்த அஜய்...துண்டால் தன் முகத்தைத் துடைத்தபடி வர...
 
“ஏய் அவரு வராருடி..எனக்கு கைகால் எல்லாம் படபடங்குது... ஐயோ..எவ்வளவு பெரிய ஹீரோ..? பக்கத்துல பார்க்க எவ்வளவு சூப்பரா இருக்காரு..!” என்று மருதாணி படபடக்க...

என்னதான் வெளியில் ஒன்றுமிலை என்பதைப் போல காட்டிக் கொண்டாலும்....சக்திக்கும் ஒரு சிறு படபடப்பு இருக்கத்தான் செய்தது.சற்று முன் அவனுடன் வாயாடும் போது இல்லாத படபடப்பு..இப்போது வந்து தொலைக்க..அதை மறைக்க..அவள் பெரும் பட வேண்டியிருந்தது.

அவர்களுக்கு அருகில் வந்தவன்...அவர்களைக் கண்டு கொள்ளாமல் நிற்க...மருதாணியோ..அவனை அருகில் பார்த்த பிரமிப்பில் இருந்தாள்.

அவளைப் பார்த்து மனதிற்குள் சிரித்தவன்..” என்ன..?” என்பதைப் போல பார்க்க...

“சா..சார்..அது வந்து...ஆ..ஆட்டோகிராப்....” என்று பேப்பரை நீட்ட..சக்தியோ அமைதியாக இருந்தாள்.மகேஷ் அவளை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருக்க..அதைப் பார்த்த அஜய்யின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

மருதாணியிடம் இருந்து பேப்பரை வாங்கியவன்...அவர்கள் அருகில் இன்னமும் சற்று நெருங்கி நிற்க...

“சார்..நேர்லயும் நீங்க சூப்பரா இருக்கீங்க சார்..என்னால நம்பவே முடியலை சார்..!” என்று மருதாணி வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டிருக்க...

அஜய்யின் கவனமோ..சக்தியிடமும்,மகேஷிடமும் நிலைத்திருந்தது.

“இவன் எதுக்கு இப்படிப் பார்த்து தொலைக்கிறான்...?” என்று மகேஷை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தவள்...

“ஒருவேளை அவன் இவனாத்தான் இருக்குமோ..?” என்ற யோசனையில் அவளும் மகேஷை பார்த்ததை...அஜய் தவறாக எடுத்துக் கொள்ள..ஆரம்பமானது அங்கு ஒரு போர்க்களம்.

மருதாணி கொடுத்த பேப்பரில்....நிறுத்தி..நிதானமாக தன் கையெழுத்தைப் போட்டவன்..அதை அவளிடம் கொடுக்க...அவளோ..ஏதோ கடவுளையே பார்த்த மாதிரி அந்த பேப்பரைப் பார்த்துக் கொண்டிருக்க...

அந்த இடைவெளியில்...சக்தியின் கையை பட்டென்று பிடித்தான் அஜய்.அதைப் பார்த்த சக்தி அதிர்ச்சியாகும் முன்...மகேஷ் அதிர்ந்தான்.

ஆனால் சக்திக்கோ...வேறு உணர்வேயில்லை..அந்த தொடுதலை..அந்த உணர்வைத்தான் அவள் அறிவாலே..!

“இது..இது...இந்த கை....இந்த பிடிப்பு..அப்போ..என்னைத் தீண்டியது இவனா...?” என்று எண்ணியவள்..மனது சொன்ன பதிலை நம்ப முடியாமல் திகைத்து நிற்க....

அவளின் கையை வெடுகென்று தன் புறமாக இழுத்தவன்..அதில் தன்னுடைய கையெழுத்தை நிதானமாக போட்டுக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த மருதாணி ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்து நிற்க....அவனோ நிதானமாக எழுதிக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த மகேஷ் இரண்டடி பின்னால் செல்வதைக் கவனித்தாள் சக்தி....அவளின் அருகில் சென்றவன்...

“நீ தேடுறது என்னைத்தாண்டி....நான் தான் அவன்...என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!” என்றான் மெதுவான குரலில்...ஆனால் தீர்க்கமான குரலில்.பிறகு எதுவுமே நடக்காததைப் போல அவன் சென்று விட..மகேஷும் அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக சென்றான்.

“ஹேய் சூப்பர்டி..இப்படின்னு தெரிஞ்சிருந்தா நானும் பேப்பர் இல்லாமையே ஆட்டோகிராப் கேட்டிருப்பேன்..அவர் எனக்கும் கைல போட்டிருப்பார்..” என்று மருதாணி சந்தோஷத்தில் குதிக்க....அவளை முறைத்த சக்தி...தன் கையைப் வளையலை விளக்கிப் பார்க்க... அவனுடைய கையெழுத்தை போட்டிருந்தவன் ..கூடவே..

“யாரையாவது பார்த்த...கொன்னுடுவேன்..!” என்ற வாசகமும் எழுதியிருக்க...அதைப் படித்தவளுக்கு அதிர்ச்சியும்.கோபமும் மாறி மாறி வர...அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

சாதரணமான மனிதாக இருந்திருந்தால் செருப்பால் அடித்திருப்பாளோ என்னவோ..? ஆனால் இப்போது விக்கித்து நிற்பது அவள் முறையானது.

“ஏய்....இங்க வா..!” என்று துப்னா மருதாணியை அழைத்தாள்.

“ஐயோ...எவ்வளவு பெரிய ஹீரோயின்..என்னை கூப்பிடுறாங்கடி..” என்றபடி அவள் வேகமாய் செல்ல..

“மருதாணி நில்லு..!” என்ற சக்தியின் குரலை அவள் சட்டை செய்யவில்லை.

“சொல்லுங்க...!” என்று அவள் மூச்சு வாங்க அவள் முன் நிற்க...

“இந்த டிரசைப் போட்டுட்டு..இந்த செப்பலை என்னால் மாட்ட முடியலை...என்னோட மேக்கப் மேன்..எங்க போய் தொலஞ்சான்னு தெரியலை...இதை கொஞ்சம் மாட்டி விடுறியா..?” என்றாள்.

“குடுங்க நான் மாட்டி விடுறேன்..!” என்று மருதாணி வாங்க போக...

“ஏய் நில்லுடி...ஒழுங்கு மரியாதையா வந்துடு..நீ மட்டும் அந்த வேலையைப் பார்த்த..அப்பறம் ஏன் மூஞ்சியிலேயே முழிக்காத..!” என்று சக்தி கத்த..

அவ்வளவுதான்...செருப்பை அப்படியே கீழே போட்ட மருதாணி..வேகமாய் சக்தியை நோக்கி செல்ல போக...

மருதாணியின் கெட்ட நேரமோ..என்னவோ..அவள் செருப்பு...அருகில் ஓடிக் கொண்டிருந்த வாய்க்கால் தண்ணீரில் விழுந்து விட்டது.

“ஏய்..கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு...” என்றபடி கையை ஓங்க..அதைத் தடுத்தால் சக்தி.

“உன் திமிரை எல்லாம் வேற எங்கயாவது வச்சுக்க...நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அது உன்னோட..எங்ககிட்ட வச்சுக்காத..” என்று கோபமாய் சொன்னவள்...

“வாடி...எவ கூப்பிட்டாலும் போய்டுவியா..?” என்று மருதாணியைக் கடிந்து கொண்டபடி இழுத்துக் கொண்டு செல்ல...

துப்னாவோ...பட்ட அவமானத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க... அதைப் பார்த்த அஜய்க்கோ..சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நல்லவேளை...செருப்பால அடிக்காம போனா...!” என்று நினைத்தபடியே சிரித்துக் கொண்டிருந்தான்.

 
Top