Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thogaikku Thoothuvan Yaro - 19

Advertisement

Yemma sakthi vivasaya paper avan padika koodatha...photo public la release agi iruku, yetho personal folder la irunthu yedutha mathiri kelvi ketkara...
 
தோகை 19:

“என்ன துப்னா இப்படி சொல்லிட்ட...?” என்றார் சாந்தா.

“எப்படி சொல்லிட்டேன்..?” என்றாள் அவள்.

“அவங்களைப் எப்படிப் பிரிக்கிறதுன்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன்..நீ என்னடான்னா..இவ்வளவு அசால்ட்டா இருக்க..?” என்றார்.

“வேற என்ன பண்ண சொல்றிங்க..?” என்றாள்.

“அப்போ..உனக்கு அஜய் வேண்டாமா...?அவன் மேல உனக்கு ஆசையில்லையா..?” என்றார்.

“இங்க பாருங்க ஆன்ட்டி..அஜய் மேல ஆசை இல்லைன்னு நான்..ஏன்..எந்த பொண்ணுமே சொல்ல மாட்டாங்க...! அதுக்காக அவர் காலைப் பிடிச்சு என்னால கெஞ்ச முடியாது..!” என்றாள்.

“என்ன துப்னா இப்படி சொல்லிட்ட..? நீ தான் என் மருமகள்ன்னு நான் எவ்வளவு கனவு கண்டுகிட்டு இருக்கேன்...இப்போ நீயே இப்படி சொன்னா எப்படி..?” என்றார்.

“ஆன்ட்டி..நான் ஒன்னும் அந்த பட்டிக்காட்டுக்காரி கிடையாது....உங்க மகன் அளவுக்கு நானும் பேமசான ஹீரோயின் தான்..அவர்கிட்ட கெஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...அது என்னை நானே தரம் தாழ்த்திக்கிற மாதிரி..!” என்றாள்.

“அப்போ அவகிட்ட நீ தோத்து போகப் போறியா..?” என்றார்.

“அவளெல்லாம் எனக்கு ஒரு ஆளுன்னு...நான் அவகூட போட்டி போடணுமா...? உங்க பையனுக்கு தான் கிறுக்கு புடுச்சு..அவளைக் கட்டிகிட்டாருன்னா...நான் என்ன லூசா..?” என்றாள்.

“அப்பறம் எதுக்காக...அவன் தாலி கட்டுனதை வீடியோ எடுத்து...அதை மீடியாவில் குடுக்க சொன்ன...? அவன் மேல ஆசை இல்லாமையா..?” என்றார்.

“இப்பவும் சொல்றேன் ஆன்ட்டி..! எனக்கு அஜய் மேல ஆசை இருந்தது உண்மைதான்...மேரேஜ் பண்ணிக்கணும்ன்னு நினைச்சதும் உண்மைதான்.. ஆனா உங்க பையன் என்னவோ...பெரிய இவரு மாதிரி..என்னைக் கண்டாலே நாயைப் பார்க்குற மாதிரி பார்த்தாரு..! அதுமட்டுமில்லாம.. அன்னைக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல வச்சு...எல்லார் முன்னாடியும் என்னை அறைஞ்சு...அவமானப்படுத்தினார்.

அதுக்கு பதிலுக்கு அவரை அவமானப் படுத்தணும்ன்னு நான் நினச்சேன்.. சந்தர்ப்பம் தானா அமைஞ்சது..அதை பயன்படுத்திகிட்டேன்..! அவ்வளவுதான்... நான் நினைச்சா மாதிரி..ஏதோ ஒரு சின்ன அளவுல கூட....அஜய்க்கு அவமானம் தான்..அது போதும் எனக்கு.அதை விட்டுட்டு...அவன் பின்னாடியே சுத்துறது..எனக்கு வாழ்க்கை குடுன்னு கெஞ்சுறது..இதெல்லாம் எனக்கு செட்டே ஆகாது.

“என் பின்னாடி..பல ஹீரோ சுத்திட்டு இருக்கும் போது..நான் ஏன் நாய் மாதிரி உங்க பையன் பின்னாடி சுத்தணும்...அதுவும் அந்த பட்டிக்காடு இருந்த இடத்துல நானா..?கேட்கவே அசிங்கமா இருக்கு..!” என்றாள் கோபமாய்.

“என் கனவெல்லாம் மண்ணா போய்டுச்சா..?” என்றார் சாந்தா.

“அதுக்கு நான் பொறுப்பாக முடியாது..!” என்றாள்.

துப்னாவைதான் அவர் மழை போல் நம்பியிருந்தார்.எப்படியும் அவள் அஜய்யை விட்டு விலகமாட்டாள் என்று நினைத்தார்.ஆனால் அவளோ... ”உன் பையன் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை...!” என்பதைப் போல் பேசி வைக்க...அதற்கு மேல் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. துப்னாவும்..அப்போதுள்ள ஹீரோயின்களில்...முன்னணியில் இருந்ததால்..... அவளை எப்படியாவது அஜய்க்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்பது அவருடைய வெகுநாள் ஆசை.

அதற்கு ஏற்றார் போல்...துப்னாவும்...அஜய்யின் மேல் காதல்(ஆசை..) கொள்ள...அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

அவரின் நோக்கம் புரிந்த அஜய்க்கு...அம்மா என்றும் பாராமல் அவர் மேல் வெறுப்பு வர...அதன் பின் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும்...அவர் மீதான அவனின் வெறுப்பை வளர்த்துக் கொண்டு தான் சென்றதே தவிர...குறைக்கவில்லை.
துப்னாவை நல்ல முறையில் அறிமுகம் ஆனாலும்...சாந்தாவின் செய்கையால்..அவள் மீதும் தேவையில்லாத வெறுப்பை வளர்த்துக் கொண்டான்.அதை அவளிடத்தில் காட்டவும் மறக்கவில்லை.

அவள் இருக்கும் பக்கமே அவன் தலை வைக்க மாட்டான்..என்னும் அளவிற்கு நிலைமையை சாந்தா உருவாக்கியிருந்தார்.அந்த கோபத்தில் அவன் அவளை அறைய...பழி வாங்க அவளும் வீடியோவை எடுக்க.... அனைத்திலும் நன்மையாக..எப்படியோ அவன் விரும்பிய சக்தி அவனுக்கே கிடைத்து விட்டாள்.

“இங்க என்ன பண்ற சக்தி..?” என்றார் பாட்டி.

“பார்த்தா தெரியலையா பாட்டி...! தூங்கப் போறேன்..!” என்றாள் கொட்டாவியை விட்டபடி.
அவளை ஒரு மாதிரி பார்த்த பாட்டி...”என்ன பழக்கம் இது...? இங்க வந்து என் கூட தூங்குறது..?” என்றார்.

“பாட்டி..! நான் இத்தனை நாள் உங்க கூட தான தூங்கிட்டு இருக்கேன்...இப்ப என்ன நீங்க புதுசா கேள்வி கேட்குறிங்க..?” என்றாள் கடுப்பாய்.

“அப்படியில்லை சக்தி..! இத்தனை நாள்..அந்த தம்பி வீட்ல இல்லை... என்கூட தூங்குன சரி....இப்பதான் வந்துட்டாப்பிடில..அதானால நீ அங்க போ..!” என்று விரட்டினார்.

“அதெல்லாம் முடியாது..! நான் இங்கதான் தூங்குவேன்..! எனக்குத் தூக்கம் வருது..!” என்றபடி அவள் படுக்க...

“உனக்கு புரியுதா..? புரியலையான்னு எனக்கு தெரியலை...வாழ்க்கையை விளையாட்டு போக்குல பார்க்குற...அதுமட்டும் எனக்கு புரியுது..!” என்று தலையை ஆட்டி சொல்ல..

“இங்க பாரு கிழவி..! வர வர உன் தொல்லை தாங்க முடியலை..!” என்று சலித்துக் கொள்ள...

“இங்க பாரு சக்தி...! அந்த புள்ள உன்னைய பாக்குற பார்வையில தெரியுது...உன்மேல எம்புட்டு ஆசை இருக்குன்னு...! ஏன் உனக்கு அது தெரியலையா..?” என்றார் அவளை ஆராய்ந்தபடி.

“அதெல்லாம் தெரியுது..!” என்று அவள் நகத்தைக் கடிக்க..

“அப்பறம் எதுக்கு தெரியாத மாதிரி நடிக்கிற..?” என்றார் பட்டென்று.

“அப்படி எல்லாம் நம்ம உடனே சரண்டர் ஆகக் கூடாது பாட்டி...அப்பறம் நம்ம மேல மதிப்பு மரியாதை இல்லாம போய்டும்..இப்பவே நாமன்னா கொஞ்சம் இளக்காரம் தான் அவங்க அம்மாவுக்கு...!” என்றாள் கடுப்பாய்.

“புருஷன்..பொஞ்ஜாதிக்குள்ள..மதிப்பு மரியாதை பார்த்தா...குடும்பம் உருபட்ட மாதிரி தான்..! உன் மாமியாருக்கு உன் அருமை தெரியனும்ன்னா..முதல்ல நீ அந்த புள்ள கூட சந்தோஷமா வாழனும்..! அதை தினம் தினம் பார்த்தாலே போதும் உன் மாமியாக்காரிக்கு..!” என்று கிழவி நீட்டி முழக்கி சொல்ல...

அதைப் பார்த்து சிரித்த சக்தி...”இப்ப என்ன..? நான் அங்க போயி தூங்கனும்..! அவ்வளவு தான...சரி போறேன்..! நீ பத்திரமா தூங்கு..!” என்றபடி அவள் செல்ல..மனம் நிறைந்தது கிழவிக்கு.

அங்கே அவன் அறைக்கு செல்ல அவளுக்கு எந்த தயக்கமும் வரவில்லை.பொதுவாக அந்த வீட்டிலும்..அதிக தயக்கம் அவளுக்கு வரவில்லை.அதற்கான காரணமும் அவளுக்கு தெரியவில்லை. அவனைப் பற்றிய பிரமிப்பும்...அவன் தன் கணவன் என்கிற பிரமிப்பும் மட்டும் தான் மனதில் இருந்தது அவளுக்கு. அவள் சர்வ சாதாரணமாய் அவன் அறைக்குள் செல்ல...அஜய் அவளின் வருகையை எதிர்பார்க்கவில்லை.

“என்ன காத்து இந்த பக்கம் வீசுது..?” என்றான் அவளைப் பார்க்காமலேயே..!

அவன் கையில் ஏதோ பேப்பர் இருக்க....அதை தீவிரமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் வீசக் கூடாதா..? காத்துக்கு கட்டுப்பாடு ஏதும் இருக்கா..?” என்றாள் இடக்காய்.

“இவ மட்டும் கொஞ்சம் அதிகம் படிச்சு இருந்தா...எங்கயோ போயிருப்பா..? இப்பவே இந்த பேச்சு பேசுறா..?” என்று மனதில் எண்ணியவன்... “கட்டுப்பாடு எல்லாம் ஒண்ணுமில்லை...! என்ன கொஞ்சம் எதிர்பார்க்காதது எல்லாம் நடக்குது..அதான்..!” என்றான்.

அவன் எதார்த்தமாய் சொல்ல..அவளோ அவனை முறைத்துப் பார்த்து வைத்தாள்.
“என்ன எதிர்பார்க்காதது...! நான் இங்க வந்தது உங்களுக்கு பிடிக்கலையோ.. சார்க்கு அந்த துப்...” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் வாயை அடைத்தான் அவன் கையால்.

“அம்மா தாயே..! அந்த துப்னா வந்தா பிடிக்குமா..? இதைத்தான இப்ப கேட்க வந்த...தெரியாம சொல்லிட்டேன்..! நீ இங்க வரலாம்..போகலாம்.. இங்கயே கூட இருக்கலாம்..ஆடலாம்..பாடலாம்..என்ன வேணா செய்யலாம்..ஆனா தயவு செஞ்சு பேச மட்டும் செஞ்சுடாத..?” என்றான் கடுப்பாய்.

“ஏதோ போனாப் போகுதுங்குற மாதிரி சொல்றிங்க..?” என்றாள் சண்டை இழுக்கும் பொருட்டு.
“நான் இப்போ சண்டை போடுற மூடுல இல்லை சக்தி..!” என்றான் எரிச்சலாய்.

“அப்பறம் என்ன மூடுல இருக்கீங்க..?” என்று அவள் உளறிக் கொட்டி வாயை விட...
அவளை உல்லாசமாய் பார்த்தவன்...”மேடம்க்கு நான் என்ன மூட்ல இருக்கேன்னு தெரியனும்...அவ்வளவுதானா..? தெரிய வச்சிடுவோம்..!” என்றபடி...

அவள் வாயை மூடியிருந்த கைகளால்..அவளின் முகத்தில் கோலம் போட..

“தெரியாம கேட்டுட்டேன்..! கையை எடுங்க..!” என்றாள் சத்தமே வரமால்.

“என்ன சொன்ன..? எனக்கு கேட்கலை..!” என்றான் மந்தகாசமாய் சிரித்தபடி.

“ஐயோ..! சிரிக்கிறப்ப இப்படி அழகா இருந்து தொலைக்கிறான்..!எதுக்கு இப்படி பிறந்தான்..?” என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க...அவனோ... செயற்கை பூச்சு இன்றி..மஞ்சள் பூசிய அவள் முகம் அவனை மயக்க..... கார்மேகக் கருங்குழலாய் அவள் கூந்தல் பறக்க...துடுக்கு நிறைந்த கண்களில்.. லேசான மிரட்சி தெரிய..விட்டுவிட சொல்லி கெஞ்சும் துடிக்கும் உதடுகள் தெரிய.... தன்னை மறந்து பித்தானான் அஜய்.

“எவ்வளவு நேரம் இப்படி பார்த்துட்டே இருப்பிங்க..?” என்றாள் கடுப்பாய்.

“பார்த்துட்டே இருக்காதடா மடையா..அடுத்து ஆக வேண்டியதை பாருடான்னு..சொல்றியா சக்தி..!” என்றான் சிரிப்பை உதட்டுக்குள் மறைத்தபடி.

“ஐயோ..! இதுல இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ..! சக்தி...உனக்கு நேரம் சரியில்லை..எது பேசுனாலும்..அது ரெண்டு அர்த்ததுல முடியுது...! உம்முன்னு வாயை மூடிட்டு..கம்முன்னு படுத்துடு..!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள்...அவன் கைகளில் இருந்து விலக முற்பட...அவளின் முயற்சி கண்டு வாய்விட்டு சிரித்தான் அஜய்.

“இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிறிங்க..?” என்றாள்.

“அது ஒண்ணுமில்ல...! நீ தூங்கு..!” என்றான் கனிவாய்.

அவள் அவனை ஆச்சர்யமாய் பார்க்க..அவளை பார்வையின் பொருள் உணர்ந்தவன்..

“நீ என்ன நினைக்கிறன்னு எனக்கு இப்போ தெளிவா தெரியுது..!” என்றான்.

“என்ன நினைக்கிறேன்..?” என்றாள் கேள்வியாய்.

“சக்தி..! நமக்கு காலம் இருக்கு..ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு அப்பறம் நம்ம வாழ்க்கையை தொடங்கலாம்...அதுவரைக்கும் நல்ல நண்பர்களா இருப்போம்..!” என்று அவன் சொல்ல...

அவன் முகத்தைப் பார்த்து அவள் வியக்க.. “அப்படி எல்லாம் என்னால சினிமால மட்டும் தான் பேசமுடியும்... நிஜத்துல அதுக்கான வாய்ப்பே இல்லை...இப்படி அழகா ஒரு பொண்டாட்டியை பக்கத்தில வச்சுகிட்டு...என்னால அமைதியா எல்லாம் இருக்க முடியாது..!சில சமயம் என் கைகள் அத்து மீறலாம்...என் உதடுகள் முத்தம் கேட்கலாம்..அப்பறம் என் மனசு மொத்தமும் கேட்கலாம்..!” என்று அவன் உல்லாசமாய் சொல்லிக் கொண்டிருக்க..

“கருமம்..!கருமம்..! ஒரு பொண்டாட்டிகிட்ட பேசுற பேச்சா இது..!” என்று அவள் தலையில் அடிக்க...
“பொண்டாட்டிகிட்ட மட்டும் பேசுற பேச்சு தான் இது..! இதைப் போய் மத்தவங்க கிட்ட பேசமுடியுமா..?” என்றபடி அவன் புருவத்தைத் தூக்க..அவனை ரசனையுடன் பார்த்தது அவள் கண்கள்.

“என்னடி சக்தி செய்யுற..?ஜொள்ளு வடியுது..! வாயை மூடு..!” என்று அவள் மூளை சொல்ல...
பார்வையை மாத்தினாள் சக்தி.இதை மட்டும் அவன் பார்த்தான்...இதுக்கும் சேர்ந்து பேசுவான்..! என்று நினைத்தவள் பேசாமல் படுக்க போக..

“கீழ படுக்க போறியா சக்தி..!” என்றான் திட்டத்துடன்.

“நான் எதுக்கு கீழ படுக்கணும்..! உங்க சினிமால ஹீரோயின் தூங்குற மாதிரி எல்லாம் என்னால தூங்க முடியாது..!” என்று அவனைப் போல் சட்டமாய் சொன்னவள்...கொஞ்சமும் தயக்கம் இல்லாமல்...கட்டிலில் படுத்து கண்களை மூடினாள்.

“இவளை எந்த வகையில் சேர்ப்பது..! என்மேல இவளுக்கு இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சா..? இல்லை நடிக்கிறாளா..?” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க...அவளோ தூங்கிவிட்டாள்.

தூங்கும் போது கூட..முகத்தை கோபமாய் வைத்திருந்தாள் போலும்... புருவத்தை சுருக்கியபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.அவள் யோசனையுடனே தூங்கிக் கொண்டிருக்க..அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு... தூக்கம் வரும் என்று தோணவில்லை.

“இந்த சேலையை மாத்திட்டு தூங்க கூடாதா..? மனுஷனோட அவஸ்தை தெரியாம...?” என்று அவனுக்கு அவனே கேட்க..
“அது அவளைத்தான் கேட்கணும்..!” என்று இடக்கு பேசியது மனசாட்சி.

“வெளிய புலின்னாலும் வீட்டுக்குள்ள எலிங்கிறது சரியா தான் இருக்கு..!” என்று நினைத்து சிரித்தபடி அவள் அருகினில் படுத்தான் அஜய்.அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த இடைவெளி...அவர்களின் மனதின் இடைவெளியைத் தெளிவாய் காட்டியது.

இரவின் ஏகாந்தமும்...மனதில் நிறைந்த மனைவியும்...மனதில் ஏற்பட்ட நிம்மதியுமாய்...உறக்கத்தைத் தழுவினான் அஜய்.

“அம்மா சக்தி..!” என்ற மகாலிங்கத்திற்கு ஒருபுறம் நெஞ்சு வலிக்க...உடம்பு முழுவதும் வியர்த்துக் கொட்டியது.

மெல்ல எழுந்து கொள்ள அவர் முயற்சி செய்ய..அவரின் முயற்சி தடைபட்டு...கட்டிலில் இருந்து தடுமாறி விழுந்தார் லிங்கம்.

“ச..சக்தி..” என்றபடி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு..அவர் கண்கள் சொருக....

“அப்பா.....!” என்ற கதறலுடன் எழுந்தாள் சக்தி.

அவளின் சத்தத்தில்..என்னவோ ஏதோவென்று முழித்த அஜய்...அவள் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து குழம்பினான்.

“சக்தி..சக்தி..” என்று அவளின் தோளைத் தட்ட...அவன் குரல் அவள் காதில் விழவேயில்லை.

“ஹேய் சக்தி..! என்னாச்சு..? ஏன் இப்படி கத்துன..?” என்று அவன் அவளை உலுக்கிக் கேட்க...முதலில் முழித்தவள்....பின்பு கண்ட கனவு நியாபகம் வர...அவனை இறுகக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள்.

அவளின் தலையை நெஞ்சோடு அழுத்தியவன்..”என்னாச்சு சக்தி..?” என்றான் கவலையாய்.

“எனக்கு..இப்பவே எங்க அப்பாவைப் பார்க்கணும்..!” என்று அவள் மீண்டும் அழத் தொடங்க...

“என்னாச்சு..? என்ன திடீர்ன்னு..?” என்று அவன் கேட்க..

“எனக்கு எங்கப்பாவைப் பார்க்கணும்...இப்பவே..என்னை கூட்டிட்டு போங்க..!” என்றாள் மறுபடியும்.

“உடனே போகணும்ன்னா எப்படி முடியும்..? நீ இப்போ சென்னைல இருக்க..? இங்க இருந்து எப்படி உடனே போக முடியும்..?” என்றான்.

“இல்லை..அது எனக்குத் தெரியாது..! எனக்கு எங்கப்பாவை உடனே பார்க்கணும்...நீங்க கூட்டிட்டு போகலைன்னா..நானே போறேன்..!” என்று அவள் தேம்பியபடி எழுந்து செல்ல முற்பட..

“முட்டாளா நீ..! ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாது...! எத்தனை தடவை சொல்றது..? சின்ன பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிற..?” என்று அவன் எரிந்து விழுக...

கண்ணீருடன் அவனை முறைத்தவள்...விலுக்கென்று எழுந்து அந்த அறையை விட்டு வெளியேறினாள்.
“நில்லு சக்தி..!” என்று அவன் கத்திக் கொண்டே பின்னால் செல்ல.. அவளோ காதிலேயே வாங்காமல்..வேகமாக அவள் பாட்டி இருந்த அறைக்கு சென்றாள்.

“பாட்டி..!பாட்டி...!” என்று அழுது கொண்டே எழுப்ப...

தட்டுத் தடுமாறி முழித்தவர்...”என்ன சக்தி..? இந்த நேரத்துல..?” என்றார்.

“கிளம்பு...! நாம உடனே ஊருக்கு போகலாம்..அங்க அப்பாவுக்கு ஏதோ சரியில்லை...! எனக்கு மனசு சொல்லுது..!” என்றாள்.

“ஏதாவது கனவு கண்டிருப்ப சக்தி..தண்ணிய குடிச்சுட்டு போய் படு.. காலையில பேசிக்கலாம்..!” என்று பாட்டி கூற...

“அதெல்லாம் முடியாது..! கிளம்பு நாம இப்பவே போவோம்..!” என்று அவள் சொன்னதையே சொல்ல....

“நீ உங்க அப்பாவுக்கு போன் பண்ணி பேசேன்..!” என்றான் பின்னால் வந்த அஜய்.

“ஆமா சக்தி..! லிங்கத்துக்கு போனைப் போடு..!” என்றார் பாட்டி.

அரைமனதுடன் தலையை ஆட்டியவள்...தன் போனை எடுக்க போக...”இந்தா இதுலயே பேசு..!” என்று அவன் செல்லை நீட்டினான்.
தயக்கத்துடன் அவன் செல்லை வாங்கியவள்....அவள் அப்பாவிற்கு அழைக்க...ஒரு முழு ரிங் போய் கட்டாக....

“அப்பா எடுக்கலை...அங்க ஏதோ நடந்திருக்கு..! நான் கிளம்புறேன்..” என்று சொல்ல...

“தூங்கிட்டு இருப்பார்..! இன்னொரு தடவை கூப்பிடு..!” என்றான்.

மீண்டும் முயற்சிக்க...இந்த முறை அழைப்பை எடுத்தார் லிங்கம்.

“ஹலோ..அப்பா..!”

“என்னம்மா சக்தி ..! இந்த நேரத்துல...?” என்றார்.

“உங்களுக்கு ஒன்னுமில்லையே..?” என்றாள் பதட்டத்துடன்.

“எனக்கு ஒண்ணுமில்லைம்மா..! ஏன் என்னாச்சு..?” என்றார்.

“இல்லப்பா..அது..அது ஒரு கெட்ட கனவு அதான்...!” என்று அவள் அமைதியாய் சொல்ல...

“இதுக்கா இவ்வளவு பதட்டம்...! எனக்கு ஒண்ணுமில்ல சக்திமா..நான் நல்லா இருக்கேன்...! நீ அங்க நல்லா இருக்கியாமா...பாட்டி என்ன செய்யுது..? மாப்பிள்ளை நல்லா இருக்காரா..?” என்று அவர் கேட்க..

“எல்லாரும் நல்லா இருக்காங்கப்பா..! அங்க வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதா..? தோப்புல காய் வெட்டியாச்சா....அறுவடைக்கு எப்ப வண்டி சொல்லியிருக்கிங்க..?” என்று அவள் போக்கில் பேசிக் கொண்டு போக...
அவள் பேசுவதைப் பார்த்த அஜய் தலையில் அடித்துக் கொண்டான்.

“இவளை வச்சுகிட்டு...தோப்புல காய் வெட்டியாச்சான்னு கேட்குற நேரத்தைப் பாரு..! கொடுமைடா சாமி..கொஞ்ச நேரத்துல..என்னை கதி கலங்க வச்சுட்டா..” என்று எண்ணியவனாய் தலையைக் கோதிக் கொண்டே செல்ல...
போனில் பேசிக் கொண்டே அவனைப் பார்த்தவளின் மனதில்...அவனின் அப்போதைய தோற்றம்...சொல்லாமல் ஒட்டிக் கொண்டது.

“சரிப்பா..!” என்று ஒருவழியாக பேசி முடித்து போனை வைக்க.. அப்போதுதான் அதைப் பார்த்தாள்.
அவன் போன் டிஸ்பிளேயில் அவள் முகம் வால்பேப்பராக இருக்க அதிர்ந்தாள் சக்தி.

அவளின் போட்டோவைக் கண்டதால் வந்த அதிர்ச்சி இல்லை அது.ஆனால் அந்த போட்டோ அவனிடம் எப்படி வந்தது..? என்ற கேள்வியால் வந்த அதிர்ச்சிதான் அது. அந்த போட்டோவில்... பாவாடை தாவணியில் இருந்தவள்....பாவாடையை சற்றே தூக்கி சொருகியிருக்க..கையில் இருந்த நெல் நாத்து அடங்கிய கற்றையை தோளில் போட்டபடி சிரித்துக் கொண்டிருந்தாள்.

“இது...இது இப்ப எடுத்தது இல்லையே..? ஆனால் எப்படி இவர்கிட்ட...?” என்ற யோசனையில்..இத்தனை நாள் ‘அவன்’ ஆக இருந்தவன் அவள் அறியாது ‘அவராக’ மாறினான்.

அதே யோசனையுடன் அவள் அறைக்கு செல்ல...இன்னமும் அவள் முகத்தில் தெளிவில்லாமல் வருவதைக் கண்டவன்..

“என்னாச்சு சக்தி..? இன்னமும் ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு..?” என்றான்.

“ஒண்ணுமில்லை..” என்று தலையை ஆட்டியவள்... போனை அவன் முகத்துக்கு நேராக காட்ட...
”என்ன..?” என்பதைப் போல் பார்த்தான்.

“என்னதிது..?” என்றாள்.

“போன்..!” என்றான் தோள்களைக் குலுக்கியபடி.

“அது தெரியுது..! அதுல இருக்குற போட்டோ..!” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

“பார்த்தா தெரியலை உன்னோடது தான்..!” என்றான் சாதாரணமாய்.

“அது எனக்கு தெரியுது..! இதெப்படி உங்க போன்ல..?” என்றாள் எரிச்சலாய்.

“இதென்னா பெரிய விஷயமா...என் போன்ல..என் பொண்டாட்டியை தான் வைக்க முடியும்..?” என்றான்.

“ஐயோ..! இந்த போட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது..?” என்றாள்.

அப்போது தான் அவனுக்கு நியாபகம் வர...தனக்குத் தானே குட்டிக் கொண்டான்.

“இது ஒரு பெரிய விஷயமா..? உன் போன்ல இருந்து எடுத்தேன்..!” என்றான் சமாளிப்பாய்.

“என்கிட்டே...கேமரா போனே இல்லை..அப்பறம் எப்படி எடுத்திருப்பிங்க..?” என்றாள்.

“இருந்தாலும் நீ இவ்வளவு அறிவாளியா இருக்க கூடாதுடி..!” என்று மனதில் நினைத்தவன்...தலையை வேறு புறம் திருப்பிக் கொண்டு சிரிக்க...

“இந்த போட்டோ...ஒரு விவசாய பேப்பர்ல பேட்டிக்காக எடுத்த போட்டோ..! அது எப்படி உங்களுக்கு கிடைச்சது...?” என்று பாயிண்ட்டைப் பிடிக்க..

“சிரித்துக் கொண்டான்...” அஜய்.

“நேரம் வரும் போது சொல்றேன்..!” என்றான்.

“இதுக்கெல்லாம் என்ன நேரம் வரணும்..?” என்றாள்.

“அம்மா தாயே..! மணி ரெண்டு...இப்ப தூங்கலாம்..காலையில பேசிக்கலாம்..!” என்றான் கும்பிடு போட்டவனாய்.

“சரி..!” என்று சொல்லி படுத்தவளுக்கு தூக்கம் மட்டும் வரவேயில்லை. எப்போது விடியும்....அவனிடம் கேட்கலாம் என்று நேரத்தை நெட்டித் தள்ளினாள். அவனோ எந்த குழப்பமும் இன்றி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.
Wow awesome
 
Top