Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 19.1

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 19(1)

ஹர்ஷூ குடும்பத்தினர் கிளம்பியதுமே பத்ரிநாத் தீட்சண்யா இருவரையும் சாப்பிட அழைத்துச்சென்றனர்.
சாப்பிட்டு விட்டு வந்து மேடையேறிய தீட்சண்யா ஆள் அரவமில்லாமல் நிசப்தமான மண்டபத்தை பார்த்து திகைத்துவிட்டாள்.
என்ன விந்தை இது? இவ்வளவு நேரம் மண்டபம் முழுவதும் நிரம்பி வழிந்த சொந்தபந்த கூட்டம் திடீரென மாயமானதை கண்டு குழம்பினாள்.
ஒருவேளை அனைவரும் வீட்டிற்கு சென்றிருப்பார்களோ? அங்கே எதுவும் சடங்கு இருக்குமோ? என தன்னையே சமாதானம் செய்துகொண்டாலும் மனதின் ஓரத்தில் சிறு உறுத்தல் முள்ளாக குத்த ஆரம்பித்தது.
அவளது சிந்தனைக்கு நேரம் கொடுக்காமல் பத்ரியின் தாய் வந்து வீட்டிற்கு கிளம்பவேண்டும் என கூறி அழைத்துச்சென்றார்.
இந்த குழப்பத்தில் ஒன்றை மறந்துவிட்டாள் தீட்சண்யா. சாப்பிடும் வரை தன்னிடம் சகஜமாக உரையாடி, தன்னிடம் சீண்டி விளையாண்டபடி இருந்த தனது கணவன் அதற்கு பின் ஒரு வார்த்தை கூட தன்னிடம் பேசவில்லையே அது ஏன்? என உணராமல் விட்டுவிட்டாள்.

மணமக்கள் இருவரும் ஒரு காரிலும் அவர்களை பின் தொடர்ந்து மற்றவர்கள் பெரிய வேனிலும் வீட்டை அடைந்தனர்.
வரும் வழியெல்லாம் அந்த இயற்கையின் அழகாய் ரசித்துகொண்டிருந்தவள் இனி தான் வாழப்போகும் இடம் என எண்ணி உவகை கொண்டாள்.

அதுவரை எந்தவிதமான கனவுகளுக்கும் இடமளிக்காமல் இருந்தவளது மனம் பத்ரிநாத் தாலிகட்டி அவளின் சரிபாதியான நொடியிலிருந்து அவனோடு தான் வாழப்போகும் வாழ்க்கை எப்படி அமைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆசைகள் ஆக்ரமிக்க கட்டுக்கடங்காமல் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களின் கணம் தாங்காமல் அவளது இதயம் சுகமான வலிகளை தாங்கியது.

வீட்டை பார்த்து இவள் வியக்க, அத்தனை பெரிய மாளிகையை பார்த்ததும் வாயை பிளந்த சுசீலாவோ அதன் பின் மூடவே இல்லை. பார்த்து பார்த்து பிரம்மித்து போனார்.இப்படி ஒரு வாழ்க்கையா தன்னுடைய பெண்ணிற்கு என எண்ணி பெருமைப்பட்டுகொள்ளவே அவருக்கு அன்றைய நாள் போதவில்லை.

தீட்சண்யாவிற்கும், பத்ரிக்கும் பத்ரியின் தாய் விசாலி தான் ஆரத்தி எடுத்தது கூட. அதுவரை தன்னிடம் கனிவாக பேசிய அவரின் முகத்தில் இப்போது வேறு ஒரு உணர்வு இருப்பதை போல தோன்றியது தீட்சண்யாவிற்கு.
வீட்டினுள் நுழைந்தவள் அப்போதுதான் அந்த வீட்டை சுற்றி பார்க்க, தன்னுடைய தாய், தந்தை, உடன் பிறந்தவர்களை தவிர்த்து பத்ரியும், அவனது பெற்றோர்களும் மட்டுமே அங்கே இருந்தனர். ஒன்றிரண்டு வேலைக்காரர்கள் கூட.

“என்னாச்சு பத்ரி? மேரேஜ்க்கு வந்தவங்க உங்க ரிலேஷன்ஸ் யாருமே வீட்டுக்கு வரலை?மண்டபத்தை விட்டும் திடீர்னு கிளம்பிட்டாங்க?...”என்ற தீட்சண்யாவை பார்த்த பத்ரிநாத்,

“கால் மீ ஆகாஷ். ஐ டோன்ட் லைக் திஸ் நேம்...”அவளை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்துக்கொண்டே பேசிய அவனது குரலில் இருந்தது என்னவென உணரும் முன்னால் அவ்விடம் விட்டு அகன்றுவிட்டான்.

அவனின் கண்களில் ஏன் அத்தனை இகழ்ச்சி? என திகைத்து நின்றுவிட்டாள் தீட்சண்யா.
அவளுக்கு தெரியாதது. அவனது சொந்தம் என சொல்லிக்கொண்டு வந்த அனைவரும் அவனை வாழ்த்துவதற்காக திருமணத்திற்கு வரவில்லை என்பதும், அவனின் அராஜகத்திற்கு பயந்து வந்தவர்களை சாப்பிட்டு முடிந்து வருவதற்குள் அவனே கிளம்ப சொல்லியதும்.

இந்த எஸ்டேட் முழுமையும் அவனது ராஜ்ஜியம் என்பதால் அவனுக்கு கட்டுப்பட்டு தான் அனைவருமே இருந்தனர் என்பதை உணராமல் புதைகுழியில் தான் சிக்கிக்கொண்டதை இன்னும் சில மணி நேரங்களில் அறியப்போவதையும் உணராமல் இருந்தாள் தீட்சண்யா.

யோசனையிலும், அதிர்ச்சியிலும் சிலைபோல நின்றவளை விசாலி தான் அசைத்து நனவுக்கு கொண்டுவந்தார்.
“ஏன்ம்மா இங்கயே நின்னுட்டு இருக்க? வா. வந்து விளக்கேத்திட்டு ரூம்க்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு...” என்றவரின் குரலில் வரவழைக்கப்பட்ட கனிவு இருந்ததே தவிர அது இயல்பானது இல்லை என புரிந்தது.

அவரின் பின்னால் சென்றவள் அவர் சொன்னதை போல விளக்கேற்றி முடித்து தனது வாழ்வை வளமாக்க வேண்டி பிராத்தனை செய்துவிட்டு வெளியேறவும் விசாலி அவளிடம்,

“உனக்கு மாடியில ஒரு ரூம் அலார்ட் பண்ணியிருக்கேன். உன்னோட லக்கேஜ் எல்லாமே அங்க வச்சாச்சு. நீ போய் குளிச்சிட்டு லேசா வேற ட்ரெஸ் போட்டுக்கோ. இனி நைட் தான் சம்பரதாயமெல்லாம். போரடிச்சா வீட்டையும் தோட்டத்தையும் சுத்திப்பாரு...” என்றவர்,

“மங்களம்...” என வேலையாளை அழைத்த விசாலி அவர் வந்ததும், “நேத்து உங்ககிட்ட நான் காண்பித்த ரூம்க்கு இவளை கூட்டிட்டு போ....” அதிகாரமாக மொழிந்துவிட்டு தீட்சண்யாவிடம் திரும்பி,
“டயர்டா இருக்கு எனக்கு. நான் என்னோட ரூம்க்கு போறேன். ஈவ்னிங் மீட் பண்ணலாம்...”
விசாலி மங்களத்தை எச்சரிக்கும் பார்வையொன்றை பார்க்க, அவர் பயந்துகொண்டே, “நான் பார்த்துக்கறேனுங்க பெரியம்மா...” என கூறி தலையசைத்ததும் விசாலி உள்ளே சென்றுவிட்டார்.

என்ன குடும்பம் இது? காலையில் திருமணம் முடிந்த வீட்டை போலவா இருக்கிறது? வீட்டிற்கு வந்ததிலிருந்து மாமனாரையும் காணவில்லை. அவளது உறுத்தல் அதிகமாகியது.

தனது குடும்பத்தை தேடிய தீட்சண்யா சுற்றிலும் பார்க்க அங்கிருக்கும் அலங்காரபொருட்களை அதிசயமாக பார்த்துக்கொண்டிருந்த அவர்கள் அவளை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
அதற்குள் மங்களம், “வாங்கம்மா போகலாம்...” என பணிவோடு அழைக்க அதற்கு ஒரு பெருமூச்சோடு தலையாட்டியவள்,
“வாங்க போங்கன்னு எதுக்கு மரியாதையெல்லாம்? என் பேர் சொல்லியே கூப்பிடுங்க. நான் உங்களை விட சின்னவ தானே?...”எதார்த்தமாக பேசிய அவளை கருணையோடு பாரிதாபமான பார்வை பார்த்தார் மங்களம்.
“என்னாச்சு? ஏன் இப்படி பார்க்கறீங்க?...”

“ஒண்ணுமில்லைங்கம்மா...” அதை கூட ஒருவித பயத்தோடு சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டே தான் கூறினார்.
“அத்தையோ, என் வீட்டுக்காரரோ எதுவும் சொல்லுவாங்கன்னு பதட்டபடாதீங்க. அவங்க ஒன்னும் சொல்லாம நான் பார்த்துக்கறேன்...” என அன்றலர்ந்த மலர்போல புன்னகை முகமாக பேசியவளிடம்,
“இதுதானுங்க உங்களோட ரூம். நீங்க குளிச்சிட்டு வாங்க. அதுக்குள்ளே உங்களுக்கு குடிக்க எதாச்சும் கொண்டுவரேன்...” என கூறிவிட்டு விடுவிடுவென ஓட்டமும் நடையுமாக சென்றவரை புரியாமல் பார்த்த தீட்சண்யா அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

குளித்து முடித்த நிமிடத்தில் அறையின் கதவு தட்டபட மங்களமாகத்தான் இருக்கும் என யூகித்தவள்,
“உள்ளே வாங்க மங்களம்மா...” என குரல் கொடுத்துக்கொண்டே தனது பெட்டியில் நகைகளை பத்திரப்படுத்திகொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த மங்களத்தின் கண்கள் கலங்கி இருந்தது.
“வாங்க ஏன் அங்கேயே நின்னுட்டு இருக்கீங்க?...”

“உங்களுக்கு சூடா டீயும் இந்த பஜ்ஜியும் கொண்டுவந்தேன். வெளில மழை தூறுதுல. கொஞ்சம் குளிருக்கு நல்லா இருக்குமேன்னு உங்களுக்கும் உங்க வீட்டாளுங்களுக்கும் சூடா போட்டேன்ம்மா...”

“ரொம்ப நன்றி மங்களம்மா. மத்யானம் இரண்டரை மணி போலவா இருக்கு இந்த ஊரு. தேவையான நேரத்துக்கு கரெக்ட்டா கொண்டு வந்துட்டீங்க. தேங்கஸ். அப்புறம் என்னோட அப்பாம்மால்லாம் எங்க இருக்காங்க?...” மங்களம் கொடுத்த டீயை குடித்துகொண்டே தீட்சண்யா கேட்க,
“அவங்களாம் கீழே ஹால் பக்கத்துல இருக்கிற ரூம்ல தங்க வச்சிருக்காங்க பெரியம்மா...” என்றவரின் முகத்தை பார்த்த தீட்சண்யா அவன் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாக இருப்பதை கண்டு,
“எதாச்சும் சொல்லனுமா மங்களம்மா? உங்க முகமே ரொம்ப யோசனையா இருக்கே?...” வார்த்தைக்கு வார்த்தை மங்களம்மா மங்களம்மா என அன்போடு அழைப்பவளை பார்த்தவர் நொடியில் முடிவெடுத்துவிட்டார்.

“ஆமாங்க. நீங்க ரொம்ப நல்லவங்க போல தெரியிறீங்க சின்னம்மா. உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும். அதை யார்க்கிட்டயும் சொல்லமாட்டேன்னு சத்தியம் செய்யுங்க...”
ஏன் எதற்கு என்ற யோசனை எழும்பினாலும் அதை மங்களத்தின் பரிதவிப்பான பார்வை தவிடுபொடியாக்கி தன்னையறியாமல் அவருக்கு வாக்களித்தாள் தீட்சண்யா.

முதலில் கொஞ்சம் தயக்கத்தோடே ஆரம்பித்த மங்களம் தீட்சண்யாவின் முகத்தில் தெரிந்த எதிர்பார்ப்பில்,
“நீங்க எப்படி வந்து இந்த கும்பல்ல சிக்கினீங்கன்னு எனக்கு தெரியலைங்கம்மா. ஆனா உங்களுக்கு அவகாசம் இல்லை. நான் சொல்றதை கவனமா கேளுங்க. இந்த ஹால் கடைசியில ஒரு படிக்கட்டு இருக்கும். அதுவழியா மேல போனீங்கனா நாலாவது ரூம்ல உங்க வீட்டுக்காரர் இருப்பாரு. ஆனா யாருக்கும் தெரியாம போங்க...”

“என்ன சொல்றீங்க மங்களம்மா? அவர் அங்க இருக்கறதை நான் எதுக்காக யாருக்கும் தெரியாம போய் பார்க்கனும்?...” அவளது குரல் நடுநடுங்க இதயத்துடிப்பு அதிகமாக துடித்தது.
வீட்டினுள் நுழைந்ததிலிருந்து ஏதோ சரியில்லை என்ற உணர்வு இப்போது விஸ்வரூபமாக எழுந்து ஆட்டிப்படைக்க மங்களத்தை பார்த்தாள்.

“நீங்க போய் பாருங்கம்மா. உங்களுக்கே எல்லாம் புரியும். இப்போ பெரியய்யாவும், பெரியம்மாவும் தூங்கற நேரம். இடியே விழுந்தாலும் சாய்ங்காலம் வரைக்கும் எழுந்துக்க மாட்டாங்க. அதுக்குள்ள போய்ட்டு சத்தமில்லாம திரும்பிடுங்க...”
குழப்பத்தோடு அமர்ந்திருந்தவளை பிடித்து எழுப்பியவர் அந்த படிக்கட்டு வரைக்கும் துணைக்கு சென்றுவிட்டு கீழே திரும்பிவிட்டார்.
போகும் முன்பு எக்காரணத்தை கொண்டும் நீங்க பார்க்கிறதை அவரு கண்டுபிடிச்சிடாம சூதானமா பார்த்துக்கோங்கம்மா...” என எச்சரித்து விட்டுதான் வந்தார்.
மங்களம் அடையாளம் கூறிய அறையை நெருங்கியதும் அங்கே தன் கணவனது குரல் கேட்டு தேங்கி நின்று அறையின் பக்கவாட்டிலிருந்த ஜன்னலின் வழியே மெல்ல எட்டிப்பார்த்தாள்.
அங்கே அவள் கண்ட காட்சியில் காலடியில் தரை நழுவி நிற்பதற்கு பிடிமானமில்லாமல் தள்ளாட தன்னை ஸ்திரப்படுத்தி கொள்வதற்குள் அடுத்த இடி அவளது காதுகளில் அமிலமென இறங்கியது.
“ஷைலு நான் சொல்வதை கேளேன்? டென்ஷன் ஆகாதடா....” என தேன் குரலில் கெஞ்சியவன்.
“ஷைலஜா என்னைக்கா இருந்தாலும் நீதான் என்னோட முதல் மனைவி. அவளை எதுக்காக கல்யாணம் செய்துக்கிட்டேன்னு உனக்கே தெரியுமேடா?உன் ஆகாஷ் பத்தி உனக்கு தெரியாதா?...”என கொஞ்சும் குரலில் அவளின் அறிவை வழக்கம் போல மழுங்கடித்தான்.
அவன் சாவி கொடுத்த உயிருள்ள பொம்மையான ஷைலஜா அவனின் பேச்சில் வழக்கம் போல கட்டுண்டு தன்னை மறந்தாள். மறக்கடித்தான் பத்ரிநாத் என்ற ஆகாஷ்.
 
எதுக்காக தியாவைக் குறிவைத்து கல்யாணம் முடித்து இருக்கிறான் இந்த ஆகாஷ். பாவம் தியா....
 
Last edited:
Top