Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 18.3

Advertisement

அடுத்து என்ன ஆகுமோ
ஆகாஷ் ஏன்பா இப்படி எல்லாம் செய்யறான்
 
Part 3

பத்ரி மேல் ஹர்ஷூவிற்கு எந்தவிதமான கோபமும் இல்லை. காதலென்று தீட்சண்யா பின்னால் பிதற்றிக்கொண்டு சுற்றாமல் நேரடியாக பெண்கேட்டு திருமணம வரை கொண்டு சென்றதில் கொஞ்சம் அவன் மீது மரியாதையும் எழுந்தது.
ஆனாலும் தீட்சண்யாவை அவளது விருப்பத்தை, எண்ணங்களை அவமதித்துவிட்டது போன்ற ஒரு பிம்பம் உருவாவதை ஹர்ஷூவால் தடுக்கமுடியவில்லை.
தீட்சண்யாவின் அழகிற்கு கொஞ்சமும் குறையாத, பொருத்தமானவனாக பத்ரி இருப்பான் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
ஆனாலும் தீட்சண்யாவின் லட்சியம், அவள் என்ன நினைக்கிறாள்? என்பதை அப்ற்றி தெரிந்துகொள்ள கொஞ்சமும் ஆர்வம் இல்லாமல் கல்யானம்ஸ் எய்துகொண்டு எனக்கு மனைவியாக இருந்தால் போதுமென பேசுபவனிடம் தன்னையும் அறியாமல் கேட்டுவிட்டாள்.
நிஷாந்திற்கும் அந்த எண்ணம் எழத்தான் செய்தது. ஆனால் தீட்சண்யாவின் பெற்றோர் முடிவு. தீட்சண்யாவே அதற்கு மறுத்து பேசாமல் இருக்க, நிச்சயம் வரை வந்த பின்பு ஹர்ஷூவின் இந்த கேள்வியால் பத்ரி தங்களை தவறாக எண்ணிவிட்டால் என்ன செய்ய என நினைத்து ஹர்ஷூவை கடிந்துகொள்ள,
“டோன்ட் வொரி ஹர்ஷிவ்தா. நான் அவங்களை முடக்க நினைக்கலை. என்னை மறுத்திட கூடாதென்ற நினைப்பில், தீட்சண்யாவை இழந்திட கூடாதென்ற தவிப்பிலும் தான் நான் அவங்களோட அப்பாம்மாக்கிட்ட பேசினேன்...”
“உங்க ப்ரெண்ட் ஆசைப்பட்டது போல அவங்க லட்சியத்துக்கு துணையாக நான் இருப்பேன். என்னை நம்பலாம் நீங்க ரெண்டுபேரும்...” என்றவனை பிரமிப்பாக பார்க்க,
“எனக்கு தீட்சண்யா பத்தின எல்லா விபரமும் தெரியும். அவங்களை பத்தி முழுசா தெரிஞ்ச பின்னால் அதான் நான் இன்னும் அதிகமா விரும்ப ஆரம்பிச்சேன்...”
“முதல்ல என்னை ஈர்த்தது என்னவோ அவங்க அழகுதான். அந்த அழகுதான் அவங்களை பத்தி தெரிஞ்சிக்க தூண்டுச்சு. கிடைத்த விஷயங்கள் இன்னும் எனக்குள்ள அவங்க நினைப்பை ஆழமாக்கிடுச்சு...”
“படிப்பு முடியட்டும்னு தான் வீட்ல சொன்னாங்க. என்னால பொறுமையா இருக்க முடியலை. அதான் கல்யாணம் செய்துட்டு படிப்பை கண்டினியூ செய்யலாம்னு வீட்ல இருக்கிறவங்க கிட்ட பேசி இந்த நிச்சயத்தை உடனே ஏற்பாடு செய்தேன்...”
“பார்டா, கல்யாணம் செய்துட்டுனா எப்படி? ஏழு மாசம் நீங்க ஊட்டியிலையும் தியா இங்கயுமா?...” ஹர்ஷூ கிண்டலாக மொழிந்தாள்.
“நல்ல நினைப்புங்க உங்களுக்கு. மேரேஜ்க்கு அப்றமா தீட்சண்யா படிப்பு முடியிற வரை இங்க தங்கறதுக்கு உங்க காலேஜ் பக்கத்துல ஒரு ப்ளாட் பார்த்திருக்கேன். தீட்சண்யா அவங்களோட படிப்பை முடிச்சதும் நாங்க ஊட்டிக்கு...”
அடப்பாவி மனுஷா?...” என்பது போன்ற பாவனையில் ஹர்ஷூ வாயை பிளக்க, நிஷாந்த் பத்ரியை பெருமையாக பார்க்க தீட்சண்யா நிலைதான் திண்டாட்டமாக இருந்தது.
அரைமணி நேரத்திற்கு முன்பு யாரென்றே தெரியாத ஒருவன் இப்போது தன் வாழ்க்கையே அவனாகி போனானே என எண்ணி வியப்பிலிருந்து மீள முடியாமல் பத்ரியின் காதலில் உருகிக்கொண்டிருந்தாள்.
“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஆச்சர்யமா பார்க்கறீங்க? என்னோட மனைவிக்கான சுதந்திரத்தையும், மரியாதையையும் குடுக்கனும்னு நினைக்கிறேன். இதென்னமோ பெரிய விஷயமாட்டம் நினைச்சு என்னை பார்க்கறீங்க? என்னையும் உங்க கேங்ல சேர்த்துக்கோங்க. இந்த மரியாதை என்னை விளக்கி வைக்குது. ப்ளீஸ்...”
வெளிப்படையான பேச்சில் தீட்சண்யா மொத்தமாக சாய்ந்துவிட்டாள். நிஷாந்திற்கும் ஹர்ஷூவிற்கும் அவனது பேச்சு திருப்தியளித்தது.
“ஓகே ஓகே நீங்க இவ்வளோ எக்ஸ்ப்ளைன் பன்றதால போனா போகுதேன்னு என்னோட தியா செல்லத்தை நான் விட்டுகொடுக்கேன். ஆனாலும் நான் உங்க கல்யாணத்துக்கு பின்னாலயும் நான் அவளை சைட்டடிக்கத்தான் செய்வேன். ஏனா?..” என்றவளை பார்த்து நிஷாந்த் தலையிலடித்துக்கொள்ள,
“ஐ லவ் யூ தியா செல்லம். புரியுதா?...” என்றவளை தீட்சண்யா கட்டிக்கொள்ள நிஷாந்தை தோளோடு இறுக்கிக்கொண்ட பத்ரியின் கண்கள் தீட்சண்யாவை மொய்த்தது.
அவனது பார்வையை தாங்கிய தீட்சண்யா அவனோடு தான் வாழப்போகும் வாழ்க்கையை எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.
பத்ரிக்கு தீட்சண்யாவின் சம்மதம் கிடைத்ததும் வெற்றிக்களிப்பில் அவனது முகம் ஜொலித்தது. அதுவும் அவளது வெட்கத்தில் சிவந்த முகம் அவனை இம்சிக்க ஆரம்பித்தது.
இன்னும் இங்கேயே இருந்தால் நிச்சயம் தன் கை நீண்டுவிடும் என்ற அச்சத்தில் அவர்களிடம் விடைபெற்று விட்டு சென்றான்.
ஹர்ஷூவிடமும், நிஷாந்திடமும் மாட்டிக்கொண்டு அவர்களது கிண்டலில் திண்டாடிக்கொண்டிருந்தாள் தீட்சண்யா.
மறுநாள் நிச்சயதார்த்தம் அமோகமாக நடைபெற்று அடுத்த மாதத்தில் திருமண நாளும் குறிக்கப்பட்டது. திருமணம் ஊட்டியில் என முடிவு செய்யப்பட்டது.
தீட்சண்யாவின் சொந்தபந்தங்கள், ஹர்ஷூ, நிஷாந்த் என அனைவரும் திருமணத்திற்கு முதல் நாளே அங்கே செல்ல திருமணத்தன்று ஹர்ஷூவின் பெற்றோரும், நிஷாந்தின் அம்மா சரஸ்வதியும் வந்து சேர்ந்தனர். எந்தவிதமான இடையூறும் இன்றி கோலாகலமாக அத்திருமணம் அனைவரும் வியக்கும் வண்ணம் நடைபெற்றது.
தீட்சண்யாவின் பெற்றோருக்கு பெருமை பிடிபடவில்லை. மாப்பிள்ளையை பற்றியும் அவனது குடும்பத்தின் செல்வநிலையை பற்றியும் சொல்லு சொல்லி மாய்ந்துகொண்டிருந்தார்.
போதா குறைக்கு பரணியிடம் தாங்களும் ஓரளவிற்கு உங்களுக்கு சமமாக வந்தோம் என்பது போல அலட்டலோடு பொடிவைத்து பேச அதை உணராதவரா சுந்தரபரணி?
தீட்சண்யாவிற்காக பொறுமையாக இருந்தார். ஆனாலும் சரஸ்வதியால் தாங்கமுடியவில்லை. பரணியிடம் மனத்தாங்கலை கூற,
“விடு சரஸ்வதி, புதுசா பணத்தை பார்க்கிறாங்கள்ள. அப்டித்தான் இருப்பாங்க. தீட்சண்யா தான் நமக்கு முக்கியம்...” என்றவர்,
“என்னனுதான் அந்த பொண்ணு இந்தம்மாவுக்கு மகளா பொறந்ததோ? ஏதோ அவளுக்கான வாழ்க்கை நல்லவிதமா அமைந்ததே. அதுவே சந்தோசம்...”
பரணியின் பேச்சை ஆமோதிப்பது போல அமைதியான சரஸ்வதி மணமகள் கோலத்தில் பேரழகுடன் ஜொலித்த தீட்சண்யாவை பார்த்து,
“இந்த பொண்ணு இன்னைக்கு போல என்னைக்கும் சந்தோஷமா சிரிச்ச முகமா இருக்கணும்...” என மனதார வேண்டிக்கொண்டார்.
மதியவேளை நெருங்கவுமே ஹர்ஷூவின் குடும்பத்தினரும், நிஷாந்தும் கிளம்ப ஆயத்தமாகினர். அதுவரை இருந்த குதூகலம் என அனைத்தும் மறைந்து அவ்விடத்தை சஞ்சலம் சூழ்ந்துகொள்ள ஹர்ஷூவிற்குதான் அழுகையை அடக்க பெரும்பாடு பட வேண்டியதாகிற்று.
முன்பு போல தீட்சண்யாவிடம் நெருக்கமாக இருக்க முடியுமா? என எண்ணி தவித்து மருகினாள்.
அவளது நினைப்பை அப்படியே பிரதிபலிப்பவள் போல ஹர்ஷூவை இறுக்கி அனைத்த தீட்சண்யா,
“ஐ லவ் யூ ஹர்ஷூ...” என கலங்கிப்போய் கூறவும் அந்த சூழ்நிலையை இயல்பாக்க,
“அடிப்பாவிங்களா? இது உங்களுக்கே ஓவரா தெரியலையா? பாரு பத்ரி முழிக்கிறதை. ஹர்ஷூ நீ என்ன குழந்தையா? இன்னும் பத்து நாள்ல நம்மோட காலேஜ்க்கு தியா வழக்கம் போல வந்திடுவா. இதுக்கு போய் நீயும் வருந்தி அவளையும் நல்ல நாள் அதுவுமா கலங்க வச்சிட்டு இருக்க?...”
கொஞ்சம் அதட்டலாகவே நிஷாந்த் பேச ஹர்ஷூவும் அதை ஆமோதிக்கும் வண்ணம் பளிச்சென புன்னகைத்தாள். அதற்குள் தீட்சண்யாவும் தெளிய அனைவரும் சுமூகமாக விடைபெற்று வாசலுக்கு சென்றனர்.
மறந்து தீட்சண்யாவின் பெற்றோரிடம் ஒருவார்த்தை கூட கிளம்புவதாக கூறவில்லை. ஆனால் பத்ரியின் பெற்றோர் தானாகவே வந்து வாசல் வரை வழியனுப்ப வந்தனர்.
வாசலில் வைத்திருந்த பேனரின் புறம் தற்செயலாக திரும்பிய நிஷாந்த் அதை பார்த்துவிட்டு ஹர்ஷூவை அழைத்து காண்பிக்க அவளோ,
“பார்டா இந்த ரோமியோக்கு ரெண்டு பேர் இருக்கு போல? இன்விடேஷன்ல கூட போடலையே?. இந்த தியா காலேஜ்க்கு வரட்டும் வச்சிக்கறேன். ஒரு வார்த்தை கூட சொல்லலை பாரேன்...” என கலகலப்போடு காரில் ஏறி அமரவும் அவர்கள் கோவையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர்.
அவர்களுக்கு தெரியவில்லை இன்றுதான் தீட்சண்யாவை தாங்கள் பார்த்தது கடைசி என்பது.

வழி நெடுங்கிலும் வைத்திருந்த பேனர் அவர்களை கேலியோடும் குரூரத்தோடும் வழியனுப்பியதை உணர்ந்த இயற்கை தீட்சண்யாவிற்க்காக மெல்லிய சாரலோடு ஊமையாக கண்ணீர் சொரிந்ததை யாரும் உணரவில்லை.
பேனரில்...
பத்ரிநாத் @ ஆகாஷ்
வெட்ஸ்
தீட்சண்யா


நதி பாயும்...
Nice
 
Top