Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 13.2

Advertisement

AshrafHameedaT

Administrator
Part 2


“நீ எப்போவும் சொல்றது போல, உன்னை கார்னர் செஞ்சு கல்யாணம் செய்துக்கிட்டேன். இனியும் உன்னை இப்படியே விடமாட்டேன் ஹர்ஷூ. இனிமே தான் இந்த ஷக்தி யாருன்னு ப்ச் ப்ச் இல்லை உன்னோட கௌரவ் யாருன்னு தெரிஞ்சுக்க போற...” ஒரு தீர்க்கமான முடிவை தேர்ந்தெடுத்துவிட்ட பாவம் அவனது முகத்தில் வந்தமர்ந்தது.

அப்போதுதான் ஹர்ஷூவின் மொபைல் காரில் அவளது ஹேண்ட்பேக்கில் இருப்பதை உணர்ந்தவன் இதுவரை எத்தனை முறை அவளது தாயும் தந்தையும் அழைத்திருப்பார்களோ என எண்ணிக்கொண்ததோடு, நிஷாந்த் கூறியது போல டேப்லட்ஸ் எதுவும் உள்ளதா எனவும் பார்க்க நினைத்து,

“நர்ஸ் ஒரு ஃபைவ் மினிட்ஸ். நான் வெளில போய்ட்டு வந்திடறேன். இங்க பார்க்கிங் வரை தான்...” என கூறிவிட்டு வெளியேறினான்.
அவன் சென்ற சில நொடிகளில் டாக்டர் கௌசல்யாவிடமிருந்து நர்ஸ்க்கு அழைப்பு வரவும் பக்கத்தில் தானே வந்துவிடுவோம் என அவரும் வெளியேற அந்த சமயம் பார்த்து தனித்து விடப்பட்ட ஹர்ஷூ கண் விழித்தாள்.

அறையை சுற்றி பார்க்கவுமே அவளுக்கு புரிந்தது தான் இருக்கும் இடம். ஹோட்டலில் நடந்தது அனைத்தும் நியாபக அடுக்கில் வலம்வர தலை விண்ணென்று வலியில் தெறித்தது. மெல்ல எழுந்தமர முயன்றவள் உட்கார முடியாமல் சாய்ந்து அமர்ந்துகொண்டாள்.

கௌரவ் எங்கே சென்றானோ என கண்களை சுழற்றி அந்த அறையை வட்டமிட அந்நேரம் அறையின் வாசலில் அரவம் ஏற்பட திரும்பியவள் ஒருநொடி முகத்தை சுருக்கி யோசித்து பின் அங்கே நின்றவனை கண்டுகொண்டதில் தெளிந்தாள்.

உள்ளே வந்தவனோ, “துப்பறியும் சாகசராணி எப்படி இருக்கீங்க?...” எள்ளலாக கேட்டவனை துச்சமென பார்த்தவள், “உனக்கெல்லாம் நான் பதில் சொல்லனுமா?...” என்பது போல தோளை குலுக்கி தலையை ஆட்டிவைத்தாள்.

“உன்னோட திமிர் இன்னமும் அடங்கலை தானே? பார்த்தாலே தெரியுதே. அதுக்கு நானே ஒரு முடிவு கட்டுறேன். உன்னோட விதி உனக்கு முடிவு என் கையாலதான்னு இருக்கு. அதான் நீயே இந்த ஊருக்கு வந்து சேர்ந்ததும் இல்லாம என் பார்வையிலும் விழுந்துட்ட. எங்க உன்னோட பாடிகார்ட்? ஓவரா துள்ளுவானே?...” என நிஷாந்தை பற்றி கேட்டுக்கொண்டே கோவத்தோடு கர்ஜிக்கும் குரலில்,
“என்கிட்ட இருந்து இனிமே உன்னால தப்பிக்கவே முடியாது ஹர்ஹூ. என்னை அத்தனை பேர் முன்னாலயும் அவமானப்படுத்திட்டல. என் வாழ்நாள் முழுமைக்கும் அதை நான் மறக்கவே மாட்டேன். அதுக்கான தண்டனையை நீ நிச்சயமா அனுபவிச்சே ஆகனும்...”

அவனது ஆவேசத்தை கண்டுகொள்ளாமல் பார்வையாலே நீயெல்லாம் எனக்கு வெறும் தூசு என்பது போல அலட்சியப்படுத்த அதில் இன்னும் ஆத்திரமடைந்தவன்,


“என்ன நான் சொல்றதை செய்யமாட்டேன்னு நினைப்பா? இப்போதில இருந்து உன்னோட கௌன்டவ்ன் ஸ்டார்ட் ஹர்ஷூ. இனி நீ வாழப்போற நாட்கள் நரகம்...” என வெறித்தனமான குரலில் பேசியவனை வாயை மூடு என்பது போல சைகை செய்து வெளியே செல்லுமாறு அறையின் வாசலை நோக்கி கையை காண்பித்தாள் ஹர்ஷூ.

“உனக்கு இனிமேதான் என்னோட சுயரூபம் தெரிய போகுது...” எப்படியாவது தன்னை அவளுக்கு நிரூபித்து அவளது முகத்தில் துளியளவு அச்சத்தையாவது பார்த்துவிடவேண்டும் என்ற ஆசையோடு வந்தவனுக்கு அது நிராசையாகிவிட்டது.

அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாததோடு, இப்போதைய ஹர்ஷூவின் கண்டுகொள்ளா தன்மையும், தான் பேசி பேச்சிற்கு பதில் கூட சொல்லாமல் வெளியேற சைகையில் கூறியதையும் அவனால் தாங்கவே முடியவில்லை. இன்னுமின்னும் அவளின் மேல் தீர பகையை வளர்த்துக்கொண்டு அவனது வலதுகாலை நன்கு உதைத்தவாறே ஆத்திரத்தோடு வெளியேறிவிட்டான்.

அவன் சென்றதும் கௌரவ்வை இன்னும் காணலையே என்ற நினைப்பிலேயே ஒருவித சோர்வு ஏற்பட கண்களை மூட்டி அப்படியே சாய்ந்திருந்தாள்.
பார்க்கிங்க்கு வந்த ஷக்தி காரில் இருந்த ஹர்ஷூவின் ஹேண்ட்பேக்கை ஆராய்ந்தான். அவளது போன் சார்ஜை இழந்து உயிர்விட்டிருந்தது. நல்லதற்கு தான். எதுவாகினும் என்னையே தொடர்புகொள்ளட்டும் என்று நினைத்து விட்டு மேலும் அதை குடையும் போது நிஷாந்த் கூறியது போல சில மாத்திரை அட்டைகள் இருந்தன.

அது எதற்கானது என தெரிந்துகொள்ள அனைத்தையும் எடுத்துக்கொண்டு டாக்டர் கௌசல்யா அறையை நோக்கி விரைந்தான். ஏனோ அவனுக்கு குப்பென வியர்த்திருந்தது, ஹர்ஷூவிற்கு பெரிதாக எதுவும் இருக்குமோ என பயந்தான்.

டாக்டரின் அறைக்கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழையவும், “வாங்க ஷக்தி ஏதாவது கேட்கனுமா?...” என்றவரிடம் அந்த மாத்திரை அட்டைகளை நீட்டினான்.

அதை வாங்கி பார்த்தவர், “அடடே நர்ஸ் அதுக்குள்ளே உங்ககிட்ட குடுத்து நீங்க வாங்கிட்டு வந்திட்டீங்களா? வெரிகுட் ஷக்தி...” என்றவரை குழப்பமாக பார்த்தவன்,
“டாக்டர் இது என்னோட வொய்ப் ஹேண்ட்பேக்ல இருந்த டேப்லட்ஸ். இது என்னனு தெரிஞ்சுக்கத்தான் உங்ககிட்ட காண்பிக்க எடுத்து வந்தேன்...”

“மை குட்னஸ். ஷக்தி, இந்த டேப்லட்ஸ் ஹர்ஷிவ்தா முன்னாடியே எடுத்திட்டு இருக்காங்களா? ஏன் உங்களுக்கு முன்னாலயே இது தெரியலையா?...”

பொறுமையை இழந்தவன், “டாக்டர் ப்ளீஸ். இது எதுக்கான மாத்திரை? அவ இதை ஹேண்ட்பேக்லையே வச்சிருந்தா. அதான் தெரிஞ்சுக்க கேட்டேன்...” என படபடப்பாய் கேட்டவனிடம்,

“உங்க வொய்ப்க்கு இப்போ நான் ப்ரிஷ்க்ரிப்ஷன்ல இந்த டேப்லட்ஸ் தான் எழுதியிருக்கேன் ஷக்தி. இந்த மாத்திரைகள் அவங்களை அதிகமா உணர்ச்சிவசப்பட விடாம தடுக்கிறதுக்குத்தான்...”

“இதை தினமும் சாப்பிடமாட்டாங்க. எப்போதாவது ரெஸ்ட்லெஸா ஃபீல் பண்ணும் போது அவங்களுக்கு தலை வலிக்கிறது போல சிம்டம்ஸ் காட்டும். அப்போவே இதை சாப்பிட்டுட்டாங்கனா இப்படி ஒரு ஆழ்ந்த மயக்கத்துக்கு போக வாய்ப்பிருக்காது. அவங்களால அவங்களை கண்ட்ரோல் செய்துக்க முடியும்...”

இன்னும் சிலபல விளக்கங்களை கொடுத்து அவனை தேற்றி அனுப்பிவைத்தார் கௌசல்யா.

ஷக்திக்கு தெரியாத ஒன்று, இன்று காலையிலிருந்து ஹர்ஷூவிற்கு ராமன் மகள் மீனுவின் திருமணத்தை பற்றிய குழப்பங்களால் விளைந்தது இந்த மன அமைதியில்லாமை. அதன் வாயிலாக மாலை ஹோட்டலில் நடந்த சம்பவங்களும் என அனைத்தும் அவளை பெரிதும் பாதித்துவிட்டது என்பது.

ஹர்ஷூ கண்விழித்துவிட்டதை அறிந்த ஷக்தி அவளை பார்க்க சென்றால் அதற்குள் நர்ஸ் இன்னுமொரு இன்ஜெக்ஷனை அவளுக்கு செலுத்திய காரணத்தால் தூக்கத்திற்குள் அடைபட்டிருந்தாள். ஆனாலும் அவளது உள்மனம் கௌரவிற்காக விழித்தே இருந்தது.

அவன் வந்து ஆறுதலாக அவளது கைகளை பற்றவும் அவனது தொடுகையை உணர்ந்தவள் இறுக்கி பிடித்துக்கொண்டு, “கௌரவ்........... என்னை விட்டுட்டு எங்கேயும் போய்டாத. நான் உன்னை மிஸ் பண்ண மாட்டேன் கௌரவ்...” என முணுமுணுத்துக்கொண்டாள். அவளது கரத்தில் தன் இதழ்களை பதித்தவன்,

“நானும் உன்னை மிஸ் பண்ணவே மாட்டேன் ஹர்ஷூ. ஐ லவ் யூ. ஐ லவ் யூடா ஹர்ஷூ. ஐ லவ் யூடா தேனு. ஐ லவ் யூ சோ மச்...” என இன்னும் இன்னும் ஐ லவ் யூ என்னும் வார்த்தையை மந்திரம் போல விடாமல் ஜெபித்துக்கொண்டிருந்தன அவனது அதரங்கள்.
அடுத்தநாள் விடிந்ததும் ஒரு செக்கப் செய்துவிட்டு ஹர்ஷூவை டிசார்ஜ் செய்த கௌசல்யா ஷக்தியிடம்,

“ஷக்தி நீங்க உங்க வொய்ப்கிட்ட இப்போ எந்த விளக்கமும் கேட்க வேண்டாம். அவங்களுக்கு ஓவர் ப்ரெஷர் குடுக்க வேண்டாம். அவங்களா மனசு விட்டு சொல்லட்டும். இப்போதைக்கு அதுதான் நல்லது அவங்களுக்கு...” என எடுத்துரைத்து விட்டு அனுப்பிவைத்தார்.
வீட்டிற்கு வந்தபின் அடுத்த இரண்டு நாட்களும் ஷக்தி ஹர்ஷூவுடன் சரிவர முகம் கொடுத்து பேசவில்லை. ஹர்ஷூவாகவே ஏதாவது கேட்டாலும் ஓரிரு வார்த்தைகளுக்கு மட்டும் பதிலளித்துவிட்டு அகன்றுவிடுவான்.

இவனது இந்த ஒதுக்கம் அவளினுள் அப்படி ஒரு சோர்வை ஏற்படுத்தியது. அவனுக்காக தன் நிலையை விட்டு இறங்கி அவனை சமாதானம் செய்தும் பார்த்தாள். தனக்கு பழக்கமில்லாத கெஞ்சலில் கூட இறங்கினாள். எதற்கும் ஷக்தி அசைந்துகொடுக்கவில்லை.
ஹோட்டலில் தான் நடந்துகொண்டதால் உண்டான கோபமென்று தான் அவள் நினைத்தாள். அவனோ தன்னிடம் எதையும் பகிராமல் அவளுக்குள்ளேயே புதைக்கிறாளே என்று எண்ணி தவித்தான். இப்போதிருக்கும் நிலையில் அவளிடம் நிச்சயமாக சகஜமான முறையில் பேச தன்னால் முடியாது என்றுதான் தள்ளி நின்றான்.

அவனுக்கும் அது வலிதான். ஆனாலும் அந்த வலியை போக்கும் வழி தான் அவனுக்கு புலப்படவில்லை. தான் பேசாமல் இருந்தாலாவது அவளிடம் ஏதாவது மாற்றம் ஏற்படுமா என்று பார்த்தான்.

வீட்டில் இருந்தால் நிச்சயம் மனம் மாறி ஹர்ஷூவிடம் தன்னையும் அறியாமல் பேசிவிடுவோமோ என அஞ்சினான். புருஷோத்தமன், அன்னம்மாவின் பாதுகாப்பில் ஹர்ஷூவை ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்ல ஆரம்பித்தான்.

ஷக்தி எண்ணியது போல அலுவலகத்தில் வில்லியம்ஸ் ஹோட்டலில் நடந்ததை பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அதனால் அங்கே விளக்கம் எதுவும் கொடுத்த தேவையில்லை என்பதே ஷக்திக்கு பெரிய ஆறுதலாக போய்விட்டது.

ஆனாலும் அந்த ராபர்ட்டை அப்படியே விட மனமில்லை. என்றாவது சிக்கட்டும் என தகுந்த நேரத்திற்கு காத்திருந்தான்.
மூன்றாவது நாள் மாலை அலுவலகத்தை விட்டு கிளம்பும் வேளையில் தன் காலேஜ் மேட் சேகர் அழைத்திருந்தான். திருமணத்திற்கு வந்தவன் அதன் பின் இன்றுதான் அழைக்கிறான்.

அவனின் அழைப்பை ஏற்றதும், “டேய் ஷக்தி, மச்சான் நான் சேகர் பேசறேன்டா...”
“தெரியுதுடா, சொல்லு. என்ன திடீர்னு. காரணமில்லாம கூப்பிடமாட்டியே? என்னடா விஷயம்?...” என காரை கிளப்பிக்கொண்டே கேட்க,
“டேய் சிஸ்டர் ****** ஹோட்டலுக்கு வந்திருக்காங்கடா. அதுவும் கேமராவோட. இங்க ஒரு பெரிய பிரச்சனை வேற ஆகிடுச்சு. கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வாடா...” என பதட்டத்தோடு சேகர் கூறிமுடித்து போனை அணைக்கவும் ஷக்திக்கு எங்காவது போய் முட்டிக்கொள்ளலாம் போல ஆகிவிட்டது.

“யார்க்கிட்ட என்ன ஏழரை இழுத்திருக்கிறாளோ? கடவுளே?. அவளுக்கு எந்த பிரச்சனையும் வராம அவளை காப்பாத்து...” என நொந்துகொண்டே அந்த ஹோட்டலை நோக்கி வண்டியை கிளப்பினான்.

அவனது வேண்டுதல் பலிக்குமா? ஹர்ஷூ இப்போது மாட்டியிருக்கும் பிரச்சனையால் இன்னும் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ? அவளை ஹாஸ்பிட்டலில் மிரட்டியவன் அடுத்து என்ன செய்ய போகிறான்?

நதி பாயும்...
 
Top