Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 13.1

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 13 (1)

ஹர்ஷிவ்தாவின் சோர்வடைந்த முகம் அப்படி ஒரு வலியை கொடுத்தது ஷக்திக்கு. மயக்கத்திலும் அவளது முகத்தில் தெரிந்த அலைப்புறுதலும், தவிப்பும் அவளவனுக்கு சொல்லொன்னா வேதனையை அளித்தது என்றால் அது மிகையில்லை.

ஹோட்டலில் இருந்து எப்படி ஹாஸ்பிட்டல் வந்து சேர்ந்தான் என அவனுக்கே தெரியவில்லை. அந்தளவிற்கு வேகமாக விரைந்து வந்தவன் தனது தாய் துர்கா உயிரோடிருக்கும் போது சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த லேடி டாக்டரை அணுகினான். அவரும் அவனுக்கு ஆறுதல் கூறிவிட்டு சிகிச்சையை ஆரம்பித்தார்.

ஹர்ஷூவை அட்மிட் செய்திருந்த அறையின் வாயிலில் இங்குமங்குமாக நடந்துகொண்டிருந்தவன் மனம் அப்படி ஒரு குழப்பத்தில் இருந்தது. மீண்டும் மீண்டும் ஆகாஷின் பெயரும், அதை ஹர்ஷிவ்தா வெறித்தனமாக உச்சரித்த விதமும் பயங்கர மனஉளைச்சலை ஏற்படுத்தியது.

ஹர்ஷிவ்தாவிற்கும் அந்த முகம் தெரியாத ஆகாஷிற்கும் என்ன சம்பந்தம்? அவனை கொலையே செய்துவிடும் அளவிற்கு அப்படி என்ன பகை தன் மனைவிக்கு இருக்கக்கூடும்? அவன் யார்? இப்போது எங்கே இருக்கிறான்? என பல்வேறு கேள்விகள் அவனது மூளைக்குள் நுழைந்து சிந்திக்க சிந்திக்க விடை தெரியா கேள்விகளால் தலையே வெடித்துவிடும் போல தோன்றியது ஷக்திக்கு.

முன்பே அவளிடமோ இல்லை நிஷாந்திடமோ இதை பற்றி கேட்டிருக்க வேண்டுமோ என்ற ஒரு எண்ணமும் அவனுள் வந்து போனது.
நிஷாந்தாவது தன்னிடம் சொல்லியிருக்கலாமே என ஆற்றாமையோடு நினைத்துக்கொண்டிருக்க அவனது எண்ணத்தின் நாயகனே அவனது மொபைலுக்கு அழைத்தான். அவனது அழைப்பிற்கு காது கொடுத்ததும்,

“அத்தான் பார்ட்டியெல்லாம் எப்படி முடிஞ்சது? ஹரி என்ன பன்றா? அவளோட போன் ரீச் ஆகலை. கிளம்பு போதே பரணிம்மாவை டென்ஷன் ஆக்கிருக்கா. இங்க ஒரே புலம்பல் அவங்க. அதான் பார்ட்டி முடியவும் ரெண்டு திட்டு திட்டலாம்னு கூப்பிட்டேன். அவகிட்ட கொஞ்சம் போனை குடுங்க. பேசனும்...” ஷக்திக்கு பேச இடம் கொடுக்காமல் அவனே பேச,

“நிஷாந்த் ஹர்ஷிவ்தா பேசற நிலமையில இல்லை இப்போ. நாங்க ஹாஸ்பிட்டல்ல இருக்கோம். அவளுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. அவ எழுந்துக்கவும் பேசு...”

அப்போதிருந்த மனநிலையில் ஷக்தி நிஷாந்திடம் இயல்பாக பேசமுடியாமல் ஒட்டாத தன்மையில் பேசி வைத்தான். அவனது குரலில் இருந்த பேதத்தில் துணுக்குற்றான் நிஷாந்த்.

அதைவிட ஹர்ஷூவிற்கு உடல்நிலை சரியில்லை என்ற வார்த்தை அவனை கலவரமாக்கியது. அவளது நலனை தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என ஷக்தியின் ஒதுக்கத்தை பொருட்படுத்தாமல் ஒதுக்கியவன்,

“அத்தான் என்னாச்சு? ஹரி நல்லா தானே இருக்கா? மத்யானம் கூட பேசினா அத்தான். என்னாச்சு? ஹோட்டல்ல ஃபுட் எதுவும் அவளுக்கு ஒத்துக்காததை சாப்பிட்டாளா?...” என ஷக்தியை கேள்விகளால் திணறடித்தான் நிஷாந்த்.

“ஹோட்டல்ல ஒருத்தன் ஹர்ஷூவை வழிமறிச்சு கன்னாபின்னான்னு கொஞ்சம் பேசிட்டான். அதுல அவ டென்ஷன் ஆகி அவனை அடிச்சிட்டு திடீர்னு மயக்கம் ஆகிட்டா நிஷாந்த். அதான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கேன்...” ஷக்தியின் குரலில் இருந்து நிஷாந்தால் எதையும் யூகிக்கமுடியவில்லை.

நிஷாந்த் இதற்கு என்ன பதில் கூறபோகிறான் என தெரிந்துகொள்வதற்காகவே ஷக்தி அவனிடம் ஓரளவிற்கு நடந்ததை கூறினான். அவனது எண்ணமும் பொய்க்கவிடாமல்,

“வாட்? மயக்கமாகிட்டாளா? அவ வேற எதுவும் சொன்னாளா? அவகிட்ட டேப்லட்ஸ் இருக்குமே அத்தான். அதை அவளுக்கு குடுங்க. அவளோட ஹேண்ட்பேக்ல தான் வச்சிருப்பா. அவ வேற எதுவும் சொன்னாளா?...” என பதட்டத்தில் உளறிக்கொட்ட,
“வேற எதுவும்னா? என்ன சொல்லனும் நிஷாந்த்? நீ என்ன கேட்க வர? தெளிவா கேளு. எந்த டேப்லெட்?...” அப்போது தான் நிஷாந்திற்கு தான் உளறிய விஷயம் மண்டையில் உரைக்க,

“அது ஒண்ணுமில்லை அத்தான். இல்லை அவன் யாருன்னு உங்ககிட்ட எதுவும் சொன்னாளா? அதைத்தான் கேட்க வந்தேன். டேப்லட்... ஹாஸ்பிட்டல மறக்காம டேப்லட்ஸ் எல்லாம் எழுதி வாங்கிடுங்க. அவ ஒழுங்கா சாப்பிட மாட்டா அதுக்குதான்... அவளை பார்த்துக்கோங்க அத்தான்...”

ஷக்தி கேட்ட கேள்விகளுக்கு பதில் பேசவும் முடியாமல் ஹர்ஷூவை பற்றி தெரிந்துகொள்ளவும் முடியாமல் ஒருவித தவிப்பிலேயே கலக்கத்தோடு தொடர்பை நிஷாந்த் துண்டித்ததை ஷக்தியால் உணரமுடிந்தது.

என்ன டேப்லட்? இவனுக்கு நிச்சயம் ஏதோ தெரிந்திருக்கிறது. ஹ்ம் இன்னொரு நாள் இதை பற்றி தாமே பேசிவிடுவோம் என முடிவெடுத்துக்கொண்டவன் அங்கிருந்த இருக்கை ஒன்றில் களைப்பாக அமர்ந்தான். அவனுக்கு தெரியும் நிச்சயம் நிஷாந்த் ஹர்ஷூவின் பெற்றோரிடம் எதுவும் சொல்லமாட்டான் என்று.

சிறிது நேரத்தில் நர்ஸ் வந்து டாக்டர் அழைப்பதாக கூறவும் அறையின் உள்ளே விரைந்தான். அவனது விழிகள் முதலில் மனைவியை அளவெடுத்துகொண்டன. மாலை கிளம்பும் போது எப்படி இருந்தவள், இப்படி வேரறுந்த கொடியாக கிடப்பதை பார்த்து மனம் பதைத்தவன்,
“டாக்டர், என்னோட வொய்ப்க்கு இப்போ எப்டி இருக்கு?. அவளுக்கு மயக்க தெளிஞ்சிடுச்சா?...” அவனின் குரலில் தென்பட்ட தவிப்பை யோசனையுடன் பார்த்த டாக்டர் கௌசல்யா,

“ஷக்தி, அவங்களுக்கு மயக்கம் இன்னும் தெளியலை. ட்ரீட்மென்ட் குடுத்திட்டு இருக்கோம். ஆனா...”

“வாட்?... டாக்டர் என்ன சொல்றீங்க? என்னோட வொய்ப்க்கு என்ன ப்ராப்ளம்? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க டாக்டர்...” குழப்பமும் அதிர்ச்சியும் போட்டிபோட பதட்டமாக வினவினான் ஷக்தி.

“கண்ட்ரோல் யுவர் செல்ப் ஷக்தி. உங்க வொய்ப் தீவிரமான மன அழுத்தத்தால பாதிக்கப்பட்டிருக்காங்க. அதுவும் இப்போ சமீபத்திய நிகழ்வுகளில் இல்லை. சில வருஷங்களாவே இந்த பாதிப்பு அவங்களுக்கு இருந்திருக்கு ஷக்தி...” டாக்டர் கௌசல்யாவின் பேச்சில் மொத்தமாய் உடைந்துபோனான் கௌரவ் ஷக்திவேல்.

“ஷக்தி ப்ளீஸ். நீங்களே உடைஞ்சு போய்ட்டா அவங்களை எப்படி சரிப்படுத்த? சரி நான் கேட்கிறதுக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க. உங்க வொய்ப்க்கு இதுக்கு முன்னால இது போல மயக்கம் வந்திருக்கா?. உங்களுக்கு அவங்க ஹெல்த் பத்தி எதாச்சும் தெரியுமா?..” அவரது கேள்வியில் முதலில் யோசனைக்கு சென்றவன் பின் நியாபகம் வந்தவனாக,

“ஆமாம் டாக்டர். எங்க நிச்சயதார்த்தம் அன்னைக்கு நைட் மயக்கம் வந்திருக்கு. நான் கூட பார்க்க போய்ருந்தேன். ஆனா...” அதற்குமேல் பேசாமல் மௌனம் காத்தான்.

“ஹ்ம்.. கண்டிப்பா அவங்க ஏதோ ஒரு பெரிய பிரச்சனையால பாதிக்கபட்டிருக்காங்க. இன்னை வரைக்கும் அவங்களால அந்த பாதிப்பிலிருந்து வெளிவரவே முடியலை. உண்மையை சொல்லனும்னா அங்க அந்த விஷயத்தை விட்டு வெளி வரவும் விரும்பலை...”
“அதை அவங்க யாரோடையும் பகிராமல் மனசுக்குள்ளயே போட்டு அடைக்க அடைக்க அந்த பாதிப்பு அவங்களோட கண்ட்ரோலை மீறி வெளியே வரும் போது இயல்பான வாழ்க்கை வாழ முடியாம அவங்க நிம்மதி பறிக்கப்பட்டு மன அழுத்தம் அவங்க பொழுதுகளை ஆக்ரமிக்க ஆரம்பிச்சுடும். இதை இப்படியே நீட்டிக்க விடக்கூடாது...”

“டாக்டர் அப்போ என்னோட ஹர்ஷூ?...” அதற்குமேல் பேசமுடியாமல் தொண்டையடைக்க கண்கலங்க அமர்ந்திருந்த அவனது நிலை கௌசல்யாவிற்கே பரிதாபத்தை ஏற்படுத்தியது.

“மனசை தளரவிடக்கூடாது. இதுல இருந்து அவங்களை மீட்க நிச்சயம் உங்களால உங்க காதலால முடியும்னு நம்புங்க ஷக்தி. நீங்க அவங்க மேல காட்டுற அக்கறையும் கரிசனமும் ஆத்மார்த்தமான அன்பும் தான் அவங்களை முழுசா இந்த பாதிப்பிலிருந்து வெளிவர உதவியா இருக்கும்...”

கொஞ்சம் தயங்கிய கௌசல்யா, “தைரியமா நீங்க இருக்க வேண்டிய நேரம் இது. தென் ஷக்தி, இது க்யூர் பண்ணகூடிய அளவில தான் இருக்கு. நீங்க உங்க மனைவி மேல நம்பிக்கை வைங்க. எந்த சூழ்நிலையிலும் அவங்களை அவாய்ட் பன்ற மாதிரி எப்போவும் நடந்துக்காதீங்க. இந்த விஷயத்தை பாயின்ட்டா வச்சு அவங்களை நீங்க வெறுத்திடகூடாது...”

“என் ஹர்ஷூவை நான் வெறுப்பதா? அது என் கனவிலும் நான் நினைக்காத ஒன்று டாக்டர். அவள் எப்படி இருந்தாலும் அவளோடு தான் என் வாழ்வு. இதில் எந்தவிதமான சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்...” உறுதியாக கூறியவனை பார்த்து புன்னகைத்த கௌசல்யா,

“துர்காவின் வளர்ப்பாச்சே. தவறாகிவிடுமா என்ன? எனக்கு தெரியும் ஷக்தி. இருந்தாலும் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை இல்லையா?... ஓகே, இன்னைக்கு நைட் அப்சர்வேஷன்ல இருக்கட்டும். நாளைக்கு மறுபடியும் ஓரலா செக் பண்ணிட்டு வீட்டுக்கு போகலாம். டேக் கேர் ஷக்தி...” என விடைபெற்று கௌசல்யா வெளியேறிவிட்டார்.

அவர் சென்றதும் ஹர்ஷூவின் அருகில் வந்தமர்ந்தவன் அவளது கரத்தை எடுத்து வருடிக்கொண்டே,
“உனக்கு என்னடா பிரச்சனை தேனு? எனக்கிட்ட கூட சொல்லாம மறைக்கிற அளவுக்கு. என்னவா இருந்தாலும் எனக்கிட்ட சொல்லிடு.
மனசுக்குள்ளயே வச்சு மருகிட்டு இருக்காதே. சொன்னா நான் உன்னை புரிஞ்சுக்காம போய்டுவேனா?. உன்னை எந்த ஒரு சூழ்நிலையிலும் விட்டுகுடுக்காம இருக்கத்தானே உன்னை பத்தி முழுதாக தெரிந்துகொள்ளாமலே பிடிவாதம் பிடித்து அவசரமா உன்னை கல்யாணம் செய்துக்கிட்டேன்...”

அதை சொல்லும் போதே அடிக்கடி ஹர்ஷூ சொல்லும் வார்த்தை நியாபகத்திற்கு வந்து அவனது முகத்தில் ஒரு இலகு தன்மையை தோற்றுவித்தது.
 
Top