Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 11.2

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 11 (2)

மனமோ, “அவனை பார்க்காத, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல இப்படியா பார்த்து வைப்ப? இதிலேயே கண்டுபிடிச்சு தொலச்சிடுவான். உன்னோட இமேஜ் போய்டும். அடங்குடி...” என மீண்டும் மீண்டும் அவளது தலையில் தட்ட தன் கண்களை வலிய திருப்பி வேறு பக்கம் பார்த்தாள்.

ஆனால் அந்தோ பரிதாபம். சிலநொடிகளே இது நிகழ்ந்தாலும் அதற்குள் அவளது கள்ளத்தனத்தையும், விழியகலாமல் அவனை ரசித்ததையும் அவளது உள்ளங்கவர் கள்வன் கண்டுகொண்டானே?

ஹர்ஷூவின் பொறுமை பறக்க, “இன்னும் எவ்வளோ நேரம் தான் இப்படியே நின்னுட்டு இருக்க போறீங்க கௌரவ்?...” கேட்டுகொண்டிருக்கும் போதே பரணியிடமிருந்து ஷக்திக்கு கால் வந்தது.

“ஹர்ஷூ அத்தை கூப்பிடறாங்கடா, பேசு...” மொபைலை கையில் கொடுக்க எத்தனிக்க எதற்கு அழைக்கிறார்கள் என்று தெரியாதா ஹர்ஷூவிற்கு.

திருதிருவென முழித்தவள் இப்போது கணவனின் மேலுள்ள கோவத்தை எங்கே தாயிடம் காட்டிவிடுவோமே என எண்ணி, “நீங்களே பேசிடுங்க, நான் கார்ல வெய்ட் பன்றேன்...” அவனது பதிலை கூட எதிர்பார்க்காமல் வாசலை நோக்கி ஓட அவளின் எண்ணம் புரியாதவனா ஷக்தி? சிரித்துக்கொண்டே பரணியிடம் பேச ஆரம்பித்தான்.

“சொல்லுங்க அத்தை...”

“மாப்பிள்ளை நான் ஹர்ஷூவை புடவை கட்ட சொன்னா அவ சுடிதார் போட்டு போட்டோ எடுத்து அனுப்பிருக்கா. அவக்கிட்ட போனை குடுங்க பேசனும். போன் பண்ணினா ரிங் போய்ட்டே இருக்கு அவளுக்கு. அட்டென் செய்யமாட்டேன்றா. நீங்க கொஞ்சம் அவளை கூப்பிடுங்க...” படபடப்பான குரலில் பேசினார் பரணி.

இதுவேற பண்ணிருக்காளா? இவளை என்னதான் செய்யறது? சுடிதார் போட்டா பேசாம இருக்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு அவங்களுக்கு போட்டோ வேற எடுத்து அனுப்பி அவங்களையும் டென்ஷன் ஆக்கிட்டாளே? இப்போ இவங்களை வேற சமாளிக்கனுமே?
“அத்தை நான்தான் புடவை வேண்டாம்னு சொன்னேன். இது ஒன்னும் பெரிய பங்க்ஷன் இல்லியே? சும்மா என்னோட ப்ரெண்ட்ஸ், ஆபீஸ் ஸ்டாப்ஸ் மட்டும் தான். அதனால எதுக்குன்னு தான் சுட்டிதான் போட்டுக்க சொன்னேன். அவளுக்கும் கொஞ்சம் ப்ரீயா இருக்கும். அதான்...”

“மாப்பிள்ளை இங்க ஹர்ஷூவோட அப்பா பார்த்த வேலையை அங்க நீங்க கண்டினியூ பன்றீங்க. நல்லாவே தெரியுது. ஆனாலும் ஹர்ஷூவை கொஞ்சம் கண்டிச்சு கண்ட்ரோல்ல வச்சுக்கோங்க மாப்பிள்ளை. அதுதான் உங்களுக்கு நல்லது...”

தன் மகளை கண்டிக்க சொன்ன பரணியே பின்னோர் நேரத்தில் ஷக்தி கண்டிப்போடு ஹர்ஷூவை கைநீட்டி அடித்த பொழுது பொங்கி எழுந்து அவனை எதிர்த்து நின்றார்.

விதியின் விளையாட்டில் அனைவரும் கைபொம்மைகளே. சூழ்நிலை தான் ஒருவனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் தீர்மானிக்கிறது. யார் எப்போது மாறுவார்கள் என யாருக்கும் அறியாத ரகசியம். மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுதான் எத்தனை பெரிய உண்மை.

பரணியிடம் சிரித்து மழுப்பியவன், “பரவாயில்லை அத்தை, கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்கன்னு சொல்ல மாட்டேன். நீங்க இதை சொல்லாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். ஹர்ஷூவை இந்தளவிற்கு நீங்க தெரிஞ்சு வச்சதோடு எப்போ என்ன செய்வான்னும் உங்களுக்கு புரியுது. ஓகே நாங்க கிளம்பறோம் அத்தை. வந்ததும் ஹர்ஷூவே பேசுவா உங்கக்கிட்ட. நீங்க கவலைபடவேண்டாம்...”

பரணியிடம் பேசிவிட்டு அண்ணாவிடம் ஒரு வர்ர்த்தை சொல்லிவிட்டு காரை நோக்கி நடந்தவன், “சண்டிராணி ஏற்கனவே செம காண்டுல இருக்கா. நீ வேற ஓவரா பன்றடா ஷக்தி. போய் சமாதனம் செய். இல்லைனா நேரம் ஆக ஆக ஓவர் கடுப்புல ஹோட்டல்ல அத்தனை பேர் முன்னால அறைதான் வாங்குவ...” என நினைத்து சிரித்துக்கொண்டே காரை ஸ்டார்ட் செய்து கேட்டை விட்டு வெளியேறினான்.

அவனை பார்த்து முறைப்பதும், பின் ரோட்டை கவனிப்பதுமாக இருந்த ஹர்ஷூவின் பிபி நிமிடத்திற்கு நிமிடம் எகிறிக்குதித்தது. கோபவெள்ளம் கரையுடைக்கும் நேரத்தில்,

“என்னாச்சு ஹர்ஷூ? ரொம்ப கோவமா இருக்க போல?...” இலகுவாகவே கேட்டான் ஷக்தி. அதற்கு கிடைத்த பதிலோ மிகவும் சூடாக இருந்தது.

“நான் எப்படி இருந்தா உங்களுக்கென்ன?. உங்க வேலையை பாருங்க...”

“உனக்கு என்ன கோபம்னு நான் சொல்லவா?...”

கண்டுபிடிச்சிருப்பானோ? கொஞ்சம் பதட்டத்தோடு, “எ...எ...என்ன, என்ன தெரியும் உ....உங்களுக்கு?...”

“தெரியும், நீ ரொம்ப அழகா இருக்கன்னு தெரியும். இந்த கலர் உனக்கு ரொம்ப ரொம்ப பொருத்தமா இருக்குன்னும் எனக்கு தெரியும். இந்த ட்ரெஸ்க்கு மேட்சா போட்ருக்கிற வொய்ட்ஸ்டோன் ட்ராப்ஸ், சிம்பிளா ப்ரேஸ்லெட், எல்லாமே எல்லாமே உனக்கு ரொம்ப ஆஃப்ட்டா இருக்குன்னு தெரியும். நீ ரொம்ப ரொம்ப க்யூட்னும் தெரியும்...”

“அதை விட உன்னோட புருஷன் கௌரவ் உன்னை கவனிக்கலைன்ற கோவமா இருந்ததும் தெரியும். அதை அவன் இப்போ கண்டுபிடிச்சுட்டான்ற பதட்டத்தில் உனக்கு குட்டி குட்டியா வேர்த்துருக்கு பாரு, அந்த வேர்வையில நீ நெற்றி வகிட்டில வச்சிருக்கிற குங்குமம் கொஞ்சமா கரைய ஆரம்பிச்சிருக்கிறது இன்னும் அழகா இருக்கு...” அவளின் வேர்வையை கைக்குட்டையால் ஒற்றிக்கொண்டே கூற அவனது பேச்சுக்கள் ஒன்றும் ஐஸ்க்ரீமாக நெஞ்சத்தில் ஜில்லென்ற ஒரு இதத்தை பரப்பியது.
இந்தளவு தன்னை கவனித்திருக்கின்றானா? ஆக இவன் வேண்டுமென்றே தன்னை கவனியாதது போல இருந்திருக்கிறான் என எண்ணிக்கொண்டே,

“நான் ஒன்னும் உன்னை, உன்னோட இந்த சொற்பொழிவை எதிர்பார்க்கலை. நீயா கற்பனை பண்ணிக்கிட்டா சோ சேட் கௌரவ்...” என உதட்டை பிதுக்கி தோளை குலுக்கி,

“நீ எனக்கு இத்தனை காம்ப்ளிமென்ட் கொடுத்த அதுக்கு பதிலா கௌரவ் நீ ரொம்ப ஸ்மார்ட். ஹேண்ட்ஸம்மா இருக்க அப்டின்னு சொல்லுவேன்னு மட்டும் எதிர்பார்க்காத...” என தானே வாயைகொடுத்து மாட்டிகொண்டாள்.

“ஆமாம்டா தேனு, ஹால்ல வச்சு நீ என்னை பார்த்து ஸ்டர்ன் ஆகவே இல்லை. என்னை பத்தி எதுவுமே நினைக்கலை. என்னை மெய்மறந்து ரசிக்கவும் இல்லைடா தேனு. ஐ ஆம் ரைட்?...” கண்சிமிட்டி கேட்டவனிடம் அசடு வழிவதை தவிர வேறு வழியில்லாமல் போனது ஹர்ஷூவிற்கு.

“அப்போ என்னை இப்படியெல்லாம் நீ சைட்டடிச்சிட்டு ஒண்ணுமே தெரியாதவனாட்டம் இருந்திருக்க? இப்போ சொன்னதை வீட்லையே ஏன் சொல்லலை நீ? ...” இப்படி அவனிடம் சிக்கிகொண்டோமென்பதை எண்ணி அவனிடம் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.
“அப்போவே சொல்லலைன்னு இவ்வளோ கோவமா? இல்லை இப்போ உன்னை கண்டுபிடிச்சிட்டேன்னு கோவமா?...”
“ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. ஆமா இவ்வளோ டீக்கா ட்ரெஸ் பண்ணிட்டு வரையே? அங்க நிறைய பொண்ணுங்க வராங்கன்னு தானே?...”

“ஹ்ம் என்னோட அருமையும் அழகும் உன்னோட கண்ணுக்கு படலை. பார்க்கிறவங்களாச்சும் என் அழகை புகழ்ந்து பாடட்டுமே...”
“வாய் இருந்தாதானே பாடறதுக்கு?...”

“வாட் வாட் யூ மீன்? கம் அகைன்?...”

ஹ்ம் பல்லை தட்டி கைல குடுத்திடுவேன்னு சொன்னேன். இன்னும் தெளிவா சொல்லனும்னா ஹோட்டல்ல எவளாச்சும் உன்னை புகழவோ, இல்லை ஜொள்ளவோ செஞ்சா யோசிக்கவே மாட்டேன். பளார்னு அறைதான். பார்த்த அவளுக்கும், அவ பார்க்கிறது போல இருக்கிற உனக்கும். இப்போ புரிஞ்சதா?...”

“அடிப்பாவி, அவ பார்த்தா நான் என்ன செய்ய?...” என கொஞ்சம் மிரண்ட தொனியில் தான் கேட்டான். பின்னே தன்னவளை பற்றி அறியாதவனா ஷக்தி?

“அப்போ பார்க்கிற ஆளும் இந்த பார்ட்டியில இருப்பாங்கன்னு சொல்ற. அப்போ அடி கன்ஃபார்ம் தான். ஒழுங்கா அடக்க ஒடுக்கமா நல்ல பையனா ம்ஹூம் எனக்கு நல்ல புருஷனா நடந்துக்கோ. புரிஞ்சதா?...” ஹர்ஷூ சுட்டுவிரல் நீட்டி அவனை கண்டித்துகொண்டிருக்கும் போதே அவர்களது வாகனம் ஹோட்டல் பார்க்கிங்கை அடைந்துவிட்டது.

முதலில் ஹர்ஷூ இறங்கி முன்னே சென்று சற்று தள்ளி நின்றுகொண்டாள் காரை பார்க் செய்துவிட்டு ஷக்தி வரட்டுமென்று. யாரோ தன்னையே உற்று நோக்குவதாக உள்ளுணர்வு தெரிவிக்க திரும்பி பார்த்தாள் ஹர்ஷூ.

அங்கே யாரோ ஒருவன் இவளையே நோட்டம் விடுவதை உணர்ந்து அவனை நோக்கி முறைத்துக்க அதற்குள் ஷக்தி வந்துவிட அவனோடு உள்ளே செல்ல ஆரம்பித்தாள்.

முதல் தளத்தில் இவர்களுக்கான பார்ட்டி ஹால் தயாராக இருக்க அங்கே ஷக்தியின் நண்பன் உமாமகேஷ்வரன் அனைத்தும் சரியாக இருக்கிறதா என் மேர்பார்வையிட்டு கொண்டிருந்தான். கெஸ்ட் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வர ஆரம்பித்தனர்.

ஒவ்வொருவரும் வந்து தம்பதியருக்கு வாழ்த்தை தெரிவிக்க அனைத்தையும் இன்முகத்தோடே ஏற்றுக்கொண்டாள் ஹர்ஷூ. ஆனாலும் ஷக்திக்கு நெஞ்சத்தின் ஓரத்தில் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. ஹர்ஷூ விளையாட்டிற்கு சொன்னாலும் ஏடாகூடமாக எதையாவது செய்துவிடுவாளோ என எண்ணினான்.

அவனது எண்ணமும் பொய்க்காமல் பளாரென்ற சத்தத்தோடு சுபயோக சுப முகூர்த்தத்தில் செவ்வனே நடந்தேறியது. அறைவாங்கியவனை பார்த்து பார்ட்டியில் இருந்த அனைவருமே திகைத்துவிட்டனர்.

நதி பாயும்...
 
:love: :love: :love:

என்ன அடி....... நல்ல வேளை நீ தப்பிச்ச சக்தி.......

அழகா இருந்தா பார்க்கத்தான் செய்வாங்க.......
அதுக்கு ஏன்மா காண்டாகிற.......

இந்த ஹர்ஷுவை வச்சுக்கிட்டு ரொம்ப கஷ்டம் தாண்டா கௌரவ்......
 
Last edited:
Top