Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiye Paainthodu 11.1

Advertisement

AshrafHameedaT

Administrator
நதியோட்டம் – 11 (1)

ஹர்ஷிவ்தா சென்னை வந்து சேர்ந்ததிலிருந்து அந்த வாரம் முழுவதும் ஷக்தியோடு நன்றாக ஊர் சுற்றி திரிந்தவள் அனைத்து இடங்களையும் தன் மனப்பெட்டகத்தில் நியாபகமாக வரைபடமாக செதுக்கிக்கொண்டாள்.

போதாதற்கு புருஷோத்தமன் மருமகள் பக்கத்தில் எங்கேனும் சிரமப்படாமல் செல்ல உதவியாக இருக்குமென்று ஸ்கூட்டி ஒன்றை அவளை அழைத்து சென்று பரிசாக அவளுக்கு வாங்கி கொடுத்துவிட்டார். இது போதாதா அவளுக்கு கொடுக்கு முளைக்க? அவரின் முகத்திற்காக இப்போதைக்கு தன் துப்பறியும் மூளையை கட்டிவைத்து அதிகமாக எங்கயும் செல்லாமல் அடக்கி வாசித்தாள்.
ஆனாலும் சென்னையில் இருந்தாலும் கோவையில் நடக்கும் விஷயங்களை நிஷாந்திற்கும் தெரியாமல் வேறொரு தோழியின் உதவியால் தெரிந்து கொண்டதோடு மீனு திருமண விஷயத்தையும் தெரிந்துகொண்டாள்.

ராமன் இல்லத்திருமணத்திற்கு இன்னும் இரண்டு மாத இடைவெளி இருப்பதை இருப்பதையும் அதில் இன்னொரு முக்கியமான விஷயம் பொதிந்திருப்பதையும் அறிந்தும் கொண்டாள். இவை அனைத்தையுமே நிஷாந்திற்கு தெரியாமல் செய்தாலும் அவனுக்கு இதை பற்றி இன்னும் முழுதாக தெரிந்திருக்கவில்லை என்பதையும் அவனிடம் பேசியதை வைத்து புரிந்துகொண்டாள்.

பண்டமாற்று முறை போல பெண் கொடுத்து பெண் எடுக்கும் இத்திருமணத்தில் அதீத ஆர்வம் காட்டுவது ராமனும் அவரது மகனும் மட்டுமே என்பது ஹர்ஷிவ்தாவிற்கு பெரிய அதிர்ச்சியாக இல்லை. ஏனென்றால் பணத்தை மட்டுமே வைத்து நட்பையும், சொந்தத்தையும் நிர்ணயித்துகொள்ளும் ராமனின் குணம் கோவையில் பெரும்பானவர்கள் அறிந்ததே.

ஆனால் அவரது மகன் எப்படி இதற்கு சம்மதித்தான் என்பதுதான் இவளது குழப்பத்திற்கு காரணம்?
இந்தளவிற்கு மட்டுமே தெரிந்த ஹர்ஷூவிற்கு மாப்பிள்ளை யாரென தெரியும் போது இந்த திருமணத்தை நிறுத்தி மீனுவை காப்பாற்ற தான் இன்னும் தீவிரம் காட்டபோவதை அறியவில்லை. அதனால் விளைய போகும் விபரீதங்களையும் உணரவில்லை.

ஏதோ ஒரு உந்துதல் அவளுக்குள். இதில் கட்டாயம் தலையிட்டே தீரவேண்டும் என உள்மனம் அடித்துக்கொண்டே இருந்தது. இப்போதைக்கும் மாப்பிள்ளை வீட்டை பற்றியும் அவர்களது முகவரியை அறிந்துகொள்ளும் வரை தான் பொறுமை காத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாள்.

இப்போதைக்கு இந்தளவிற்கு தகவல் வருகிறதே என தேற்றிக்கொண்டவள் நிஷாந்தை வசைபாடவும் மறக்கவில்லை. இவ்வளவு நாள் ஆகிற்று இன்னமும் எந்த தகவலையும் அறிய முயற்சி செய்யாமல் இருப்பவனின் மீது கோவத்தில் காய்ந்தாள். போனில் கிடைத்த நேரமெல்லாம் அவனை வாங்கு வாங்கென வாங்கினாள்.

இவளது தொல்லைக்கு பயந்தே நிஷாந்த் உடனடியாக விசாரிக்கிறேன் என உறுதிமொழி கொடுத்தப்பின் தான் கொஞ்சம் நிம்மதியாக முடிந்தது நிஷந்திற்கு. அதற்கான வேலைகளில் இறங்கவும் தயாராகிவிட்டான். ஒருவழியாக நிஷாந்த்தை முடுக்கிவிட்ட பிறகுதான் ஹர்ஷூவிற்கு நிம்மதியாக இருந்தது.

புருஷோத்தமன் இல்லாமல் வீடே வெறிச்சோடி இருந்தது. காலையில் தான் தன் நண்பனின் வீட்டில் விசேஷம் என்றும் மறுநாள் வருவதாகவும் கூறிவிட்டு சென்றார். சமையல் அண்ணாவே செய்துவிடுவதால் ஹர்ஷூக்கும் எந்த ஏழையும் இல்லாமல் போனது. மாலை வரை நேரத்தை எப்படியோ கடத்தினாள்.

இன்று மாலை பார்ட்டி இருப்பதை அலுவலகம் செல்லும் முன்பே நியாபகப்படுத்திவிட்டு தான் சென்றான் ஷக்தி. அதற்கு தயாராக தேவையான அனைத்தையும் எடுத்து வைத்தவள் மொபைலுக்கு அழைப்பு வர அதை பார்த்தவளுக்கு புன்னகை பெரிதாக விரிந்தது.

அழைப்பை ஏற்றவள், “ஐ நோ சு–ன ப–ன, இன்னைக்கு பார்ட்டில நான் எப்டி இருக்கனும்னு சொல்லத்தான் கால் பண்ணியிருக்கீங்க. பட் இட்ஸ் டூ லேட் மேடம். உங்க வேலையை உங்க மருமகப்பிள்ளையே பார்த்துட்டாரு. யார்யார்லாம் வருவாங்க? யாரையும் பட்டுன்னு பேசகூடாது. அங்க இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அமைதியா இருன்னு ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டுக்கிட்டதால கொஞ்சம் யோசிக்கலாம்னு நினைச்சேன். ஆனா இப்டி ஆளாளுக்கு இதையே சொல்ல கிளம்பினா ஹர்ஷூ டென்ஷன் ஆகிடுவா. கேர்ஃபுள் சு – ன ப –ன...” என தன் தாயை வம்பிளுத்தவள் அவரது அமைதியில்,

“வாட் மாம், என்னாச்சு? அதான் சொல்லிட்டேனே. எதுவும் செய்யமாட்டேன். என்னை யாரும் சீண்டாத வரைக்கும் நான் எவ்வளோ நல்ல பொண்ணுன்னு உங்களுக்கே தெரியுமே?...” அந்தபுறம் மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டதும்,

“மா, என்னை ரொம்ப மிஸ் பன்றீங்களா? நானும். நானுமே ரொம்ப ரொம்ப மிஸ் பன்றேன். உங்களோட முறைப்பை, கண்டிப்பை, முக்கியமா நடுஜாமத்தில நீங்க எனக்கு தரும் காபியை. என்னக்கு சப்போர்ட் செஞ்சு அப்பா உங்ககிட்ட வாங்கிக்கட்டும் போது அப்பாவியா ஒரு முழி முழிப்பாரே அந்த நிமிஷத்தை. இப்டி எல்லாத்தையுமே ரொம்ப ரொம்ப மிஸ் பன்றேன். ஐ மிஸ் யூ லாத் மா...” ஹர்ஷூவின் குரல் கொஞ்சம் தளுதளுத்தது.

மகளை தானே சங்கடப்படுத்திவிட்டோமே என வருந்தியவராக, “அதெல்லாம் ஒண்ணுமில்லைடா. நீ சந்தோஷமா இருந்தா அதை விட எங்களுக்கு வேற என்னடா நிம்மதி இருக்கு?...”

“ஓஹ் மாம், ப்ளீஸ் விடுங்க. இப்டி நீங்க பேசறது எனக்கு யாரோ போல தெரியுது. என்னோட மாம் எப்போவும் போல் இருந்தாதான் எனக்கு பிடிக்கும். இல்லைனா யோசிக்காம டைவர்ஸ் தான்...” என தாயை இயல்பாக்கும் விதமாக கலகலத்தவளிடம் பிரிவின் ஏக்கத்தை வெளிப்படுத்தாமல்,

“உன் வாய் இருக்கு பாரு வாய்?...” என வரவழைத்துகொண்ட உற்சாகத்தில் பேச,
“அது அங்கேதான் மா இருக்கு. இதுல உங்களுக்கென்ன சந்தேகம்?...”

“உன் கிட்ட பேசினா நீ வம்பு செய்துட்டே தான் இருப்ப. முதல்ல மாப்பிள்ளை வரதுக்குள்ள கிளம்பற வழியை பாரு. ஆறு மணிக்கு ஹோட்டல்ல இருக்கணும்னு நேத்தே சொன்னேல. இப்போவே ஐந்து மணி ஆச்சு பாரு...” என மகளை விரட்டியவர் கடைசியில் கொசுறாக, “நியாபகமா புடவை கட்டிட்டு போ...” என்ற கட்டளையையும் சொல்லாமல் இல்லை.

அதையெல்லாம் கேட்டுவிட்டால் இந்த உலகம் ஹர்ஷிவ்தாவை பற்றி என்னவென்று எண்ணும்?
பரணியின் பேச்சுக்கு எதிர்மாறாக காலர் வைத்த உயர்ந்த வேலைபாடுகள் மிகுந்த அவளது நிறத்தை நன்கு எடுத்துக்காட்ட கூடிய நேவி ப்ளூ அனார்கலி சுடிதாரில் தயாரானவள் தோள் வரை மட்டுமே புரண்ட கூந்தலை சிறிய கிளிப் மட்டும் கொண்டு அடக்கி விரித்து பரவவிட்டு மிகவும் எளிமையாகவும், யாரின் பார்வையும் உறுத்தும் அளவிற்கு இல்லாமல் அனைவரையும் கவரும் விதத்தில் அழகாகவும் இருந்தாள்.

அத்தோடு சும்மாவும் இல்லாமல் அதை செல்பி எடுத்து வாட்ஸ்ஆப்-பில் தன் தாய்க்கும், நிஷாந்திற்கும் அனுப்பிமுடிக்கும் வேளையில் ஷக்தியும் வந்து சேர்ந்தான்.

அவனின் கண்களில் பாராட்டு இருந்தாலும் அதை வாய்மொழியாக அவளிடம் கூறவில்லை. அது ஒரு பெரும் குறையாகி போனது ஹர்ஷூவிற்கு. அவனிடம் தன் மனம் எதை எதிர்பார்க்கிறது என நினைத்தாலும் இதுவரை,

“தான் இப்படித்தான். உடை விஷயமாகட்டும், மற்ற எதுவாகட்டும், என்னுடைய விருப்பம் போல் தான் இருப்பேன். யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?. பிடித்தால் பேசு. இல்லை என்றாள் எனக்கொன்றும் கவலை இல்லை...” என்பதை கொள்கையோடு இருந்தவள் இன்று தன் விஷயத்தில் கணவனது ரசனையும், பார்வையும் எந்த அளவிற்கு என்பதை அறிந்துகொள்ள முயன்றாள்.
அவனுக்கு இந்த உடை பிடித்திருக்கிறதா? ஏன் எதுவுமே சொல்லவில்லை? அவனது பார்வை என்னை பார்க்கையில் அதில் ஆசையும் காதலும் தெரிந்ததே? பிடிக்கவில்லை என்றாள் அதில் அதிருப்தி தானே தெரிந்திருக்கும் என தனக்குள்ளே குழம்பியவள் அவனிடம் கேட்போமா என் நினைக்கையில்,

“பிடிச்சா என்ன? பிடிக்காட்டி எனக்கென்ன? அவனே வந்து நல்லா இருக்கு, நல்ல இல்லைன்னு சொல்லாதப்போ நீ ஏன் ஹர்ஷூ இதுக்கெல்லாம் வொரி பண்ணிக்கிற? எந்த ட்ரெஸ் போட்டாலும் நீ அழகுதான். பேசாம போய் கௌரவ் வர வரைக்கும் வெய்ட் பண்ணு...” என தலையில் மெதுவாக கொட்டிக்கொண்டு தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தவள் எத்தேர்ச்சையாக வாசல் புறம் திரும்ப அங்கே இவளையே சுவாரசியமாக பார்த்துகொண்டிருந்தான் ஷக்தி.

அவளின் செயல்களை பார்த்து சிரித்துக்கொண்டே நின்றிருந்தவன், “என்னடா ஹர்ஷூ, ரொம்ப டென்ஷனா இருக்க போல?...”
“யார் சொன்னா ரொம்ப ரொம்ப ஜில்லுன்னு கூலா தான் இருக்கேன். உன்னோட பார்வைதான் அப்டி இருக்கு. எதையுமே சரியா பார்க்கிறதும் இல்லை. பேசறதும் இல்லை...” சிடுசிடுப்பாக நொடித்துகொள்ள,

“யப்பா என்னம்மா இப்டி அனல் பறக்குது வார்த்தையிலேயே? ஆமா என்ன சுட்டிதான்? புடவை கட்டலையா? அத்தை உனக்கு புடவையும் சொல்லி அதுக்கான செட் நகையும் சொன்னாங்களே? நான் கூட உங்ககிட்டயே சொல்ல சொன்னேன். சொல்லியாச்சா?...”
“அதெல்லாம் சொன்னாங்க, சொன்னாங்க. ஏன் புடவை கட்டினாத்தான் கூட்டிட்டு போவியா? இல்லைனா வேண்டாமா?...”
இன்னும் தன்னையும், தன் உடையையும் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லலையே? ஆனா இவன் மட்டும் நமக்கு மேட்சா ட்ரெஸ் பண்ணிட்டு வந்து ஸ்மார்ட்டா நிக்கிறானே? அதையும் சொல்ல என் வாய் நமநமன்னு இருக்கே? என என்னும் போதே அவளது மனசாட்சி,

“ஹர்ஷூ வாயை வச்சிக்கிட்டு சும்மா இரு. முதல்ல அவன் நீ எப்டி இருக்கன்னு சொல்லட்டும். அவன் உன்னை பாராட்டினா நீயும் ரெண்டாவது போனா போகுன்ற போற போக்குல நீயும் சொல்லு. இல்லைனா உன் கெத்து என்னாகறது? ஸ்டெடி ஸ்டெடி...” என இடித்துக்கூற உதட்டை அழுந்த மூடிக்கொண்டாள்.

வாயை மூடிக்கொண்டாலும் கண்கள் என்னவோ அவனைத்தான் மொய்த்துகொண்டிருந்தன. எதுவோ எதையோ பார்ப்பது போல விழிவிரித்து பார்த்துகொண்டிருந்தாள்.
 
:love: :love: :love:

ரொம்ப சைட் அடிக்காதம்மா ஹர்ஷு......
கண்ணு பட்டுட போகுது......
நீ ஓவரா build up கொடுக்குறது அவனுக்கு தெரியாதா என்ன?
அதான் வச்சி செய்யுறான்......
 
Last edited:
Top