Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Thadaiyillai Nathiyae Paainthodu 7.2

Advertisement

Admin

Admin
Member
இப்போது ஹர்ஷூவும் ஒரு தெளிவான முடிவோடு, “கௌரவ் இப்போ உங்களோட உரிமையை நீ எடுத்துக்கனும்னு சொன்னா எனக்கு அதில் எந்தவிதமான அப்ஜெக்ஷனும் இல்லை. இப்போவே உங்களோட மனைவியா எல்லா விதத்திலும் நான் மாற தயாரா இருக்கேன். அதுக்கு முன்னால உங்ககிட்ட என்னை தெளிவுபடுத்திக்க விரும்பறேன் கௌரவ்...” எனவும் அவன் படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தான்.

“ஆனா இன்னைக்கு நாம ரெண்டுபேரும் ஒண்ணு சேர்ந்தா அது நிச்சயமா கடமைக்காக, இந்த திருமண பந்தத்தை அங்கீகரிப்பதற்கான கூடலா இருக்கும். நீங்க அதை விரும்ப மாட்டீங்கன்னு நிச்சயம் நம்பறேன்...”

“எனக்குள்ள ஒரு தீ எறிஞ்சிட்டு தான் இருக்கு. அது எப்போ அணையும்ன்னு தெரியலை. அந்த தகிப்பு என்னை விட்டு நீங்காம முழுமனசோட உங்க மேல துளியூண்டு காதல் கூட இல்லாம என்னால ஒன்றமுடியாது...”

“இன்னைக்கே என்னை தெளிவுபடுத்திடறேன். நீங்க என்னை மிரட்டி லாக் பண்ணினதால நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னு நினைச்சீங்களா? அப்டி நினைச்சிருந்தா சாரி. அது உண்மையில்லை. என்னோட விருப்பமில்லாம இந்த கல்யாணம் நடந்திருக்காது...” என பேசியவளை மேலே சொல் என்பது போல பார்த்திருந்தான்.

“கேள்விப்பட்டிருப்பீங்க என்னை பெண் பார்க்க வந்த எத்தனையோ பேரை நான் துரத்தியடிச்சிருக்கேன். பாதிபேர் என்னோட மிரட்டலுக்கு பயந்தும், மீதிபேர் இப்படி ஒரு திமிரெடுத்த பெண் தனக்கு வேண்டாமென்றும், சிலர் என்னோட ஆக்ட்டிவிட்டீஸ் அவங்க குடும்பத்துக்கு ஒத்துவராதுன்னும் வேண்டாம்னு சொல்லிட்டு போய்ட்டாங்க...”

“இவ்வளவு ஏன் பணத்துக்காக என்னை கல்யாணம் பண்ண சம்மதிச்சவங்களும் உண்டு. அவங்ககூட நான் ஒரு பெண்ணே இல்லை அப்டின்னு கடைசி நேரத்துல ஒதுங்கிடுவாங்க. சிலபேர் தியாகம் பன்றேன், எனக்கு வாழ்க்கை குடுக்கறேன் பேர்வழின்னு முன்ன நின்னாங்க. யார்க்கிட்டையும் வாழ்க்கையை பிச்சையா வாங்கற அளவுக்கு எனக்கென்ன குறை? அப்டி நான் ஒன்னும் தரம் தாழ்ந்து போகலையே?...அதுலயும் எனக்கு ரொம்ப கோவம்...”

“ஆண்கள் பலபேர் இப்படி வேஷம் போடறவங்களா தான் எனக்கு அறிமுகமாகிருக்காங்க. சமூகத்துக்காக உண்மையான முகத்தை மறைச்சு போலி திரைக்கு பின்னால ஒளிஞ்சிட்டு நான் நல்லவன்னு எல்லோர் முன்னாலையும் நாடகம் போட்டுட்டு இருக்கிற அந்த ஆம்பளை எனக்கு வேண்டாம்னு நான் நினச்சதில என்ன தப்பு?. அதனால்தான் எல்லோரையும் விரட்டினேன்...”

“இப்படித்தான் இதுவரைக்கும் நான் நினைச்ச எல்லாமே நடந்திட்டு இருந்தது. கல்யாணத்து மேல வெறுப்புன்னு எதுவுமில்லை. எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கானவன்னு வந்தவங்க யாரையுமே நினைக்க தோணலை. நான் சொல்றதுக்கெல்லாம் கேட்டு ஓடத்தான் பார்த்தாங்களே தவிர யாருமே தைரியமா என்னை எதிர்க்கொள்ள நினைக்கலை. அதுக்கு பதிலா எனக்கு பைத்தியம்னு, நான் அப்நார்மல் கேஸ்ன்னு எனக்கு பட்டம் குடுக்க ஆரம்பிச்சாங்க...”

“ஆனா நீங்க கொஞ்சம் எனக்கு வித்யாசமா தெரிஞ்சீங்க. நீங்க எனகிட்ட பேசும்போது எனக்கு கோவம் தான் அதிகமானதே தவிர உங்கமேல எந்தவிதமான ஈர்ப்பும் வரலை. ஆனா கடைசியா சொன்னீங்களே எதுவா இருந்தாலும் என்னோட மனைவி நீதான்னு அது ஏதோ ஒருவகையில என்னை கொஞ்சம் நிதானமா யோசிக்க வச்சது...” அவனை நேருக்கு நேராக பார்த்து,

“உங்களை எனக்கு பிடிச்சது. ஆனா பிடிச்சிருக்குன்ற ஒரு விஷயத்துக்காக நான் உங்களோட தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பிக்க முடியாதில்லையா?...” என்றவளை பார்த்தவனின் முகத்தில் கீற்றுப்புன்னகை தெரியவும் அதில் தன் பழைய கம்பீரத்தை மீட்டெடுத்தவள்,

“ஹலோ சார், ரொம்ப கனவு காண வேண்டாம். எனக்கொண்ணும் பலப் எல்லாம் எரியலை. ஜஸ்ட் அது என்னை இம்ப்ரெஸ் பண்ணுச்சு. அவ்வளோ தான். நானும் எத்தனை பேரைத்தான் விரட்ட. எனக்கே போரடிச்சிடும் போல. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சொல்ற மாதிரி உன் பக்கத்துல இருந்தே உன்னை பழிவாங்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்...” என கூறும் போதே சற்று நேரத்திற்கு முன் பிரகாசத்தை இழந்துவிட்டிருந்த அவளது விழிகள் பழையபடி ஒளிர்ந்தது.

“ஆஹ, நீ என்னை சைட் அடிச்சிருக்க? அப்டித்தானே?...” என குறும்பு கூத்தாடும் விழிகளோடு வினவ,

“நினைப்புதான் சாருக்கு. நீ தான் என்னை சைட்டடிச்சு விடாப்பிடியா பிடிவாதமா நின்னு என்னை கல்யாணம் பண்ணிருக்க. நியாபகம் இருக்கட்டும்...”

“நான் ஒன்னும் உன்னை விரும்பி கல்யாணம் செய்யலையே? எங்கப்பாவுக்காகதான் செய்துக்கிட்டேன். இது போல யார் சொன்னா உனக்கு?...” என அவளை சீண்டிவிட,

“அதுதான் உன் கண்ணே சொல்லிடுச்சே. ஒரு ஆம்பளை பார்க்கிற பார்வையை வச்சே அதுல என்ன இருக்குன்னு எந்த ஒரு சாதாரண பெண்ணாலையும் ஈஸியா கண்டுபிடிச்சிட முடியும். அதுவுமில்லாம நான் யாரு? தி க்ரேட் பரமேஷ்வரனோட பொண்ணு. ஷார்ப் ஹர்ஷிவ்தாவர்ஷினி. என்கிட்டையேவா?...” என கிண்டலாக கேட்டவளை ரசனையோடு மொய்த்தன அவனது கண்கள்.

தன்னை திருடிக்கொள்ள விளையும் பார்வையை கொஞ்சமும் சளைக்காமல் எதிர்கொண்டன ஹர்ஷூவின் விழிகள்.

“இதேதாண்டா, இந்த பார்வை தான் உன்னோட மனசை எனக்கு காட்டிகொடுத்துச்சு. இந்த பார்வைதான் உன்னை கட்டிக்கிட்டா என்னனு என் மனசை எனக்கே எதிரா திருப்பி நினைக்க வச்சது. இந்த பார்வைதாண்டா என்னை உன்பக்கம் திருப்பியது. ஆனாலும் உன்னை பத்தி நான் விசாரிக்காம இல்லை. நீ அவ்வளோ பெரிய அப்பாட்டக்கராமே உன் ஆபீஸ்ல?...” அவனது விழிகளோடு தன் விழிகளை கலக்கவிட்டு முதலில் கிசுகிசுப்பான குரலில் கூற ஆரம்பித்தவள் இறுதியில் கேலியில் முடித்தாள்.

அவளை உணர்ந்துகொண்டவன் போல, “நீ என்னை பத்தி விசாரிச்சது எனக்கு தெரியாதுன்னு நினைக்கிறியா?...”

“உனக்கு தெரியக்கூடாதுன்னு நான் நினைக்கலை...” என திருப்பியடித்தாள்.

“சரியான கேடி நீ. என்னை பார்க்கலை, கவனிக்கலைன்னு சொல்லிட்டு என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க? இதுக்கு பேர் என்னனு நீயே சொல்லேன்...”

“நிச்சயமா நீ நினைக்கிறது போல இதுல காதல் இல்லை. உன் மேல எனக்கு ஏற்பட்ட இந்த சின்ன ஈர்ப்புன்னு சொல்லலாம். உன்னை பத்தி தெரிஞ்சுக்கறதுக்கு தூண்டுகோலா இருந்தது. அது ஜஸ்ட் தன்னை கட்டிக்கபோறவன் எப்படி பட்டவன்னு தெரிஞ்சுக்க நினைக்கிற ஒரு ஆர்வம்...” அவளின் தெளிவான பதிலில் அசந்துபோனான் ஷக்தி.

“இன்னொன்னும் சொல்லவா?, இதுவரைக்கும் எனக்கு பார்க்கும் சம்பந்தங்களோட கல்யாண ஏற்பாட்டை நிறுத்துறதுக்காகத்தான் நான் அவங்களை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுப்பேன். கல்யாணம் நடக்கனும்னு நினச்சு நான் விசாரிச்சது உன்னை பத்தி மட்டும் தான்...” என்றவள் அதோடு முடிக்காமல்,

“இதை உன்கிட்ட சொல்ல எனக்கென்ன தயக்கம்? எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ இப்போ என்னோட ஹஸ்பண்ட். அவ்வளோ தான் அந்த பீலிங் மட்டும் தான் எனக்குள்ள. ஆனாலும் நீ சரியான ஆளுதான். எனக்கே எத்தனை தடவை நீ பல்ப் குடுத்த? அதுவும் பிடிக்காத மாதிரி. உன்னை மீறிய உன்னோட பார்வையிலேயே என் மேல உனக்கிருந்த காதலையும் விருப்பத்தையும் நான் தெரிஞ்சுக்கிட்டேன்...”

“ஆனா, ஒரு விஷயம். ஒரு பொண்ணா நான் உன்னோட ரூம்க்கு அந்த ராத்திரி நேரத்துல வந்தது உனக்கு கொஞ்சம் கூட கோவம் வரலையா?...” என தன் சந்தேகத்தை கேட்க அதில் வாய்விட்டு சிரித்தவன்,

“உன்னை நான் அப்டி எதிர்பார்க்கலை தான். ஆனாலும் அதை என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆனா அதுக்கு முன்னாலயே அன்னைக்கு காலையிலேயே நான் உன்னை காபிஷாப்ல பார்த்துட்டேன்...” என்றதை புரியாமல் பார்த்தவளிடம்,

“அட அட அட அந்த கண்கொள்ளா காட்சி இருக்கு பாரு? அந்த ஷிவாவை என்னா அடி. யம்மாடி. ஆனா கடைசியில ஒரு போடு போட்ட பாரு என் நெஞ்சுல கைவச்சு தள்ளி போயா பேக்குன்னு என்னை திட்டிட்டு எவ்வளோ கம்பீரமா போன தெரியுமா?...” எனவும் நியாபகம் வந்தவளாக,

“அடப்பாவி!!! நீயும் அங்கதான் இருந்தியா?... நீதானா அந்த பேக்கு?...” என மீண்டும் அவ்வாறே கூப்பிடவும் கைக்கெட்டும் தூரத்தில் அமர்ந்திருந்த அவளை இழுத்தவன் தன் மடியில் போட்டு,

“யாரை பேக்குன்னு சொல்ற? அந்த பேக்குதான் இப்போ உன் புருஷன். நியாபகம் வச்சுக்கோ...” என்றவனிடம்,

“ஆமாமா நீ அதி புத்திசாலிதான்.கிஸ் பன்றதை கூட சொல்லிட்டு செய்யபோறேன் செய்யபோறேன்னு பூச்சாண்டி காட்டுற நீ புத்திசாலிதான். உன்னை பேக்குன்னு சொல்லாம வேற என்னனுய்யா சொல்றது?...” என சிரித்தவளை பார்த்து ங்கே என விழித்தான் ஷக்தி.

“இதெல்லாம் சொல்லிட்டா செய்வாங்க?... எதிர்பார்க்காதப்போ டக்குன்னு இழுத்து பட்டுன்னு குடுத்துட்டு போய்ட்டே இருக்கனும். இப்படி...” என்றவள் அவனை தன்னை நோக்கி இழுத்து கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து அவன் சுதாரிக்கும் முன் எழுந்து குளியலறைக்குள் சென்றுவிட்டாள்.

அதிர்ந்து போய் அமர்ந்திருந்தவனை அங்கிருந்து கொஞ்சமாக கதவிடுக்கிலிருந்து பார்த்தவள், “மிஸ்டர் பேக்கு, என்னை யாருன்னு நினைச்ச? தி க்ரேட் கௌரவ் ஷக்திவேல் பொண்டாட்டியாக்கும். நியாபகம் இருக்கட்டும்...” என மிரட்டல் இல்லாத மிரட்டலோடு கதைவை சாற்றிகொண்டாள்.

இது போல பல அதிர்ச்சிகளை தான் சந்திக்கவேண்டிவரும், அது அனைத்துமே இதை போல இன்பத்தை தராது என்பதை கௌரவ் உணர்வானா?

இவர்கள் இருவருக்கிடையில் தீட்சண்யா வரும் போது அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாளப்போகிறான்?



நதி பாயும்...
 
ஹா ஹா ஹா
உங்களுக்கு செமத்தியான
ஷாக்தான், மிஸ்டர் கௌரவ் ஸார்
இதுபோல இன்ப அதிர்ச்சிகள்
இன்னும் தொடரட்டும்
 
Last edited:
Top