Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sameera’s மனைத்தக்க மாண்புடையாள் - 11

Advertisement

Sameera?

Well-known member
Member
அத்தியாயம் 11

இரண்டு வருடங்களுக்கு பிறகு...



மெரினா கடற்கரை....ஓய்வின்றி தன்னில் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ பலரின் பொழுதுபோக்காய் சிலரின் வாழ்வாதாரமாய் எந்நேரமும் பரபரப்பாய் காணப்படும் சென்னையின் முக்கிய சுற்றுலாதளம்..!!



அன்று அங்கே ஒரு பகுதியை மட்டும் படபிடிப்பிற்காக ப்ளாக் செய்து வைத்திருக்க தடுப்பு கம்புகளை தாண்டி பின்னால் கூட்டம் கூட்டமாய் மக்கள் அதனை வேடிக்கை பார்க்கவென கூடியிருந்தது.



படப்பிடிப்பிற்கான ஆயத்த பணிகள் நடந்துக் கொண்டிருக்க ஒரு நிழற்குடையின் கீழ் சிறு நாற்காலியில் சுவாதீனமாய் அமர்ந்திருந்தார் தவரூபன்.



தலையில் கறுப்பு தொப்பியும் கண்களில் கறுப்பு கூலர்ஸூம் அணிந்திருக்க கால்மேல் கால்போட்டு கையில் வைத்திருந்த நோட்பாடை தீவிரமாய் பார்வையிட்டுக் கொண்டு சாதாரண தோற்றத்தில் இருந்தாலும் அந்த மனிதரின் வெற்றி சினிமா துறையில் சாதாரணமானவை அல்ல..அவரது இருபது வருட சினிமா அனுபவத்தில் எக்கசக்க விருதுகளையும் பாராட்டுகளையும் அவர் படங்களால் வாங்கி குவித்திருக்கிறார்.

நடிகர் நடிகை தவிர்த்து வெகு சில இயக்குநர்களுக்கு தான் இரசிகர் கூட்டம் இருக்கும்.அவ்வகையில் தனக்கென ஒரு தனி பாணியில் படம் இயற்றும் தவரூபனை இரசிக்கும் மக்கள் ஏராளம்..!!



அவர் அருகில் அவஸ்தையான முக பாவனையோடு நின்றிருந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்து,



“நீ இன்னும் போகலையா..”

என்றார்.சொன்னதை செய்யாமல் எதற்கு நிற்கிறாய் என்ற பாவனையோடு..அவள் காருண்யா.தவரூபனின் உதவி இயக்குநர்களுள் ஒருவள்.



‘எப்படிடா தப்பிப்பது’ என்ற சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்களில் தூரத்தில் பேக்ரவுண்ட் சரிபார்த்துக் கொண்டிருந்த உதய் படவும் கண்கள் மின்ன,



“சர்..என்னைவிட உதய் இந்த விஷயத்தை சரியா ஹேண்டில் பண்ணுவான் சர்..”

என்று பவ்யமாய் கூற நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவர் அவள் பாவமாய் முழிக்கவும், “சரி..அவனை வர சொல்லு..”

என்று சொல்லி மீண்டும் நோட்பேட்டில் கவனத்தை திருப்ப, “ஓகே..சர்..இதோ உடனே வர சொல்றேன்..”

என்று பரபரப்பாய் கூறி விட்டால் போதும் என்று அங்கிருந்து நகர்ந்து உதய் நோக்கி நடந்தாள்.



அவனை நெருங்கியதும்,



“ஹேய் உதய்..நான் இதை பார்த்துக்கிறேன்..உன்னை சார் கூப்பிட்டாங்க..என்னானு கேளு..”

என்றாள் வரவைத்த இயல்பு குரலில்..



“என்னையா..சரி..இதை புடி..”

என்று தன் கையில் இருந்தவற்றை அவளிடம் கொடுத்துவிட்டு தவரூபனை நோக்கி வந்தான்.



“சர்..கூப்பிட்டீங்களா..”



“ஆமா..உதய்..மாலினி ரெடி ஆகிட்டாங்கன்னா..அவங்களுட்ட ஸீனை எக்ஸ்பளைன் பண்ணி டேக்கிற்கு தயாராக சொல்லு..”



என்று அவர் கூற நொடியில் விசயம் விலங்கிவிடவும் பட்டென்று திரும்பி தூரத்தில் தெரிந்த காருண்யாவை முறைக்க இவன் பார்வைக்கு பயந்து வெகு தீவிரமாய் வேலை பார்ப்பது போல் பாவனை செய்தாள் அவள்.



‘கோர்த்து விட்டா வேடிக்கை பார்க்கிற..கரடி..உன்னை வந்து பார்த்துக்கிறேன்..’

என்று மனதில் கறுவினான்.



ஏனெனில் நடிகை மாலினியிடம் பேசுவதற்கு பதில் மலையை புரட்ட சொன்னால்கூட சந்தோஷமாய் செய்வர்.தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நடிகை மாலினியின் நடிப்பில் கவரப்பட்டு தனது படத்தில் கதாநாயகியாய் அவளை அசைன் செய்திருந்தார் தவரூபன்.ஆனால் படிப்பிடிப்பு தொடங்கிய இரண்டு,மூன்று வாரங்களிலே அவளோடு அவருக்கு பெரும் பாடாய் போய்விட்டது.



சமீப காலத்தில் அவள் எய்தி இருக்கும் புகழ் அனைத்து அவள் தலையில் ஒய்யாரமாய் ஏறி அமர்ந்திருக்க தனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் அவள் நடந்துக் கொள்ளும் விதம் தவரூபனை மிகுந்த எரிச்சலுக்கு ஆளாக்கியது.



தமிழக்கதின் தலைசிறந்த நடிகரான அந்த படத்தின் கதாநாயகனே தவரூபன் சொல்லை மறுக்காமல் அவர் கேட்பதை சரியாய் செய்து கொடுக்க இந்த குறை குடமோ அவருக்கே ஸீனில் இதை சேர்க்கலாம் அதை கோர்க்கலாம் என்றோ இல்லை சொன்னதை விட தானே எதையாவது சேர்த்து செய்தோ தனது அதிகப்பிரசங்கிதனத்தை காட்ட பலமுறை இருவருக்கும் மோதிக் கொண்டது.இதனால் பல நாட்கள் ஸூட்டிங் வீணாய் போனது.தவரூபன் கோபம் வந்துவிட்டால் யாரு என்னவென்று எல்லாம் பார்க்க மாட்டார் ருத்ரதாண்டவம் ஆடிவிடுவார்.ஆனால் இவள் நடிகையாய் போய்விட எங்கே கோபத்தில் எதாவது செய்ய போய் அது தேவையில்லாத சர்ச்சையை கொண்டு வந்துவிடுமோ என்று அமைதிக்காத்தார். ஆனாலும் மாலினியுடன் பேசும் போது அவரால் பொறுமை பிடித்து வைக்க முடியவில்லை.எனவே அவள் தொடர்பான எதையும் தன் உதவி இயக்குநர் கொண்டே முடித்துக் கொள்வார்.அவரையே படுத்தும்போது உதவி இயக்குநர் நிலையை சொல்லவா வேண்டும்..?அதனால் எப்பொழுதுமே நீ போ..நான் போ..என்ற தல்லுமுல்லு தான் அவர்கள் இடையில்..இன்று உதய் சிக்கிக் கொண்டான்.



“ஓகே சர்..” என்றவன் குரலில் ஸ்ருதி இறங்கிவிட அவனை பார்த்து லேசாய் புன்னகைத்த தவரூபன், “இங்க வா..” என்று தன் அருகில் அழைக்க அவர் உட்கார்ந்து இருந்த உயரத்திற்கு குனிந்தான்.



“இதுவும் ஒரு எக்ஸ்பிரியன்ஸ் தான் மை பாய்..” என்று அவன் தோளில் தட்டியவர்,

“நீயும் இப்போ டைரக்டர் ஆகிட்டே..நீ படம் பண்ணும் போது..தப்பிதவறி கூட இதை ச்சூஸ் பண்ணிடாத..சைத்தானை எடுத்து தலையில் கட்டிக்கிறதுக்கு சமம்..” என்று அவர் சீரியஸாய் கூற சிரித்துவிட்டான்.



ஆம்..!!உதய் குமாரின் முதல் படத்திற்கான ஒப்பந்தம் போட்டாகி விட்டது.வாய்ப்புகள் நிறைய வந்திருந்தாலும் சரியான தருணத்திற்காக காத்திருந்தவன் தற்போது தான் அதனை அமல் படுத்தியிருந்தான்.தவரூபனின் இந்த படம் முடிந்ததும் தன் ப்ராஜக்டை தொடங்கும் யோசனையில் உள்ளான்.



“சரிங்க சர்..நான் அவங்களுட்ட பேசிட்டு வரேன்..”

என்று கூறி சென்றவனை,



“டேய்...உதய்..”

என்று மீண்டும் அழைத்தவர், “சர்..” என்று வந்தவனிடம் தன் கையில் இருந்த நோட்பேடை காட்டி,

“இந்த ஸீனை சரியா ஃப்ரேம் பண்ண நானும் ரொம்ப நேரமா ட்ரை பண்ணேன்..ஐம் நாட் சேட்டிஸ்ட்ஃபைட் எட்..”

என்று அவர் தோளை குலுக்க அவனும் கவனமாய் அதனை பார்வையிட்டான்.



“இது ரொம்ப எமோஷ்னலான ஸீன்ல..சரியா கொடுத்தா தான் மக்கள் மனசை தொடும்..இல்லேனா கேலி கிண்டலாய் ஆகிடும்..”



“புரியுது சர்..இங்க நிறைய டயலாக்ஸ் வைக்கிறதோட எக்ஸ்பிரஷன்லையும் செய்கைலயும் அதை கன்வே செய்தால் நல்ல இருக்கும்ல சர்..”



என்று அவன் யோசனையாய் சொல்ல, “எக்சாக்ட்லீ..”தான் நினைத்ததை அவன் சொல்லவும் உற்சாகமாய் கூறி,



“அது தான் வேணும்..அவ அவனை தன்னோடு பொக்கிஷமா பாவிக்கணும்..அதை அவள் கன்வே பண்ணனும் உதய்..”

என்று அவர் மேற்கொண்டு பேசிக்கொண்டே போக அவனோ அவர் பொக்கிஷம் என்றதிலே ஃப்ரீஸாகி “யூ ஆர் மை ட்ரெஷர் உதய்..” என்று காதில் ரீங்காரமிட்ட குரலில் கட்டுண்டு நின்றுவிட்டான்.



“உதய்..உதய்..”

அவர் சத்தமாய் அழைக்கவும் தான் தன்னிலை உணர்ந்து, “சர்..” என்று விழிக்க,



“நான் பேசிட்டு இருக்கேன்..எங்க உனக்கு கவனம்..” என்று அவர் முறைக்க, “இ..இல்ல சர்..இதான் யோச்சிட்டு இருந்தேன்..”

என்றான் சமாளிப்பாய்..



“சரி..போ..யோசிங்க..ஈவ்னிங்குள்ள இதை முடிக்கணும்..” என்றவரிடம் தலையாட்டிவிட்டு நகர்ந்தவன் மனம் சொல்ல தெரியாத பல உணர்வுகளில் தத்தளித்து கொண்டிருந்தது. ‘இன்னைக்கு ஏன் இவ நினைப்பு அடிக்கடி வருது..’ என்று பின்னந்தலையை தடவிக் கொண்டான்.அவள் என்னவோ நெருக்கதில் இருப்பதுபோல் மனம் படபடத்தது.



ஆழ மூச்செடுத்து அதனை அப்புறப்படுத்தியவன் தன் கடமையை கவனிக்க சென்றான்.அதன்பின் நேரம் ரெக்கை கட்டி பறக்க அன்றைய படபிடிப்பு நன்றாக முடிந்திருந்தது.



படபிடிப்பு முடிந்ததும் நடிகர்கள் இயக்குநர் எல்லோரும் சென்று விட்டாலும் உதவி இயக்குநர்களில் வேலை அத்தோடு முடிவதில்லை.அதற்காக அங்கே செய்யபட்ட அனைத்தையும் பழையபடி மாற்ற செய்து எல்லா தொழில்நுட்பாளர்களையும் அவர்களுக்கான வேலையை முடித்து அனுப்பி வைக்கும் வரை அவர்கள் வேலை நீடிக்கும்..திரைதுறையில் ஒவ்வொரு படத்திலும் வெளியுலகின் கண்ணுக்கு தெரியாமல் படத்திற்காக தன் உயிரை கொடுத்து உழைக்கும் உதவி இயக்குநர்களின் பங்களிப்பு அபாரம்..!!



உதய்யும் அவனது நண்பர்கள் நால்வரும் ஓய்வாக அமரவே மாலையாகி விட்டது.

சுடசுட காஃபியும் பஜ்ஜியும் வாங்கி கொண்டு வந்த காருண்யாவும் அருணும் கரையில் அமர்ந்திருந்த உதய்,கிஷோர் அருகில் அமர்ந்தனர்.தவரூபனிடம் நால்வருமே கிட்டதட்ட ஒரே சமயத்தில் தான் வேலைக்கு சேர்ந்தனர்.எனவே அப்பொழுதில் தொடங்கி நால்வரும் நெருங்கிய நண்பர்கள்.



“அண்ணாத்த..நல்லா இருக்கியா..”

பல்வரிசை தெரிய பளிச்சென்று சிரித்தபடி உதய்யிடம் தன்கையில் இருந்த காஃபியை நீட்டினாள்.அன்று முழுதும் அவன் கண்ணில் அகப்படாமல் தப்பித்துக் கொண்டிருந்தவள் தற்போது நல்ல பிள்ளையாய் அவன் அருகில் அமர,



“வெஷம்..வெஷம்..வெஷம்...”

என்று அவள் தலையிலே நாலு கொட்டு வைத்தபின் தான் காஃபியை கையில் வாங்கினான்.



“ஸ்..ஆ..எருமை..வா..வா..நாளைக்கும் நீ தாண்டி மாலினியோட மல்லுகட்டனும்..”



“உன் இம்சைக்கு அவங்களே தேவலாம் ப்பே..”

என்று அவன் சொல்ல, “போடா டேய்..போடா..” என்றாள் தலையை சிலுப்பி..



இவர்கள் இங்கே முறைத்து கொண்டிருக்கும் போதே தூரத்தில் நின்ற பெண்ணை பார்த்துவிட்டு கிஷோர்,



“டேய்..அந்த பொண்ணுடா..”

என்று உதய் தோளை சுரண்ட, “எந்த பொண்ணுடா..” என்று அவன் காட்டிய திசையில் பார்த்தவனுக்கு அங்கே யாரையும் தெரியவில்லை.



“அதான்..உன் ஷார்ட் ஃப்லீம் ல நடிச்சு இருந்துச்சேடா..அந்த பொண்ணு தானே அது..”

என்று கிஷோர் கேட்க சட்டென்று அவன் கண்கள் உதயாவை கண்டுக் கொண்டது.



இரண்டு வருடங்கள்..நீண்ட இரண்டு வருடங்களுக்கு பின் இன்று தான் அவளை பார்க்கிறான்.



ப்ளாக் டாபஸ் மற்றும் வொய்ட் ப்ளாசோ உடையில் இருந்தவள் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள்..!!சரியாக அவனால் கணிக்க முடியவில்லை.இன்னும் சற்று அருகில் சென்று பார்க்க விழைந்தது மனம்..!! ஆனால் அவளது அந்த பேசும் நயனங்களில் எந்த மாற்றமும் இல்லை.அதன் பாவனையிலே எதிராலியையும் உற்சாகம் கொள்ள செய்யும் அதே அழகிய விழிகள்..!!



உடன் இருந்த பெண்ணுடன் அவள் சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டிருக்க,

‘சென்னையில் என்ன செய்கிறாள்..’

என்ற யோசனை அவனுள்..



“மச்சான்..டேய்..என்ன ஃப்ரீஸ் ஆகிட்ட..அந்த பொண்ணு தானே..”



என்ற கிஷோரிடம் வெகு பிராய்சித்தம் செய்து பார்வையை திருப்பிய உதய் ‘ஆம்..’ என்பதாய் தலையசைத்தான்.



“அப்போ வாயேன்..போய் ஒரு ஹாய் சொல்லிட்டு வரலாம்..”



“இல்ல காரூ..வேண்டாம்..”



“ஏன் உதய்..”



“ம்ச்..வேண்டாம்னா விடேன்..”

என்றவன் கப்பில் இருந்த காஃபியை ஒரே மடக்கில் வாயில் சரித்துக் கொண்டான்.மீண்டும் திரும்பி பார்க்க மனம் தூண்ட தவிர்க்க முடியாமல் மறுபடியும் அங்கே பார்வையை கொண்டு செல்ல அவள் இல்லை.



“எங்கே..” கண்கள் அலைப்பாய சட்டென்று எழுந்துவிட்டவன் சுற்றும் முற்றும் தேடி பார்க்க எங்கேயும் தென்படவில்லை.



“என்னடா ஆச்சு..இவனுக்கு..”

என்ற அவர்கள் பார்வையை பொருட்படுத்தாது,



“எங்கடா போனா அவ..”

என்று அவர்களிடமே கேட்க, “தெரியலையே..போயிருப்பாங்க..நீ தான் பேசலனு சொல்லிட்டியே..அப்புறம் என்ன..”

என்று புரியாமல் கேட்க அவனுக்கே அவன் மனம் புரியவில்லை.அவளிடம் சென்று பேச தயங்கி அவன் நின்றவேளையில் அவள் மின்னல் போல் கண்ணில் பட்டு மறைந்திருக்க மீண்டும் காண மாட்டோமா..என்று மனம் அலைப்பாய்ந்தது.



இங்கே ஒருவன் இவளை தேடுவதே தெரியாது கடல்கரை மணலில் கால் புதைய ரோட்டை நோக்கி நடந்தாள்.அவளுடன் இருந்தது கல்பனா தான்.



இவர்கள் சென்னையில் ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தில் இணைந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.திருப்பூரை விட்டு எங்கும் தாண்டாத உதயா இந்த இரண்டு வருடங்களில் சென்னைவாசியாகவே மாறிவிட்டாள்.நிறைய நட்புகளும் அனுபவங்களும் அவளுக்கு பல நல்ல விசயங்களை அறிமுகப்படுத்தி இருக்க வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை இரசிக்க தொடங்கியிருந்தாள்.



தன்னை யாரோ உற்று நோக்குவது போல் தோன்ற நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள் உதயா.எல்லாம் அவரவர் வேலை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.



“என்னடி..”



“இல்ல..யாரோ நம்மை ரொம்ப நேரமா பார்க்கிறா மாதிரியே ஒரு ஃபீல்..”



“விடுடி..விடுடி..அழகான பொண்ணுங்க போனால் நாலு பேரு பார்க்க தான் செய்வாங்க..”



“அது உண்மை தான்..ஆனால் நம்மை யாரு பார்க்க போறா..”



“என்ன செல்ஃப் ட்றோலா..சகிக்கல..”



அப்பொழுது இவர்களை நெருங்கிய ஒரு பெண்,



“எக்ஸ்கியூஸ் மீ..” என்று கூப்பிட்டு, “நொடிகளில் ஷார்ட் ஃப்லீமில் நடித்திருந்தது நீங்க தானே..”

என்று கேட்டவளை ஆச்சரியமாய் பார்த்தாள்.பொதுவாக குறும்படங்களில் நடித்தவர்கள் முகம் எல்லாம் யார் நினைவிலும் இருக்காது.அதுவும் அந்த ஒன்றை தவிர வேறெதிலும் நடித்தது இல்லையே..!!எனவே தான் இந்த ஆச்சரியம்!!



“யெஸ்..”



“நான் ரீசண்டா தான் அந்த படம் பார்த்தேன்..உங்க அக்டிங் அதுல க்யூட்டா இருந்துச்சு சிஸ்..”

என்று அவள் பாராட்டி பேச அதில் இன்னும் ஆச்சரியம் தான்.அழகாய் புன்னகைத்தவள்,



“தேங்க் யூ..” என்று சொல்ல அவளும் பதிலுக்கு ஒரு புன்னகையோடு நகர்ந்து விட்டாள்.



“ப்பா...ப்பா..இந்த வைகம் எங்கும் உன் விசிறிகள் நிரம்பி வழியிறாங்களே பேபி..இது தான் ஒரே பாட்டில் வொல்ட் ஃபேமஸ் ஆகிறதா..”



“ம்க்கும்..உனக்கே இது அநியாயமா தெரியல..ஆஷிகிற்கு சொன்னாலும் பரவாயில்லை..என்னை போய் சொல்ற பார்த்தியா..”



ஆஷிக் தற்போது ஒரு டிவி சேனலில் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறான். ‘நடித்தால் சினிமா ஹீரோ தான்..’ என்று ஸீன் போடாமல் வாய்ப்பு தேடி வந்தபோது அதனை பயன்படுத்திக் கொண்டான்.அது நல்ல பிரபலமான சேனல் என்பதால் மக்களிடையே நல்ல ரீச் கிடைக்கும் என்று நம்பினான்.அது உண்மையும் கூட..அதனால் தற்போது ஐயா மிகவும் பிஸி..அதே சிங்கார சென்னையில் தான் அவனும் இருந்தாலும் தோழிகளை எப்பொழுதாவது தான் சந்திக்க முடிக்கிறது.



“உனக்கு உன் அருமை தெரியலை மச்சி..”



“ஏண்டி ஏன்..படம் வந்த புதுசுலே நூத்துல பத்து பேரு தான் என்னை அடையாளம் கண்டு பேசுவாங்க..அதுவும் ‘எம்மா..நல்ல படம்..ஆனால் நீ நடிச்சு கெடுத்துட்டீயே..’நு நோஸ்கட் கொடுத்துட்டு போகுங்க..இந்த பொண்ணு பாராட்டியதை இன்னமும் நம்ப முடியல..” என்றவள்



“ஆனாலும் இதுவும் ஒரு மாதிரி நல்லா தான் இருக்குல்ல..”

என்று கூற அவள் நினைவுகள் தனிச்சையாய் அவனிடம் தான் சென்றது.அதுவரை விளையாட்டாய் பேசிக் கொண்டிருந்தவள் சட்டென்று அமைதியாகி விட்டாள்.



‘ஒரு நாளில் ஒருமுறை ஏனும் அவன் தொடர்பாய் ஏதோ ஒரு ஞாபகம் அவள் சிந்தையில் வந்து தொலைகிறதே..மானம் கெட்ட மனம்..’ தன்னை நினைத்தே எரிச்சலாய் வந்தது.



கல்பனாவும் அவளை புரிந்தவளாய் சில நிமிடங்கள் மௌனமாய் நடந்தவள் பின்,



“ஹேய்..லாவண்யா அண்ணிக்கு எப்போ டெலிவெரி சொன்ன..”

என்று பேச்சை மாற்ற அது சரியாய் வேலை செய்தது.



“நெக்ஸ்ட் வீக்..அங்க ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனதுமே..நான் ஊருக்கு கிளம்பிடுவேன்..என்னோட செகேண்ட் செல்லத்தை நான் ஃபர்ஸ்ட் டேவே பார்த்தாகணும்..”

என்ற போது பழைய உற்சாகம் குரலில் மீண்டு இருந்தது.



“ஹேய்..நீயும் வருவேல்ல..”



“அது சரி..உனக்கு ரீசன் இருக்கு..உனக்கு லீவ் கொடுப்பான்..உனக்கு ஜோடியா நானும் போறேன் போய் நின்னேனு வை..அந்த கிம் ஜாங்(அவர்கள் ஹச்.ஆருக்கு வைத்திருக்கும் ‘செல்லப்பெயர்)என்னை அப்படியே போயிடு திரும்பி வந்திடாதேனு தொரறத்தி விட்றுவான்..அப்படியலாம் அவனுக்கு விடுதலை கொடுத்து விடுவோமா..நெவர்..”



என்று கல்பனா கூற சதங்கை ஒலியாய் கலகலவென சிரித்தாள் உதயா.



அந்நேரம் உதயாவை தேடி சுற்றிய உதய் அவர்களை கண்டுவிட அவன் அவளை நெருங்கிய சமயம் ரோட்டில் ஒரு ஆட்டோவை பிடித்து இருவரும் கிளம்பியிருந்தனர்.



“ஹோ..காட்..”



தவறவிட்டோமே என்ற கடுப்புடன் தலையை கோதிக் கொண்டான்.
 
Last edited:
உதயையும் அவளைத் தேடுகிறான்....
இரண்டு வருட இடைவெளி.....
வெண்பா- மதி எதாவது மாற்றம் இருக்குமோ...?
 
அருமையான பதிவு
உதய் தவிக்கிறானா
வெண்பா வீட்டில் என்ன நடந்தது
 
உதயையும் அவளைத் தேடுகிறான்....
இரண்டு வருட இடைவெளி.....
வெண்பா- மதி எதாவது மாற்றம் இருக்குமோ...?
இருக்கலாம் ?
 
அருமையான பதிவு
உதய் தவிக்கிறானா
வெண்பா வீட்டில் என்ன நடந்தது
நன்றி சிஸ்..அடுத்த பதிவில் தெரிந்துவிடும் ☺️☺️
 

Advertisement

Top